திங்கள், 30 மே, 2011

உண்மை எது ? பொய் எது ?

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் 
இந்த உலகம் தோன்றிய காலத்தில் இருந்து பல ஜானிகள் தோன்றினார்கள் பல கருத்துக்களை சொல்லியுள்ளார்கள் எழுதி வைத்துள்ளார்கள் அவை மதங்களாக மாறின.ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கருத்துக்கள் கூறின.அதனால் போட்டிகள் பொறாமைகள் தோன்றின.அதனால் அதை பின்பற்றிய மக்கள்,நம்பிக்கையின் பேரில் அதை அதை பிடித்துக் கொண்டு போரிட்டு அழிந்து கொண்டே இருக்கிறார்கள் .

சித்தர்கள் யோகிகள் ஜானிகள் என பலர் உருவாகினர்,அவர்களுள் அக அனுபவ போட்டிகள் தொடங்கின.அதில் கர்மயோகம்.ராஜயோகம்,ஞானயோகம, என சரியை,கிரியை யோகம ஞானம் ,என நான்கு பிரிவுகள்,அதில் ஒவ்வொன்றிலும் நான்காக பதினாறு பிரிவுகள் உருவாக்கப்பட்டன.அதை சொல்லிக் கொடுக்க பல குருமார்கள் உருவானார்கள் அவரவர்கள் கருத்துதான் உயர்ந்தது என்று அதில் போட்டிப்போட்டுக் கொண்டு,இன்றுவரை,பல அமைப்புகள் தியானம் தவம யோகம என வைத்துக் கொண்டு பணம் பறிக்கும் வேளையில் இறங்கி விட்டார்கள்,அதையும் உண்மை என்று நம்பி மக்கள் ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள்.அவர்களின் உண்மை அறிந்து பல யோகிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.பலபேர் வெளியே இருக்கிறார்கள், சிறைக்கு செல்லும் வரை நல்லவர்களாக இருந்தவர்கள் பின் கெட்டவர்களாக மாறிவிட்டார்கள்.இவை ஏன்?

உண்மை தெரியாமல் மக்களை ஏமாற்றுபவர்கள் உலகியல் சட்டத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.உலகியல் சட்டமே தண்டனை கொடுக்கும் என்றால்.அருளியல் சட்டம் என்ன செய்யும் ?உண்மை தெரியாமல் மக்களுக்கு போதிப்பதும் அவைகளை மக்கள் ஏற்று கொள்வதற்கும் உண்டான தண்டனைதான் மரணம் என்னும் தீர்ப்பாகும் .இதில் நல்லவர் கெட்டவர் என்ற பேச்சுக்கு இடம் இல்லை.உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்ற பேச்சுக்கு இடம் இல்லை.குறு சிஷ்யன் என்ற பேச்சுக்கு இடம் இல்லை.ஆன்மீக வாதி ,நாத்திகவாதி என்ற பேச்சுக்கு இடம் இல்லை.அனைவரும் மாண்டு போகின்றனர்.மரணம் அனைவருக்கும் பொதுவாக இருக்கின்றன.

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்ன? நமக்கு முன்னாடி போதித்தவகள்,போத்தித்தை பின்பற்றியவர்கள் அனைவருமே மாண்டு போனார்களே,இப்பொழுது நாம் எதை பின்பற்றுவது ,எப்படி மரணத்தை வெல்வது.இதுதான் இப்பொழுது உள்ள கேள்வியாகும்.மரணத்தை வெல்லும் மார்க்கம் ஒன்று உண்டு என்பதை முறையாக கண்டு அதன்படி வாழ்ந்து வழி காட்டியவர் வள்ளலார் அவர்களாகும்.
அவர் ஒரு பாடலில் பதிவு செய்துள்ளது;--

சாவதென்றும் பிறப்பதென்றும் சாற்றுகின்ற பெரும் பாவம் தன்னை எண்ணி 
நோவது இன்று புதிதன்றே என்றும் உளதால் இந்த நோயை நீக்கி 
ஈவது மன்றிடை நடிப்பாய் நின்னாலே யாகும் மற்றை இறைவராலே
ஆவது ஒன்றுமில்லை என்றால் அந்தோ இச்சிறியேனால் ஆவது தென்னே!

தான் மரணத்தை வென்று வாழ்ந்த வள்ளலார் இச்சிறியேனால் ஆவது ஒன்றுமில்லை என்றால் அதன் அர்த்தம் தன முனைப்பு இல்லாமல் மற்றவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும்.அவர்களும் இந்த வழியில் வரவேண்டும் என்றும் சொல்லாமல் சொல்லுகிறார்கள்.நாம் என்ன செய்வோம் அவராலே முடியவில்லையே நம்மால் எப்படி முடியும் என்ற அர்த்தம் கொள்ளக் கூடாது.வள்ளலார் பாடல்கள் அவரவர் தகுதிக்கு தகுந்த வாறு விளக்கம் தரும்.
நீங்கள் எதை நோக்கி செல்கிரீர்களோ அதற்கு தகுந்தாற் போல் விளக்கம் தரும் அதுதான் திரு அருட்பாவாகும்!

எங்கு எங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டுனும் 
அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெரும் ஜோதி!

என்றார் வள்ளலார் அவரவர் தகுதிக்கு தகுந்த விளக்கமும் லாபமும் கிடைக்கும்.ஆனால் முடிந்த முடிவு என்று ஒன்று உண்டு அதை தேடவேண்டும்.மற்றவர்கள் தேடியும் கிடைக்காமல் ஒரு எல்லையுடன் நின்று விட்டார்கள்.
ஆனால் வள்ளலார் அனைத்தையும் கண்டார் அனுபவித்தார்.தான் கண்டத்தை.அனுபவித்ததை மற்றவர்களும் அடைய வேண்டும் என்ற ஆவல் கொண்டு ஆனம் நேயத்தோடு அனைவருக்கும் தெரியப்படுத்துகிறார்.

அதற்க்கு உண்டான வழியையும் காட்டியுள்ளார் சத் விசாரம்,பரோபகாரம்,இந்த இரண்டு வழிகள் மூலமாகத்தான் அனைத்தும் கிடைக்கும்.அதற்கு ஒழுக்கம் மிக முக்கியம்.இந்திரிய ஒழுக்கம்,காரண ஒழுக்கம்.ஜீவ ஒழுக்கம்.ஆன்ம ஒழுக்கம்.என்பனவாகும்.ஜீவகாருண்யம் விளங்கும் போது அன்பும் அறிவும் தானே விளங்கும். ஜீவகாருண்யம் மறையும் போது அன்பும் அறிவும் தானே மறையும் .

பக்தி என்பது ;--மன நெகிழ்ச்சி,மன உருக்கம்.அன்பு என்பது;-ஆன்ம நெகிழ்ச்சி ஆன்ம உருக்கம்,எல்லா உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே உண்மை பக்தியாகும்.அந்தகரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளை விப்பதாகும்.ஆதலால் ஜீவகாருண்யம் உண்டானால் அன்பு உண்டாகும் .அன்பு உண்டானால் அருள் உண்டாகும்.அருள் உண்டானால் சிவானுபவம் பெறலாம்.இதுதான் சுத்த சன்மார்க்கத்தின் அடிபடைக் கொள்கைகளாகும்.

பத்து ஆள்சுமை ஒரு வண்டி பாரம்.நாணூறு வண்டிச சுமை ஒரு சூல் வண்டிபாரம்.சூல்வண்டி.ஆயிரங் கொண்ட நூல்களை ஒரு ஜென்மத்தில் ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்சியில் படிக்கச சிறிய உபாசனை சகாயத்தால் படிக்க முடியும் ,அப்படிப் பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை அறிவை,ஒருவன் அருள் முன்னிடமாகச சுத்த சிவ நோக்கத்தால்அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.,இது சத்தியம்.

ஆண்டவர் சோதிக்கிறார் என்பது ;--
பிணி,மூப்பு,பயம்,பசி முதலிய வற்றால் வருந்தச செய்விப்பதில்லை,மரணம் அடையச செய்விப்பதுதான் சோதனையாகும்.

ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் ஞானம ,யோகம ,தவம,விரதம் ஜெபம்,தியானம்,முதலியவைகளைச செய்கின்றவர்கள் கடவுளுக்குச சிறிதும் பாத்திரமாகார்கள்.அவர்களை ஆன்ம விளக்கமுள்ளவர்கள் என்று நினைக்கப்படாது.ஜீவகாருண்யம் இல்லாது செய்யப் படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோசனம் இல்லாத மாயாச செய்கைகளே யாகும் என்று அறியவேண்டும்.இதுவே வள்ளலார் நமக்குத் தந்த உண்மையாகும்.

காலையிலே எந்தனக்கே கிடைத்த பெரும் பொருளே 
களிப்பே என் கருத்தகத்தே கனிந்த நறுங்கனியே 
மேலையிலே இம்மையிலே வொருமையிலே தவத்தால் 
மேவுகின்ற பெரும் பயனாம் விளைவைஎல்லாம் தருமச 
சாலையிலே ஒரு பகலில் தந்த தனிப்பதியே 
சமரச சன்மார்க்கத் தலை அமர்ந்த நிதியே 
மாலையிலே சிறந்த மொழி மாலை அணிந்தாடும் 
மானடத்து என் அரசே என் மாலை அணிந்தருளே!

என்கிறார் வள்ளலார் இதில் இருந்து புரிந்து கொள்ள வேண்டாமா ? வள்ளலார் வழியில் மக்கள் பின் பற்றினால் பொய் சொல்லி பிழைக்கும் ஏமாற்று பேர்வழிகளின் வாய் ஜம்பம் பலிக்காது என்பதால்.அவரவர்கள் வள்ளலாரை வைத்து வியாபாரம் செய்யத் துணிந்து விட்டார்கள்.அவர்களையும் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்.அவர்களும் நம்முடைய சகோதரர்கள் என்பதால்.எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களையும் நம்மவராக்கிக் கொள்ளுங்கள் என்கிறார் வள்ளலார் .அவர் கருணையே தனிபபெருங்கருணை என்பதால்தான் .

கடல் கடந்தேன் கரையடைந்தேன் கண்டு கொண்டேன் கோயில் 
கதவு திறந்திடப் பெற்றேன் காட்சியெலாங் கண்டேன் 
அடர்கடந்த திருஅமுதம் உண்டேன் அருள் ஒளியால் அனைத்தும் 
அறிந்து தெளிந்து அறிவு உருவாய் அழியாமை யடைந்தேன் 
உடல் குளிர்ந்தேன் உயிர் கிளர்த்தேன் உள்ளமெலாம் தழைத்தேன்
உள்ளபடி உள்ளபொருள் உள்ளவனாய் நிறைந்தேன் 
இடர் தவிர்க்கும் சித்திஎலாம் என்வசம் ஓங்க்கினவே 
இத்தனையும் பொது நடஞ் செய் இறைவன் அருட்செயலே.

உண்மை என்பது ஒன்றுதான் அது எந்த விதத்தில் சொன்னாலும் உண்மை உண்மைதான்.

அனைவரும் உண்மை வழியில் வாழ்ந்து வளம் பெருவோம்.

கொல்லாநெறியே குவலயம் ஓங்குக! 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!

அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு