வெள்ளி, 9 டிசம்பர், 2016

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவார்கள் !

தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் இறைவனால் தண்டிக்கப் படுவார்கள் !

வெளி உலகில் நல்லவர்களாக நடிக்கலாம் ,அவர் ஆன்மாவின் உள்ளே  என்ன நினைத்து செயல் படுகிறார்கள் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும் ,

பொது நோக்கம் கொண்டு செயல் படும் நல்ல உள்ளங்களுக்கு எப்போதும் இறை ஆற்றல் துணையாக இருக்கும் ,

இறை ஆற்றல் என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது , அவை எப்படி செயல் படும் ? என்றால் , சாதி,சமயம்,மதம,இனம் மொழி ,நாடு்  என்ற பேதம்  இல்லாமல் ,ஆன்ம நேய ஒருமைப்பாட்டு  உரிமை கொண்டு வாழ்பவர்களுக்கு .எந்தவிதமான துன்பம் துயரம் அச்சம் பயம் மரணம் என்பது எப்போதும் வரவே வராது ,

அதன் உண்மையை வள்ளலார் தெளிவாக விளக்கம் தந்து உள்ளார் ,

எச்சபை பொது என இயம்பினர் அறிஞர்கள் அச்சபை இடம் கொளும் அருட்பெருஞ்ஜோதி !

என்று வள்ளலார் தெரிவித்து உள்ளார் ,

எனவே தான,் உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசுவோர் உறவு கலவாமை  வேண்டும் என்கிறார் ,

எனவே நாம் யாருடன் பழக வேண்டும் ,நட்பு கொள்ள வேண்டும் ,உறவு கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது ,

நாம் பொது நோக்கம் இல்லாமல் செயல் பட்டாலும் ,ஆட்சி அதிகாரங்கள் தம் கையில் உள்ளது என்று ஆணவத்தினால் அதிகாரத்தை பயன்படுத்தி சுய லாபத்திற்காக வாழ்ந்தாலும் ,அவர்களுக்கு துணையாக இருப்பவர்களே அவர்களை அழிந்து விடுவார்கள் , அதுதான் இறைவன் கொடுக்கும் தண்டனை ,

எனவே பொதுப் பணியில் உள்ளவர்கள் யாராக இருந்தாலும்  மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் , கடவுளுக்கும் மனசாட்சிக்கும் பயந்து செயல் பட வேண்டும் ,

 வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க  கொள்கையை பின் பற்றுபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாகவும் எச்சரிக்கையாகவும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் ,

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரேபகராத வன்மொழி பகருகின் றீரேநண்ணாத தீயினம் நண்ணுகின் றீரேநடவாத நடத்தைகள் நடக்கவந் தீரேகண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தேகண்ணார நீர்விட்டுக் கருதறி யீரேஎண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே !

செய்யக் கூடாத செயல்களையும் பண்ணக்கூடாத தீமைகளையும் ,நடக்கக் கூடாத நடத்தைகளையும் செய்து விட்டு ,இறுதியில் கண்ணீர் விட்டு அழுவதினால் என்ன பயன் ?  என்று சொல்லி விட்டு ,அப்படி உள்ளவர்கள் பித்து உலகீர் என்கிறார் .பித்து என்றால் பைத்தியம் பிடித்தவர்கள் என்பதாகும் .

எனவே நாம் சாதி சமயம் மதம் என்ற  கூண்டுக்குள் சிக்காமல் பைத்தியம் பிடித்து அலையாமல்  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின தொடர்பு கொண்டு ் நல்ல பிள்ளைகளாக வாழ்ந்து காட்டுவதுதான் சுத்த சன்மார்க்க கொள்கை பிடிப்பு உள்ளவர்களின் கடமையும் உரிமையாகும் .

இடைவிடாது இறைவனைத் தொடர்பு கொண்டு அருள் பேற வேண்டி கண்ணீர் விட்டு அழுது இருந்தால்  எல்லா நன்மையும் கிடைத்து இருக்கும் .

துன்பம் வந்த பின் எண்ணாதது எண்ணி என்ன பயன் என்று கேட்கின்றார் வள்ளலார் ,

 அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு