திங்கள், 21 நவம்பர், 2011

பட்டம் என்பது எது ?

பட்டம் என்பது எது ?

உலகம் தோன்றிய காலத்தில் இருந்து சாகாக் கல்வி என்னும் கல்வியை யாரும் கற்றுக் கொடுக்க வில்லை .மரணம் என்பது இயற்கை என்றே சொல்லி வைத்து உள்ளார்கள் ஆனால் மரணம் என்பது இயற்கை அல்ல அவை செயற்கையானது என்று கண்டு பிடித்தவர் வள்ளலார் அதில் வெற்றிப் பெற்று சாகாமல் வாழ்ந்து பட்டமும் வாங்கி உள்ளார் .

திரு அருட்பிரகாச வள்ளலார் அவர்கள் பட்டம் வாங்கி உள்ளார்கள் என்ன பட்டம் என்றால் சாகாத கல்வி கற்று சாகாமல் இருக்கும் 'சாகாக் கல்வியை பயின்று நூற்றுக்கு நூறு மார்க்கு வாங்கி பட்டம" வாங்கி உள்ளார். யாரிடம் வாங்கி உள்ளார் என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் .எல்லாம் வல்ல அருட்பெரும் ஜோதி ஆண்டவர் இடம் வாங்கி உள்ளார் இதுவரை எந்த அருளாளர்களும் இந்த பட்டத்தை வாங்க வில்லை என்பதை உலகில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் .

சாகாக் கலவி என்பது கல்லூரில் களிலோ ,பல்கலை கழங்களிலோ பெறுவது அல்ல !என்றும்,எக்காலமும் எல்லாலமுமாய விளங்கும், எல்லாம் வல்ல,
எல்லா உயிர்களிலும் நிலைப் பெற்று உயிர் ஒளியாய் உள்ள, அருட்பெரும் ஜோதி ஆண்டவரால் வழங்கப்படும் பட்டமாகும் .அதைப் பெறுபவரும் என்றும் சாகாமல் நிலைப் பெற்று ஒளி உடம்பாக இருப்பார் என்பதை நாம் அனைவரும் அறிந்து தெரிந்து கொள்ள வேண்டும் .

அந்த சாகாக் கல்வியை படித்து தெரிந்து அறிந்து வாழ்ந்து அருட்பெரும்ஜோதி இடம் பட்டம் பெற வேண்டும் அதற்காக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை அமைத்து உள்ளார் வள்ளலார் அந்த சங்கத்தில் அவர் எழுதிய திரு அருட்பா என்னும் ஞான நூல் உள்ளது.அந்த நூல் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தில் உள்ளது அந்த ஞான அறிவு நூலை வாங்கி படித்து அதில் உள்ளபடி வாழ்ந்தால் சாகாக் கல்வி என்னும் மரணம் இல்லாத பெருவாழ்வு வாழலாம் நமக்கும் சாகாக் கல்வி என்னும் பட்டத்தை அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வழங்குவார் .

சாகாக் கல்வி கற்பதற்கு அருள் என்னும் பொருள் மிகவும் முக்கியமானதாகும் .அந்த அருள் மனிதனாக பிறந்த அனைவரிடமும் உள்ளது அதை எடுக்க வழி தெரியாமல் அனைவரும் அழிந்து பொய் விட்டார்கள் அந்த அருளைப் பெறுவதற்கு உண்மையான வழியைக் காட்டியவர் வள்ளலார் .அந்த அருளை முழுமையாக பெற்றவர்களுக்கு அருளாளர் என்ற பெரிய பட்டம் அருட்பேரும்ஜோதி ஆண்டவரால் வழங்கப் படுகிறது அந்த பட்டம் வாங்கியவர்களுக்கு மரணம் கிடையாது .

மனிதனாக பிறப்பு கொடுத்ததின் நோக்கமே சாகாக் கல்வி பயின்று பட்டம் பெற்று சாகாமல் வாழ்வதற்குத்தான் என்பதை வள்ளலார் தெளிவுப் படுத்தி உள்ளார் .அதானால் நாம் அனைவரும் சாகாக் கல்வி பயின்று வெற்றி பெறுவோம் .

வள்ளலார் பாடல் ஒன்று !

கற்றேன் சி ற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளி வடிவம்
பெற்றேன் உயர் நிலை பெற்றேன் உலகில் பிற நிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினேனே!

அன்புடன் ஆன்மநேயன் ;--கதிர்வேலு.

மீண்டும் பூக்கும் .     

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு