நண்பருக்கு கடிதம்
ஆன்மநேய அன்புடைய சகோதரர்களே உங்கள் அனைவருக்கும் வணக்கம்
வள்ளலார் இந்த உலகத்திற்கு ஏன் வந்தார்?எதற்க்காகவந்தார் ?யாரால்
அனுப்பிவைக்கபட்டார் ?அவர் வரவேண்டிய அவசியம் என்ன ?என்பதை
அவரே சொல்கிறார்.பின் வரும் பாடல்களை,நன்கு கவனிக்கவேண்டும்.
அகத்தே கருத்துப் புறத்து வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச சன்மார்க்க சங்கத்து அடைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று மகிழ்ந்திடுதற்கு என்றே எனை இந்த
யுகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேன்,
அடுத்து -
பேருற்ற உலகிலுறு சமயமத நெறி எல்லாம்
பேய்பிடிப் புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டு என உணர்ந்திடாது உயிர்கள் பல
பேதமுற்று அங்கும் இங்கும்
போருற்று இரந்து வீண் போயோனார் இன்னும் வீண்
போகாத படி விரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறி காட்டி மெய்ப்
பொருளினை யுணர்த்தி எல்லாம்
ஏறுற்ற சுகநிலை யடைந்திட புரிதி நீ
என் பிள்ளை யாதலாலே
இவ்வேலை புரிக என்று இட்டணன் மனத்தில் வேறு
எண்னற்க என்ற குருவே .
நீருற்ற வோள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்து இருள் அகற்றும் ஒளியே
நிர்க்குனாணந்த பர நாதாந்த வரையோங்க்கும்
நீதி நடராஜபதியே .
அடுத்து ;-
பன்னெறிச சமயங்கள் மதங்கள் என்றிடுமோர்
பவநெறி இதுவரை பரவியது அதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து உலகோர்
செறியிருள் அடைந்தனர் ஆதலால் இனி நீ
புன்னேறி தவிர்த்து ஒரு புது நெறிஎனும் வான்
புத்தமுதருள் கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்துக என்ற ஏன் அரசே
தனி நடராஜ என் சற்குரு மணியே.
அடுத்து ;--
நண்ணிய மதநெறி பலபல அவையே
நன்றற நின்றன சென்றன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடுநாள்
அலைதரு கின்றன அலைவர மகனே
புண்ணியம் உருதிரு அருள்நெறி இதுவே
பொது நெறி யென அறிவுற முயலுதி நீ
தண்ணிய அமுதுணத் தந்தனம் என்றாய்
தனி நடராய என் சற்குரு மணியே .
என்று தான் இந்த உலகத்திற்கு வந்ததின் நோக்கமும் ,இறைவன்தான்
அனுப்பி வைத்தார் எனபதையும் ,முன்னாடி வந்தவர்கள் என்ன செயதார்கள்
அவர்களால் இந்த உலகம் எப்படி அழிந்து கொண்டு இருக்கிறது.அதையெல்லாம்
எப்படி ஒழிக்க வேண்டும் என்பதை,அனைவரும் ஏற்றுக் கொள்ளும் அளவிற்கு
பொது நெறியாகிய சுத்த சன்மார்க்கத்தை மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்
என்பதை மேலே கண்ட பாடலில் தெளிவுபடுத்தியுள்ளார்.இவைபோல் நிறைய
பாடல்கள் உள்ளன ,
அடுத்து அருட்பெரும்ஜோதியும் நானும் ஒன்றுதான் என்பதை பலபாடல்களில்
தெரிவித்துள்ளார் .
சபை எனதுளமெனத் தான் அமர்ந்து எனக்கே
அபயம் மளித்ததோர் அருட்பெரும்ஜோதி !
சாகாக் கல்வியின் தரமேலாம் உணர்த்திச
சாகா வரத்தையும் தந்து மேன்மேலும்
அன்பையும் விளைவித்து அருட் பேரொளியால்
இன்பையும் நிறைவித்து என்னையும் நின்னையும்
ஒருருவாக்கிய உன்னியபடி எல்லாம்
சீருறச செய்து உயிர்த் திறம் பெற அழியா
அருள் அமுதளித்தனை அருநிலை ஏற்றினை
அருள் அறிவளித்தனை அருட்பெரும்ஜோதி!
உலக உயிர்த் திரள் எல்லாம் ஒளிநெறி பெற்றிட
இலகும் ஐந்தொழிலையும் யான செய்யத் தந்தனை!
மூவரும் தேவரும் முத்தரும் சித்தரும்
யாவரும் பெற்றிடா இயல் எனக்கு அழித்தனை!
சித்திகள் அனைத்தையும் தெளிவித்து எனக்கே
சத்திய நிலைதனைத் தயவினிற் தந்தனை !
உலகினில் உயிர்களுக்கு உறும் இடையூறு எல்லாம்
விலக நீ அடைந்து விலக்குக மகிழ்க !
சுத்த சன்மார்க்கச சுக நிலை பெருக
உத்தமன் ஆகுக ஓங்குக என் தனை !
போற்றி நின பேரருள் போற்றி நின பெருஞ் சீர்
ஆற்றலின் ஓங்கிய அருட்பெரும்ஜோதி!
என்பதை திரு அருட்பாவில் தெளிவாக பதிவு செய்துள்ளார் .
வள்ளலார் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இடம் ,என்னைப்போல்
வேறு யாராவது இந்த உலகத்தில் இருந்தால் எனக்கு காட்டு என்று
சவால் விடுகிறார் .
அதன் பாடல் வருமாறு ;-
நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் மெஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப்போல் சார்ந்தவரும் தேவா நின்
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யாருளர் நீ சற்றே யறை !
இதற்கு என்ன பதில் சொல்கிறீர்கள்.ஐந்தொழில் வல்லபத்தையும்
வள்ளலாருக்கே கொடுத்துள்ளார் அருட்பெரும் ஜோதி ஆண்டவர் !
வாழி நீடுழி வாழி என்று ஓங்குபேர்
ஆழியைஅளித்த அருட்பெரும் ஜோதி !
எச்சம் நினகில்லை எல்லாம் பெருக என்று
அச்சம் தவிர்த்த என் அருட்பெரும் ஜோதி !
நீடுக நீயே நீளுலகம அனைத்தையும் நின்று
ஆடுக என்ற அருட்பெரும் ஜோதி.!
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும்
அஞ்சேல் என்ற என் அருட்பெரும்ஜோதி !
இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.இவைபோல்
ஆயிரக் கணக்கான பாடல்கள் திரு அருட்பாவில் குவிந்து கிடைகின்றன.
அதனால் தான் வள்ளலார் தன்னுடைய உடம்பை யாராலும் அழிக்க முடியாத
நிலைக்கு கொண்டுவந்த பிறகுதான்,ஆறாம் திருமுறையை வெளியிடச
சொன்னார்கள்.அவருடைய உடம்பை பற்றி வள்ளலார் பதிவு செய்துள்ளது
அருட் பெரும்ஜோதி ஆண்டவர் அவருடைய உடம்புபோல் வள்ளலாருக்கு
கொடுத்துள்ளார்.ஒளிதேகம் எப்படிப்பட்டது என்பதை விளக்குகிறார் .
காற்றாலே புவியாலே ககன மதனாலே
கனலாலே புனலாலே கதிராதி யாலே
கூற்றாலே பிணியாலே கொலைக கருவியாலே
கொளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே
வேற்றாலே எஞ்ஞன்றும் அழியாதே விளங்கும்
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் என் தனக்கே
ஏற்றாலே இழி வென நீர் நினையாதீர் உலகீர்
எந்தை அருட்பெரும் ஜோதி இறைவனைச சார்வீரே
என்கிறார் வள்ளலார்.
வள்ளலார் இந்த உலகத்தை திருத்த வந்தவராகும்,மற்றவர்கள்
எல்லாம்.பிறவாமை வேண்டும் என்றார்கள் .வள்ளலார் இறவாமை
வேண்டும் என்றவர்.மற்றவர்கள் எல்லாம் இறைவனை தேடி சென்றார்கள்
ஆனால் வள்ளலாரைத் தேடி இறைவன் வந்தார்.மண்ணுயிரை நினைத்து
வருந்தியவர் வள்ளலார்.அதனால்தான்
மன்னுயிரைஎல்லாம் களித்திட நினைத்தனை யுன்றன்
மன நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெருக உலவாது நீடுழி விளை யாடுக
அருட்ஜோதியாம் ஆட்சி தந்தோம்
உனைக் கைவிடோம் கைவிட்டோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திரு வாக்களித்து என் உள்ளே கலந்து
இசைவுடன் இருந்த குருவே !
என்கிறார்-- வள்ளலார்அருட்பெரும் ஜோதியாகி இப்பொழுது ஐந்தொழில்
செய்து கொண்டு இருக்கிறார் என்பதை சுத்த சன்மார்க்கத்தை கடைபிடிப்பவர்கள்
உணர்வார்கள்.மற்றவர்களுக்கு விளங்காது.ஆன்ம அறிவினால் உணர்பவர்களுக்கு
மட்டும் உண்மை விளங்கும்.வள்ளலார் காட்டிய வழியில் வாழ்பவர்களுக்கு மட்டும்
விளங்கும்.
ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் --வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே !
சாகாத கல்வித் தரமறிதல் வேண்டும் என்றும்
வேகாத காலுணர்தல் வேண்டும் உடன் --சாகாத்
தலை அறிதல் வேண்டும் தனி அருளால் உண்மை
நிலை அடைதல் வேண்டும் நிலத்து .
இதை எல்லாம் உணர்ந்தால்தான் உண்மை அறிவு விளங்கும் என்கிறார்
வள்ளலார்.ஏதோ அருட்பாவை படித்தால் மட்டும் போதாது.அதன்படி
வாழ்ந்தால்தான் உண்மை விளங்கும்.முதலில் ஒழுக்கம் தேவை
இந்திரிய ஒழுக்கம் ,கரணஒழுக்கம் ,இந்த இரண்டு ஒழுக்கத்தையும்
கடைப்பிடித்தாலே,மற்ற ஜீவ ஒழுக்கம் ,ஆன்ம ஒழுக்கத்தை,ஆண்டவர்
விளக்குவார் .
என் வாழ்க்கை பற்றி எனக்குத்தெரியும் ,என்னை இயக்கம் கடவுளுக்குத்
தெரியும்.மற்றவர் களுக்கு தெரியாது .உண்மை அன்பு ,உண்மை இறக்கம்,
உண்மை தயவு,உண்மையான கருணை,இருக்கவேண்டும் .அவை இருந்தால்
யாவும் தானே கிடைக்கும் இதுதான் உண்மையாகும் .
மேலும் சிந்திப்போம் ;--அன்புடன் கதிர்வேலு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு