ஞாயிறு, 25 செப்டம்பர், 2011

சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !



சமயம் மதம் சாதி அனைத்தும் பொய்யானது !

கடவுளுக்கு பொய்யான கற்பனைக் கதைகளை சொல்லி எழுதி வைத்து விட்டார்கள் .உண்மையாக இருப்பதாக கோயில்களையும் சிலைகளையும் வைத்து மக்களை மூட நம்பிக்கையில் வாழ வைத்து விட்டார்கள் .இதில் இருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள் .இதை மறுக்க எத்தனையோ அறிவாளிகளும் .பகுத்தறிவு உள்ளவர்களும் மக்களுக்கு எடுத்து சொல்லியும் மக்கள் கேட்கவில்லை .

இதை எல்லாம் ஒழித்து கட்ட வந்தவர்தான் வள்ளலார் என்ற அருளாளர் .!

ஆன்மீக வாயிலாக உலக உண்மைகளையும் கடவுளின் உண்மைத் தன்மையும் வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்கள் .இப்போது மக்கள் வள்ளலார் கருத்துக்களை ஏற்றுக் கொண்டு வருகிறார்கள் .அதற்கு சமய ,மத வாதிகள் எதிர்ப்பு குரல் கொடுத்துக் கொண்டு வருகிறார்கள் .அதையும் மீறி மக்கள் புரிந்து கொண்டு வருகிறார்கள் .

விஞ்ஞானம் ,அறிவியல் அணு ஆராய்ச்சிகள்,ஒப்புக் கொள்ளும் அளவிற்கு திரு அருட்பா என்னும் நூலில் பதிவு செய்துள்ளார் வள்ளலார் .

வள்ளலார் சமய மதங்களைப் பற்றி ஆயிரக்ககான பாடல்களிலும் உரை நடைப் பகுதிகளிலும் சாடிஉள்ளார்கள் .

அதிலே பாடல் சில ;--

கலை உரைத்தக் கற்பனையை நிலை எனக் கொண்டாடும்
கண் மூடிப் பழக்கம் எல்லாம் மண் மூடிப் போக !

என்றும்

வேத நெறி ஆகமதத்தின் நெறி புராணங்கள்
விளம்பு நெறி இதிகாசம் விதித்த நெறி முழுதும்
ஓதுகின்ற சூது அனைத்தும் உளவு அனைத்தும் காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உணர்த்தினையே !

அனைத்து பொய்யானது என்று தெளிவு படுத்தியுள்ளார் .

கூறுகின்ற சமயம் எல்லாம் மதங்கள் எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கொண்டார் இல்லை வீணே
நீறு கின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர் போல்
நீடுலகில் அழிந்து விட நினைத்தோனோ நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்று வித்தாய் ஆங்கே!

என்று பல்லாயிரம் பாடல்களில்,சமய மதங்களின் பொய்யான கற்பனைகளையும் .கதைகளையும் சொல்லி ,அவைகளை ஆழமான குழித் தோண்டி வெளியே வரமுடியாமல் மண்ணில் போட்டு மறைத்து விடுங்கள் என்று பறை சாற்றுகிறார் வள்ளலார் .

இனிமேல் சமய மதங்களின் வேலைகள் பலிக்காது .மக்கள் விழித்துக் கொண்டார்கள் .மக்கள் அனைவரும் வள்ளலார் எழுதிய திரு அருட்பாவைப் பார்த்து படித்து உண்மையை உணர்ந்து பயன் பெறுவோம் .

அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு