அறம்,பொருள் ,இன்பம்,வீடு என்றால் என்ன ?
அறம்,பொருள் ,இன்பம்,வீடு என்றால் என்ன ?
அறம் என்பது இரண்டு வகைப்படும் ,ஒன்று இல்லறம் இது பொது நலத்தை சார்ந்தது,தனக்காகவும் ,பிறருக்காகவும் பொருள் ஈட்டி தர்மம் செய்து வாழ்வதாகும் ,இது சிறந்த அறமாகும்
துறவறம் என்பது சுயநலம் கருதி வாழ்வது .தான் மட்டும் தனிமையில் இருந்து பிறர் பொருளை அனுபவித்து இறைவனை அடையலாம் என்று நினைப்பதாகும்.இது சரியான துறவறம் அல்ல !
பொருள் ;- நேர்வழியில் பொருள் சம்பாதித்து அனைவருக்கும் கொடுத்து தானும் அனுபவித்து மற்றவர்களையும் மகிழ்ச்சி அடைய செய்விப்பதாகும் இது சிறந்த வழியில் பொருள் ஈட்டி வாழ்வதாகும்,
இன்பம் ;-- எல்லோரும் இன்பமுடன் வாழும் வழியைக் காட்டி அந்த இன்பத்தில் தானும் வாழும் வாழ்க்கையே சிறந்த இன்பமாகும்..
வீடு ;-- நாம் வாழும் இந்த உலகமும் ,உடம்பிற்குள் நாம் வாழும் வீடும் சொந்தமானது அல்ல,வாடகைக்கு குடி இருக்கிறோம் என்பதை அறிந்து ..நாம் எங்கு இருந்து வந்தோம், நம்முடைய சொந்தமான வீடு எங்கே உள்ளது என்பதை அறிந்து சொந்தமான வீடு என்னும் ஆன்ம தேகம் (அதாவது ஒளி தேகம்,அருள் தேகம் ) பெற்று நம்முடைய தந்தையின் அருட்பெருஞ்ஜோதியின் இல்லத்திற்கு சென்று வாழ்வதே சொந்த வீடு பேராகும்,.
மேலும் அறம்,பொருள் ,இன்பம்,வீடு ,இவை நான்கையும் நான்கு காலங்களில் நன்கு அனுபவித்து பின்பு பற்று அற்று இருப்பதே கடவுளை அடைய எதுவாக இருக்கும் என்று வள்ளல்பெருமான் மிகத் தெளிவாக பதிவு செய்து உள்ளார் .
மேலே கண்ட நான்கு வழிகளிலும் தடம் மாறாமல் வாழ்ந்து மக்களுக்கு வழி காட்டுவதே மனிதப் பிறப்பின் லட்ஷியமாகும் ,லட்ஷணமாகும்,வாழ்வோம் வழி காட்டுவோம் .
ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் . .
1 கருத்துகள்:
அருமையான பதிவு
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு