சனி, 28 மே, 2011

சிலையை வணங்குவது சரியா? தவறா?கோவில்களில் உள்ள சிலையை கும்பிடுவது ,சரியா?தவறா ?நேர்த்திக்கடன் செய்வது சரியா ? தவறா?

உங்கள் கருத்துக்கள் உண்மைதான் எல்லாமே கற்பனை கதைகளாகும் கதைகளில் வரும் தத்துவங்களை கடவுள்களாக பாவித்து ஆலயங்களை கட்டி அதில் சிலைகளை வைத்து மக்களை ஏமாற்றி விட்டார்கள்.
இவை எல்லாம் நமக்கு முன்னாடி இருந்த பெரியவர்கள் செய்த சதி வேலைகளாகும்,.கடவுள் கல்லில் இருந்தால் பேசுவாரா ?கல்லும் மண்ணும்  தங்கமும், செம்பும்,.கடவுளாகி விடமுடியுமா ?அதே கடவுள் பெயரால் வாயில்லாத ஜீவன்களை பரிகாரம் என்ற பெயரில் பலி கொடுக்கிறார்களே ,இதை அந்த பொய்யான கடவுள் ஏற்றுக் கொள்வாரா?
உண்மையான கடவுளாக இருந்தால் இவர்களை விட்டு வைப்பாரா?அதனால்தான் வள்ளலார் இந்தஉலகத்திற்கு அருட்பெரும்ஜோதியால் வருவிக்கவுறறார்.
வள்ளலார் வந்துதான் இவர்கள் முகமூடியை கிழித்து எறிந்தார்கள் கடவுள் ஒருவரே அவர் ஒளியாக உள்ளார் அவர் எல்லா உயிர்களிலும் இயங்கிக் கொண்டு இருக்கிறார் .அதனால் எந்த உயிரையும் அழிக்க கூடாது ,அப்படி அழித்தால் உங்களை கடவுள் மன்னிக்க மாட்டார் என்ற உண்மைகளை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளார்,
ஆதலால் பொய்யான கோவில்களில் கடவுள் இல்லை அந்த கோவில்களில் செய்யும் அனைத்து வழிபாட்டு முறைகளும் பொய்யானதாகும்.அங்கு வீண் செலவு செய்வதை விட்டு ஏழைகளின் பசியை போக்குங்கள் என்றார் வள்ளலார் .
உலகில் பசியோடும் பட்டினியோடும் வாழும் மக்களை கவனிக்காமல் கல்லுக்கும் மண்ணுக்கும் கோடிகோடியாய் வீண் செலவு செய்கிறீர்களே என்று வருத்தப்பட்டு வடலூரில் சத்திய தருமச்சாலையை 1867-ஆம் ஆண்டு அமைத்தார் ,அன்றிலிருந்து இன்றுவரை தினமும் ஏழைகளின் பசிப்பிணியை போக்கிக் கொண்டு இருக்கிறது .

அதேபோல் கடவுள் கோவிகளில் இல்லை எல்லாஉயிர்களிலும் உள்ளார் என்பதை காட்டுவதற்கு எண்கோண வடிவமாக பொதுவான ஒரு சத்திய ஞானசபையை வடலூரில் அமைத்துள்ளார் .அந்த சபையில் எந்த சடங்குகளும் இல்லை.ஒளி மட்டும்தான் இருக்கும் அந்த ஒளி இடைவிடாது எரிந்து கொண்டே இருக்கும்

உயிர் எப்படி அனைவரையும் இயக்கிக் கொண்டு இருக்கிறதோ அப்படி கடவுள் ஒளியாக இருந்து அனைத்தையும் இயக்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை விளக்குவதாகும் .
இங்கு சாதி மதம் சமயம் இனம் நாடு என்ற வேறுபாடுகள் இல்லாமல் அனைவருக்கும், அனைத்து உலகத்திற்கும் பொதுவான கடவுள் கொள்கையை வகுத்து தந்துள்ளார் வள்ளலார் .
மேலும் உண்மையை தெரிந்து கொள்ள வள்ளலார் எழுதிய திரு அருட்பாவை படித்து தெரிந்து கொள்ளுங்கள். உண்மையை நம்புங்கள்,பொய்யை நம்பாதீர்கள்
அன்புடன்- கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு