சனி, 28 மே, 2011

ஜீவாத்மா வேறா ?பரமாத்மா வேறா ?

ஆன்ம நேய அன்புடையீர் வணக்கம்.ஜீவாத்மா,பரமாத்மா,எனபது வேறு வேறு அல்ல!
இந்த உலகம்.இதுபோல் பலகோடி உலகம் யாவும்,ஒன்றிலிருந்து தோன்றியதுதான்.
அதனால்தான் கடவுள் ஒருவரே என்பதாகும் .காரணம் காரியம் என்பதாகும் 
காரணம் இல்லாமல் காரியம் நடைபெறாது .
ஜீவாத்மா தனியாக இருப்பதால் தனியல்ல.தனியாக ஏதோ ஒரு காரியத்திறகாக
ஜீவனை எடுத்துள்ளது,காரியம் முடிந்து விட்டால் உண்மையிடம் தான் செல்லமுடியும்.
வேறு எங்கும் செல்ல முடியாது ,
காரணம் தெரியவில்லை,காரியமும் தெரியவில்லை,அதனால் வேறு வேறாக நினைத்துக் 
கொண்டுள்ளோம் யாவும் ஒன்று என்று எப்பொழுது அறிவின் வெளிப்பாடு செயல்படுகிறதோ 
அப்பொழுது யாவும் ஒன்று என்ற உண்மை தெள்ளத் தெளிவாக தெரியும்.இந்த உண்மை 
தெரியாமல்,பலபேர் பலவழிகளை காட்டி தானும் குழம்பி,மற்றவர்களையும் குழப்புகிறார்கள்.
இந்த உலகம் முழுவதும் உள்ள அனைத்தும் ஒன்றிலிருந்து வந்ததுதான்.வேறு வேறு அல்ல.
நம் கண்களுக்கு வேறு வேறாக தெரிகின்றன.
இந்த உண்மையை சொல்ல வந்தவர்தான் வள்ளலார் அவர்கள்.அவர் வந்த காரணமும் 
காரியமும் சொல்லிவிட்டு அவர் வந்த இடத்திற்கே சென்று விட்டார்.அவர்தான் உண்மையான 
விலாசத்தை தெரிவித்து விட்டு தான் வந்த இடத்தையும்,சென்ற இடத்தையும்.வழியிது,
துறையிது,நீ செய்யும் முறையிது,என்று வாழ்ந்து வழி காட்டியுள்ளார்கள்.
அவர் காட்டிய பாதையில் சென்றால்தான் உண்மைகள் தானே தெரியும் அது வரையில் 
உண்மை தெரியாது.பொய்யான கடவுள்வழிபாடு ,யோகம,தவம,தியானம்,இவைகள் எல்லாம் 
மாயா ஜாலங்கலாகும்.இதை கற்றுக் கொடுத்தவர்களும் ,கேட்டு அதன்படி நடந்தவர்களும்,
மாண்டு கொண்டேதான் இருக்கிறார்கள்..
வேறு வேறு என்றுமனத்தால் நினைத்தால் அனைத்தும் வேறு வேறாகத்தான் தெரியும்.எல்லாம் 
ஒன்று என்று அறிவால் அறிந்தால் அனைத்தும் ஒன்று என்பது தெரியும்.நாம் அனைவரும் 
மனத்தைக் கொண்டுதான் தேடுகிறோம்.அறிவைக் கொண்டு தேடுவதில்லை.மனத்தால் 
உண்மை விளங்காது.
அறிவை அறிவால் அறிகின்ற போது அனுபவம் தெரியும் இதை வள்ளலார் எப்படி சொல்லுகிறார் 
என்பதை பாருங்கள்.

அருளாலே யருளிறை யருள்கின்ற பொழுது அங்கு 
அனுபவ மாகின்ற என்னடி தாயே 
தெருளாலே மருளாலே தெரியாது தெரியும் 
திருநட இன்பம் என்று அறியாயோ மகளே 

அறிவாலே அறிவினை அறிகின்ற பொழுது அங்கு 
அனுபவ மாகின்றது என்னடி தாயே 
செறிவாலே பிறிவாலே தெரியாது தெரியும் 
திருவருள் உருவமேன்று அறியாயோ மகளே!

என்று தெளிவாக திரு அருட்பாவில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் அவர்கள்.
படித்து அறிவாலே அறிந்து பயன் பெருவோம்.அதை விடுத்து யாராவது ஒன்று சொல்ல 
கேட்டு அதன்படி நடந்தால் சில நன்மைகள் கிடைக்கும்.அதனால் பல்லிளித்து இறுமாந்து 
கெட நேரிடும்.உண்மை தெரியாது வீணாக அனைவரும் அழிந்தது போல் நாமும் 
அழிந்து விடுவோம்.

எனக்கு வள்ளலார் காட்டிய வழியை சொல்லி விட்டேன்.மேலும் உங்கள் விருப்பம்.
அன்புடன் -கதிர்வேலு  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு