சனி, 17 செப்டம்பர், 2011

இறைவனை காணவேண்டுமா ?


இறைவனை காணவேண்டுமா ?



எல்லாம் வல்ல இறைவனை காண வேண்டுமானால் அவர் இருக்கும் கோட்டையின் கதவை திறக்க அருள் என்னும் சாவி வேண்டும் .அந்த அருள் என்னும்  சாவி கிடைக்கும் வழி, அன்பு ,தயவு, கருணையால் தான் கிடைக்கும். அனைத்து உயிர்களின் துன்மம்,துயரம் அச்சம் பயம் போன்ற கஷ்டங்களை போக்கும் பண்பு அவசியமாகும்.அந்த கருணை நிறைவு பெறும்போது ஆண்டவரின் கோட்டையின் கதவு திறக்கும் சாவிக் கிடைக்கும்.இவைதான் சரியான முறையான தெளிவான வழியாகும் .

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை சார்ந்த கொள்கை உடையவர்கள்,இறைவனை இந்த வழியில் காணத்தான் விரும்புவார்கள் .தான் தன் குடும்பம்,தன் இனம,தன் நாடு ,என்னும் குறுகிய மனப்பான்மையை விட்டு,உலகம் முழுவதும் அனைத்து உயிர்களும் நல்வாழ்வு வாழும் பொருட்டு,தொண்டு செய்வார்கள் இறைவனிடம் வேண்டுவார்கள் .

இறைவனுடைய அருளைப் பெற்று பேரின்பத்தை அடைய,--யோகம தியானம் ,தவம,போன்ற செய்கைகள் வேண்டியதில்லை .வேறு சாதனங்கள் எதுவும் தேவை இல்லை .ஒவ்வொரு மனிதரும் காலம் தாழ்த்தாது எல்லா உயிர்களையும் தன் உயிர்போல் பாவிக்கும் உண்மையை,உணர்வை கருணையை  வரவழைத்துக் கொள்ள வேண்டும் இதுவே சாதனமாகும் .

மனிதன் புலால் உண்ணும பழக்கம் .பெற்றோர்களாலும்,நட்பாலும் .சூழ்நிலைகளாலும் ,முன்னோர்கள் சொல்லி வைத்த மூட நம்பிக்கையாலும்.பழக்கம் தொடர்ந்து வளர்ந்து கொண்டே உள்ளது.,இது முற்றிலும் தவறானதாகும் .மனிதன் பிற உயிர்களை கொன்று அதன் மாமிசத்தை உண்பது ஆண்மநேயத்திற்கு  முற்றிலும் விரோதமாகும் .

வள்ளலார் இந்த உலகத்தில் இரண்டு பிரிவினரைப் பார்க்கிறார்-அவை -அகஇனத்தார்,புறஇனத்தார், .அதை பிரிக்கின்றார் .ஒன்று புலால் உண்பவர்கள் மற்றொன்று புலால் உண்ணாதவர்கள் என்று .இதைத்தான் இரண்டு குலம் எனறு பிரிக்கின்றார்---புலால் உண்ணாதவர்கள் .உயர்ந்த குலம் என்றும் --புலால் உண்பவர்கள் தாழ்ந்த குலம என்றும் அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார் .

அதவிட முக்கியமானது .புலால் உண்பவர்கள் கடவுளை நினைப்பதற்கும் ,துதிப்பதற்கும் வழிபாடு செய்வதற்கும் வேண்டுதலுக்கும் அருகதை அற்றவர்கள் என்கிறார் வள்ளலார். புலால் உண்பவர்கள் உடைய எந்த செய்கையும் ஆண்டவர் ஏற்றுக் கொள்வதில்லை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார் என்பதை உண்மையுடன் தெளிவாக தெரியப்படுத்தி உள்ளார் .

ஆதலால் இதுவரை புலால் உண்பவராக இருந்தாலும் இனிமேல் உண்ணாமல் ஆண்டவரின் அன்பு குழந்தைகளாக இருப்போம் வாழ்வோம் .ஆண்டவர் அன்புடன் ஏற்றுக்கொள்வார்.அந்த உண்மையான கடவுளைக் காண்பதற்கு இதுவே சிறந்த வழியாகும். என்றும் ஆன்மநேயம் ஓங்குக !இறைவன் அருளைப் பெறுவோம் .

வள்ளலார் பாடல் ஒன்று '--

உயிர்க் கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள் எல்லாம் 
உறவினத்தார் அல்ல அவர் புற இனத்தார் அவர்க்குப் 
பயிர்ப்பு உறுமோர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக 
பரிந்து மற்றைப் பண்பு உரையேல் நண்பு உதவேல் இங்கே 
நயப்புறு சன்மார்க்கம் அவர் அடையும் வரை இதுதான் 
நம் ஆணை என்று எனக்கு நவின்ற அருள் இறையே 
மயர்ப்பு அறு பெய்த்தவர் போற்றப் போது வெளியில் நடம புரியும் 
மாநடத்து என் அரசே என் மாலை அணிந்து அருளே !

மேலே உள்ள பாடல் அருட்பெரும்ஜோதி ஆண்டவர்- வள்ளலாருக்கு சொல்லியதாக பதிவு செய்துள்ளார் .இந்த உண்மையை உணர்ந்து ,உயிர்க் கொலை செய்யாமலும் புலால் உண்ணாமலும் -மனிதன் மனிதனாக வாழ்ந்து அருள் பெற்று வளமுடன் வாழ்வோம் .

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு.   

3 கருத்துகள்:

17 செப்டம்பர், 2011 அன்று AM 11:17 க்கு, Blogger பனித்துளி சங்கர் கூறியது…

உலகத்தில் அனைத்தையும் வெல்லும் ஆயிதம் அன்பு மட்டும்தான் புரிந்துகொண்டவர்களுக்கு இது சொர்க்கம் . புரியாதவர்களுக்கு இது நரகம்

 
17 செப்டம்பர், 2011 அன்று AM 11:18 க்கு, Blogger பனித்துளி சங்கர் கூறியது…

நண்பருக்கு ஒரு அன்பான வேண்டுகோள் இயன்றால் உங்களது மறுமொழிப்பெட்டியில் உள்ள Word verification -ஐ நீக்கி விடவும் அவ்வாறு செய்வதால் அனைவரும் மறுமொழி இடுவதற்கு எளிதாக அமையும் . புரிதலுக்கு நன்றி !

 
18 செப்டம்பர், 2011 அன்று PM 6:42 க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

உங்கள் கருத்துக்கு நன்றி மகிழ்ச்சி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு