புதன், 27 ஜூலை, 2011

அருள் மருந்து !நல்ல மருந்து !
நாம் அனைவருக்கும் நோய் வந்தால் மருந்து உண்டு அந்த நோயை குணப்படுத்திக் கொள்கிறோம் .ஆனால் மரணத்தை ஒழிக்க மருந்து இருக்கிறதா என்றால்?இல்லை. அதற்கு மருந்து,மனிதர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை 


ஆனால் நமது அருளாளர் வள்ளல பெருமான் மரணத்தை வெல்லும் மருந்தை கண்டு பிடித்து தான் அருந்தி,மரணத்தை வென்று, மற்ற அனைத்து தரப்பு மக்களுக்கும் தெரியப்படுத்துகிறார் .அதுதான் நல்ல மருந்து எனப்படுவதாகும் .


அந்த மருந்து எல்லா உயிர்களிடத்தும் உள்ளன.அதை எடுக்க முடியாமல் இருக்கிறோம் ,அதை எடுக்கும் வழி தெரியாமல் இருக்கிறோம்.அந்த அருள் வடிவமான மருந்தை எடுப்பதற்கு பல அருளார்கள் பல வழிகளை சொன்னார்கள் .அந்த வழிகள் எல்லாம் தவறான வழிகளாகவே இருந்தது அதனால் அவர்களும் அந்த அருள் மருந்தை எடுத்து முறையாக அருந்த முடியவில்லை.மற்ற ஜீவர்களும் அந்த மருந்தை முறையாக கண்டு எடுத்து உண்டு மரணத்தை வெள்ளமுடியவில்லை .


அந்த அருள் வடிவமான மருந்து நம்முள் ஆன்மா என்னும் உயிர் ஒளியில உள்ளது அதை எடுத்து அருந்தினால் மரணம் நீங்கும் என்கிறார் வள்ளலார் .அந்த மருந்தை எடுப்பதற்கு பொது உணர்வை வரவழைத்துக் கொண்டு ,ஆண்மநேயத்துடன் ஜீவர்களுக்கு உண்டாகும் துன்பங்களை போக்க வேண்டும்.கடவுள் ஒருவரே அவர் அருட்பெரும்ஜோதியாக உள்ளார் என்ற உண்மையை அறிவால் அறிந்து உணர்ந்து,உயிர்கள் அனைத்தும் அருட்பெரும் ஜோதிதான் என்பதை அறிய வேண்டும்.அப்படி உண்மையை உணர்ந்து உயிர்களுக்கு வரும் துன்பங்களை போக்கும் போது நம்முடைய ஆன்மாவில் இருக்கும் உள் ஒளி மலர்ந்து விரிந்து உள் இருக்கும் அருள் மருந்து சுரக்கும் அதுவே மரணத்தை போக்கும் நல்ல அருள் மருந்தாகும் .


அந்த நல்ல மருந்தைதான் வள்ளலார் நல்ல மருந்து என்னும் தலைப்பில் திரு அருட்பா என்னும் அருள் நூலில் கீழே கண்ட பாடலில் பதிவு செய்துள்ளார்கள்.படித்து அதன்படி வாழ்ந்து பயன் பெறுவோம் ,       
நல்ல மருந்து

(2430)
நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து

( 2431 )
அருள்வடி வான மருந்து - நம்முள்
அற்புத மாக அமர்ந்த மருந்து
இருளற வோங்கும் மருந்து - அன்பர்க்
கின்புரு வாக இருந்த மருந்து நல்ல

( 2432 )
சஞ்சலந் தீர்க்கும் மருந்து - எங்குந்
தானேதானாகித் தழைக்கும் மருந்து
அஞ்சலென் றாளும் மருந்து - சச்சி
தானந்த மாக அமர்ந்த மருந்து நல்ல

( 2433 )
வித்தக மான மருந்து - சதுர்
வேத முடிவில் விளங்கு மருந்து
தத்துவா தீத மருந்து - என்னைத்
தானாக்கிக் கொண்ட தயாள மருந்து நல்ல

( 2434 )
பிறப்பை யொழிக்கு மருந்து - யார்க்கும்
பேசப் படாத பெரிய மருந்து
இறப்பைத் தவிர்க்கும் மருந்து - என்னுள்
என்று மதுரித் தினிக்கு மருந்து நல்ல

( 2435 )
நானது வாகு மருந்து - பர
ஞான வெளியில் நடிக்கு மருந்து
மோந வடிவா மருந்து - சீவன்
முத்த ருளத்தே முடிக்கு மருந்து நல்ல

( 2436 )
புத்தமு தாகு மருந்து - பார்த்த
போதே பிணிகளைப் போக்கு மருந்து
பத்த ரருந்து மருந்து - அநு
பானமுந் தானாம் பரம மருந்து நல்ல

( 2437 )
மாலயன் தேடு மருந்து - முன்ன
மார்க்கண்ட ரைக்காக்க வந்த மருந்து
காலனைச் சாய்த்த மருந்து - தேவர்
காணுங் கனவினுங் காணா மருந்து நல்ல

( 2438 )
தற்பர யோக மருந்து - உப
சாந்த ருளத்திடைச் சார்ந்த மருந்து
சிற்பர யோக மருந்து - உயர்
தேவரெல் லாந்தொழுந் தெய்வ மருந்து நல்ல

( 2439 )
அம்பலத் தாடு மருந்து - பர
மாநந்த வெள்ளத் தழுத்து மருந்து
எம்பல மாகு மருந்து - வேளூர்
என்னுந் தலத்தி லிருக்கு மருந்து நல்ல

( 2440 )
சேதப்ப டாத மருந்து - உண்டால்
தேன்போ லினிக்குந் தெவிட்டா மருந்து
பேதப்ப டாத மருந்து - மலைப்
பெண்ணிடங் கொண்ட பெரிய மருந்து நல்ல

( 2441 )
ஆர்க்கு மரிதா மருந்து - தானே
ஆதி யநாதியு மான மருந்து
சேர்க்கும் புநித மருந்து - தன்னைத்
தேடுவோர் தங்களை நாடு மருந்து நல்ல

( 2442 )
புண்ணியர்க் கான மருந்து - பரி
பூரண மாகப் பொருந்து மருந்து
எண்ணிய வின்ப மருந்து - எம
தெண்ணமெல் லாமுடித் திட்ட மருந்து நல்ல

( 2443 )
பால்வண்ண மாகு மருந்து - அதில்
பச்சை நிறமும் படர்ந்த மருந்து
நூல்வண்ண நாடு மருந்து - உள்ளே
நோக்குகின் றோர்களை நோக்கு மருந்து நல்ல

( 2444 )
பார்க்கப் பசிபோ மருந்து - தன்னைப்
பாராத வர்களைச் சேரா மருந்து
கூர்க்கத் தெரிந்த மருந்து - அநு
கூல மருந்தென்று கொண்ட மருந்து நல்ல

( 2445 )
கோதிலா தோங்கு மருந்து - அன்பர்
கொள்ளைகொண் டுண்ணக் குலாவு மருந்து
மாதொரு பாக மருந்து - என்னை
வாழ்வித்த என்கண் மணியா மருந்து நல்ல

( 2446 )
ஏக வுருவா மருந்து - மிக்க
ஏழைக ளுக்கும் இரங்கு மருந்து
சோகந் தவிர்க்கு மருந்து - பரஞ்
சோதியென் றன்பர் துதிக்கு மருந்து நல்ல

( 2447 )
கோமளங் கூடு மருந்து - நலங்
கொடுக்கத் துசங்கட்டிக் கொண்ட மருந்து
நாமள வாத மருந்து - நம்மை
நாமறி யும்படி நண்ணு மருந்து நல்ல

( 2448 )
செல்வந் தழைக்கு மருந்து - என்றுந்
தீரா வினையெலாந் தீர்த்த மருந்து
நல்வந் தனைகொள் மருந்து - பர
நாதாந்த வீட்டினுள் நண்ணு மருந்து நல்ல

( 2449 )
வாய்பிடி யாத மருந்து - மத
வாதமும் பித்தமு மாய்க்கு மருந்து
நோய்பொடி யாக்கு மருந்து - அன்பர்
நோக்கிய நோக்கினுள் நோக்கு மருந்து நல்ல

( 2450 )
பெண்ணாசை தீர்க்கு மருந்து - பொருட்
பேராசை யெல்லாம் பிளக்கு மருந்து
மண்ணாசை தீர்க்கு மருந்து - எல்லாம்
வல்ல மருந்தென்று வாழ்த்து மருந்து நல்ல

( 2451 )
என்றுங் கெடாத மருந்து - வரும்
எல்லாப் பிணிக்கு மிதுவே மருந்து
துன்றுஞ் சிவோக மருந்து - நம்மைச்
சூழ்ந்திரு மைக்குந் துணையா மருந்து நல்ல

( 2452 )
கண்ணொளி காட்டு மருந்து - அம்மை
கண்டு கலந்து களிக்கு மருந்து
விண்ணொளி யாரு மருந்து - பர
வீடு தருங்கங்கை வேணி மருந்து நல்ல

( 2453 )
காயாம்பூ வண்ண மருந்து - ஒரு
கஞ்ச மலர்மிசைக் காணு மருந்து
தாயாங் கருணை மருந்து - சிற்
சதாசிவ மானமெஞ் ஞாந மருந்து நல்ல

( 2454 )
அளவைக் கடந்த மருந்து - யார்க்கும்
அருமை யருமை யருமை மருந்து
உளவிற் கிடைக்கு மருந்து - ஒன்றும்
ஒப்புயர் வில்லா துயர்ந்த மருந்து நல்ல

( 2455 )
தன்மய மாகு மருந்து - சிவ
சாதனர் நெஞ்சில் தழைக்கு மருந்து
சின்மய ஜோதி மருந்து - அட்ட
சித்தியு முத்தியுஞ் சேர்க்கு மருந்து நல்ல

( 2456 )
மறந்தா லொளிக்கு மருந்து - தன்னை
மறவா தவருள் வழங்கு மருந்து
இறந்தா லெழுப்பு மருந்து - எனக்
கென்றுந் துணையா யிருக்கு மருந்து நல்ல

( 2457 )
கரும்பி லினிக்கு மருந்து - கடுங்
கண்டகர்க் கெல்லாங் கசக்கு மருந்து
இரும்பைக் குழைக்கு மருந்து - பே
ரின்ப வெள்ளத்தே யிழுக்கு மருந்து நல்ல

( 2458 )
அணிமணி கண்ட மருந்து - அருள்
ஆநந்த சுத்த வகண்ட மருந்து
பிணிதவி ரின்ப மருந்து - யார்க்கும்
பேசா மருந்தென்று பேசு மருந்து நல்ல

( 2459 )
மூவர்க் கரிய மருந்து - செல்வ
முத்துக் குமாரனை யீன்ற மருந்து
நாவிற் கினிய மருந்து - தையல்
நாயகி கண்டு தழுவு மருந்து
நல்ல மருந்திம் மருந்து - சுகம்
நல்கும் வைத்திய நாத மருந்து

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு