வியாழன், 11 ஜனவரி, 2018

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்றால் என்ன?

எக்காலத்தும்  அழிவில்லாத அருள் பெற்றது எதுவோ அதற்கு ஞானம் என்று பெயர்.

எக்காலத்தும் .எவ்விடத்தும்.எவ்விதத்தும் .எவ்வளவும் .தடைபடாமல் வாழ்கின்ற அந்த  ஒப்பற்ற பெரிய வாழ்வை மனித இனமானது /அருள் பூரணத்தைப் பெற்று அழிவில்லாமல்  வாழ்தற்கே ஞானம் என்று பெயர் ..ஞானத்தில் ஞானம் என்றும் பெயராகும்.

பூரண அருள் நிறைந்த தன்மை உள்ள.உடம்பு .உயிர்.ஆன்மா ஆகிய  முன்றும். .சத்து .சித்து.ஆனந்தம் பெற்று வாழ்வாங்கு வாழும் ஆன்மாவிற்கு ஆன்ம ஞானம் என்று பெயர் . சச்சிதானந்தம் என்றும் சொல்லப் படுகின்றது..

ஞானம் என்பதற்கு உருவம் கிடையாது ! ஒளி .ஒலி கலந்த அருள் நிறைந்த    அருள்  பேரொளிக்கு ஞானம் என்று பெயர் ! அருட்பெருஞ்ஜோதி என்றும்  பெயர் ! இதற்கு ஞான தேகம் என்று பெயர் ! கடவுள் உருவம் அற்றவர்  ஞான தேகம் பெற்றவர்  என்று வள்ளலாரால் சொல்லப் படுகின்றார் ! அதனால் தான் வடலூரில் .கடவுள் அமர்ந்து அருள் பாலித்து கொண்டு இருக்கும்  இடத்திற்கு ''ஞான சபை'' என்று பெயர் வைத்துள்ளார் ..மேலும்   உத்தர ஞான சிதம்பரம் என்றும்.உத்தர ஞான சித்திபுரம் என்று பெயர் வைத்துள்ளார்..

வள்ளலார் பாடல் !

ஜோதி மலை வீட்டில் தூய திருவமுதம்
மேதினிமேல் நான் உண்ண வேண்டினேன் --ஓதரிய
ஏகா அனேகா எழிற் பொதுவில் வாழ ஞான
தேகா கதவைத் திற ...!

என்னும் பாடல் வாயிலாக இறைவன்  ஞான தேகம் பெற்றவர் என்பதை தெளிவாக விளக்கமாகச் சொல்லுகின்றார் ...

கடவுள் அருளைப் பெற்றால் மட்டுமே கடவுள் நிலை அறிந்து அம்மயமாக முடியும்.இறைவனிடம் ஆன்மாக்கள் செல்ல முடியும்.அதற்கு ஞானம் என்னும் அருள் தேகம் பெற வேண்டும்.இறைவன் தகுதிப் பெற்றால் மட்டுமே இறைவனிடம் செல்ல முடியும்.

இறைவன் அருளைப் பெறும் வழியைக் காண்போம் !

இறைவன் அருளைப் பெறுவதற்கு  நான்கு மார்க்கங்கள் சமய .மதங்களில் சொல்லப் பட்டு  உள்ளன ...அதில் ஒவ்வொன்றிலும் நான்கு கிளை வழிகள் உள்ளன .

அவற்றிற்கு  சரியை .கிரியை..யோகம்..ஞானம் என்னும் நான்கு மார்க்கங்கள் உள்ளன... .

சரியையில் சரியை ,,,சரியையில் கிரியை ,,சரியையில் யோகம் ,,சரியையில் ஞானம்..என்றும்
கிரியையில் சரியை ,,கிரியையில் கிரியை ..கிரியையில் யோகம் ..கிரியையில் ஞானம் ...என்றும்
யோகத்தில் சரியை ..யோகத்தில் கிரியை ..யோகத்தில் யோகம் ...யோகத்தில் ஞானம் ..என்றும்..
ஞானத்தில் சரியை ..ஞானத்தில் கிரியை ...ஞானத்தில் யோகம் ..ஞானத்தில் ஞானம் ..
என்னும் பதினாறு படிகள் உள்ளன .

இவ்வுலகில் மனித இனம் தோன்றி பல்லாயிரம் ஆண்டுகள் ஆகின்றன .  அறிவு விளங்கிய அருளாளர்கள் யோகத்தில் ஞானம் பெற்று சித்தி முத்திகளைப் பெற்று உள்ளார்கள் .ஆனால் ஆன்ம ஞானம் என்னும்.''ஞானத்தில் ஞானம்''என்னும் அருள் பூரணம் நிறைந்த  ஒளி உடம்பை எவரும் பெற்றுக் கொள்ளவில்லை..ஆன்ம நேயத்தோடு எவரும்  வாழ்ந்ததாகத் தெரியவில்லை ..உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதியை எவரும் காணவில்லை .அவருடன் எவரும் கலந்து கொள்ளவில்லை என்கின்றார் வள்ளலார் ..

வள்ளலார் பாடல் !

நோவாது நோன்பு என்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவா வரம் எனைப் போல் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போல் பெற்றவரும் எவ்வுலகில்
யார் உளர் சற்றே நீ யறை !

என்னும் பாடல் வாயிலாகத் தெரியப் படுத்துகின்றார் ..மேலும்

சரியை நிலை நான்கும் ஒரு கிரியை நிலை நான்கும்
தனி யோக நிலை நான்கும் தனித்தனி கண்டு அறிந்தேன்
உரிய சிவ ஞான நிலை நான்கும் அருள் ஒளியால்
ஒன்று ஒன்றாய் அறிந்தேன் மேல் உண்மை நிலை பெற்றேன்
அரிய சிவ சித்தாந்தம் வேதாந்தம் முதலாம்
ஆறந்த நிலை அறிந்தேன் அப்பால் நின்று ஓங்கும்
பெரிய சிவ அனுபவத்தால் சமரச சன்மார்க்கம்
பெற்றேன் இங்கு இறவாமை உற்றேன் காண் தோழி !

என்ற அனுபவமாலை என்னும் தலைப்பில் 93..வது பாடலில் வள்ளலார்  பதிவு செய்கின்றார்..எனவே ஞானத்தில் ஞானம் பெறுவதே சுத்த சன்மார்க்கம் காட்டும் உண்மையான நேர் வழியாகும்.அந்த உண்மையான நேர் வழியை அருள் ஒளியால் ஒவ்வொன்றாக அறிந்தேன் என்கின்றார் .

ஞானத்தில்  சரியை ,கிரியை .யோகம்,ஞானம் !

நாம் கடைபிடித்து வந்த பாதைகளில் சென்றால் அருள் பெறுவதற்கு கால  தாமதமாகும்.ஆதலால் சரியை முதலிய சாதகம் நான்கில் நான்காவது இனத்தில் ஞான சரியை .ஞான கிரியை.ஞான யோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் படிகளில் உள்ளபடி கடைபிடித்தால்  போதும் அருளைப் பெற்று மரணத்தை வென்று ஞான தேகம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை தெளிவுப் படுத்துகின்றார் ..

ஜீவ காருண்ய ஒழுக்கம் !

அதற்கு  ஜீவ காருண்ய ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்கின்றார் !

ஞான சரியை என்பது ;-- இந்திரிய ஒழுக்கம்.
ஞான கிரியை என்பது ;--கரண ஒழுக்கம்
ஞான யோகம் என்பது ;--ஜீவ ஒழுக்கம்
ஞானத்தில் ஞானம் என்பது ;--ஆனம் ஒழுக்கம்

இந்த நான்கு ஒழுக்கங்களையும் முழுமையாக கடைபிடித்தால் பூரண அருளைப் பெற்றுக் கொள்ளலாம்.

 ஞான சரியை  என்னும் தலைப்பில் 28.பாடல்கள் வள்ளலார்  பதிவு செய்துள்ளார் அவற்றில் கண்டுள்ளபடி வாழ்க்கையில் கடைபிடித்தால்.முதல்படியான இந்திரிய ஒழுக்கம் என்னும்  ஞான சரியை வெற்றி பெறும்.அடுத்து .ஞான கிரியை என்னும் கரண ஒழுக்கம் கை கூடும் .அடுத்து ஞான யோகம் என்னும் ஜீவ ஒழுக்கம் கை கூடும் ..ஜீவ ஒழுக்கம் கை கூடினால்..ஞானத்தில் ஞானம் என்னும் ஆன்ம ஒழுக்கம் நிறைவு பெறும்...

இந்த நான்கு ஒழுக்கங்கள் தான் இறைவன் அருளைப் பெறும் சிறந்த வழிகளாகும்.இதற்கு ஞான வழி என்றும்.சுத்த சன்மார்க்கம் என்றும் ,ஜீவ காருண்ய ஒழுக்கம் என்றும் பெயர் வைத்துள்ளார் .

ஞான சரியை முதல் பாடல் !

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே
நிறைந்து நிறைந்து ஊற்று எழும் கண்ணீர் அதனால் உடம்பு
நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான
நடத்தரசே என் உரிமை நாயகனே என்று
வனைந்து வனைந்து ஏத்துதும் நாம் வம்மின் உலகியலீர்
மரணம் இல்லாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர்
புனைந்து உரையேன் பொய் புகலேன் சத்தியஞ் சொல்கின்றேன்
பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே !

என புனைந்து உரையேன் பொய் புகலேன்,நான் அனுபவித்த  உண்மையை சொல்லுகின்றேன்  இவை ஞான நடம் செய்கின்ற, ஞான அமுதம் வழங்குகின்ற ஞான நடத்து அரசின் நல்வாக்கு, அதனால் அழைக்கின்றேன் வாருங்கள் என உலக மக்களை அழைக்கின்றார் .

ஒழுக்கம் நான்கு வகை !

இந்திரிய ஒழுக்கம் என்பது .;--  உயிர் உள்ள ஜீவர்களுக்கு உண்டாகும் பசி.பிணி.தாகம்,இச்சை .எளிமை .பயம் .கொலை இவைகளால் வரும் துன்பத்தை அனுபவிக்கக் கண்டபோதாயினும்.கேட்ட போதாயினும்.இவ்வாறு உண்டாகும் என்று அறிந்த போதாயினும் ஆன்ம உருக்கத்தோடு அவைகளை நீக்க வேண்டும்...இப்படி செய்து வந்தால் துன்மார்க்க குணங்களான தாமச.இராட்சச குணங்கள்  நீங்கி சுத்த  சன்மார்க்க நற் குணமான சத்துவ குணம் வந்துவிடும்.

அதனால்  தான் ஜீவ காருண்யம் விளங்கும் போது அறிவும்.அன்பும் .உடனாக நின்று விளங்கும்.அதனால் உபகார சத்தி விளங்கும்.அந்த உபகார சத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்.இதுவே ஞான சரியை என்பதாகும்.

கரண ஒழுக்கம் ;--அன்பும் அறிவும் விளங்கினால் .கரணங்களில் உள்ள மனம்.புத்தி.சித்தம்,அகங்காரம்,என்னும் அந்தக் கரணங்களில் உள்ள...முதன்மையான .மனமானது,வெளியே சென்று அலை பாயாமல். தன் தலைவன் இருக்கும் இடமான ஆன்ம சிற்சபையில் தொடர்பு கொள்ளும்.எனவே தான் சிற்சபையின் கண் மனதை செலுத்துங்கள் என்கின்றார் வள்ளலார் ..இதுவே கரண ஒழுக்கம் என்பதாகும் .இதுவே ஞான கிரியை என்பதாகும்.

ஜீவ ஒழுக்கம் ;--ஆண் மக்கள்.பெண் மக்கள்.முதலிய யாவர்கள் இடத்திலும் ஜாதி.சமயம்.மதம்.,ஆசிரமம்,சூத்திரம்,கோத்திரம்,குலம்,சாஸ்த்திர சம்பந்தம்,தேச மார்க்கம்,உயர்ந்தோர்,தாழ்ந்தோர் ,--என்னும் பேதம் நீங்கி எல்லோரும் தம்மவர்களாய் சமமாக பாவித்தல் வேண்டும்,..இதுவே ஜீவ ஒழுக்கம் என்பதாகும்,ஞான யோகம் என்பதாகும்.

ஆன்ம ஒழுக்கம் ;-- யானை முதல் எறும்பு வரையில் தோன்றிய சரீரங்களில் உள்ள ஜீவ ஆன்மாவே திருச்சபையாகவும்,அதனுள் பரமான்மாவே பதியாகவும் கொண்டு யாதும் நீக்கமற எவ்விடத்தும்,பேதம் அற்று எல்லாம் தானாக நிற்றலே ஆன்ம ஒழுக்கம் ..இதுவே ஞானத்தில் ஞானம் என்பதாகும்...

மேலும் ;--

இந்திரிய ஒழுக்கத்தினால்... சாகாக்கல்வி கற்கலாம்.
கரண ஒழுக்கத்தினால்... ,தத்துவங்களை தவிர்க்கலாம்,நிக்கிரகஞ் செய்யலாம் .ஜீவ ஒழுக்கத்தால்....,ஏம சித்திப் பெறலாம் .
ஆன்ம ஒழுக்கத்தால்....கடவுள் நிலை அறிந்து அம்மயமாகலாம் ..

இவை பெறுவதற்கு ..ஞான சரியை,,,ஞான கிரியை...ஞான யோகம் ..ஞானத்தில் ஞானம் என்று வள்ளலார் சொல்லுகின்றார் ...

ஞானம் என்னும் அருளைப் பெறுவதற்கு ஜீவ காருண்ய ஒழுக்கமே முதன்மையானது ..அதிலும் முதன்மையானது பசியோடு வாழும்  ஏழை எளிய மக்களின்  பசியைப் போக்குவதாகும்.

ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கம் என்றும்.ஜீவ காருண்ய ஒழுக்கத்தினால் வரும் இன்பமே கடவுள் இன்பம் என்றும்.இவ் விளக்கத்தையும் இன்பத்தையும்,பலகால் கண்டு அனுபவித்தப் பூர்த்தி அடைந்த சாத்தியர்களே ஜீவன்  முத்தர் என்றும்,அவர்களே கடவுளை அறிவார் அறிந்து கடவுள் மயம் ஆவார்கள் என்றும் சத்தியமாக அறிய வேண்டும்...அந்த உண்மைக் கடவுள் தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வராகும்.அவரிடம் இருந்துதான் அருளைப் பெற முடியும்.அவரிடம் இருந்து தான்  பேரின்ப சித்திப்  பெருவாழ்வு பெற முடியும்.

மரணத்தை வென்றால் மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக் கொள்வார் ..

இறந்தவரை எடுத்திடும் போது அதற்று கின்றீர் உலகீர்
இறவாத பெருவரம் நீர் ஏன் அடைய மாட்டீர்
மறந்து இருந்தீர் பிணி மூப்பில் சம்மதமோ உமக்கு
மறந்தும் இதை நினைக்கின் நல்லோர் மனம் நடுங்கும் கண்டீர்
சிறந்திடு சன்மார்க்கம் ஒன்றே பிணி மூப்பு மரணம்
சேராமல் தவிர்த்திடுங் காண் தெரிந்து வம்மின் இங்கே
பிறந்த பிறப்பு இதில்தானே நித்திய மெய்வாழ்வு
பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே !

மரணம் வந்தால் மீண்டும் பிறப்பு உண்டு .எனவே இந்த பிறப்பிலே மரணம் வராமல் பிறப்பு இறப்பு அற்று வாழ முடியும் என்று அனைத்து உலக மக்களையும் ஆன்மநேயத்தோடும் அன்போடும் அழைக்கின்றார் நம் வள்ளல்பெருமான் ..வாருங்கள் வாழ்ந்து காட்டுவோம்.மற்றவர்களுக்கு வழி காட்டுவோம்.

இன்னும் விரிக்கில் பெருகும் .....

வருவார் அழைத்து வாடி வடலூர் வட திசைக்கே
வந்தால் பெறலாம் நல்ல வரமே !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896 ..      

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு