சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை எப்படி அறிந்து கொள்வது ?
சுத்த சன்மார்க்கத்தின் உண்மையை எப்படி அறிந்து கொள்வது ?
வள்ளல்பெருமானின் வாழ்க்கை உள்ளங்கையில் உள்ள நெல்லிக் கனி போன்றது .அவர் காட்டிய அருள் நிறைந்த சுத்த சன்மார்க்க நெறியை சார்ந்து வாழ்பவர்கள் பசு மாட்டின் மடியில் உள்ள பாலினை நேராக அருந்து பவர்கலாகும் .
பின் பற்றாதவர்கள் அந்த பசு மாட்டின் பாலினை அருந்தாமல் அந்த மாட்டின் குருதியை ( ரத்தம் ) அருந்தும் முலை உண்ணி போன்ற பாங்கு உடையவர்கள் ஒரு பகுதியினர் .
அடுத்து வள்ளல் இருக்கும் இடத்தில் கிடைக்கின்ற பசுமையாம் திருவருட் புல் ,பூண்டு,காய் கனி ,பழம்,போன்ற தாவரங்களை உண்டு வயிற்றை நிரப்பிக் கொள்ளாமல் வேறு இடங்களில் தெரிகின்ற பசுமையை நோக்கி நடந்து கொண்டு திரியும்,காட்டு எருமை போன்றவர்கள் ஒரு பகுதியினர்.
திரு அருட்பிரகாச வள்ளலாரின் கருணை என்னும் பாற்கடலில் இருக்கும் அமுதத்தை உணராமல்,உண்ணாமல்,..அலைகின்ற கசப்பு மிக்க அசுத்த நீரை உண்ணுகின்ற கடல் மீனை ஒத்தவர்கள் ஒரு பகுதியினர்.
அத்தைகைய வர்கள் பரிபூரண திருவருளின் நிறைவினை உடைய வள்ளல்பெருமானின் சமூகத்தில் இருந்தும் உண்மையை உணரவில்லை என்றால் ஐயகோ ! இருந்தும் என்ன பயன் ?
உண்மையை உணராமல் வள்ளல்பெருமானின் கொள்கையான சுத்த சன்மார்க்க நெறியில் இருந்தும்,அவற்றை பின்பற்றி வாழாமல் அந்த நற்பயனை அறியவும் அனுபவிக்கவும் இயலாது.
உண்மையான சுத்த சன்மார்க்க நெறியை பின்பற்றி வாழாமல், வாழ்பவர்கள் உயிரின் துன்பத்தில் இருந்தும் ,உடம்பின் துன்பத்தில் இருந்தும் மீளவே முடியாது.அத்துடன் மீளாத் துன்பத்தில் இருந்தும் மீள முடியாது.இவர்கள் எல்லாம் முதன்மையான அஞ்ஞான கூட்டத்தினர்கள் என்பது தெளிவாகக் தெரிந்து கொள்ளலாம் .
உண்மையை சொன்னாலும் தெரிந்து கொள்வார் இல்லை என மன வேதனையுடன் வள்ளல்பெருமான் சொல்லுவார்.
அத்தகைவரகளுக்கு என் போன்றோர் சொல்லி என்ன பயன் என்பதை நினைந்து மிகவும் வருந்து கின்றேன்.இருந்தாலும் காலம் வரும்போது உண்மையை உணர்ந்துதான் ஆக வேண்டும் என்ற ஆன்மநேய உரிமையில் இதை நான் தெரிவிக்கின்றேன்.
வள்ளல்பெருமானைப் போல் உலக உயிர்களுக்கு உண்மையை எடுத்து உரைத்தவர்கள் யாரும் இல்லை என்பதை என்னுடைய அறிவு எனக்கு உணர்த்தியது .அதனால் நான் நற்பயனை அடைந்து வருகின்றேன் அதேபோல் நீங்கள் எல்லோரும் என்னுடைய சகோதரர்கள் என்ற உரிமையுடன் தெரிவிக்கின்றேன்.மேலும் உங்கள் விருப்பம் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு