சனி, 19 நவம்பர், 2011

மலம என்பது யாது அதை ஏன் ஒழிக்க வேண்டும் ?

மலம என்பது யாது அதை ஏன் ஒழிக்க வேண்டும் ?


மலம என்பது ஆணவம் மாயை கன்மம் என மூன்றை குறிப்பிடுகிறார்கள் .ஆனால் வள்ளலார் ஐந்து மலங்களை குறிப்பிடுகிறார் ,அதாவது ஆணவம் மாயை கன்மம் மாமாயை பெருமாயை என்பதாகும் ,அதன் விபரம் பின்பு தெரியப் படுத்துவோம் .

தேக சுதந்தரம் போக சுதந்தரம்,ஜீவ சுதந்தரம் என்னும் சுதந்தரத்தை இறைவன் நமக்கு கொடுத்து உள்ளார் அந்த சுதந்தரத்தை எப்படி பயன் படுத்துவது என்பதில்தான் அனைத்தும் அடங்கி உள்ளது இந்த மாயை{சாத்தான் ,சைத்தான் } உலகத்தில் எதை அனுபவித்தாலும் அவை ஆன்மாவை பற்றிக் கொள்கிறது அதுவே பதிவாகவும் திரைகளாகவும் மலங்களாகவும் சொல்லப் படுகிறது 

நம்முடைய ஆன்மாவின் பதிவான பதிவுகளை நீக்கினால் இறை நிலையை அடையலாம் என்பது எனபது ஆன்மீக சிந்தனையாளர்களின் கருத்தாகும் அந்த பதிவுகளை நீக்க பல குறுக்கு வழிகளை நம்முடைய முன்னோர்கள் சரியை கிரியை யோகம ஞானம் என காட்டியுள்ளார்கள் இதனால் மலங்கள் நீங்குமா என்றால் நீங்காது வழி காட்டியவரும் மாண்டு விட்டார் கேட்டு அதன்படி வாழ்ந்தவர்களும் மாண்டு கொண்டே இருக்கிறார்கள் .இதனால் என்ன பயன் என்றால் மூடநம்பிக்கை உலகம் முழுவதும் பரவி அறிவு இருந்தும் உண்மையான அறிவை பயன் படுத்தாமல் மக்கள் அழிந்து கொண்டே இருக்கிறார்கள் 

இந்த அழிவு பாதையில் இருந்து மக்களை மீட்டு உண்மை நெறியான சமரச  சுத்த சன்மார்க்க சத்திய நெறியை உலகிற்கு அறிமுகப் படுத்தியதோடு அதே போல் வாழ்ந்து வழியை காட்டி உள்ளார் /அவர்தான் வள்ளலார் என்பவராகும் /
அவர் ஆன்மாவை பற்றி உள்ள மலங்களை எப்படி நீக்கி உள்ளார் என்பதை பார்ப்போம் இறைவனால் கொடுத்த தேக சுதந்தரம்,போக சுதந்திரம் .ஜீவ  சுதந்திரம் என்னும் சுதந்தரத்தை இந்த உலகத்தில் எதற்காகவும் பயன் படுத்தாமல் இறைவன் இடமே திருப்பிக் கொடுத்து விட்டார் என்பது அவர் காட்டிய சத்த சன்மார்க்க நெறியின் முலம அறியலாம் இந்த உலகத்தில் உள்ளது எதையும் அவர் பயன் படுத்தவில்லை அனுபவிக்கவில்லை என்பதாகும்.நாம் எதை அனுபவித்தாலும் மலங்கள் பற்றிக் கொள்ளும் அப்படி பற்றிக் கொண்டால் நாம் இறை நிலையை அதாவது பேரின்ப பெருவாழ்வை அடைய முடியாது என்பதை அறிவால் அறிந்து வாழ்ந்து காட்டினார் 

இதனால் நாம் தெரிந்து கொள்வது என்ன ?நாம் மனைவி மக்கள் சுற்றம் பட்டம் பதவி சொத்து பணம் ,சாதி சமயம் மதம் இனம் போன்ற அனைத்தையும் விடாமல் வைத்துக் கொண்டு தவம தியானம் யோகம போன்ற செய்கைகளை செய்தால் நம்மை பற்றிக் கொண்டு உள்ள மலங்கள் நீங்கி விடுமா என்றால் சத்தியமாக நீங்காது .

மலங்கள் நீங்க வேண்டுமானால் வள்ளலார் போல் வாழ்ந்தால்தான் நீங்கும் அதை விட்டுவேறு எந்த வழிகளில் சென்றாலும் பயன் கிடைக்காது என்பதுதான் உண்மையான ஆன்மீக சிந்தனை செயல்களாகும்

வள்ளலார் பாடல் ஒன்று ;--

மற்று அறிவோம் எனச சிறிது தாழ்ந்திருப்பீர் ஆனால் 
மரணம் எனும் பெரும் பாவி வந்திடுமே அந்தோ 
சற்றும் அதை உம்மாலே தடுக்க முடியாதே 
சனராசா சன்மார்க்கத வர்கள் அல்லால் அதனை 
ஏற்றி நின்று தடுக்க வல்லார் எவ்வுலகில் எவரும் 
இல்லை கண்டீர் சத்தியம் இது என் மொழி கொண்டு உலகீர்  
பற்றிய பற்று அனைத்தும் பற்று அற விட்டு அருள் 
அம்பலப் பற்றே பற்றுமினோ என்றும் இறைவீரே

அன்புடன் ஆன்மநேயன் .கதிர்வேலு .
மீண்டும் பூக்கும் .             

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு