புதன், 9 நவம்பர், 2011

காற்று நான்கு பேதங்களாக உள்ளன !

காற்று நான்கு பேதங்களாக உள்ளன

இவ்வுலகமும் இவ்வுலகத்தில் உள்ள ஜீவ ராசிகளும் வாழும் பொருட்டு நான்கு விதமான காற்றுகள் நான்கு பெதங்களாக உள்ளன அவை .அமுதக் காற்று ,
பூதக் காற்று,விஷக் காற்று ,உஷ்ணக் காற்று ,என்பவையாகும் இவற்றில் முக்கியமானது அமுதக் காற்றும் ,விஷக் காற்றுமாகும்.

பகல் காலத்தில் பூதக் காற்று,விஷக் காற்று,உஷ்ணக்காற்று அதிகமாகவும் அமுதக் காற்று மிகக் குறைவாகவும் கலந்து பூமியைக் நோக்கி இருந்து கொண்டு இருக்கும் அந்த குறைவான அமுதக் காற்றும் இல்லை என்றால் உயிர்கள் ஜீவிக்காது.

இரவு காலத்தில் விஷக் காற்று அதிகமாயும் ,பூதக் காற்றும் உஷ்ணக் காற்று குறைவாகவும் .அமுதக் காற்று பகல் காலத்தின் அளவை விட குறைவாகவும்  இருக்கும் .    

அமுதக் காற்று மட்டும் பல கோடி மைல்களுக்கு மேல் பகிரண்டத்தில் நிறைந்து இருக்கும் அங்கு மற்ற மூன்று காற்றுகளும் இருக்காது .

உயிர்கள் வாழும் பொருட்டு அதி காலையில் அதாவது இரவு முடியும் போதும் சூரியன் உதயமாகும் முன்பும் நான்கு மணி முதல் ஆறு மணி வரையில் பூமியைக் நோக்கி அதிகமாக வீசிக் கொண்டு இருக்கும் ,அந்த காலம் அமுதக் காற்று வீசுவதால் அமுத காலம் என்பதாகும் .இதை முகூர்த்தக் காலம் என்றும், ஒரு சாமக் காலம் என்றும்,  அதை வைத்துதான் ஆலயங்களில் கடவுளை எழுப்புவதாக திருப்பள்ளி எழுச்சி என்பார்கள் அதுவல்ல உண்மை அந்த காலத்தில் அனைத்து உயிர்களும் தூங்காமல் விழித்து இருக்க வேண்டும் என்பதுதான் உண்மையாகும் .அந்த காலத்தில் மனிதனைத் தவிர அனைத்து உயிர்களும் விழித்திருக்கும் .

அந்த காலை நேரத்தில் ஏசியோ ,பேனோ எதுவும் தேவைப்படாது காற்று குளு குளு என்று இருக்கும் .அதே நேரத்தில் எழுந்து இருக்க முடியாமல் துக்கம் அதிகமாக மகிழ்ச்சியாக வரும் .ஆனால் தூங்கக் கூடாது விழித்துக் கொள்ள வேண்டும்.

மனிதனாக பிறந்த அனைவரும் அந்த அமுத காலத்தில் தூங்காமல் விழித்து இருக்க வேண்டும் .அந்த அமுதக் காற்றை அதிகம் சுவாசித்து அனுபவிக்க வேண்டும் அப்படி பழகினால் நீண்ட ஆயுள் விருத்தியாகும் ,துன்பம் துயரம் அச்சம் பயம் நோய் எதுவும் நம்மை நெருங்காது அந்த காற்றை சுவாசிப்பதே இறை வழிபாடாகும் .தியானம் யோகம தவம செய்வதை விட அதிக சக்தியும் அதிகமான அறிவு விளக்கமும் அலைபாயும் மனமும் அடங்கும்

ஒவ்வொரு நாளும் அந்த நேரத்தில் தூங்காமல் எழுந்து விளக்கின் முன் அமர்ந்து கண்ணை திறந்து கொண்டு விளக்கின் ஒளியைப் பார்த்து தியானம் செய்ய வேண்டும் அந்த அமுதக் காற்று இல்லை என்றால் எந்த உயிர்களும் ஜீவிக்காது .

அந்த அமுதக் காற்றினால் தான் சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள் மற்ற கிரக்ங்கள் எல்லாம் முறைப்படி தவறாமல் செயல் பட்டுக் கொண்டு இருக்கின்றன ஆதலால் நான்கு காற்றுகளில் அமுதக் காற்று மிகவும் முக்கியமாகும் .அமுதக் காற்றை சுவாசித்து அனைவரும் ஆனந்தமாக வாழ்வோம்.. மேலும் விரிக்கில் பெருகும் சந்தேகம் உள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் ,

அன்புடன் ஆன்மநேயன் கதிர்வேலு ;--9865939896---0424-2401402 /           

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு