ஞாயிறு, 15 மே, 2011

மாயை

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம்.மாயை என்பது பஞ்ச பூதங்களை நிர்வாகம் செய்யும் அதிகாரியாகும்.இங்கு வாழும் உயிர்களுக்கு பாது காப்பு வழங்கும்,உரிமையும் தவறு செய்தால் தண்டனை வழங்கும் உரிமையும் வழங்கப்பட்டுள்ளது.தண்டனை என்பதுதான் மரணமாகும்.நாம் யார்?நாம் எங்கிருந்து வந்தோம்,எதற்காக வந்தோம்,ஏன் வந்தோம்,மறுபடி எங்கு செல்லவேண்டும்,என்பதை உணர்வது தான் மனிதனுக்கு கொடுத்த அறிவாகும்.மனிதன் உணர்ந்து உண்மையான இறைவனை அடைவதுதான் மனித வாழ்க்கையாகும்.மாயை பொருளை கொடுக்கும் அருளை கொடுக்காது.ஆனால் மனிதன் அருளை தேடுவதற்கு மாயை தடையாக இருக்காது.துணையாக இருக்கும்.இவை இறைவன் சட்டமாகும்.
   இதை வள்ளலார் அருட்பாவில் பதிவு செய்துள்ள பாடல் வருமாறு;-

மாயையாற் கலங்கி வருந்தியபோதும் வள்ளல உந்தன்னையே மதித்துன் 
சாயையால் பிறரைப் பார்த்ததே அல்லால் தலைவா வேறு எண்ணியதுண்டோ 
தூயபொற்பாதம் அறிய நான் அறியேன் துயர் இனிச சிறிதும் இங்கு ஆற்றேன் 
நாயகா எனது மயக்கேல்லாம் தவிர்த்து நன்று அருள் 
புரிவது உன் கடனே!

 என்கிறார் வள்ளலார் ஆதலால் நாம் மாயையுடன் தொடர்பு கொண்டு வாழ்ந்தாலும்.மாயையில் இருந்து விலக வேண்டும் என்பது மனிதனின் செயல்களாகும். இறைவன் நமக்கு கொடுத்துள்ள அருளை பெற்றால் தான் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகமுடியும்.

   அதை விடுத்து நாம் இவ்வுலகிலுள்ள பொருள்களை அனுபவிக்கும் வரை அருள் கிடைக்காது.போருளைத்தேடினால் அருள் கிடைக்காது .அருளைத்தேடினால் அனைத்தும் கிடைக்கும்.அதனால் தான் அருளைத்தரும் கடவுள் அருட்பெருஞ் ஜோதியாகும் என்பதை தெரியப்படுத்தியுள்ளார்.மற்றைய கடவுள்களுக்கு அருளைத்தரும் அதிகாரம் இல்லை என்பதாகும்.அப்படியே அந்தகடவுள்கள் அருளைத்தருவதாக இருந்தாலும் அருட்பெரும ஜோதியிடம் வாங்கிதான் தரமுடியுமே தவிர வேறு வழிஇல்லை என்பது உண்மையாகும்.
  அதை வள்ளலார்;-எங்கெங்கு இருந்து உயிர் ஏதேது வேண்டினும் அங்கு அங்கு இருந்து அருள் அருட்பெரும் ஜோதி என்கிறார் ,
நாம் யாரை வணங்கினாலும் அதன் மூலமாக அருட்பெரும்ஜோதி தான் வழங்குகிறது.என்பதை வள்ளலார் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார்.

  மாயை நமக்கு தாய் போலாகும்.அருட்பெரும் ஜோதி ஆண்டவர் தந்தைபோலாகும்.தந்தையை தேட முயற்ச்சித்தால் தாய் தடுப்பதில்லை.தாய் நமக்கு துணையாக இருக்குமே தவிர,எதிரியாக இருக்காது என்பதை உண்மையாக உணர வேண்டும் .

நமக்கு முன்னோடியாக வந்த பெரியவர்கள் இந்த உண்மை தெரியாமல்,மாயையை ஒழிக்கவேண்டும் என்ற தவறான் கருத்தை தெரிவித்து விட்டார்கள்.மாயை நாம் செய்யும் செயல்களுக்கு தகுந்தாற்போல்,பிறவிகளை கொடுக்கும்,கொடுத்துகண்டே இருக்கும் பிறவியை ஒழிக்க வேண்டுமானால் வள்ளலார் சொன்ன வழியில் அவர் வாழ்ந்து காட்டிய வழியில் சென்றால் ஒழிய வேறு வழிகள் இல்லை என்பதை நாம் உண்மையுடன் உணரவேண்டும் 

   அதனால்தான் வள்ளலார் புனைந்துரையேன்,பொய்புகளேன்,சத்தியம் சொல்கிறேன்,உண்மை உரைக்கின்றேன் உவந்தடைமின் உலகீர் உரை இதனில் சந்தேகித்து உளறி அழியாதீர் என்மையினால் எனை நினையீர் எல்லாம் செய் வல்லான் என்னுள் இருந்து இசைக்கின்றான் இதனை கேண்மின் இங்கேவம்மீன் என்று சொல்லுகிறார் 

ஆதலால் வள்ளலார் காட்டிய வழியில் வாழ்ந்து வளம் பெருவோம் 
அன்புடன் கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு