வெள்ளி, 23 செப்டம்பர், 2022

வள்ளலாரின் முக்கிய கொள்கைகள்!

 அருட்பெருஞ்ஜோதி !

அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை!

அருட்பெருஞ்ஜோதி!


*வள்ளலாரின் முக்கிய  கொள்கைகள்!*


*வள்ளலார் வருவிக்க உற்ற 200 ஆம் ஆண்டு விழா, வடலூரில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச்சாலை தொடங்கிய 156 ஆம் ஆண்டு விழா, வடலூரில் சத்திய ஞானசபையை தோற்று வித்து ஜோதி தரிசனம் காட்டுவித்த 152 .வது விழா ஆகிய முப்பெரும் விழாவை,  தமிழக அரசு ஆணையின்படி இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில்.* 


*சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள  கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் திருமண மண்டபத்தில் 05-10-2022 ஆம் நாள் மாண்புமிகு தமிழக அறநிலையத்துறை அமைச்சர் திரு சேகர்பாபு அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தமிழக முதல்வர் உயர்திரு மு.க. ஸ்டாலின்  அவர்கள் சிறப்புரை ஆற்றி  சென்னையில்  தொடங்கி வைக்கிறார்.*


*அவற்றைத் தொடர்ந்து  05-10-2023 வரை 52 வாரங்கள் தமிழகம் முழுவதும் மாவட்டங்கள வாரியாக, அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டு சன்மார்க்க சங்கங்கள், சன்மார்க்க தொண்டர்கள் மற்றும் ஜீவகாருண்ய செம்மல்கள  முன்னிலையில் சுத்த சன்மார்க்க சங்கத்தின்  சிறப்பு பேச்சாளர்கள் மூலமாக சன்மார்க்க  கொள்கைகளை அனைத்துலக மக்களும் தெரிந்து கொள்ளும் பொருட்டு விழா எடுக்க தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது* 


*"அதற்காக தமிழக அரசை வாழ்த்தி வணங்குவோம்"*


*வள்ளலாரின் கொள்கைகள்!*


 *வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமை சங்கத்தின் சார்பாக வெளியிடப் படுகிறது*


*இதுநாள் வரை எவரும் சொல்லாத செயல் படுத்தாத, சாதி,சமயம், மதம் கடந்த (சார்பற்ற) உண்மைப் பொது நெறியாகிய "சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க" தனிநெறியாம் மெய்நெறியின் மூலமாக வள்ளல்பெருமான் வலியுறுத்திய  சுத்த சன்மார்க்க்தின் அடிப்படையான முக்கிய கொள்கை களை அனைத்து உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை உடைய  சகோதர சகோதரிகளு ம் தெரிந்து,அறிந்து,புரிந்து  கொண்டு  ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை வாழ்க்கையில் கடைபிடித்து  இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளைப் பெற்று மரணத்தை வென்று பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்பதற்காக வள்ளலாரின் முக்கிய கொள்கைகள் வெளியிடப் படுகிறது.*


*கொள்கைகள்* 


1, *கடவுள் ஒருவரே! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்!*


2. *சிறு தெய்வ வழிபாடுகள் கூடாது !*


3,*தெய்வங்கள் பெயரால் உயிர்பலி செய்யக் கூடாது!*


4, *வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் சாத்திரங்கள் உண்மையைத் தெரிவிக்கவில்லை!*


5, *சாதியும் சமயமும் மதமும் பொய் என்பதை உணர்ந்து விலக வேண்டும்!*


6,*ஜீவகாருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்!*


7,*ஜீவகாருண்ய ஒழுக்கமும், உயிர் இரக்கமுமே கடவுள் வழிபாடு!*


8,*ஏழை எளிய மக்களின் பசிப்பிணியை போக்குவதே கடவுள் வழிபாடாகும்!*


9,*எவ்வுயிரையும் தம் உயிர்போல் பாவிக்கும் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமையை கடைபிடிக்க வேண்டும்!*


10,*உயிர்க்கொலை செய்யக் கூடாது! புலால் உண்ணக் கூடாது !*


11,*கணவன் இறந்தால் மனைவி தாலி வாங்கக் கூடாது!*


12,*மனைவி இறந்தால் கணவன் வேறு திருமணம் செய்து கொள்ளக் கூடாது!*


13,*இறந்தவரை புதைக்க வேண்டும் எரிக்கக் கூடாது !*


14,*பெண்களுக்கும் யோகம் முதலிய சாதனங்களைச்  சொல்லித்தர வேண்டும்.*


15, *இந்திரிய ஒழுக்கம்,*

*கரண ஒழுக்கம், ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கத்தை  கடைபிடிக்க வேண்டும்* !


16,*எதிலும் பொது நோக்கம் வேண்டும்!*


17,*ஜீவகாருண்ய ஒழுக்கம் இல்லாமல் செய்யப்படுகின்ற விரதம்  தியானம், தவம்,யோகம்,யாவும் வெற்று மாயா ஜாலங்களே !*

18, கருமாதி திதி முதலிய சடங்குகள் வேண்டாம் !

19, பிள்ளைகள் இறந்தால் சஞ்சலிக்க வேண்டாம்,கர்ம காரியங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம் !

20, சாகாதவனே சன்மார்க்கி ! மரணம் இல்லாப் பெருவாழ்வே வாழ்வு !


*மேலே கண்ட வள்ளலார் சொல்லிய சுத்த  சன்மார்க்க கொள்கைகள்  முழுவதையும் கடைபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களே  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப் பெறும் தகுதியுடையவர்கள் ஆவார்கள் என்பதை சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமைச் சங்கத்தின் சார்பாக தெரியப்படுத்திக் கொள்கிறோம்.*


மேலே கண்ட வள்ளலார் கொள்கையை கடைபிடிப்போம்


அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப் பெறுவோம்


இங்கனம் 

*வடலூர் சமரச சுத்த சன்மார்க்க சத்திய தலைமைச் சங்கம்*

05-10-2022

தொடர்புக்கு.

+919095905000

+919487417834

+919865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு