வியாழன், 29 செப்டம்பர், 2022

கடவுளைக் கண்டேன் ! பாகம் 7.

 *கடவுளைக் கண்டேன்!*


*எமது வாழ்க்கையின் வரலாற்று  சம்பவங்களை உங்கள் அனைவரின் ஆதரவோடு வேண்டுகோளுக்கிணங்க வெளியிட்டு வருகிறோம்*


*தொடர்ச்சி பாகம் 7.*


*வள்ளலார் பாடல்!*


குற்றம் புரிதல் எனக்கியல்பே குணமாக் கொள்ளல் உனக்கியல்பே


சிற்றம் பலவா இனிச்சிறியேன் செப்பும் முகமன் யாதுளது


தெற்றென் றடியேன் சிந்தைதனைத் தெளிவித் தச்சந் துயர் தீர்த்தே


இற்றைப் பொழுதே அருட்சோதி ஈக தருணம் இதுவாமே.! 


என்ற பாடல் மிகவும் சிந்திக்க வைக்கிறது.


*இந்த பிரபஞ்ச தலைவி மாயையின் உதவியால் பெற்ற (கொடுக்கப்பட்ட) மனித ஜீவ தேகத்தில் வாழும் ஆன்மாவிற்கு இவ்வுலகில் வாழ்வதற்கு தேகசுதந்தரம் ஜீவசுதந்தரம் போகசுதந்தரம் என மூவகை சுதந்தரம் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சுதந்திரத்தினால் குற்றம் புரிவதே மனிதர்களுக்கு வாடிக்கையான இயல்பு வாழ்க்கையாகி விட்டது.* 


*அதில் ஒன்றுதான் போக சுதந்தரம் அதுவே ஆண் பெண் திருமண பந்தமாகும், உரிமையுடன் தொடர்பு கொள்ளும் உடல் உறவாகும். அந்த உறவால் வேறு ஒரு ஆன்மாவும் உயிரும் உடம்பும் உற்பத்தியாக்கப் படுகின்றது. இதுவே மனிதன் தேகத்தினால் போகத்தினால் செய்யப்படுகின்ற முதற் குற்றமாகும்.இதனால் ஆன்மாக்கள் தொடர்ந்து பிறவி எடுத்துக் கொண்டே உள்ளது, ஆதலால் ஆன்மாக்கள் அதன் அதன் செயல்பாட்டிற்குத் தகுந்தவாறு பிறவிகள் தொடர்ந்து எடுத்துக் கொண்டே உள்ளது.இதற்கு ஒரு முடிவு தெரியாமல் வாழ்வதே வாழ்க்கையாகிவிட்டது.* 


*இந்த ஆன்மாதான் எனக்கு வேண்டும்,இந்த உயிர் உடம்புதான்  எனக்கு வேண்டும் என நினைந்து குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது* 


*அவரவர் நல்வினை தீவினைக்குத் தகுந்தாற் போல்தான் ஆன்மாக்களுக்கு உயிர் உடம்பு கொடுக்கப்படுகிறது கருத்தரிக்கும்*


*இவற்றை  திருவள்ளுவர் தெளிவாகச் சொல்லுகின்றார்!*


*பிறவிப் பெருங்கடல்  நீந்துவர் நீந்தார் இறைவன் அடி சேராதார் !* என்பார்.


*இவ்உலகில் பொருள்நிறைந்த மாயைக் கடல் என்னும் பற்றில் நீந்துபவன் (வாழ்பவன்) இறைவனைத் தொடர்பு கொள்ளவும் இறப்பை நீக்கவும் வாய்ப்பே இல்லை.*


*உலகப்பற்றை துறந்து அகற்றி ஜீவதயவோடு இறைவனைத் தொடர்புகொண்டு அருள் கடலில் நீந்துவதற்கு (வாழ்வதற்கு) தகுதி உள்ளவர் எவரோ அவரே அருட்கடலில் நீந்தும் தகுதியுடையவராவார்.அவரே இறைவனை தொடர்பு கொள்ளும் தகுதிப் பெற்றவராவார், மரணத்தை வெல்லும் ஆற்றல் பெற்றவராகும் என்கிறார் திருவள்ளுவர்*


*வள்ளலார் வேறு வழியைக் காட்டுகிறார்!*


*குற்றமே  புரியாத செய்யாத வள்ளல்பெருமான் அவர்கள், உலக மக்களுக்காக ஆண்டவரிடத்தில் சொல்லி வேண்டி தெளிவுப்படுத்தி புரிய வைக்கிறார். குற்றம் புரிவது எனக்கு இயல்பாக இருந்தாலும் குணமாகக் கொள்ளல் உமக்கு இயல்பானதாச்சே,ஆதலால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே !  எனது அறியாமை.  அஞ்ஞானத்தினால் உண்டாகும் பற்றின் காரணமாக , அச்சம் பயம் துன்பம் துயர் மரணம் போன்ற குற்றங்களை நீக்கி அகற்றி  தீர்க்க வேண்டும். காலம் தாழ்த்தாமல் நல்வழிக்காட்டி, அருள் வழங்கி இன்றே என்னை ஆட்கொளல் வேண்டும் என்கிறார்.*


*ஏன் என்றால் நான் உனக்கு மகன் அலனோ நீ எனக்கு வாய்த்த தந்தை அலவோ என்ற உரிமையுடன் கேட்கிறார்.*


 *என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என்பதற்காக ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன் சன்மார்க்க அன்பர்களுக்காக வேண்டி விண்ணப்பம் செய்கின்றார்.*


*இரண்டாவது குழந்தை !*


*இந்த உண்மைத் தெரியாமல் நாங்கள் (கணவன் மனைவி) வாழ்ந்ததால் தேக போக சுதந்தரத்தால்*

*என் மனைவி 1970 ஆம் ஆண்டு இரண்டாவது முறை கர்பமானாள், ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் மனைவி கர்பமானாள் மனைவிமீது அளவில்லா பற்று பாசம் மரியாதை பாதுகாப்பு கண்காணிப்பு அதிகரித்துவிடும் ஏன் என்றால் ? அதுதான் மனைவியும் கணவனும்  காட்டிய அன்புகலந்து இணைந்த காதல் பரிசின் அடையாளமே குழந்தைதான், எனவே தான் குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திடலே என்பார்கள்* 


*குழந்தை பிறந்தால் மட்டும் போதாது  அக் குழந்தையை நல்ல குழந்தையாக,உலகம் போற்றும் வகையில் அறிவு சார்ந்த ஒழுக்கம் நிறைந்த நல்ல குழந்தையாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் நானும் என் மனைவியும் உறுதியாக இருந்து குழந்தைகளை வளர்த்து வந்தோம்*


*தொழிலும் வளர்ந்தது குழந்தையும் தாய் வயிற்றில் வளர்ந்தது 10 ஆவது மாதத்தில் அழகான பெண் குழந்தை பிறந்தது, சுமதி என்று பெயர் சூட்டினோம்* 


*இரண்டாவது குழந்தை பிறந்ததும் அதிகமான பொருப்பும் கடுமையான உழைப்பும் அதிகமானது.நாங்கள் விரும்பி செய்த காதல் காமம் வெகுளி,மயக்கம் என்ற குற்றத்தினால் பிறந்த குழந்தைக்காக நமக்குத் தெரியாமலே நாம் ஏதாவது ஒரு தொழில் செய்து, பொருள் ஈட்டும் கட்டாயத்திற்கு தள்ளப் படுகிறோம்.*


*எனக்குத் தெரிந்த தொழிலான தையற்கலையில் ஈரோடு மாவட்டத்தின் பிரபலமான "ஸ்பென்ஸர்ஸ்" தையல் ஷோரூம் சிறப்பான முறையில் மக்கள் மத்தியில் பெயர்பெற்று விளங்கியது.*


*ஸ்பென்ஸர்ஸ்* நிறுவனம் என் மீது வழக்கு தொடர்ந்தது !


*எமது கடையின் விளம்பரம்* *பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும் பேனர்களிலும், சுவர்களிலும் தியேட்டர்களிலும் நிறைய விளம்பரம் வெளியே செய்து கொண்டே இருந்தது,* 


*அவற்றை எப்படியோ பார்த்து விட்டார்கள் * உலகப் புகழ்பெற்ற ஸ்பென்ஸர்ஸ் நிறுவன கவர்னர் அவர்கள். எங்கள் நிறுவனத்தின் பெயரை நீங்கள் உங்கள் கடைக்கு வைத்தது சட்டபடி குற்றமாகும் என்று எங்கள் கடை மீது நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சம்மன்  அனுப்பி இருந்தார்கள்.*


 *வழக்கறிஞர்!


*ஈரோட்டில் எமக்குத் தெரிந்த கிரிமினல் வக்கீல் சின்னசாமி என்பவரிடம் சம்மனைக் கொடுத்து விபரத்தை சொன்னேன்,அவர் படித்துப் பார்த்துவிட்டு ஸ்பென்ஸர்ஸ் என்ற பெயரை எடுத்துவிட்டு வேறு பெயரை  வைத்துக் கொள்ளுங்கள் பிரச்சனை சரியாகிவிடும் என்றார்.*


*எமக்கு கோபம் வந்துவிட்டது, சார் நான் சொல்லிகின்றபடி நீதி மன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்றேன்,எவ்வாறு என்றார்?* 


*என் மகன் பெயர் ஸ்பென்ஸர்ஸ்,மகன் பெயரில் கடை வைத்துள்ளோம்.மேலும் எங்கள் கடையில் வாடிக்கையாளர்கள் கொண்டு வரும் துணிகளை மட்டும் ஆடைகளாக தைத்து தருகிறோம் இது எங்கள் கைத் தொழில் இது எங்கள் உடல் உழைப்பு*


*நீங்கள் தயாரிக்கும் எந்த பொருள்களையும் நாங்கள் தயாரிக்கவில்லை.எனவே எங்கள் தொழிலை, எங்கள் உழைப்பை எங்கள் தனிமனித உரிமையை பறிக்கும் உரிமை உங்களுக்கும் இல்லை,சட்டத்திலும் இடமில்லை என்று பதில் மனு தாக்கல் செய்யுங்கள் என்று எமது வக்கீலுக்கு சொல்லிக் கொடுத்தேன்*


*அவ்வாறே எமது வக்கீல் பதில் மனு தாக்கல் செய்து நீதி மன்ற வழக்கை சட்டப்படி தள்ளுபடி செய்யப்பட்டது. இவை என் வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவம்*  


*வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க தனிநெறிக் கொள்கையில் நான் பார்க்கும் பார்வை ஒரு வித்தியாசமானதாகும்*


தொடரும்....


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


 

அன்புடன் 

ஆன்மநேயன் *முனைவர் ஈரோடு கதிர்வேல்*

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு