செவ்வாய், 18 நவம்பர், 2014

கடவுள் யார் ? என்பது தெரியாமல் மக்கள் உருவமான மொம்மைகளை வைத்து வணங்குகிறார்கள்,வழிபாடு செய்கிறார்கள் !


கடவுள் யார் ? என்பது தெரியாமல் மக்கள் உருவமான மொம்மைகளை வைத்து வணங்குகிறார்கள்,வழிபாடு செய்கிறார்கள் !

விளக்கோ ,மின்சாரமோ இல்லை என்றால் அந்த மொம்மைக் கடவுள்களைப் பார்க்க வெளிச்சம் கொடுக்க முடியுமா ? அவைகளைப் பார்க்க அவைகள் வெளிச்சம் தராமல் இருக்கும் போது மக்கள் குறைகளையும் ,மக்கள் வேண்டுதல்களையும் அவைகளால் எப்படி தீர்க்க முடியும் .

படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை .இந்த பொய்யான தெய்வங்களை வழிபாடு செய்து நேரத்தை வீண் கழிக்கின்றார்கள் .உண்மையான இறைவன் உயர்ந்த அறிவு படைத்த மனிதர்களுக்கு உயர்ந்த அறிவைக் கொடுத்தும் தாழ்ந்த அறிவைக் கொண்டு தாழ்ந்து தரம் கேட்டுப் போகின்றார்கள் ,என்று வள்ளல்பெருமான் வேதனைப் படுகின்றார்.

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்று கின்றாரும்
பொய்ச் சமயாதியை மெச்சு கின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றும் இல்லார்
மேல்விளை அறிகிலர் வீண் கழிக்கின்றார்
எய்வந்த துன்பம ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

என்று மக்களுக்காக இறைவனை வேண்டிக் கொள்கின்றார் .

எனக்கு அறிவையும் தெளிவையும் கொடுத்த இறைவா ,அறிவு தெளிவு இல்லாமல் இந்த மக்கள் ...உண்மையான இறைவன் யார் ? என்பது தெரியாமல் மெய்யான அறிவு விளக்கமும்,அருள்  விளக்கமும் இல்லாமல் வீணே அழிந்து கொண்டு உள்ளார்கள் .

எனக்கு தெளிவித்த அறிவையும் அருளையும் அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .என்று ,,ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமையுடன் மக்களுக்காக .அருட்பெருஞ்ஜோதி என்னும் உண்மைக் கடவுள் இடம் வேண்டிக் கொள்கின்றார் .

இனிமேலாவது பொய்யான கற்பனைக் கடவுள்களை வணங்காமல்,

எல்லா அண்டங்களையும்,,எல்லா உலகங்களையும்,எல்லா உயிர்களையும்,மற்றும் எல்லா அண்ட சராசரங்களையும் தமது தனித் திருவளால் செங்கோல் கொண்டு நடாத்து வித்து அருளும் பேரருட் பெருங் கருணை வாய்ந்த தனிப்பரும் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்குங்கள் ,வழிபாடு செய்யுங்கள் .என்கின்றார் நமது அருள் வள்ளல் வள்ளல்பெருமான்

இனிமேலாவது உண்மையை அறிந்து உணர்ந்து தெளிந்து வழிபாடு விஷயத்திலும் ,வணங்கும் விஷயத்திலும் ,வேண்டுதல் விஷயத்திலும் ,உண்மைக் கடவுளையே வேண்டுவோம் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு