வெள்ளி, 4 நவம்பர், 2011

தியானம் செய்யும் முறை !

தியானம் செய்யும் முறை !

தியானம் செய்ய வேண்டுமானால் கண்ணை மூடிக் கொண்டு தியானம் செய்யக் கூடாது.கண்ணை திறந்து கொண்டுதான் செய்ய வேண்டும் நம் வீட்டில் தனியாக ஒரு அரை இருக்க வேண்டும் அந்த அறையில் நான்கு சதுரம் உள்ள தகரக் கண்ணாடிக் கூண்டு விளக்கு வைக்க வேண்டும் அதன் மத்தியில் ஒரு அகல் விளக்கோ அல்லது உலோகத்தால் செய்த விளக்கோ வைக்க வேண்டும் அதில் நல்ல எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் ஊற்றி சிறிய திரிப்  போட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதற்கு முன்னாடி நாம் அமர்ந்து கொள்ள வேண்டும் .அந்த விளக்கின் தீப ஒளியை இடை விடாது கண்கள் வழியாக பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் .

நம்மால் எவ்வளவு நேரம் பார்க்க முடியுமோ அவ்வளவு நேரம் பார்க்க வேண்டும் இதற்கு நேரம் காலம் என்பது கிடையாது நேரம் கிடைக்கும் போதெல்லாம் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யலாம் .இதனால் என்ன பயன் என்பதை பார்ப்போம் .

நம் உடம்பின் ஐம புலன்களில் முக்கியமானது முதன்மையானது கண்களாகும் கண்களின் வழியாகத்தான் நாம் உலகில் உள்ள அனைத்தையும் பார்க்கிறோம் பார்க்கும் அனைத்தும் மனதில் பதிவாகிறது .மனத்தில் பதிவானது உயிரில் பதிவாகின்றது.உயிரில் பதிவானது அன்மாவில் பதிவாகின்றது.அவைதான் ஆன்மாவை மறைத்துக் கொண்டு இருக்கும் திரைகளாகும் .

கண்கள் எங்கு செல்கிறதோ அங்கு மனமும் செல்லும் கண்களில் பார்க்காதது மனதில் பதிவாகாது.அதனால்  மனதை அடக்க வேண்டுமானால் கண்கள் வழியாகத்தான் அடக்க முடியும் .

கண்களை மூடிக் கொண்டு தியானம் செய்தால், தேவை இல்லாத கற்பனைகளும் தேவை இல்லாத வெளி சிந்தனைகளும் தோன்றி மனம் அலைபாயுமே தவிர மனம் அடங்காது ,மனம் என்பது ஒரு பேய் குரங்கு அதை அடக்க முடியாது ஒளியின் வழியாகத்தான் அடக்க முடியும் அதை கண்கலால்தான் அடக்க முடியுமே தவிர, வேறு மாறுபட்ட வழிகள் எல்லாம் பொய்யான மாயா ஜாலங்களாகும்.

ஆதலால் கண்கள் உருவம் அற்ற, ஒளியை பார்த்து தியானம் செய்ய வேண்டும் .கண்களும் ஒளி-- ,தீபமும் ஒளி --இரண்டும் ஒளியாக இருப்பதால் ஜீவனும் ஒளி --ஆன்மாவும் ஒளியாகும்--,நாம் பிறந்ததில் இருந்து கண்கள் வழியாகப் பார்த்து , பார்த்த அனைத்தும் ஆன்மாவில் பதிவாகி உள்ளது .அந்த பதிவுதான் நினைவு அலைகளாக நமக்கு துன்பமும் துயமும் அச்சமும்,பயமும் தந்து கொண்டே  வருகிறது .அந்த பதிவுகளை நீக்கினால் மட்டுமே மனம் அமைதி பெரும்

அந்த பதிவுகளை அகற்ற தீப ஒளி தியானம் தான் மிகவும் முக்கியமானதாகும்  அப்படியே தினமும் தீபத்தை பார்த்துக் கொண்டு வந்தால் அந்த தீப ஒளி என்ற உருவமும்  மறைந்து பின் புருவ மத்தியில் உள்ள ஆன்ம ஒளியைக காணும் செயலுக்கு அதே கண்கள் வந்து விடும்---பின் .உருவம் கரைந்து அருவமாகும். .துவைதமாக இருந்தால் அத்துவைதம் தானே ஆகும் .எப்படி எனில் பார்க்கும் தான் கெடுவது அத்வைதம் ,பார்க்கப் படும் பொருளும் கெடுவது அதீதம் இதுதான் சத்தியமான உண்மையாகும் .

மலம ஒழிப்பு என்பார்கள் அந்த மலத்தை ஒழிப்பதற்கு குரு தீட்சை கொடுப்பதாக சொல்லுவார்கள் மலம என்பது யாதெனில் ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்னும் ஐந்து மலங்களாகும்,அதற்கு மலம ஒழிப்பு என்பார்கள் தீட்சை என்பது யாதெனில் தீ+ட்சை என்பது மலம் ஒழிப்பு என்பது ஒழிவு அதற்கு மலம ஒழிப்பு என்று பெயராகும் பலபேர் விபரம் தெரியாமல் நிறைய பணம் கட்டி தேவை இல்லாமல் தியானம் யோகம்  தவம் போன்ற தவறான வழிகளில் சென்று நேரத்தையும்,பணத்தையும் வீண் விரையம் செய்து கொண்டு வருகிறார்கள் அப்படி செய்வது அறியாமையாகும் அறியாத மக்களை ஏமாற்ற நிறைய அமைப்புகள் உருவாகி விட்டது

அறியாமை என்னும் மலத்தை வேறு யாராலும் ஒழிக்க முடியாது அவரவர்கள் ஆன்மாவில் பதிவானதை அவரவர்களே தான் ஒழிக்கவேண்டும் ,அழிக்க வேண்டும் வேறு ஒருவரால் நீக்க முடியாது என்பதை அறிவால்அறிந்து கொள்ள வேண்டும்.வள்ளல்பெருமான் பாடிவைத்துள்ள பாடல் .

கண்ணில கலந்தான் கருத்தில் கலந்தான் என்
எண்ணில் கலந்தே இருக்கின்றான் .
கையற விலாது நடுக கண் புருவ பூட்டு
கண்டு களி கொண்டு திறந்து உண்டு நடு நாட்டு .
வள்ளலார் பாட்டு ,

மேலே சொல்லியபடி செய்து வாருங்கள் உங்களுக்கே அனுபவம் தானே கிடைக்கும் ஏதாவது சந்தேகம் இருந்தால் எங்களிடம் தொடர்பு கொள்ளுங்கள் இலவசமாக சொல்லித் தரப்படும் .இதுவே சன்மார்க்க தியானமாகும் .

போன் நெம்பர் ;-0424 2401402 -செல் --9865939896 .

உங்கள் அன்பு கொண்ட ஆன்மநேயன் --கதிர்வேல.

17 கருத்துகள்:

16 ஜனவரி, 2012 அன்று 12:56 PM க்கு, Anonymous P.Gopu கூறியது…

Nandraga ulladhu naan muyarchi seidhu paarkidren, pinbu marubadium thangali thodarbu kolgiren

 
12 மார்ச், 2012 அன்று 1:02 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

Ayya, very nice.. Can u pls. tell me what's the meaning behind the 21600 chain locks in vadalur? Is it the vaasi practice? Should we do this thavam with eyes as well as vaasi or what's the meaning of Gnanathil yogam? Pls clarify.

 
12 மார்ச், 2012 அன்று 8:00 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் உங்கள் பதிலுக்கு மிக்க மகிழ்ச்சி
வடலூரில் ஞானசபையை சுற்றி இரும்பு சங்கிலி போடப்பட்டு உள்ளது. இது வள்ளலாரால் போடப்பட்டது .இதை பலபேர் பலவிதமாக சொல்லுகிறார்கள் .மனிதன் ஒருநாளைக்கு ,21600,தடவை மூச்சை இழுத்து விடுகிறான் அந்த மூச்சுக் காற்றின் எண்ணிக்கை என்று சொல்லுகிறார்கள் அதில் எனக்கு உடன்பாடில்லை.அந்த இரும்பு வளையம் இரும்பு அல்ல ,அது தங்கமாகும் பற்று அற்றவர் கண்களுக்கு பொன் வண்ணமாக காட்சி அளிக்கும் .பொன் வண்ணமாக காட்சி அறிபவர்கள் சுத்த தேகம் பெற்றவர்கள் என்பதாகும் .அவர்கள் மேலே செல்லும் தகுதிப் படைத்தவர்கலாகும்,அவர்கள் உண்மையான கடவுள் இருக்கும் இடத்திற்கு செல்லும் தகுதி படைத்தவர்கள் தங்கம் கிடைக்கும் தகுதி பெற்று அதை பயன் படுத்தாமல் பிரணவ தேகம் கிடைக்கும் வழியை அடைய முயற்ச்சி செய்ய வேண்டும்.அதையும் அடைந்த பின் ஞான தேகம் கிடைக்கும் வழியை பின் பற்ற வேண்டும்.இதில் ஏதாவது தடுமாற்றம் ஏற்படுமாயின் மேலே செல்லாமல் கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுவிடும்.
சுத்த தேகத்தில் பல சித்துக்கள் கைகூடும்.பிரணவ தேகத்தில் அதைவிட அதிக சித்துக்கள் கை கூடும்.இதை தவறான பாதையில் இமி அளவும் செலவு செய்யகூடாது.அப்படி வாழ்ந்தவர் இந்த உலகத்தில் வள்ளலார் ஒருவர்தான் என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
மூச்சு காற்று என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமாக இருக்கும் ஒரே அளவாக இருக்காது அந்த கணக்கு தவறானது .உணவு உண்ணும போதும்,உடல் உறுப்புகள் வேலை செய்யும் போதும் உறங்கும் போதும் , போதும்,இறைவனை நினைக்கும்போதும்.மூச்சுக் காற்று மாறி மாறி வேலை செய்யும் .அதை யாரும் கணக்குப் போட முடியாது.நம்முடைய நன் முயற்ச்சியின் தகுதிக்குத் தகுந்தாற் போல் மூச்சுக் காற்று வேலை செய்யும்.

 
13 மார்ச், 2012 அன்று 12:08 PM க்கு, Anonymous S. Sriumadevi Srinivasan கூறியது…

அய்யா,

வணக்கம். என் பெயர் S.Sriumadevi. தற்செயலாக உங்கள் தளத்தை காண நேர்ந்தது. இங்கு முன்வைத்த அதே சந்தேகம் முன்பு என்னுளும் இருந்தது...

வாசி யோகம் சிறந்ததுவே. அது எல்லாம் நாம் மெனக்கெடுத்து செய்ய வேண்டியது. அனால், முருகன் சொன்ன உபதேசம் "சும்மா இரு" என்று தானே.

அதன் பொருள், நீ ஏதும் தனியாக செய்ய வேண்டியது இல்லை. சும்மா இரு. மனதை சும்மா இருத்து என்பதே பொருள். மனம் எப்போது அடங்கும். வாசியோகத்தில் காற்றை கொண்டு செய்வதாலா? அங்கு நீங்கள் அல்லவே தனியே முயற்சிக்கிறீர்கள்.

முருகன் சொன்னது "சும்மா இரு" என்றல்லவா. அப்போ, வாசி யோகம் செய்வது பற்றி சித்தர்கள் கருத்து என்னெவென்று புரிகிறதா? அது தானாக சித்திக்க வேண்டும், உங்கள் முயற்சியால் அல்ல...

"கனி இருக்க காய் கவர்ந்தற்று".. "கனிய வைக்கணும், மனதை பக்குவ படுத்துங்கள். எப்படி?

சும்மா இருங்கள். சும்மா இருக்கும் பொது என்ன செய்வோம், நம் கவனம் கண்களுக்கு செல்லும். நம் உடல் என்ன செய்கிறது என்பதை நன்கு உணர முடியும். கண்களுக்கும் மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. கண்களை அலைபாய விடாமல் ஒரு இடத்தில் நிலையாக பாருங்கள். ஒளியை பார்த்தல் மிக்க நன்று.

கண்ணீர் தானாக வரும், அப்போது கண்கள் தூய்மை அடையும். இதுவே சும்மா இருக்கும் பொது நடப்பது. இதை தான் முருகன் செய்ய சொல்லுகிறார்.

சான்றுகளாய் சில சித்தர் பாடல் வரிகளை கீழே படித்து புரிந்து கொள்ளவும்.

"கண்ணான கணபதியைக் கண்ணில் கண்டால் கலந்துருகி
யாடுமடா ஞானம் முதற்றே" என்கிறார் அகத்தியர்.

"அருட்பெரும்ஜோதி தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம்
என்னிதய கமலத்தே இருந்தருளுந்த் தெய்வம்
எண்ணிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம்
தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம்
சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம் - திருவருட்பா 3910

“வாசிதனை பார்த்து மகிழ்ந்துனை தான் போற்றாமல், காசவரை போய் திரிந்து காலலுத்தேன் பூரணமே; உடலுக்குள் நீ நின்று உலாவினதை போற்றாமல், கடல் மலை தோறும் திரிந்து காலலுத்தேன் பூரணமே; எண்ணாத தூரமெல்லாம் எண்ணி எண்ணி பாராமல், கண்ணாடிக்குள் ஒளிபோல் கண்டறிவதெக்காலம்” – பத்ரகிரியார்

"ஆதியந்தம் வாலையவள் இருந்த வீடே, ஆச்சர்யம் மெத்த மெத்த அது தான் பாரு, ஜோதியந்த நடுவீடு பீடமாகி, சொகுசு பெற வீற்றிருந்தான் துரைபெண்ணாத்தாள், வீதியந்த ஆறு தெரு அமர்ந்த வீதி, விளையாடி நின்ற திருமாளிகை கண்மாய், பாதி மதி சூடியே இருந்த சாமி, பத்து வயதாகு மிந்த வாமிதானே, காமி வெகு சாமி சிவகாமிருபி, காணரிது சிறு பிள்ளை கன்னி கன்னி, வாமியிவளை மர்மம் வைத்து பூசை பண்ண, மதியுனக்கு வேணுமடா அதிகமாக, ஆழிவளை அறிந்தவர்கள் சித்தர் சித்தர், அறிந்தாலும் மனமடக்கம் அறிய வேனும், நாமிவளை நினைத்தவாறு பூசை பண்ண, நாட்டிலே சொல்ல வென்றால் நகைப்பார் தானே” – கருவூரார்

இவை அனைத்தும் நான் "vallalyaar.com" என்னும் இணைய தளத்தில் இருந்து புரிந்து கொண்டவைகள். அவர்களுக்கு வழி காட்டியாய் குரு திரு சிவா செல்வராஜ் அய்யா அவர்கள் திருவடி தீட்சை தந்து அருளுகிறார். அதனை பற்றி நீங்களும் அறிந்து கொள்ள அந்த இனைய தளத்தை அணுகவும். தெளிவு பெறவும். தீட்சை பெற்று வாழ்வில் முன்னேறவும்.

வாழ்க வளமுடன்.

S. Sriumadevi Srinivasan.

 
13 மார்ச், 2012 அன்று 12:39 PM க்கு, Anonymous S. Sriumadevi Srinivasan கூறியது…

அய்யா,

வணக்கம். மேலும் ஒரு சில எ.கா. கீழே.

“கழுத்தையும் நிமிர்த்தி நல்ல கண்ணையும் விழித்துநீர், பழுத்தவாய் விழுந்துபோன பாவமென்ன பாவமே, அழுத்தமான வித்திலே அனாதியாய் இருப்பதோர், எழுத்திலா எழுத்திலே இருக்கலாம் இருந்துமே".

"இடது கண்கள் சந்திரன் வலது கண்கள் சூரியன், இடது கைகள் சக்கரம் வலக் கை சூல மான்மழு, எடுத்தபாதம் நீண்முடி எண்திசைக்கும் அப்புறம், உடல்கடந்து நின்றமாயம் யாவர்காண வல்லீரோ” – சிவவாக்கியார்

“எட்டிரண்ட றிந்தோர்க்கிட ரில்லைகுயிலே, மனம் ஏகாம னிற்கிற்கதி யெய்துங்குயிலே” – இடைக்காட்டுச் சித்தர் (8-சூரியன், 2-சந்திரன்)

“எண்ணாத தூர மெல்லா மெண்ணியெண்ணிப் பாராமல், கண்ணாடிக்குள் ளொளிபோல் கண்டறிவ தெக்கலம், கண்ணினொளி பாய்ந்ததுவுங் கருத்தறிந்து கொண்டதுவும், விண்ணினொளி கண்டதுவும் வெளிப்படுவ தெக்காலம்” – பத்தரகிரியார்

"வட்டவிழிக் குள்ளே மருவுஞ் சதா சிவத்தைக் கிட்டவழி தேடக் கிருபை செய்வ தெக்காலம்” – பத்தரகிரியார் [மெய்ஞ்ஞானப் புலம்பல்]

“கண் நிறைந்த கணவன், மைய லழகீ ரூரோற்றி, வைத்தீ ருளவோ மனையென்றேன், கையி னிறைந்த தனத்தினிந்தங், கண்ணி னிறைந்த கணவனையே, மெய்யின் விழைவா ரொருமனையோ, விளம்பின் மனையும் மிகப்பலவாம், எய்யி லிடையா யென்கின்றா, ரிதுதான் சேடி யென்னேடி” – திருவருட்பா

“கண்ணே கண்மணியே கண்ஒளியே கண்ணுட் கலந்து நின்ற கதிரே அக்கதிரின் வித்தே” – திருவருட்பா 2096

“பரமன் ஈன்றகண்ணே நின் தணிகைதனை கண்டு போற்றேன்” - திருவருட்பா 300

“என் இரு கண்ணின் மேவும் இலங்கொளி மணியே போற்றி” – திருவருட்பா 550

“கண்ணினால் உனது கழற்புதம் காணும் கருத்தினை மறந்து” – திருவருட்பா 1049

“சொல் ஆர்ந்த விண்மணியை என் உயிரை என் மெய்பொருளை ஒற்றியில் என் கண்மணியை நெஞ்சே கருது” - திருவருட்பா 1278

“தண்ணார் அளியது விண்ணோர் ஒளியது சாற்று மறைப்; பண்ணார் முடிவது பெண்ணார் வடிவது பண்புயர் தீக்; கண்ணார் நுதலது கண்ணார் மணியது கண்டு கொள்ள; ஒண்ணா நிலைதொன்றுண்டே முக்கண்ணொடென் உள்ளகத்தே” – திருவருட்பா 1383

“கண்ணே அக்கண்ணின்மணியே மணியில் கலந்தொளிசெய் விண்ணே” – திருவருட்பா 1392

“கண்ணின் மணிபோல் இங்குநிற்கும் கள்வர் இவர் ஊர் ஒற்றியதாம்; பண்ணின் மொழியாய் நின்பால்ஓர் பறவை வேண்டினம் படைத்தால்; மண்ணின் மிசையோர் பறவையதாய் வாழ்வாய் என்றார் என்னென்றேன்; எண்ணி அறிநீ என்கின்றார் இதுதான் சேடி என்னே டீ” – திருவருட்பா 1796

திருவருட்பா இரண்டாம் திருமுறையில் இங்கிதமாலை என்னும் தலைப்பில் இதுபோல் 100 பாடல்கள் உள்ளது.

இங்கிதமாக சொன்னது இது, இதனை அவ்வளவு எளிதாக புரிந்து கொள்ள முடியாது! சிந்திப்பவர்களுக்கே விடை கிடைக்கும்.

“என் இருகண்காள் உமது பெருந்தவம் எப்புவனத்தில் யார்தான் செய்வர்” – திருவருட்பா 2770

வள்ளலார் தன் இரு கண்களாலும் செய்தபெரும் தவத்தை தானே வியந்து போற்றுகிறார்! நமது மெய் எனப்படும் உடம்பில் விளங்கு கண் எனப்படும்.

இதல்லாமல் வேறு விளக்கு இல்லை என பெரியோர்கள் எல்லாரும் சொல்கிறார்கள் என வள்ளலார் சொல்கிறார்.

”கண்ணே சரீரத்தின் விளக்கு” என இயேசுவும் சொல்வதை கவனியுங்கள்.

 
13 மார்ச், 2012 அன்று 12:43 PM க்கு, Anonymous S. Sriumadevi Srinivasan கூறியது…

“இறைவ நின தருளாலே எனைக் கண்டு கொண்டேன்; எனக்குள் உனைக் கண்டேன் பின் இருவரும் ஒன்றாக உறைவது கண்டு அதிசயித்தேன்” – திருவருட்பா 3051

“காணுகின்ற கண்களுக்குக் காட்டுகின்ற ஒளியாய்” – திருவருட்பா 3125

“கண்ணிலே எனது கருத்திலே கலந்து கருத்தனே” – திருவருட்பா3557

“அருட்ஜோதித் தெய்வம் எனை ஆண்டுகொண்ட தெய்வம், என்னிதய கமலத்தே இருந்தளுந் தெய்வம், என்னிரண்டு கண்மணிக்குள் இலங்குகின்ற தெய்வம், தூண்டாத மணி விளக்காய் துலங்குகின்ற தெய்வம், சாகாத வரம் எனக்கே தந்த தனித் தெய்வம்” – திருவருட்பா 3910

“காணாத காட்சியெல்லாங் கண்ணிற்கண்டு காகமடா புசுண்டரென்று பேரும் பெற்றேன்” – காகபுசுண்டர்

“கண்ணுள் மணியாகிக் காரணமாய் நின்றான் மண்ணுமுயிர் பதியுமாறு” – காகபுசுண்டர்

“நேத்திரத்தை காகம்போல் நிச்சயமாய் நிற்க ஆத்துமத்தில் ஆனந்தமாம்” – காகபுசுண்டர்

“பள்ளிப்படிப்பு புள்ளிக்கு உதவாது” “தனித்திரு பசித்திரு விழித்திரு”

“பணிந்தவர்க்கே பரமனருள் கிட்டும்” “ஆன்ம விள்க்கமே சுத்த ஆறிவு நிலை”

“கண்ணுலே நின் அடியார் தமையும் நோக்கேன், கண்மணிமாலைக் கெனினும் கனிந்து நில்லேன்” – திருவருட்பா 1371

“எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” – திருக்குறள்

நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே நிறைந்து நிறைந்து ஊற்றெழும் கண்ணீர் அதனால் உடம்பு நனைந்து நனைந்து அருளமுதே நன்னிதியே ஞான நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று வனைந்து வனைந்து ஏத்ததும் நாம் வம்மின் உலகியலீர் மரணமிலாப் பெருவாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் புனைந்துரையோன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன் பொற்சபையில் சிற்சபையில் புகும் தருனம் இதுவே” – திருவருட்பா 5576

“கண்ணே சரீரத்தின் விளக்காய் உள்ளது, உன் கண் ஒளியுள்ளதாய் இருந்தால் உன் சரீரமும் ஒளி உள்ளதாய் இருக்கும், தேவன் ஒளியாய் இருக்கிறார், நீங்களும் ஒளியிலே நடந்தால் தேவனை தரிசிக்கலாம்” – பைபிள்

இறைவன் நம் கண்ணின் மத்தியில் ஊசிமுனை அளவு உள்ள துவாரத்தில் சிறு ஜோதியாக துலங்குகிறான். நம் கண்மணியின் மத்தியிலுள்ள அந்த சிறு துவாரம் ஒரு ஜவ்வால் அடைபட்டுள்ளது! இறைவனை மறைத்து இருக்கிறது. இந்த ஜவ்வானது 7 மெல்லிய ஜவ்வுகளால் இணைக்கபட்டு ஒரு ஜவ்வாக அடைபட்டுள்ளது.

இந்த அகநிலையை தான் வள்ளலார் அப்பட்டமாக தைப்பூச தினத்தன்று 7 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் காட்டினார்.

பூமி தன்னைத் தானே சுற்றுவதுபோல கண்மணியும் சுற்றுகிறது! பூமி சுழல்வதற்கு ஆதாரம் அதன் உள் மத்தியில் கனன்று கொண்டிருக்கும் நெருப்புதான்.

கண்மணியும் அதன் மத்தியில் உள்ள, ஊசிமுனை துவாரத்தினுள் உள்ள சிறு ஜோதியால்தான் சுழல்கிறது!

பூமி எப்படி அந்தரத்தில் உள்ளதோ அதுபோலவே கண்மணியும் கண்ணின் கரு விழிக்குள் பிராண நீரில் மிதந்து கொண்டுதான் இருக்கிறது!

” பிராண நீரானதில் உருண்டு திரண்டதை கண்டு அறிந்திடு நீ” என சித்தர் உரைத்தது கண்மணியைத்தான்!

“காளத்தியான் அவன் என் கண்ணில் உள்ளான் காண்” என திருநாவுக்கரசர் உரைத்ததை உணர்வீர்.

"எல்லாம் விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்கு பொய்யா விளக்கே விளக்கு" - திருக்குறள்

"ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான், மற்றயார் செத்தாருள் வைக்கப் படும்” – திருக்குறள்

“வெட்டாத சக்கரம் பேசாத மந்திரம், வேறொருவர்க்கு எட்டாத புஷ்பம், இறையாத தீர்த்தம், இனி முடிந்து கட்டாத லிங்கம், கருதாத நெஞ்சம் கருத்தினுள்ளே, முட்டாத பூசையன்றோ என் குரு நாதன் மொழிந்ததுவே” – பட்டினத்தார்

“காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி ஒதுவான் தம்மை நன்னெறிக் குய்ப்பது வேதம் நான் கினும் மெய்பொருளாவது நாதன் நாமம் நமசிவாயமே” – திரு ஞான சம்பந்தர்

"சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம் சொல்வதன்றி
நேத்திரங்கள் போற் காட்டநேராவே - நேத்திரங்கள்
சிற்றம்பலவன் திருவருட் சீர் வண்ணமென்றே
உற்றிங் கறிந்தேன் உவந்து". - வள்ளல் பெருமான்

 
13 மார்ச், 2012 அன்று 12:48 PM க்கு, Anonymous S. Sriumadevi Srinivasan கூறியது…

"ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளி தன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங் கிருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண் டிடவோடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலு மாமே"- திருமந்திரம் (உபநயனம்)

நயனம் என்றால் கண். பிறப்பால் பிராமணர்கள் பூணூல் சடங்கு நடத்துவர். அதற்கு உபநயனம் என்பெயர். இதன் பொருள் யார் புரிந்திருக்கிறார்களோ?

உப என்றால் இரண்டு நயனம் என்றால் கண்.

இரு கண்ணை பற்றிய உபதேசம் என பொருள்.

உபனயத்தின் போது பூணூல் போடப்பட்டு காயத்ரி மந்திரம் உபதேசம் பெறுவார்.

காயத்ரி என்ன சொல்லுகிறது தெரியுமா? மேலான சுடர் கடவுளின் ஒளியை தியானிப்போம் என்பதுதானே!

உபநயனம் + காயத்ரி என்பது இரு கண்களில் ஒளி
உள்ளது இதை தியானிப்பாயாக எனப்பொருள்?

இனிமேலாவது இவ்வண்ணம் உணர்ந்து தியானம் செய்யுங்கள்.

இரு கண்களிலும் உள்ள ஒளியைப் பார்த்து
சாதனை செய்ய செய்ய, அங்கே தூங்காமல் தூங்கி
இருப்போமேயானால் விண்ணிலிருந்து ஒளி தோன்றி நம் முன் காரியப்படுவதை நாம் பார்க்கலாம். சாதனை அனுபவத்தில் இதனை உணரலாம். சிந்தனை செய் மனமே சுகம் பெறலாம்.

கண்ணாலே ஞானம் கருதாமல் நெஞ்சமே நீ
எண்ணாத மாய்கை எல்லாம் எண்ணுகிறாய் - நண்ணாய் கேள் பார்க்க வேண்டும்தனையும் பத்தரை மாற்றுத்தங்கம் ஆக்கப் போகாதோ உன்னால்.

இவை அனைத்தும் நான் "vallalyaar.com" என்னும் இணைய தளத்தில் இருந்து புரிந்து கொண்டவைகள். அவர்களுக்கு வழி காட்டியாய் குரு திரு சிவா செல்வராஜ் அய்யா அவர்கள் திருவடி தீட்சை தந்து அருளுகிறார்.

அதனை பற்றி நீங்களும் அறிந்து கொள்ள அந்த இனைய தளத்தை அணுகவும். தெளிவு பெறவும். தீட்சை பெற்று வாழ்வில் முன்னேறவும்.

வாழ்க வளமுடன்.

S. Sriumadevi Srinivasan.

 
13 மார்ச், 2012 அன்று 1:47 PM க்கு, Anonymous S. Sriumadevi Srinivasan கூறியது…

“விளக்கைப் பிளந்து விளக்கினை ஏற்றி
விளக்கினுக் குள்ளே விளக்கினைத் தூண்டி
விளக்கில் விளக்கை விளக்கவல் லார்க்கு
விளக்குடை யான்கழல் மேவலும் மாம” திருமந்திர பாடல் – 2816

இவர்கள் ஏற்றி கொண்ட விளக்கு ஒரு ஞான குருவால் தூண்டி விடப்பட்ட விளக்கு தான். சிலர் குரு இல்லாமல் அடைந்து விடலாம் என்று பொதுவில் பேசி வருகிறாகள் ஆனால் இது சாத்தியமில்லாத ஒன்று.

"குரு சுட்டி காட்டாத வித்தை பாழ்" என்பதை கேள்விபடாதவ்ர்களே இப்படி பேசுபவர்கள். கண்ணப்ப நாயனார் போன்று இருப்பவர்களுக்குதான் குரு தேவையில்லை என்று சொல்லலாமே தவிர மற்றவர்களுக்கு இல்லை. நாம் கண்ணப்ப நாயனாரா இல்லையா என்பதை அவரவர் மனசாட்சி தான் பதில் சொல்ல வேண்டும்.

ஒரு சற்குரு நம் மெய்பொருளில் (அ) திருவடியில் சுட்டி காட்டினால்தான் இந்த ஞான தவம் செய்ய முடியும். மேலும் அப்பொழுதுதான் நமது புறக்கண் அகக்கண்ணாக மாறுவதற்க்கான முதல் படி மேலும் தொடர்ந்து சீடன் தவம் செய்ய செய்யவே அது அகக்கண்ணாக மாறும். இதுதான் அகக்ண்ணே தவிர மற்றது அல்ல. ஆம், கண்ணை மூடி கொண்டு இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது எல்லாம் அகக்கண் இல்லை. கண்ணை மூடிட்டான் என்று சொன்னாலே தமிழில் அது செத்தவனைத்தான் குறிக்கும் என்பதை சிந்தித்து தெளிக!விழித்திரு என்பது இதுவே!

The meaning of the divine word of Lord Krishna means “all attractive” and “full black”, the lord who is all attractive and is full black. The organ that is full black in our body is the pupil of our eyes and the lord in that place is the divine light displaying in the eye from our soul.
.
Krishna in Tamil means “Kannan” which implies Kan – our eyes and Kannan means he is the one displaying in our eyes. Getting consciousness on our eyes is the true meaning of Krishna consciousness.

Heart in indian language is called Irudaya which when split becomes Iru + Udaya. Iru means two and Udaya means rise (sun rise and moon rise). Two rises in our body is our eyes only. Right Eye is called as Sun while left eye is called as Moon. So Krishna is present as divine light in our body. This divine light is the lotus feet of the supreme lord. So the only way to realize us and also the supreme lord is to cling the lotus feet of the lord which is our eyes –pupil of eyes- divine light of our eyes.

பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும்: மற்று
நிலையாமை காணப் படும். – 349

எவன் ஒருவன் அக்னியலும் பரிசுத்த ஆவியாலும் ஞானஸ்நானம் பெறுகிறானோ? அவனே மறுபடியும் பிறந்தவன். அவன்தான் பரலோக ராஜ்யத்தை அடைவான்!

அக்னியால் ஞானஸ்நானம் என்பதுதான் அக்னியை பெருக்க வழிகூறும் உபநயனம்!

பிரம்மமாகிய ஒளியை – கடவுளை அடைய – உணர , பிரம்மத்தின் தன்மையாகிய ஒளி நம் கண்களில் துலங்குவதை அறிந்து உணர்ந்து , இரு கண்கள் வழி ஞான தீட்சை பெற்று, அக்னியால் ஞானஸ்நானம் பெற்று, தியானம் செய்வதே மறுபிறவி பெரும் வழி! இறைவன் அருள்வார்!

குரு மூலமாக உபநயனத்தில் தீட்சை பெற்று தவம் செய்தால் பிறப்பு அறுக்கலாம்.

“மாற்றிப் பிறக்க வகையறிந்தாயில்லை” என அகஸ்தியர் கூறுவதும் இதுவே!

பிறந்த இப்பிறப்பில் குரு மூலம் தீட்சை பெறுவதே மாற்றி பிறப்பதாகும்!

 
13 மார்ச், 2012 அன்று 1:48 PM க்கு, Anonymous S. Sriumadevi Srinivasan கூறியது…

திருவருட்பா மூன்றாம் திருமுறை யில், திருவடி புகழ்ச்சி என்ற பகுதியில் இருக்கும் பாடல்:

தவாத சாந்தப்பதம் துவாத சாந்தப்பதம்
தரும்இணை மலர்ப் பூம்பதம்
சகலர் விஞ்ஞானகலர் பிரளயாகலர் இதய
சாட்சியாகிய பூம்பதம்
தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில்
சமரசமுறும் பூம்பதம்
தருபரம் சூக்குமம் தூலம் இவைநிலவிய
தமக்குள் உயிராம் பூம்பதம்

தவாத சாந்தப்பதம் – சாந்தமே – அமைதியே உருவான இரு கண்மணியின் உள்ளே திருவடி!

துவாத சாந்தப்பதம் – நம் சிர நடுவில் உச்சியில் விளங்கும் ஒளிநிலை! அனுபவத்தில் அறியும் ஸ்தானம்!

தரும்இணை மலர்ப் பூம்பதம் – இருகண்மணி உள் நடு , சிர நடு உச்சி ஆக இருபதத்திற்க்கும்நம்மை அழைத்து செல்லும் இணையான இரண்டு தாமரை மலர் போன்ற பதமான இரு கண்மணிகள்.

சகலர் - மும்மலம் உள்ள சராசரி மனிதர்! பிரளயாகலர் - இரு மலம்உள்ளவர்! விஞ்ஞானகலர் - ஒரு மலம் உள்ளவர்
சாதனை செய்து வர வர மும்மலங்கள் ஒவ்வொன்றாக போய்விடும். மலமற்ற நிலையே இறைநிலை!

இதய சாட்சியாக பூம்பதம் – இதய சாட்சியாக நம் மனசாட்சியாக இறைவனே உள்ளிருந்து நம்மை பார்த்து கொண்டிருக்கிறார். அப்படி சாட்சியாக இறைவன் இருப்பது – பூப்போன்ற திருவடி – கண்மலர்.

தணிவிலா அணுபக்ஷ சம்பு பக்ஷங்களில் – குறைவில்லாத நிலையில் அணு நிலையம், தானே உருவையும் துலங்குகின்றது. பூம்பதங்களில்!

சமரசமுறும் பூம்பதம் – எல்லா அணுவிற்க்கும் அனுவாகவவும், எல்லாவற்றிலும் தானேயாயும் சமமாக இலங்கும் பூம்பதம்.
மலர்ப்பாதம் – திருவடி – கண்மணி!

தருபரம் சூக்குமம் தூலம் – தற்பரம் + சூக்குமம் + தூலம் மூவகை நிலை நம் உடல்! இவை நிலவிய தமக்குள் உயிராம் பூம்பதம். இம்மூன்று நிலையிலும் உயிராகிய பதம் நம் திருவடி! பரமான – மேலான தெய்வம் பராபரமாக நம் நடுவில் கண்மணி நடுவில் சிர நடுவில் உள்ளில் ஒளியாக துலங்குகிறது!

மேலும் பட்டினத்தடிகளின் மிக அழகான பாடல்………

“கண்டம் கரியதாம் கண்மூன்று உடையதாம்
அண்டத்தைப் போல அழகியதாம் – தொண்டர்
உடலுருகத் தித்திக்கும் ஓங்குபுகழ் ஒற்றிக்
கடலருகே நிற்கும் கரும்பு".

“கண்டம் கரியதாம்” – கண்டம் கருப்பு நிறமுடையது – கருவிழி.
“கண் மூன்று உடையதாம்” – அது எப்படி???

ஆம் ஐயா… கண்ணில் முதலில்
1. வெள்ளை படலம் உள்ளதா???
2. அதனுள் ஒரு கருபடல்ம் உள்ளதா??
3. அதனுள் இறுதியாக ஒரு சிறிய கரு விழி உள்ளதா??

Real truth about the Birth of Lord Murugan:

இதுதான் மூன்று கண் என்பது!!!! (Now,i feel the real 3rd eye of Shiva, it's not the inner eye alone mentioned as Third Eye, that's the only real eye.... but, what really is the "3rd Eye of Shiva" and from which "Lord Muruga" is born should be very clear now.... "Karu vizhi, our pupil - the light within the pupil is the 3rd eye of shiva from which the real birth of lord muruga happens within us(Thirumurugan Thotram not birth to be very exact"... kindly understand it clearly...

“கடலருகே நிற்கும் கரும்பு” என்று பாடுகிறார்….

The real Sugarcane(The great Patinathar of Thiruvotriyoor also have sung about this Sugarcane only n also all other seers...)

கரும்பு எங்காவது கடலில் விளையுமா…தோழர்களே….. சிந்தியுங்கள் …. அப்புறம் எப்படி “…….கரும்பு” என்று பாடினார்.

கடல் நீர் எப்படி இருக்கும்??

கரிக்குமா???? உங்கள் கண்ணீர் எப்படி இருக்கும்?????? சொல்லுங்கள் அதுவும் கரிக்குமா!!!!!

அந்த கடல் போன்ற இடத்தில் நிற்கும் கரும்பாம்????

இதை நாம் கரும்பு என்று படிக்க கூடாது?? கருப்பு + பூ ???

ஆம் இருக்கிறது அது நம் கண் மலர்தான் அதுதான் நம் கண்ணீர் என்ற கடலில் ஒற்றி நிற்கும் கரும்பு என்று பாடினார்.

வாயு வழக்கமறிந்து செறிந்தடங்கில்
ஆயுள் பெருக்கமுண்டாம் - அவ்வை

வாயுவானது தானே அடங்க வேண்டும், பலவந்தமாக அடக்க கூடாது.

உடலில் ஈசன் குடி கொண்டு இருக்கும் இடம் ஒன்று. அங்கே வாயுவை நிறுத்த வேண்டும். அந்த வெளிக்குள்ளே வாயு செறிந்து அடங்கும். அப்படி அடங்க பிராணன் அடங்கும். ஆன்மா
தன் உண்மை சொருபத்தில் ஆனந்தித்து உடம்பின் தத்துவங்களை மாற்றி அமைக்கும்.

திருவடியிலே மனதை நிறுத்தி பழகினால் பிராணன் அங்கு அடங்கும். அதுவே பிரணயாம சித்தி. மனம் அழிந்த நிலையில் தான் பிரணாயமம் சித்திக்கும்.

This is the real vaasi in the moolam that sets there automatically by doing thavam with open eyes after getting Thiruvadi Teeichai/Teekshai.(Tee + Akshai = Fire in Eyes, the one true guru who gives u the fire, conscious in ur eye is the real Teekshai, akshai means Eyes)

I hope this explanation is enough for any to understand the reality n do the needful. Have a nice day.

வாழ்க வளமுடன்.

S. Sriumadevi Srinivasan.

 
13 மார்ச், 2012 அன்று 5:33 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் .உங்கள் பதில் மகிழ்ச்சி யளிக்கிறது .நிறைய ஆதாரத்தோடு பதில் அளித்தமைக்கு நன்றி மேலும் தொடர்ந்து பாருங்கள்.

அன்புடன் கதிர்வேலு

 
14 மார்ச், 2012 அன்று 10:19 AM க்கு, Anonymous Sriumadevi Srinivasan கூறியது…

Dear Sir,

Thanks for allowing me to include these in ur blog. Sure, I really like reading ur blog entries... Really good. Have a nice time.

Thanks n regs,

S. Sriumadevi Srinivasan.

 
14 மார்ச், 2012 அன்று 3:40 PM க்கு, Anonymous பெயரில்லா கூறியது…

ஆன்மநேய அன்புடையீர் வணக்கம் மிக்க மகிழ்ச்சி ,நன்றி

அன்புடன் ஆன்மநேயன்.கதிர்வேலு.

 
10 நவம்பர், 2012 அன்று 11:13 AM க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம் .உங்கள் அனைவருடைய அன்பான பதிலுக்கும் ,தியானம் எப்படி செய்யவேண்டும் எனற உண்மையான வெளிப்படையான கருத்துகளை ஏற்றுக் கொண்டு ,அதற்கு தகுந்த ஆதாரத்தோடு பதில் தந்த அன்பு உள்ளங்களுக்கு என்னுடைய அன்பு கலந்த வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

உங்கள் அன்புள்ள ஆண்மநேயன் ;---கதிர்வேலு.

 
25 நவம்பர், 2012 அன்று 9:06 PM க்கு, Blogger அருட்பெருஞ்ஜோதி வள்ளலார் கண்ட மெய்ப்பொருள் கூறியது…

உங்கள் அன்பிற்கும் பதிலுக்கும் மிக்க மகிழ்ச்சி .மேலும் தொடர்ந்து பாருங்கள் உங்கள் அன்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் .அன்புடன் ;--கதிர்வேலு ...

 
7 ஜூலை, 2013 அன்று 11:52 PM க்கு, Blogger Vallalar கூறியது…

good work to know how meditation should do

thank you
satheesh. M

vallalar82@gmail.com

 
23 ஜூன், 2014 அன்று 10:41 PM க்கு, Blogger Rathinavel கூறியது…

அய்யா, வணக்கம். உண்மை எப்பொழுதுமே கண் உள்ளவர்களுக்கு மட்டும்தான் தெரியும்.காது உள்ளவர்களுக்கு மட்டும்தான் கேட்க்கும்.அப்படிபட்ட இந்த பொக்கிஷ உண்மையை,எங்களை போன்ற கண் உள்ளவர்களுக்கு,நேற்றிக்கண்ணாக இருந்த கதிர்வேல் அய்யா அவர்களுக்கு,என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்,
இப்படிக்கு
ரத்தினவேல்
ரியாத்
சவூதி அரேபியா

 
13 மே, 2015 அன்று 7:33 PM க்கு, Blogger Amarnath G கூறியது…

மதிற்பிர்குறிய ஐயா

விளக்கினை பார்த்து தியானம் செய்யும் போது நான் அமர்ந்திருக்கும் அறை வெளிச்சமாக இருக்க வேண்டுமா அல்லது விள்ளக்கின் சுடரை தவிர்த்து இருளாக இருக்க வேண்டுமா... என் ஐயத்தை போக்க வேண்டுகிறேன்.... நன்றி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு