ஞாயிறு, 7 ஜனவரி, 2018

ஞானம் என்றால் என்ன ?

ஞானம் என்றால் என்ன ஞானம் என்பது உண்மை அறிவு என்பதாகும் உண்மை அறிவு எங்கு இருக்கிறது உண்மை அறிவு ஆன்மா என்னும் உள் ஒளியில் இருக்கின்றது . அதை அறிந்து கொள்வது எப்படி ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கத்தாலும் சத்விசாரம் என்னும் மனத்தாலும் அறிய வேண்டும் . ஜீவகாருண்யம் என்றால் என்ன பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை போன்ற துன்பங்களால் வருந்தும் உயிர்களுக்கு உண்மையான அன்பு  தயவு,கருணை, இரக்கம் கொண்டு ,நம்மால் முடிந்த அளவுக்கு உபகாரம் செய்வது ஜீவ காருண்யம் என்பதாகும். சத்விசாரம் என்றால் என்ன > நம்முடைய ஆன்மாவின் உள்ளே உண்மையான அறிவு விளக்கம் உள்ளது ,அதை அறிந்து கொள்ள வேண்டும். அதை எப்படி அறிவது, நம்முடைய மனம் புத்தியைக் கொண்டு செயல்படுகின்றது .புத்தி என்பது மனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
மனம், புத்தி, சித்தம், அகங்காரம், இவைகள் நான்கும் புறத்தில் உள்ள அழியும் பொருள்களையே தேடும் .ஆகவே தேடும் பொருள்களும் அழிந்து விடும் அதை தேடும் மனிதர்களும் அழிந்து விடுவார்கள் . ஆன்மாவின் கட்டுப்பாட்டில் உள்ளது அறிவு என்பதாகும்,அதற்கு உண்மை அறிவு என்பதாகும்.ஆன்ம அறிவை அறிந்து கொண்டவர்கள் அறிவு உள்ளவர்கள் என்பதாகும்.அறிவால் கிடைக்கும் பொருள் அருள் என்பதாகும் . ஆன்மாவும் அழியாது,அதில் இருந்து தோன்றும் அறிவும் அழியாது, அறிவால் கிடைக்கும் அருள் என்னும் பொருளும் அழியாது அழியாத பொருளைப் பெறுவதே ஞானம் என்பதாகும். ஆதலால் பொருளைத் தேடி வெளியே செல்லும் மனத்தை அடக்கி ஆன்மா இருக்கும் இடமான புருவ மத்தியில் செலுத்த வேண்டும். எப்படி செலுத்த வேண்டும் அதற்கு ஞானம் என்று பெயர் ! ஞானம் என்பது நான்கு பிரிவுகளாக உள்ளன்,
அவைகள் '--''ஞானசரியை '' ''ஞான கிரியை ''.''ஞான யோகம்'',''ஞானத்தில் ஞானம்'' என்பதாகும் . வள்ளல்பெருமான் காட்டிய சுத்த சன்மார்க்கத்திற்கு முதல் சாதனம் ஜீவகாருண்யம்,இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது மிகவும் முக்கியமானதாகும் . முதல் சாதனம் ஜீவகாருண்யம் ;--ஆதரவு அற்ற ஏழைகளுக்கு உண்டாகும் .பசி,பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயம்,கொலை,போன்ற துன்பங்கள் வரும்போது நம்மால் முடிந்த அளவு உதவி செய்து அவற்றைப் போக்குவதே ஜீவகாருண்யம் என்பதாகும். இரண்டாவது சாதனம் சத்விசாரம் என்பது ''ஞான சரியை'' என்பதாகும். ஞான சரியை என்பது ;--புறத்தில் செல்லும் மனத்தை வெளியில் செல்ல விடாமல் ஆன்மாவில் செலுத்த வேண்டும் ,இதுவே சுத்த சன்மார்க்க தியானம்...சாதனம்என்பதாகும். அப்படி இடைவிடாது செய்து வந்தால் ஞான சரியையில் இருந்து ,ஞானகிரியை,ஞானயோகம்,ஞானத்தில் ஞானம் என்னும் நான்கு கதவுகள் ஒவ்வொன்றாக திறந்து கொண்டே வரும். இறுதியில் இருக்கும் ஞானத்தில் ஞானம் என்னும் கதவு திறந்தால் அருள் என்னும் அமுதம் பூரணமாக கிடைக்கும். அதற்கு அருள் பூரணம் என்று பெயர்

1 கருத்துகள்:

18 ஜூலை, 2022 அன்று PM 7:53 க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

Unmai, unarnthum,theriyathathu Pol jeevakaarunyathirkku ethiraga iruppathu varuththam.

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு