ஆன்மாவே எல்லாவற்றுக்கும் காரணம் !
ஆன்மாவே எல்லாவற்றுக்கும் காரணம் !
ஆன்மா எல்லாவற்றுக்கும் சாட்சியாய் காட்சியாய் மட்டுமே உள்ளது .ஆன்மா இன்பம் துன்பம் அனுபவிப்பதில்லை என்பது சமய.மதக் கொள்கை..்.
வள்ளலார் சொல்லும் சுத்த சன்மார்க்கம்.அவற்றை ஏற்றுக் கொள்வதில்லை..இன்பம் .துன்பங்கள் எல்லாம் ஆன்மாதான் அனுபவிக்கின்றது..என்பதை வள்ளலாரை தெளிவாகத் தெரியப்படுத்துகின்றார்
ஜீவகாருண்யம் முதல் பகுதியில் !
சீவர்களுக்குப் பசி தாகம் பயம் முதலியவற்றால் வருந் துன்பங்களெல்லாம் மனம் கண் முதலிய கரணேந்திரிய அனுபவங்களல்லது, ஆன்ம அனுபவங்களல்ல; அதனாற் சீவகாருணியங் கொள்வதில் விசேஷ பிரயோசனம் இல்லையே என்னில்:-
இந்தத் தூலதேகத்தில் சீவனாக இருக்கிற ஆன்மாவும் அறிவுக்கறிவாயிருக்கிற கடவுள் இயற்கை விளக்கமுந் தவிர, கரணம் இந்திரியம் முதலிய மற்றவைகளெல்லாம் கருவிகளாகிய தத்துவ சடங்களே அல்லது சித்துக்கள் அல்ல. ஆகலில் சுகதுக்கங்களைச் சடங்கள் அனுபவிக்க அறியா. செம்மண் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது. அதுபோல், மனஞ் சந்தோஷ’த்தது துக்கித்தது என்று சொல்லப்படாது.
செம்மண்ணினால் தேகவாழ்க்கைக்கு வீடுகட்டிக்கொள்வது போல, மன முதலான கரணேந்திரியங்களால் சீவ அதாவது உயிர் வாழ்க்கைக்குக் கடவுளால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம் ஒரு சிறிய வீடாகும். இன்பதுன்பங்களை வீட்டில் இருக்கின்றவன் அனுபவிப்பானல்லது, வீடு அனுபவிக்கமாட்டாது. அன்றியும் காசத்தினால் ஒளி மழுங்கப்பட்டு உபநயனங்களாகிய கண்ணாடிகளால் பார்க்கின்ற கண்கள் துன்ப விஷயத்தைக் கண்டபோது, அக்கண்கள் நீர்சொரியுமே யல்லது, கண்ணாடி நீர் சொரிய மாட்டாது. ஆகலில் ஆன்ம திருஷ்டிக்கு உபநயனங்களாக இருக்கின்ற மனம் முதலான கருவிகள் சுகதுக்கங்களை அனுபவிக்க மாட்டா; ஆன்மாவே அனுபவிக்குமென்று அறியவேண்டும்.
ஒரு சீவனுக்குச் சுகம் நேரிட்டபோது மனம் மகிழ்கின்றது; துக்கம் நேரிட்டபோது மனம் தளர்கின்றது; ஆகலில், சுக துக்கங்களை அம்மனம் அனுபவிப்பதாக அறியப்படாதோ என்னில்:- அறியப் படாது. பளிங்கினாற் செய்த வீட்டினுள் இருக்கின்ற வீட்டுத் தலைவனுடைய தேகவிளக்கமும் தேகச் சோர்வும் அந்தப் பளிங்கு வீட்டில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், கண்களின் மலர்ச்சியும் சோர்வும் அக்கண்களிலிட்ட உபநயனங்களில் பிரதிபலித்துப் புறத்தில் தோன்றுவது போலும், சுகதுக்கங்களால் ஆன்மாவுக்கு கிடைக்கின்றன. ஆகலில் சுகதுக்கங்கள் ஆன்மாவுக்கே அனுபவமென்றும், சுகதுக்கங்களை அறிந்தனுபவிப்பதற்குக் கரணேந்திரியங்கள் ஆன்மாவுக்கு உபகாரக் கருவிகளாகும் என்று அறிய வேண்டியது.
கடவுளால் சிருஷ்டிக்கப்பட்ட சீவர்களில் அனேகர் பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவும் துன்பப்படுகின்றது என்னெனில்:- முன் தேகத்தில் சீவகாருணிய ஒழுக்கத்தை விரும்பாமல் கடின சித்தர்களாகித் துன்மார்க்கத்தில் நடந்த சீவர்களாதலால், கடவுள் விதித்த அருளாக்கினைப் படி பசி, தாகம், பயம் முதலியவற்றால் மிகவுந் துன்பப் படுகிறார்கள் என்றறிய வேண்டும்.
முன்தேகம் உண்டென்பது எப்படி யென்னில்:- ஒரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்யவந்த சமுசாரி அதற்குமுன் வேறொரு வீட்டில் குடிக்கூலி கொடுத்துக் குடித்தனஞ் செய்திருந்தானல்லது வீடில்லாமல் குடித்தனஞ் செய்யமாட்டான் என்றும், இப்போது வந்த வீட்டிலும் கலகம் நேரிட்டால் பின்னும் வேறொரு வீட்டில் குடிபோவான் என்றும் அறிவது போல்; இந்த தேகத்தில் ஆகாரக் கூலி கொடுத்துக் குடியிருக்க வந்த சிவன் இதற்கு முன்னும் வேறொரு தேகத்தில் அந்தக் கூலியைக் கொடுத்துச் சீவித்திருந்தானல்லது தேகமில்லால் சீவித்திருக்க மாட்டானென்றும் துணிய வேண்டும். ஆதலால், முன்னும் பின்னும் சீவர்களுக்குத் தேகங்கள் நேரிடும் என்று அறியவேண்டும்.
சீவர்கள் முன்தேகத்தில் செய்த பாவகர்மங்கள் இந்தத் தேகத்திலும் வருமென்பது எப்படியென்னில்:- ஒரு சமுசாரி முன் குடித்தனஞ் செய்திருந்த வீட்டில் தன் தலைவன் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கர்களை வருவித்து அவர்களோடு கூடிப் பழகியிருந்தானானால், அந்தச் சமுசாரி அந்த வீட்டைவிட்டு வேறொரு வீட்டில் குடிவந்த காலத்திலும் அந்தத் துன்மார்க்கர்கள் இந்த வீட்டிலும் வந்து அவனுடன் பழக்கஞ் செய்வார்கள். அதுபோல், ஒரு சீவன் முன் குடியிருந்த தேகத்தில் கடவுள் கட்டளைப்படி நடவாமல் துன்மார்க்கத்தாற் பாவகர்மங்களை விரும்பிச் செய்திருந்தானானால், அந்தச் சீவன் வேறொரு தேகத்தில் வந்தபோதும் அந்தப் பாவகர்மங்கள் இப்போது வந்த தேகத்திலும் வந்து அந்தச் சீவனைச் சேரும் என்று அறிய வேண்டும்.
எனவே ஆன்மாவும் உயிரும் இந்த பிறவியில் இந்திரிய கரணங்களான.கண்.
மனம் போன்ற கருவிகளை வெளியே செல்ல வொட்டாமல் ஆன்மாவின் கட்டளைபடி செயல் படும்படி பழக்கத்தில் கொண்டு செல்ல வேண்டும்.
எனவேதான் மனதை சிற்சபை கண் செலுத்த வேண்டும் என்கிறார் .
உயிர் இரக்கமும் .சத்விசாரமும் கடைப்பிடித்தால்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் திருவருளால். ஆன்மாவிற்கு உண்டாகும் துன்பங்களைத் தவிர்த்துக் கொள்ளலாம்.
துன்பங்களான அறியாமை என்னும் மாயா திரைகள் தான் ஆணவம்.மாயை. கன்ம்ம் என்னும் திரைகளாகும்.திரைகள் நீங்கினால் தான் ஆன்மா அருளைப் பெற்று மரணத்தை வெல்ல முடியும்..மரணத்தை வென்றால் மட்டுமே இறப்பு.பிறப்பு அற்று பேரின்ப வாழ்க்கை என்னும் முத்தேக சித்தி பெற்று என்றும் அழியாமல் வாழும் வாழ்க்கை கிடைக்கும்....
திரை நீக்கம் !
திருக்கதவம் திறவாயோ திரைகளெலாம் தவிர்த்தே திருவருளாம் பெருஞ்சோதித் திருஉருக்காட் டாயோ.
உருக்கி அமுது ஊற்றெடுத்தே உடம்பு உயிரோடு
உளமும் ஒளிமயமே ஆக்குற மெய் உணர்ச்சி அருளாயோ.
கருக்கருதாத் தனிவடிவோய் நின்னைஎன்னுட் கலந்தே கங்குல்பகல் இன்றிஎன்றும் களித்திடச்செய் யாயோ
செருக்கருதா தவர்க்கு அருளும் சித்திபுரத் தரசே சித்த சிகா மணியே என் திருநடநா யகனே.! என்னும் பாடல் வரிகளிலே தெளிவாக விளக்கம் தருகின்றார் வள்ளலார்...
தொடரும்.....
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு