வியாழன், 3 நவம்பர், 2011

நன்மை தீமை என்பவை யாவை ?


நன்மை தீமை என்பவை யாவை ?

கடவுளது திருஅருளை எவ்வாறு பெற வேண்டுமானால் ,அருள் என்பது கடவுள் தயவாகும் .ஜீவ காருண்யம் என்பது ஜீவர்கள் தயவாகும்ஆதலால் சிறிய வெளிச்சத்தைக் கொண்டு பெரிய வெளிச்சத்தைப் பெறுவது போல் ,சிறிய தயவாகிய ஜீவ தயவைக் கொண்டு பெரிய தயவாகிய கடவுள் அருளைப் பெற வேண்டும் .

அக்கடவுள் தன்மை எத்தகை உடையது என்றால் .நமது ஆன்ம அறிவாகிய புத்தி தன்மைக்கு தகுந்த வாறு நன்மை தீமையை விளக்கி காட்டுவதாய் உள்ளது, அறிபவர்கள் அறிபவர்களின் தன்மைக்குத் தகுந்தவாறு அருள் விளங்கும் .எப்படி எனில் .

பிண்ட அண்டத்தில் எவ்வண்ணம் விளங்குகிறது என்றால் !

காண்பார் கானுமிடம் காணப்படும் இடம் --அறிவார் அறியும்இடம் ஆரியப்படும் இடம் --தூண்டுவார் தூண்டும் இடம் தூண்டப்படும் இடம் ,சுவைப்பார் சுவைக்கும் இடம் சுவைக்கப்படும் இடம் ,அனுபவிப்பார் அனுபவிக்கும் இடம் அனுபவிக்கப் படும் இடம் .கருதுவார் கருதும் இடம் கருதப்படும் இடம் .முகருவார் முகரும் இடம் முகரப்படும் இடம் ,கேட்பார் கேடக்கமிடம் .கேட்கப்படும் இடம் ,முதலியவை விளங்கும்

இவ்வண்ணம் விளங்கும் அருளை நாம் பெறுவதற்கு உபாயம் என்ன? அறிவால் நன்மை தீமையை விசாரித்து நன்மையே உருவாக்கி விளங்கும் ஆன்ம அறிவைக் கொண்டு {மன அறிவை விடுத்து }இடைவிடாது நமது ஆன்மா விளங்கும் இடமான புருவ மத்தியின் கண் மனத்தை செலுத்த வேண்டும் .அப்படி செய்து வந்தால் ஆன்மாவில் உள்ள அருள் சுரக்கும் அருளைப் பெறலாம்

புண்ணிய பாவம் நம்மை எவ்வாறு அடைகின்றன.நம்முடைய வாழ்க்கையில் ஆரம்பித்தில் சுகமாயும் பின் துக்கமாயும் இருப்பது பாவமாகும் .ஆரம்பித்தில் துக்கமாயும் பின் சுகமாயும் இருப்பது புண்ணியமாகும் .

புண்ணியம் பாவங்கள் நம்மை எவ்வாறு அடைகின்றன என்றால் .மனம் ,வாக்கு .காயம் {உடம்பு }என்னும் மூன்றின் வழியாக அடையும்.மனத்தின் இடத்தில் நான்கும் .வாக்கின் இடத்தில் நான்கும் ,சரீரத்தின் இடத்தில் நான்கும் ஆகப பன்னிரண்டு வகையாய் நம்மை அடையும்.அவை யாவன என்பதை பார்ப்போம் .

மனம் ;-
மனத்தினால் பரதாரக மனம் பண்ண நினைத்தல் .அன்னியருடைய சொத்தை அபகரிக்க நினைத்தல் ,அந்நியருக்கு தீங்கு செய்ய நினைத்தல்,முடியாத காரியங்களை நினைத்து அக்காரியம் அந்நியர்களுக்கு முடிந்ததை நினைத்து பொறாமை அடைதல் இவை நான்கும் மனத்தினால் செய்யும் பாவங்களாகும்.

வாக்கு;
பொய் சொல்லல ,கோள் சொல்லல,புறங் கூறல்,வீணுக்கு அழுதல் .இவை நான்கும் வாக்கினால் உண்டாகும் பாவாஸ் செயல்களாகும் .

தேகம் {சரீரம் }
தேகத்தினால் பிறர மனைவியை தாழுவதல். புசிக்கத் தகாத விரோத ஆகாரங்களை [ மாமிசம் அதாவது புலால் இறைச்சி }புசித்தல் .அந்நியருக்கு இம்சை செய்தல் தீங்கு செய்கின்றவர்களைத் தடுக்காமல் அவர்களுக்கு உபகாரம் செய்தல் இவை நான்கும் சரீரத்தால் செய்யும் பவங்கலாகும் .

புண்ணியம் என்பது ;--

மனம் ,
இவை போன்றவைகளை தவிர்த்து அந்நியர்களுக்கு நன்மை உண்டாக நினைத்தல்,பொறாமை அடையாது இருத்தல்,அன்னியர் சொத்தை தனதாக்க என்னாது இருத்தல் ,தனது மனைவியைத் தவிர அந்நியமான பெண்களைத் தாய் சகோதரி முதலியவர்களாக சிந்தித்தல் ,இவை மனத்தால் வரும் புண்ணியமாகும் .

வாக்கு ;--
பொய் சொல்லாமை ,கோள் சொல்லாமை இன் சொல்லாடல்,இடை விடாது கடவுளை நினைத்தால் இவை நான்கும் வாக்கால் வரும் புண்ணியமாகும் ,

தேகம் '-
அந்நியர்களுக்கு தீங்கு உண்டாகும் காலத்தில் எந்த விதத்திலாவது அதை விலக்கல முதலான நன்மையை செய்தல் தேகத்தால் உண்டாகும் புண்ணியமாகும் .  

அடுத்து அறிந்து செய்த பாவங்களும்,அறியாது  செய்த பாவங்களும் எவ்வாறு நீங்கும் அறிந்து பாவங்கள் செய்த பின் ,தாம் பாவச செயல்களை முன்னமே தெரிந்தும் மோகத்தாலும் ,மறதியாலும்,அபி மானத்தாலும் அகங்காரத்தாலும் ,செல்வா செருக்காலும் தாட்சன்ய உடன் பாட்டாலும் உணவு பற்றியும் ,புகழ் பற்றியும் ,வழக்கம் பற்றியும் செய்து விட்டோமே என்று மனம் வருந்தி ,பசித்த ஏழை களுக்குஅன்ன விரயம் {அதாவது உணவும்} ,ஆதரவு அற்ற ஏழைகளுக்கும் .அதரவு அற்ற முதியோர்களுக்கும் நம்மால் முடிந்த அளவு உபகாரம்,ஜீவகாருண்யம் செய்து வந்தால் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் குறைந்து விடும் .

அடுத்து நான் செய்த பாவக் காரியங்கள் என்னை விட்டு நீங்க வேண்டும் என்று இடை விடாது உண்மைக கடவுளாகிய அருட்பெரும் ஜோதியை இடை விடாது தோத்திரம் செய்தும் ,பாராயணம் செய்தும் வேண்ட வேண்டும் விருந்தினர்களுக்கு ,விருந்து உபசரிப்பு முடிந்த அளவு இடை விடாது செய்து வரவேண்டும் .

இப்படி செய்ய வில்லை என்றால் மனத்தால் செய்யும் பாவங்களுக்கு சண்டாள தேகங்களும் .வாக்கால் செய்த செய்த பாவங்களுக்கு மிருகம் முதலான தேகங்களும் .தேகத்தால் செய்த பாவங்களுக்கு மரம முதலான தேகங்களும் உண்டாகும் .அடுத்து மனிதப் பிறவி கிடைக்கும் என்பது உறுதி அல்ல !ஆதாலால் மேல் சொன்ன வழியில் மேலும் வாழ்க்கை அமைத்துக் கொண்டால அடுத்து மனிதப் பிறவிக்கு கடவுள் கருணை காட்டுவார் .நல்லதை செய்து நலமுடன் வாழ்வோம் .
,
ஆன்மநேய அன்புடைய கதிர்வேலு .  

.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு