சனி, 7 மே, 2011

நண்பருக்கு கடிதம்

ஆன்மநேய அன்புடையீர் என்றால் நாம் எல்லாம் கடவுளுடைய பிள்ளைகள்,
ஒன்றிலிருந்து வந்தவர்கள்,உண்மைதேரியாமல்,பிரிந்து வேறு வேறாக 
அலைகின்றோம்,உண்மைதேரிந்தவர்கள்,ஆண்மநேயத்துடந்தான் 
இருப்பார்கள்,நீங்கள் என்னை வெறுத்தாலும் நான் உங்களை வேருக்கமாட்டேன்.
நீங்கள் என்னுடைய சகோதர்கள்,வைத்தாலும் வைதிடுமின் வாழ்த்தேனக் 
கொண்டிடுவேன் மனம் கோனேன் மானம் எல்லாம் போனவழி விடுத்தேன் 
பொய்தானோர் ஓர் சிறிதெனினும் புகழேன்,நீவீர் எல்லாம் புனிதமுரும் 
பொருட்டே.
    உங்கள் விருப்பத்திற்கு நான் தடையாக இல்லை,காலம் வரும்போது 
நீங்களே புரிந்து தெரிந்து கொள்வீர்கள்.காலமும் முயற்ச்சியும் தான் 
உங்களுக்கு பதில் சொல்லும்.,
    நான் யார் என்பது எனக்குத்தெரியும்.என்னிலை என்னென்பது என்னைப்
படைத்த அருட்பெரும் ஜோதி ஆண்டவருக்குத் தெரியும்.மற்றவர்களுக்கு 
தெரிய வேண்டும் என்பதில்லை.
   கடவுளை அறியவேண்டுமானால் இரண்டு வழிகள் உண்டு,ஒன்று 
பரோபகாரம் அடுத்து சத்விசாரம்,ஒன்று படியுள்ளது,ஒன்று படியில்லாத்து.
பரோபகாரம் என்பது உயிர்களுக்கு உபகாரம் செய்வதாகும்,அடுத்து 
இறைவனை இடைவிடாது தொடர்பு கொண்டு உலக உண்மை நிலையை 
அறிவதாகும்,இந்த இரண்டு வழிகள் மூலமாகத்தான் இறைவனை 
அறிந்து அன்புசெய்து மேல்நிலையை அடையமுடியும் என்பதை 
வள்ளலார் எழுதிய திருஅருட்பா மூலமாக,நான் அறிந்து என்னால் 
முடிந்த அளவு உயிர்களுக்கு உபகாரம் செய்து,சத்விசாரத்துடன் வாழ்ந்து 
வருகிறேன்,எனக்கு காட்டவேண்டிய உண்மைகளை இறைவன் காட்டி 
வருகிறார்.
     சுமார் ௩௫ ,ஆண்டுகளாக வள்ளலார் காட்டிய வழியில் தமிழகம் முழுவதும் 
சென்று சுத்தசன்மார்க்க பாதையில் சொற்பொழிவு செய்து வருகிறேன்..
இதுவரையில் யாரிடமும் பணம் வாங்கியதில்லை,என்னுடைய சொந்த 
செலவில் தான் சென்று வருகிறேன்,பணத்தை அன்பர்கள் கொடுப்பார்கள்,
நான் கையில் கூடதொடமாட்டேன்,அதேபோல் எனக்கு எந்த சொத்தும்,
வீடும்,பணமும் கிடையாது.என்பெயரில் எதுவும் கிடையாது.இவையெல்லாம் 
இல்லையே உங்களுக்கு எப்படி பணம் வருகிறது என்று கேட்பீர்கள்,அதுதான் 
ரகசியம்.அதுதான் இறைவன் செயல்.இதை உலகம் ஏற்றுக் கொள்ளுமா ?
என்றால் ஏற்காது,
     வள்ளலார் சொல்லுவார் இல்லாமை எனக்கில்லை எல்லாற்க்கும்
தருவேன் என்னுடைய பெருஞ்செல்வம் என்புகல்வேன் என்பார்.
அதுபோல் நீங்கள் இறைவனை உண்மையாக நம்பினால் உங்களுக்கு 
எல்லாம் தானே கிடைக்கும்.உங்களுக்கு எதுதேவை,என்னதேவை,
எப்பொழுது தேவை என்பது இறைவனுக்குத்தேரியும்.இதுதான் என்னுடைய 
இபோதைய வாழ்க்கை.இனி எண்ண நடக்கும் என்பது எனக்குத்தெரியாது.
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் ஏற்றுக்கொள்வதும்,ஏற்றுக் கொள்ளாததும் 
உங்கள் விருப்பம்.நான் யார் எனக்கு என ஓர் ஞான அறிவு ஏது,என்று அனைத்தும் 
தெரிந்த வள்ளலார் சொல்லுகிறார் என்பதை நினைக்கும்போது.நான் யார் 
உங்களுக்கு சொல்வது,
     நாம் உலகியலில் நின்று தடுமாறிய வண்ணம் இறைவனை தேடநினைக்கிறோம் 
ஆனால் இறைவனை அடைய வேண்டும் என நினைக்கின்ற செயலில் ஈடுபட்டுள்ள 
உருத்திரர்,விண்ணரசர்,கருடர்,காந்தருவர்,இயக்கர்,பூதர,மறுத்தவர்,யோகியர்,
சித்தர் ,முனிவர்,வானவர்,எல்லாம் அவர்கள் வணங்கும் வேதங்களை கண்டு ஓதி,
இறைவனை அடையும் வழியாது என வினவ ,அவ்வேதமும் நாங்களும் 
காணமுடியாது,இன்னும் தேடிக்கொண்டு இருக்கிறோம் என்று கூறுகின்றதாம்

அதை வள்ளலார் திருஅருட்பா வில் பதிவு செய்துள்ள பாடல் ;--                        
 .  .  
உருத்திரர் நாரணர் பிரம்மர் விண்ணோர் வேந்தர் 
உறுகருடர் காந்தருவர் இயக்கர் பூதர் 
மறுத்தவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை 
வானவர்கள் முதலோர் தம மனத்தால் தேடி 
கருத்தழிந்து தனித்தனியே சென்று வேதங் 
களை வினவ மற்றவையும் காணேம் என்று 
வருத்தமுற்று அங்கவரோடு புலம்பா நின்ற 
வஞ்சவெளியே இன்பமயமாம் தேவே !

என்று வள்ளலார் சொல்லுகின்றதைப் பார்த்தால் நம்முடைய நிலை 
எவ்வளவு தாழ்ந்தநிலையில் உள்ளது என்பதை நினைக்கும் போது,நாம்  
யாருடன் தொடர்பு கொள்வது ,என்பது நன்கு புலப்படும்.இதற்கு மேல் 
நான் அதிகம் சொல்லி உங்கள் மனதை புண் படுத்த விரும்பவில்லை..

அடுத்து திருமூலர்,மாணிக்கவாசகர்,உயர்ந்தவர்கள் அதில் எந்த விதமான 
சந்தேகமும் இல்லை.

  வள்ளலார் எழுதியதை சொல்லியதை மக்கள் கேட்காமல் இருப்பதால் 
திருமந்திரத்தையும் திருவாசகத்தையும் பாருங்கள்,சாத்திரதிற்கு 
திருமந்திரமும்,தொத்திரத்திற்கு திருவாசகமும்,சொல்லி இருக்கின்றன,.
அதற்கு மேல் இறைவனையடைய சுத்தசன்மார்க்க தனி நெறியை 
உலகமெலாம் போற்ற ஒளிவடிவனாகிய இறைவன் அருட்பெரும் ஜோதி
ஆண்டவர் இலக அருள் செய்தான் இசைந்து,என்கிறார் வள்ளலார் .

பன்னெறிச சமயங்கள் மதங்கள் என்றிடுமோர்
பவநெறி இதுவரை பரவியது அதனால் 
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர் 
செறி இருள் அடைந்தனர் ஆதலில் இனி நீ 
புன்னேறி தவர்த்து ஒரு பொது நெறி எனும் வான் 
புத்தமுதம் அருள்கின்ற சுத்த சன்மார்க்கத் 
தன்னெறி செலுத்துக வென்ற என்னரசே 
தனி நடராஜ வென் சற்குரு மணியே 

என்று உலகம் அத்தனைக்கும் பொது நெறியாகிய அருள் நெறியை 
சுத்தசன்மார்க்கத் தனி நெறியை உலகிற்கு தெரியப்படுத்த வந்தவர்தான் 
வள்ளலார் அவர்களாகும் .

அந்நிய உலகினரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று அழுத்தம் 
திருத்தமாக அனைவருக்கும் சேர்ந்து உரைத்துள்ளார்கள்.

அடுத்தபாடலில் அந்நியர்களுக்கும் ;-

நண்ணிய மதநெறி பலபல அவையே 
நன்றற நின்றன சென்றன சிலவே 
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள் 
அலைதறு கின்றனர்  அலைவர மகனே 
புண்ணியம் முறுதிரு அருள்நெறி இதுவே 
பொது நெறி யென அறிவுற முயலுதி நீ 
தண்ணிய அமுதுண்ணத் தந்தனம் என்றாய்
தனி நடராஜ வென் சற்குரு மணியே 

அனைத்துலக மக்களையும் அழைக்கின்றார் வள்ளலார்.
சாதி, மதம்,சமயம்,சாத்திரம் போன்ற அனைத்தும் பொய் என்று 
சொன்ன வள்ளலார் வழியில் அனைத்தும் விட்டு அவருடைய 
திருவடியை பற்றிக் கொண்டு வாழ்ந்து வருகிறேன்.இதில் 
யாருக்கும் எந்த சந்தேகம் வேண்டாம்.

உங்கள் அன்பன் ;--ஆன்மநேயன் -கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு