திங்கள், 18 ஜூலை, 2011

சேலம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபை


இது நேராக உங்களுக்கு அனுப்பப்பட்டதால் முக்கியம்.
விவரங்களை மறை ஜூலை 17 (1 நாட்களுக்கு முன்பு)
சேலம் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சபை


Venue

Details

Function

Vallalar Satsang

Place

Theosophical Society ,Cherry Road, Salem -1

Speech

By Erode. Thiru.Kathir Kathirvelu Ayya  

Timings

Evening 4.00 p.m to 7.00 p.m

Contact

Mohan Suresh /  psureshdreams@gmail.com

Date

July 24 -2011/ Sunday

5 கருத்துகள்:

19 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 5:26 க்கு, Blogger gangaimanimaran கூறியது…

நெற்றிக் கண்ணைத் திறப்பதற்கு
ஒரு கதவும் ,ஒரு பூட்டும் இருக்கிறது!
அந்தப் பூட்டை அருள் என்னும் திறவுகோலைக் கொண்டு
திறக்க வேண்டும்.
அருள் என்பது..
ஆன்ம இயற்கையாகிய
பெருந்தயவு என்கிறார்-- வள்ளல் பெருமான்!
தயவுதான் நம்மை
மனிதராக்கக் கூடியது!
பசியே கூட
இறைவன் அளித்த ஓர்
உபகாரக் கருவி என்கிறார் பெருமான்!
பசித்தாரைக் கண்டால்
அருள் சுரக்கிறது.
அருள் சுரந்தால் ஜீவகாருண்யம் பிறக்கிறது.
ஜீவ காருண்யமே மோட்ச வீட்டின் திறவுகோல்
என்கிறார் -வள்ளலார்.
எந்த நெருடலும் இல்லாமல்
நெஞ்சம் திறக்கிறதா இல்லையா..?
வள்ளலார் நம்மை வாழ்விக்கவே வந்தவர் -
நாம் தான் அவரைச்
சிக்கெனப் பிடிக்கத் தெரியாமல்
சீரழிந்துவிட்டோம் !
கவிஞர் கங்கை மணிமாறன்
சென்னை-120
செல்:944308824.

 
19 ஜூலை, 2011 ’அன்று’ பிற்பகல் 6:31 க்கு, Blogger செ.கதிர்வேலு கூறியது…

உங்கள் செய்திக்கு மிக்க மகிழ்ச்சி !

 
6 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:27 க்கு, Blogger gangaimanimaran கூறியது…

"பணத்தைப் புதைத்து வைக்கிறீர்கள்..
பிணத்தைப் புதைக்க மறுக்கிறீர்கள்!
பிணத்தை எக்காரணம் கொண்டும்
எரியூட்டக் கூடாது!
அது கொலைக்குச் சமானம்!" -என்பதை
வலியுறுத்தும்
வள்ளல் பெருமான்,
பிணத்தில்.. "தனஞ் செயன் "
என்னும் வாயு இருப்பதாகச்
சொல்கிறார்!
தனஞ் செயன் பற்றி
சன்மார்க்கிகள் விவாதிக்கலாமே..!

கவிஞர் கங்கை மணிமாறன்

 
6 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:29 க்கு, Blogger gangaimanimaran கூறியது…

புலால் உண்பது பொறிகளை அழிக்கும்!
புன்புலால் யாக்கை வளர்ப்ப தற்காக
புலால் உண்பதால் கெடுதியே சிறக்கும்!
தாவர உணவே சாத்வீக உணவு!
அதுவே இயற்கையாய் அமைந்த உணவு !
ஆருயிர் கொல்லாத அறிவார்ந்த உணவு!
ஆமாம்..அதுசரி..!அப்படி என்றால்
தழைத்து வளரும் தாவரங்க ளான
மரமும் - நெல்லும் - மாடுண்ணும் புல்லும்
உணர்ந்து பார்த்தால் உயிர்கள் தானே !
தாவர உயிர்கள் தம்மை அழித்து
நா- அரும்பெல்லாம் நத்திடச் சுவைக்கும்
அந்தச் செயலும் அகிம்சைக்கு எதிராய்
ஆவது தானே ..? அதுகுற்றம் இல்லையா..?
ஜீவ காருண்யம் என்று பார்த்தால்
தாவ ரங்களை அழிப்பதும் பாவம்!
தாவ ரங்களை உண்பதும் பாவம் !
என்பதில் அர்த்தம் எதுவும் இல்லையா!
இல்லை என்கிறார் எம்பெரு மானார்!
ஓரறி வுடைய உயிர்களுக் குள்ளும்
ஜீவ விளக்கம் உண்டென் றாலும்
பூக்கள்,காய்கள்,கனிகள் ,கிழங்குகள்
தழைகள் கீரைகள் வித்துகள் யாவும்
உயிர்கள் தோன்றும் இடங்களே அன்றி
அவைகளே உயிராய்க் காண்பது இல்லை!
அவற்றில் தனியாய் உயிரும் இல்லை!
மண்ணும் நீரும் வித்தும் சேர்ந்தே
உயிர்கள் தோன்றும் உலகில்;ஆதலால்
அவற்றைப் பறிப்பதும் உண்பதும் அவற்றை
ஊறு செய்வதாய் ஒருபோதும் எண்ணற்க!
கைவிரல் நகத்தை வெட்டும் போதும்
காணும் முடியைச் சிரைக்கும் போதும்
ஏதும் துன்பம் ஏற்படு வதுண்டோ..?
மீண்டும் அவைதான் முளைக்குமே அன்றி
யாண்டும் துயரம் விளைவதே இல்லை!
அதுபோல் தாவர உயிர்களைப் பறித்தால்
அவையும் துன்பம் அடைவதே இல்லை!
அதுமட்டும் அன்று ! அவற்றின் வித்தை
நன்னிலம் ஒன்றில் நாமே விதைத்து
மேலும் மேலும் உற்பத்தி செய்யலாம்!
கோழி கழுத்தை வெட்டினால் முளைக்குமா!
ஆடு மாடுகள் அறுத்தால் தழைக்குமா!
பறவையைக் கொன்றால் மறுபடி பறக்குமா!
ஆகவே..தாவர உணவே சிறந்தது!
அதனால் உயிர்க் கொலை மட்டுமே கொடியது!
அறிவீர் என்கிறார் அருள்நிறை வள்ளலார்!
அறிவோம் உலகீர்! அணிதிரள் வீ ரே!
புரியோம் உயிர்க்கொலை! புரிவோம் சன்மார்க்கம்!
நெறியில் நிற்போம்! நிலத்தில் வாழும்
அரிய கலைகள் அருட்பெருஞ் சோதி
ஆண்டவ ரிடத்தில் அனைவரும் கற்போம்!

கவிஞர் கங்கை மணிமாறன்
பதிலளி

 
6 நவம்பர், 2011 ’அன்று’ பிற்பகல் 8:31 க்கு, Blogger gangaimanimaran கூறியது…

செத்தாரைக் கண்டு
சிறிதும் அழக் கூடாது!
புலம்புதல் -கதறுதல்
பொய்வேடம் புனைதல்-
அறவே ஆகாது!
இறந்தபோது எந்த ஆடையில்
இருந்தார்களோ --
அந்த ஆடையை மாற்றக் கூடாது!
3 -ஆம் நாள்
16 -ஆம் நாள் சடங்குகள்
தேவை இல்லை!"
என்பதை வலியுறுத்துகிறார்-- பெருமான்!
இதை மக்கள் மனம் கொள்ளும்படி
அறிவியல் ரீதியாக--
உணர்வைக் காயப் படுத்தாமல்
எப்படி எடுத்துரைப்பது ..?
விவாதிக்கலாமே!

கவிஞர் கங்கை மணிமாறன்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு