செவ்வாய், 19 ஜூலை, 2011

தமிழ் மொழியின் சிறப்பு அம்சம்!


தமிழ் மொழியின் சிறப்பு அம்சம்

எல்லா மொழியின் முதல் எழுத்தும் அ என்பது உங்களுக்கு தெரியுமா?


உலகில் உள்ள அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அ தான் என்பது  உங்களுக்கு  தெரியுமா?   ( மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்).  அது தமிழானாலும் சரி... ஆங்கிலம் ஆனாலும் சரி...அரபியானாலும்  சரி. இது ஏன்? எப்படி சாத்தியம் என்று கேட்டால் எனக்கு பதில் தெரியாது. தெரிந்தவற்றை சொல்ல முயல்கிறேன்.


 நமது வள்ளுவரின் முதல் குறள் என்ன சொல்கிறது
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
இதற்கு பொருள்

'' மு.வ : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.


சாலமன் பாப்பையா : எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
நன்றி:தினமலர் "

ஆனால் இந்த குறளுக்கு உண்மையான பொருள் எப்படி இருக்க வேண்டும் எனில்

 "எப்படி  அனைத்து மொழிகளின் எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில் தொடங்குகின்றதோ அதுபோல் உலகமானது கடவுளிலிருந்தே தொடங்கியது".

அதாவது மற்ற அறிஞர்கள்  கூறியது போல் அல்லாமல் எழுத்துக்களுக்கு பதில் மொழி என்று இருக்க வேண்டும் எனபதே என் கருத்து.

(வள்ளுவர் தமிழ் எழுத்துக்களுக்கு மற்றும் இதை சொல்லி இருக்க வாய்ப்பு  இல்லை என்றே எனக்கு தோன்றுகிறது அவர் அனைத்து மொழிகளுக்கும் தான் இதை கூறி இருக்க வேண்டும்)
எனக்கு தெரிந்து அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் தான் ஆரம்பிக்கின்றது.

ஏன் அனைத்து மொழிகளும்  அகரத்தில் ஆரம்பிக்க வேண்டும்? தெரியவில்லை....ஒரு வேலை இதுவும் கடவுளின் செயலா?

ஒருவேளை வள்ளுவர் மொழியைக் காட்டி கடவுளை நிரூபிக்கின்றாரா?
வள்ளுவர் கடவுள் என்று எதை குறிப்பிடுகிறார்  என்பது ஆய்வுக்குரிய ஒன்று ஆனால் கடவுளிலிருந்தே உலகம் தோன்றியது என்ற கூற்றில் அவர் உறுதியாக உள்ளார்.

உலகத்தில் முதலில் ஒரு வார்த்தை தோன்றியது  என்று வேதங்களும் கூறகிறது பைபிளும்  கூறுகிறது...
அது என்ன எழுத்து?
ஓம் எனும் எழுத்துதான் அது.

சரி அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?
இருக்கின்றது...உண்மையில் அது ஓம் அல்ல
அது "அ உ ம்"  என்ற வார்த்தை தான்.அதாவது அகரம் உகரம் மகரம் என்பார்கள் இதை.
அடிக்கடி சொல்ல சொல்ல அது "ஓம்" என  மாறும்.

ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது.


இவ்வுலகில் பிறந்த அனைவரும் ஓம் என்ற வார்த்தையை உபயோகிக்கிறார்கள்  என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
ஆனால் அதுதான் உண்மை.

ஒவ்வொரு மனிதனின்  மூச்சு காற்றும்  ஓம்  என்று தான் சொல்லும்....உன்னித்து கவனித்து பாருங்கள். ஓம் நின்றால் உயிர் இல்லை உலகும்  இல்லை.


ஆக உலகில் முதலில் எழுந்த  ஒலி  அகரம் ஆதலால் தான் அனைத்து மொழிகளின் முதல் எழுத்தும் அகரத்தில் ஆரம்பிக்கின்றது. அது மட்டுமல்ல அந்த அ உ ம - ஓம் ஒலியினால் தான் இவ்வுலகமே இயங்குகின்றது. 

Courtesy: http://kelviyumnaaneypathilumnaaney.blogspot.கம
தமிழ் மொழியின் சிறப்பு அம்சத்தை சற்று பாப்போம்:

தமிழின் உயிர் எழுத்து யாது அது எத்தனை வகைப்படும் என்பது சிறு வயதில் படித்து இருப்போம்.

உயிர் எழுத்து = 12  வகைப்படும்
அவைகள் "அ" வில் ஆரம்பித்து "ஓள" வில் முடியும் மொத்தம் 12  எழுத்து. ஏன் பனிரெண்டு எழுத்து என்பதை பாப்போம்.


"சக்தியாம் சந்திரனை செங்கதிரோன் ஊடுருவ
முக்திக்கு மூலம் அது"  -------------- ஓளவைக் குறள்

இதற்கு ஞான அனுபவ விளக்கம் தெரிந்தவர் மட்டுமே கூறமுடியும் என் நினைகிறேன் - குரு உபதேசம் பெற்று திருவடி தீட்சை பெற்று ஞான சாதனை செய்பவர்களே இதனை உணர்வர்! சக்தி - சந்திரன் - இடதுகண்! செங்கதிரோன் - சிவம் - வலதுகண்! குருதீட்சை பெற்று சூரியகலை - வலது கண்ணில் தியானம் செய்யும்போது சந்திரகலைகள் ஊடுருவும்.  சூரியனுக்கு கலைகள் 12  சந்திரனுக்கு கலைகள் 12.

சூரியனின் ஒவ்வொரு கதிரும் சந்திரகலையுடன் சேரும்.  இவ்வண்ணம் சூரியனின் 12 கலைகள் சந்திரனிலிருந்து வரும் 12 கலையுடன் சேரும்! சந்திரனின் எஞ்சிய 4 கலைகளும் சூரியகலை வழியாக உள்ளே போய்விடும்.  சூரியனில் வேறு கலைகள் இல்லாததால் 4  சந்திர கலைகளை உள்ளே அக்னி கலைக்கு அனுப்பிவிடும். அங்கே 8 கலைகள் மட்டுமே இருக்கும்! சந்திரனின் எஞ்சிய 4  கலைகள் சூரியன் வழியாக அக்னியின் 8  கலையுடன் போய் சேர்ந்து அக்னி கலையும் 12  கலையாகும்!

இப்போது சந்திரன் 12 , சூரியன் 12 அக்னி 12 என் மூன்று தீயும் ஒன்றாகி விடும்.  மூன்று தீயும் சேர்வதே முக்தி! முத்தீ!

உயிரின் முதல் எழுத்து அகரம் "அ" வில் ஆரம்பித்து உயிர் எழுத்து 12  ஆகிறது.
பிறகு
ஆய்த எழுத்து:
ஃ – இதுவே ஆய்த எழுத்து.  இதன் வடிவம் இரு கண்கள் வடிவத்திலும் மேலே மூன்றாவது கண் இருப்பதும் காணலாம்.
உயிரின் எழுத்து 12 சேர்ந்து. அதாவது சூரியன் 12 , சந்திரன் 12 , அக்னி கலை 12 சேர்ந்து முத்தீ வடிவம் இருப்பதாய் காணலாம்.
இதை புள்ளியை மையமாக வைத்து மேல் நோக்கி கோடு போட்டால் "சூலாயுதம்" மாதிரியும், ஓரத்தில் மூன்று கோடு சேர்ந்து போட்டால் "வேல் ஆயுதம்" போலவும் வடிவம் வரும் (முக்கோண வடிவம்).  இதன் தத்துவம் சூலாயுதம் வேலாயுதம் ஆவதின் பொருள் விளங்கும்.
இதையே ஆயுத எழுத்து என்று பொருள் கொண்டனர் தமிழின் சிறப்பு அம்சம் விளங்குகிறதா.

மெய் எழுத்துக்கள்:
உயிர் இல்லாத உடம்பு(மெய்) ஆற்றலற்றது. அது போல், தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமலும் உயிர் எழுத்துக்களின் துணை கொண்டு இயங்கும் எழுத்துக்கள் ஆதலில் இவை மெய் எழுத்துக்கள் எனப்பட்டன. இதனை ஒற்று எழுத்து என்றும் அழைப்பர்.

"பள்ளிப்பாடம் புள்ளிகுதவாது" என்பர் மெய் எழுத்து என்பவை
க், ங், ச், ஞ் ..... ன் முடிய. எல்லாமே புள்ளிவைத்த எழுத்து மெய் எழுத்து.  ஆகா தமிழ் மொழி ஞான மொழியாகும்.

உயிர்மெய் எழுத்துக்கள்:
உயிர் எழுத்து பனிரெண்டும், மெய் எழுத்து பதினெட்டும் சேர்ந்து உருவாகும் 216 எழுத்துக்கள், உயிர்மெய் எழுத்துக்கள்.
(எ.டு.) க் + அ = க.    

குறிப்பு: மாற்று கருத்து இருந்தால் தெரிவிக்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு