வியாழன், 8 டிசம்பர், 2016

மரண பயம் தவிர்க்காமல் வாழ்வது என்ன பயன் ?மரண பயம் தவிர்க்காமல் வாழ்வதால் என்ன பயன் ?

மரண பயம் தவிர்க்காமல் வாழ்வதால் என்ன பயன் ? என்று கேட்கின்றார் வள்ளலார் ! அவர் வாழ்ந்த வாழ்க்கை, அவர் மக்களுக்கு காட்டிய உண்மையான வாழ்க்கை முறைகள் ,அந்த வாழ்க்கையினால் என்றும் அழிக்க முடியாத ஆன்ம லாபம்!,அந்த ஆன்ம லாபத்தால் கிடைக்கும் பேரின்ப லாபம்.! அந்த லாபத்தினால் உயிரையும் உடம்பையும்,....காற்றாலும்,புவியாளும்,அக்கினி யாலும். நீராலும்,ஆகாயத்தாலும்,மற்றும் எமன் என்னும் கூற்று வானாலும் ,வேறு    எவராலும்,எதனாலும்  அழிக்க முடியாத பேரின்ப வாழ்க்கையே அந்த லாபமாகும். ,அந்த லாபத்தை  அனுபவிக்கும் மகிழ்ச்சியான அனுபவங்கள்.  எல்லாம் ,மனித குலத்திற்கு வாரி வழங்கி உள்ளார் .

மனித குலம் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற வாழ்க்கை  முறைகள் , வழி காட்டுதல்கள் ,அதற்கு உண்டான ஒழுக்க நெறிமுறைகள் அனைத்தும் மிகத் தெளிவாக மனித குலத்திற்கு தெரியப் படுத்தியது மட்டும் அல்லாமல் , சொல்லிய வண்ணம் வாழ்ந்தும், காட்டியும், மக்கள் மனதிலும், அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒளியிலும் கலந்தும் என்றும் அழியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளவர் தான் வள்ளலார் ..


இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆன்மாவும்,பல கோடி பிறப்புக்கள் எடுத்து இறுதியில் ,இறுதியாக உயர்ந்த பிறப்பு என்னும் மனிதப் பிறப்பு கொடுக்கப்பட்டு உள்ளது .இந்த மனிதப் பிறப்பில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் கட்டளையின் படி ,சட்டத்தின் படி வாழாமல் ,பொய்யான இந்த உலக  வாழ்க்கையில், அழியும்  பொருள்மேல் இச்சைக் கொண்டு வாழ்ந்து பிறந்து பிறந்து ,இறந்து இறந்து , அழிந்து கொண்டே உள்ளோம்..

பொருள் மேல்  இச்சைக் கொண்டு வாழும்  வாழ்க்கையை விட்டு ,அருள் மேல் இச்சைக் கொண்டு வாழ்வதே,என்றும் அழியாத வாழ்க்கையாகும் என்பதை இன்று வரையில் எவரும் முழுமையாக அறிந்து தெரிந்து கொள்ளவில்லை,என்பதை

கீழே பதிவு செய்துள்ள பாடலின் வாயிலாக வள்ளலார் தெரியப்படுத்துகின்றார்.!

ஆற்று வெள்ளம் வருவது முன் அணை போட அறியீர்
அகங்காரப் பேய் பிடித்தீர் ஆடுதற்கே அறிவீர்
கூற்று வருங்கால் அதனுக்கு எது புரிவீர் ஐயோ
கூற்று தைத்த சேவடியைப் போற்றி விரும்பீரே
வேற்று உரைத்து வினை பெருக்கி மெலிகின்ற உலகீர்
வீண் உலகக் கொடு வழக்கை விட்டுவிட்டு வம்மின்
சாற்று உவக்க எனது தனித் தந்தை வருகின்ற
தருணம் இது சத்தியஞ் சிற்சத்தியைச் சார்வதற்கே !

இந்த உலகில் உள்ள அனைத்து உயிர்கள்,மனிதர்கள்  உணவு பஞ்சம் இல்லாமல் வாழ வேண்டுமானால் மழை வேண்டும். ,விவசாயம் செய்வதற்கும் தண்ணீர் பஞ்சம் இல்லாமல் இருக்க வேண்டும்.. இயற்கையானது  எப்போதும் தண்ணீர் வழங்கிக் கொண்டே உள்ளது.அந்த தண்ணீர் வெள்ளம் போல் வந்து கொண்டே உள்ளது .அது வீணாகிக் கொண்டே உள்ளது....அறிவுள்ள மனிதன் என்ன செய்வான் மழை வந்து வெள்ளம் வருவதற்கு  முன்னமே தண்ணீரைத் தேக்கி வைக்க அணையைக் கட்டி, வாய்க்கால்களை கட்டித்  தண்ணீரைத் தேக்கி வைப்பான்,அந்த தண்ணீர் மழை இல்லாக் காலங்களில் விவசாயத்திற்கு பயன்படும்,விவசாயம் செழித்தால் தான் அனைத்து மக்களுக்கும்,அனைத்து உயிர்களுக்கும்,  உணவு பஞ்சம் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்வதற்கு வழியாய் இருக்கும்.

மழை வந்து வெள்ளம் பெருக்கி எடுத்து ஓடும் காலங்களில் ,அணையைக் கட்டிவைத்து மழை வெள்ளத்தைப்  பாது காக்கத் தெரியாமல் .அகங்காரம் கொண்ட பேய் போல் வீணே ஆடிக்கொண்டு உள்ளான் .அவனை என்னவென்று சொல்வது ..அவன் கேடுகெட்ட புத்தியை சொல்வதற்கு மிகவும்  கேவலமான வார்த்தைகளே இல்லை.

அதுபோல ;----மனிதன் என்றும் அழியாமல் உயிரையும் உடம்பையும் பாது காக்கும் வழி உள்ளது ...அதுதான் அருளைப் பெரும் வழியாகும்..இறைவன் என்றும் அருளை வாரி வாரி வழங்கிக் கொண்டே  உள்ளார்  / அருளைப் பெற்றுக்   கொள்ளும் அறிவு இல்லாமல்.அந்த அருளின் தன்மை என்னவென்று தெரிந்து கொள்ளாமல் ..உலக போகத்தில் உள்ள அற்ப ஆசை களான  மண்ணாசை,பெண்ணாசை,பொன்னாசை என்னும் பொருள் மீது ஆசைக் கொண்டு அவற்றைப் பற்றிக் கொண்டு ,அதையும் முழுமையாக அனுபவிக்கத் தெரியாமல் , அழிந்து கொண்டே உள்ளார்கள் மனிதர்கள் ..

இறுதியில்,நரை திரை,  பிணி ,மூப்பு, மரணம் வருகின்ற போது,  உடம்பை விட்டு  உயிர் பிரிகின்ற போதும்,  உடம்பு  அழிகின்ற போதும் ...தான் சம்பாதித்த  எந்தப் பொருளையும் எடுத்து செல்ல முடியாது.என்று தெரிந்தும் அறிந்தும்,,பட்டம்,பதவி,புகழ்,என்ற அற்ப ஆசைகளுக்கு ஆட்கொண்டு ஒருவரை ஒருவர் ,போற்றியும்,புகழ்ந்தும் ,அவமானப் படுத்தியும்,அழித்தும்,அகங்காரம் கொண்டு வாழ்ந்தும்,இறுதியில் ஆழிந்து கொண்டே உள்ளார்கள்...இதுவா மனித வாழ்க்கை ?...இது அல்ல மனித வாழ்க்கை !

மனித வாழ்க்கை என்பது .அறம்,பொருள் ,இன்பம் ,வீடு என்ற நான்கையும் நான்கு காலங்களில்,பெற்று அனுபவித்து ,பின்பு பற்று அற விட்டு , வள்ளலார் காட்டிய ஒழுக்க நெறியைப் பின் பற்றி வாழ்ந்து ,என்றும் அழியாத அருளைப் பெற்று மரணம் அடையாமல் வாழ்வதே வாழ்க்கையாகும்...அதுதான் மனிதனுக்கு ஆண்டவர் வகுத்து தந்த பேரின்ப  வாழ்க்கையாகும்,இறைவன் மனிதனுக்கு படைத்த சட்டமாகும் ..இறைவன் வகுத்துத் தந்த சட்டத்தை மீறினால் இறுதியில் இறைவன் கொடுக்கும் தண்டனை  தான் ''மரணம்'' என்னும்  தண்டனையாகும்.

ஆதலால் வள்ளலார் சொல்லுகின்றார் ;;;உங்களின் பல துன்மார்க்க செய்கையினால் தீ வினையை சேர்த்துக் கொண்டே உள்ளீர்கள்.அதனால் அறிவு மயங்கி ,ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடி ,அந்த தீவினையே உங்களை அழித்து விடுகின்றது.அதனால் வீண் உலக கொடுமையான வழக்கை.அதாவது அழியும்  வாழ்க்கையை  விட்டுவிட்டு .அழியாத நல்வினையாகிய வாழ்க்கை வாழ்வதற்கு வாருங்கள் வாருங்கள்  என்று அனைவரையும் அன்போடு,தயவோடு , கருணையோடு அழைக்கின்றார்...எதற்க்காக ?

நான் அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொண்டு அருளைப் பெற்று வாழ்ந்து கொண்டு உள்ளேன் .உங்களுக்கும் ஆண்டவர் அருளைக் கொடுப்பதற்கு தயாராக உள்ளார் .நீங்களும் எந்த தடையும் இல்லாமல் பெற்றுக் கொள்ளலாம். .இது சத்தியம் ,சத்தியம்,என்று சத்தியம் வைத்து அழைக்கின்றார் ...அனைத்து மக்களும்  வடலூர் சென்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெற்று மரணத்தை வென்று,பேரின்ப வாழ்க்கையில்  வாழ்வாங்கு வாழ்வோம்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல் .
9865939896 .
0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு