செவ்வாய், 27 செப்டம்பர், 2011

ஒழுக்கம் என்பது என்ன ?

ஒழுக்கம் என்பது என்ன ?

மனிதனாக பிறந்தவர்கள் ஓழுக்கத்துடன் வாழ வேண்டும் என்று எல்லோரும் சொல்லுகிறார்கள்.எல்லா ஞானிகளும் சொல்லி உள்ளார்கள் திருவள்ளுவரும் திருக்குறளில் பதிவு செய்துள்ளார் .

ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும் .

ஒழுக்கத்தின் எய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவர் எய்தாப்பழி !

என்று ஒழுக்கத்தைப் பற்றி நிறைய திருக்குறள் எழுதி வைத்துள்ளார் ஒழுக்கத்தைப் பற்றி பலபேர் பலவாறாக விளக்கம் தந்துள்ளார்கள் .ஆனால் ஒழுக்கம் என்ன என்பதைப் பற்றி யாரும் சரியான விளக்கம் தரவில்லை .

வள்ளலார் அவர்கள் ஒழுக்கம் எனபது எவை? என்பதை சரியான தெளிவான முறையில் விளக்கம் தந்துள்ளார்கள் .அவை யாது என்பதைப் பார்ப்போம் .

ஒழுக்கம் என்பது நான்கு வகைப்படும் என்று நான்கு வகையாக பிரித்தார் மனித உடம்பை நான்கு பாகங்களாக வகைப் படுத்தினார் .அவை யாவை ?

இந்திரிய ஒழுக்கம் ;--கண் ,காது,மூக்கு ,வாய் ,உடம்பு.என்பதாகும்
கரண ஒழுக்கம்;-------மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,ஆச்சர்யம்,என்பதாகும் ..
ஜீவ ஒழுக்கம் .;--------உயிர் என்பதாகும் .
ஆன்ம ஒழுக்கம் ;-----உயிரை இயக்கம் உள் ஒளியாகும்.

இவைகள் மனித உடம்பை இயக்கும் கருவிகளாகும்,இவைகளை கட்டுப் படுத்தி வாழ்வதே ஒழுக்கம் என்பதாகும் .

இந்திரிய ஒழுக்கம் என்பது ;---.

கொடிய சொல் செவி [காது ] புகாது நாதம் முதலிய தோத்திரங்களைக்  கேட்டல்

அசுத்த பரிச இல்லாது தயா வண்ணமாகப் பரிசித்தல் .

குரூரமாக பாராது இருத்தல்,

ருசி விரும்பாமல் இருத்தல் .

சுகந்தம் விரும்பாமல் இருத்தல் .

இன் சொல்லால் பேசுதல் .

பொய் சொல்லாமல் இருத்தல் ,

ஜீவர் களுக்கு துன்பம நேரிடும் போது எவ்வித தந்திரம் செய்தாவது தடை செய்தல் ,

பெரியோர்கள் எழுந்து அருளி இருக்கும் இடங்களுக்குச் செல்லுதல் ,

ஜீவ உபகார சம்பந்தமாக சாதுக்கள் இருக்கும் இடத்திற்கும் ,திவ்ய திருப்பதிகளிலும் செல்லுதல் .

நன் முயற்ச்சியில் கொடுத்தல், வருவாய் [ வருமானம் ] செய்தல் ,

மிதமான ஆகாரம் செய்தல்,

மிதமான போகம் செய்தல் ,

மலம சிரமம் இல்லாமல் வெளியேற்றுதல் ,

கால பேதத்தாலும் உஷ்ண ஆபாசத்தாலும் தடை நேர்ந்தால் ஓஷதி வகைகளாலும்,பவுதிக மூலங்களாலும்,சரபேத அஸ்த பரிச தந்திரத்தாலும் மூலாங்கப் பிரணவ தியானத்தாலும் சங்கறபத்தாலும்,தடை தவிர்த்துக் கொள்ளல் ,

[மந்ததரனுக்கு ] சுக்கிலத்தை [விந்து ] அதிகமாக வெளியேற்றாமல் நிற்றல் .

[தீவிரதரனுக்கு ]எவ்வகையிலும் சுக்கிலம் வெளியே விடாமல் நிறுத்தல் ,

இடைவிடாது கோசத்தைக் கவசத்தால் [துணியால் ]மறைத்தல்,

இதே போல் உச்சி ,[தலை ] மார்பு முதலிய அங்க அவையங்களை மறைத்தல் ,

வெளியில் செல்லும் காலங்களில் காலில் கவசம் [செருப்பு] தரித்தல்

அழுக்கு ஆடை உடுத்தாமல் இருத்தல் ,

இவை யாவும் இந்திரிய ஒழுக்கங்களாகும்.

கரண ஒழுக்கம் ;--

மனதைச் சிற்சபையின் [புருவ மத்தி ]கண்ணே நிறுத்தல் ,அதாவது புருவ மத்தியில் நிற்கச செய்தல் .

கெட்ட விஷயத்தை பற்றாமல் இருக்க செய்தல் ,

ஜீவ தோஷம் விசாரக்காமல் இருத்தல்.

தன்னை மதியாமல் இருத்தல்

செயற்கை குணங்களால் ஏற்ப்படும் கெடுதிகளை [இராகாதி]நீக்கி இயற்கையாகிய சத்துவ மயமாதல்,

பிறர மீது கோபம கொள்ளாமல் இருத்தல்,

தனது சத்துருக்கள் ஆகிய தத்துவங்களை அக்கிரமத்தில் செல்லாது கண்டித்தல் ,

முதலியன கரண ஒழுக்கமாகும் ,

ஜீவ ஒழுக்கம் என்பது ;--

ஆண் மக்கள்,பெண் மக்கள்,முதலிய யாவர்கள் இடத்திலும் ஜாதி ,சமயம் ,மதம், ஆசிரமம் ,சூத்திரம் ,கோத்திரம், குலம் ,சாஸ்த்திர சம்பந்தம் ,தேச மார்க்கம் ,உயர்ந்தோர் ,தாழ்ந்தோர் ,--என்னும் பேதம் நீங்கி எல்லோரும் நம்மவர்கள் என்பதை சமத்திற கொள்ளுதல்
ஜீவ ஒழுக்கமாகும் ,

ஆன்ம ஒழுக்கம் ;---

யானை முதல் எறும்பு ஈறாகத் தோன்றிய உடம்பில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச சபை யாகவும் ,அதன் உள் ஒளியே அதாவது பரமானமாவே பதியாகவும் ,கொண்டு ,யாதும் நீக்கமற எவ்விடத்தும் பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றல் --ஆன்ம ஒழுக்கமாகும் ,

இத்துடன் இடம் தனித்து இருத்தல்,இச்சை இன்றி நுகர்தல், ஜெப தபம் செய்தல் ,தெய்வம் பராவல். பிற உயிர்களுக்கு இரங்கல் ,பெருங் குணம் பற்றல் ,பாடிப் பணிதல், பத்தி செய்து இருத்தல்,--முதலிய நல்ல செய்கைகளில் பல காலம்  முயன்று முயன்று பழகிப் பழகி நிற்றல் வேண்டும் .

இவையே மனித ஒழுக்கமாகும் .இவற்றை முழுவதும் பின் பற்றுபவர்கள் நான்கு புருஷார்த்தங்கள் அடைவார்கள் .

அவைகள் ;--

சாகாக் கல்வி .
ஏமசித்தி,
தத்துவ நிக்கிரகஞ் செய்தல் ,
கடவுள் நிலை அறிந்து அம மயமாதல் .

என்பதாகும் இவையே மனிதன் மரணத்தை வெல்லும் வழியாகும் .இதை வள்ளலார் கடை பிடித்தார் மரணத்தை வென்று கடவுள் நிலை அறிந்து அம்மயமானார் என்பது அனைவரும் அறிந்த உண்மையாகும் ,நாமும் அவர் காட்டிய வழியில் வாழ்ந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

மீண்டும் பூக்கும் ;-                        

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு