புதன், 18 மே, 2011

பக்தி சிறந்ததா ?பகுத்தறிவு சிறந்ததா ?

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் 

பக்தி சிந்தனை சிறந்ததா ? பகுத்தறிவு சிந்தனை சிறந்ததா ?
என்ற கேள்விக்கு பதில் !

பக்தி என்பதற்கு வள்ளலார் சொல்லும் பதில்;--

பக்தி என்பது ;--மனநெகிழ்ச்சி, மனவுருக்கம்,அன்பு என்பது 
ஆன்மநெகிழ்ச்சி ,ஆன்ம உருக்கம்,எல்லாஉயிர்களிடத்தும் 
கடவுள் வியாபித்து இருப்பதை அறிதலே ஈசுவர பக்தியாம் .
அந்தகரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது .

ஜீவகாருண்யம்உண்டானால், அன்பு உண்டாகும்.அன்பு உண்டானால் அருள் 
உண்டாகும் .அருள் உண்டானால் சிவா அனுபவம் பெறலாம் .
என்கிறார் வள்ளலார் 

பத்து ஆல்சுமை ஒரு வண்டி பாரம் .நானுறு வண்டிச சுமை 
ஒரு சூல் வண்டி பாரம்,சூல்வண்டி ஆயிரம்கொண்ட நூல்களை,
ஒரு ஜென்மத்தில், ஒருவன் அதிதீவிர ஜீவ முயற்ச்சியால்,
படிக்கச சிறிய உபாசனைச சகாயத்தால் முடியும்.
   
அப்படிப்பட்டவன் ஆயிரம் ஜென்மம் எடுத்துப் படிக்கும் கலை 
அறிவை,ஒருவன் அருள் முன்னிடமாகச சுத்த சிவநோக்கத்தால்
அறியத் தொடங்கினால் ஒரு கணத்தில் படித்துக் கொள்ளலாம்.
(எந்திரன் படத்தில் ரஜினி படிப்பதுபோல்)இது சத்தியம் என்கிறார் 
வள்ளலார்.   
         
பகுத்தறிவுக்கு வள்ளலார் சொல்லும்பதில் ;--

மனுஷ்ய தரத்தில் தனக்கு இருக்கிற வல்லபத்தால் அசுத்தங்களை 
நிவர்த்தி செத்து கொள்ளக் கூடுமா என்றால் ;-

எது நல்லது இது கெட்டது,என்று பகுத்தறியும் ஞானத்தால் விஷய 
வாசனையில் கரணங்களைச செல்ல வொட்டாமல்,தடுக்கக் கூடுமே 
ஒழிய நிவர்த்திக்கக் கூடாது.

அது ஆண்டவர் அருளால் சுத்ததேகம் பெற்றவர்களால் தான் முடியும்.
அது அருள்ஒளி கிடைத்தால் அத்தருணமே சுத்தக் காரணமாய் நிற்கும்.
அசுத்தம் வருவதற்குக் காரணம் யாதெனில்;--

செம்பில் களிம்பு இயற்கை --அதுபோல்,ஆன்மாவிற்கு ஆணவம் இயற்கை.
செம்பிலே களிம்பு இயற்கையாயுள்ளதைப் பரிசன வேதியினால் 
நிவர்த்தித்து ஏமமாக்குவதுபோல்,மாயா காரியமான இந்தத் தேகத்தின்கண்
உள்ள ஆன்ம இயற்கையாகிய ஆணவ மலம ஆண்டவர் அருளினால் 
நீக்கப் பெற்று சுத்த உடம்பாக்கி கொள்ளலாம்.                  

ஆண்டவர் அருள் அடைவதற்கு நாம் இடைவிடாது நன் முயற்சியின் 
கண் பழகுதல் வேண்டும்.

இதற்கு பிரமாணம் ;--
ஓடாது மாயையை நாடாது நன்னெறி 
ஊடா திருவென்றீர் வாரீர் 
வாடா திருவென்றீர் வாரீர்.

மேலே உள்ள கருத்துபடி உண்மையான பக்தி ,உண்மையான 
பகுத்தறிவு என்ன  என்பதை வள்ளலார் விளக்கியுள்ளார்..

உலகியல் பக்தி எப்படியுள்ளது ;-

பக்தி என்றால் பொய்யான கற்பனை கதைகளில் வரும் 
கதாபாத்திரங்களான,தத்துவங்களை,கடவுளாக பாவித்து 
ஆலயங்களை கட்டி,மனிதனால் உருவாக்கப்பட்ட,கடவுள் 
எனும் பொம்மைகளை வைத்து,வழிபாடு செய்வதுதான் 
பக்தி என்று போற்றி வழிபட்டு வருகிறார்கள்.

அதுமட்டுமா அந்த பொம்மைகளுக்கு அலங்காரம் 
அபிஷேகம்,ஆராதனை,செய்வதோடு விட்டுவிடுகிறார்களா.
மனிதனுக்கு திருமணம் செய்வது போல்செய்து,முதல் இரவு
காட்சியும்,நடத்திவைக்கிரார்கள்.

அது மட்டுமா ?சில மொம்மை சாமிகளுக்கு தங்களுக்கு 
நன்மை செய்யும் என்பதற்காக வாயில்லாத ஜீவன்களை 
ஆடு ,மாடு,,கோழி,பன்றி போன்ற உயிர்களை பலிக் 
கொடுத்து பாவத்தை சம்பாதிக்கிறார்கள்.இதுதான் உலகியல் 
பக்தியாகும்.

அது மட்டுமா ?பொம்மைக் கடவுளுக்கு வியாபாரம் 
செய்கிறார்கள்.எனக்கு இவ்வளவு,உனக்கு இவ்வளவு ,
என்று பேரம் நடக்கின்றன.மக்களிடம் கொள்ளை அடித்து 
வரும் பணத்திலே பொம்மை சாமிக்கு கோடி கோடியாய்,
கொட்டுகிறார்கள்.இதுதான் இன்றைய பக்தி நிலையாகும் .

அதற்கு வள்ளலார் தரும் பாடல்;-

வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர் 
வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை யறியீர் 
பெட்டிமேல் பெட்டிவைத்தாள் கின்றீர் வயிற்றுப் 
பெட்டியை நிரப்பிக் கொண்டு ஒட்டியுள் இருந்தீர் 
பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர் 
பழங்கஞ்சி யாயினும் வழங்கவும் நினையீர்
எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர் 
எத்துனை கொகின்றீர் பித்துலகீரே.

பொம்மை தெய்வங்களை வழிபடுவோருக்கு வள்ளலார் 
தரும் பாடல் .
..
தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும் 
சேர்கதி பலபல செப்புகின்றாரும் 
பொய்வந்த கலைபல புகன்றிடுவாரும்
பொய்ச சமயாதியை மேச்சுகின்றாரும் 
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார
மேல்விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார் 
எய்வந்த துன்பொழித்து அவர்க்கு அறிவு அருள்வீர் 
எனைபள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

என்று திருஅருட்பாவில் வள்ளலார் பதிவு செய்துள்ளார்கள்
மேலே எழுதிய பாடலில் பல தெய்வங்களை வழிபடுபவர்களுக்கு 
அறிவு இல்லை,எனக்கு அறிவு தெரிவித்ததுபோல் அவர்களுக்கும் 
அறிவு கொடுக்கவேண்டும் என்று ஆண்டவரிடத்தில் நமக்காக 
விண்ணப்பம் செய்கிறார் வள்ளலார்.இவைபோல் ஆயிரக்கணக்கான 
பாடல்கள் பதிவு செய்துள்ளார்கள் .

உண்மையான பக்தி கடவுள் ஒருவரே என்றும்.அவர் அருட்பெரும் 
ஜோதியாக உள்ளார் என்றும்.அவர் எல்லாஉயிர்களிலும் உயிர் 
ஒளியாக இயங்கிக் கொண்டு இருக்கிறார் என்பதை உணர்ந்து 
அனைத்து உயிர்களும் நம்முடைய சகோதரர்கள் என்பதை 
அறிவு பூர்வமாக அறிந்து,எந்த உயிர்களுக்கும் தீங்கு விளை
விக்காமல்,அன்பு,தயவு ,கருணை கொண்டு வாழ்வதே உண்மை 
யான பக்தியாகும் .அப்படி வாழ்ந்தால் கடவுள் கருணை 
என்னும் அருள் நம்மை தேடிவரும்.

உலகியல் பகுத்தறிவு ;--

பகுத்தறிவு என்றால் கடவுள் மறுப்புக் கொள்கை என்பது 
அனைவரின் கருத்தாக இருக்கின்றன .உண்மையை அறிவது 
பகுதறிவாகும் ஆனால் இன்று பகுத்தறிவு எனப்படுவோர்
உண்மையை அறிந்தவர்களா? என்றால் இல்லை என்றுதான் 
சொல்ல வேண்டும்..
 ...    
உதாரணத்திற்கு,உருவ வழிபாடு கூடாது என்று,பகுத்தறிவாளர்கள் 
சொல்லுகின்றார்கள்.அதெல்லாம் கற்பனை,கல்லிலும் 
செம்பிலும் கடவுள் இல்லை.அதெல்லாம் பேசுமா.
அதை கும்பிடுகிறவன்,முட்டாள்.மடையன்,அயோக்கியன் . 
என்றெல்லாம் பேசுகிறார்கள் .கடவுளை கற்பித்தவன் முட்டாள் 
என்றெல்லாம் பேசுகிறார்கள்.அதை எல்லாம் நியாயம் என்றே 
எடுத்துக் கொள்வோம்.இவர்கள் எண்ண செய்கிறார்கள்.

பகுத்தறிவாளர்கள்;-.இறந்து போன அதாவது செத்துப்போன 
தலைவர்களுக்கு,மண்ணால்,கல்லால், உலோகத்தால் செய்த சிலைகளை 
செய்து எங்கு பார்த்தாலும்,முக்கியமான இடங்களில் அந்த 
பொய்யான சிலைகளை நிறுவி,வணங்க்குகிறார்களே,இது 
எந்த விதத்தில் ஞாயம்,அந்த பொம்மைகளுக்கு மாலை 
மரியாதை செய்து வணங்க்குகிறார்களே,இவை எந்த விதத்தில் 
ஞாயம்,இதற்கு பெயர் பகுத்தறிவா?அந்த சிலையும் 
பேசாதே,அதுவும் பொய்யான சிலைதானே.!

நீங்கள் பொய்யான சிலைகளை வணங்கிக் கொண்டு 
மற்றவர்களை வணங்க வேண்டாம் என்பதில் என்ன  
ஞாயம் இருக்கிறது.எண்ணிப்பார்க்க வேண்டும் .

இப்பொழுது உலகியலில் இருக்கும் பக்தியும் பகுத்தறிவும் 
ஒன்றுதான் வேறில்லை என்பது தெளிவாகிறது அல்லவா !

உண்மையான பக்தியும் இல்லை,உண்மையான பகுத்தறிவும் 
இல்லை.உண்மையான பக்தியும் உண்மையான பகுத்தறிவும்.
தெரிந்து கொள்ள வேண்டுமானால் வள்ளலார் எழுதிய திரு 
அருட்பாவில் அனைத்தும் உள்ளன ,அதை படித்து தெரிந்து 
கொள்ளுங்கள்.

ஆண்டவரின் அருளைப் பெற வேண்டுமானால்.ஒழுக்கம் 
நிறைந்து திரு அருட்பாவை படித்து,அதில் உள்ள உண்மை 
நெறியான சுத்த சன்மார்க்க நெறியை பின் பற்றி வாழ்ந்து 
வளம் பெருவோம்.

நாத்திகம் என்பது வேறு,பகுத்தறிவு என்பது வேறு 
நாத்திகம் என்பது உண்மை தெரியாமல் எதையும் இல்லை 
என்று சொல்லுவதாகும் .
பகுத்தறிவு என்பது;--எது உண்மை, எது பொய்,  என்பதை 
அறிவு பூர்வமாக உண்மையை அறிந்து செயல்படுவதாகும்.
 .  
அதனால்தான் வள்ளலார் ;--

நாத்திகஞ் சொல்கின்றவர் தம் நாக்கு முடை நாக்கு 
நாக்கு ருசி கொள்ளுவது நாறிய பிண்ணாக்கு 
சீர்த்தி பெரும் அம்பலவர் சீர் புகன்ற வாக்கு 
செல்வாக்கு நல்வாக்கு தேவர் திரு வாக்கு !

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு