திங்கள், 18 ஜூலை, 2011

சாதி சமயம் மதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை !சாதி சமயம் மதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை !


உண்மைதான் அன்பரே இங்கு சாதி சமயம் மதம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை .சாதியையும் மதத்தையும் வள்ளலார் போல் சாடியவர்கள் இந்த உலகில் யாரும் இல்லை .சாதியையும் சமயத்தையும் மதத்தையும் வளர்த்தவர்கள் செய்த மோசடிதான் இன்று மக்கள் படும் துன்பத்திற்கு காரணம் .பொய்யான கற்பனை கதைகள் சொல்லி மக்களை ஏமாற்றி விட்டார்கள் .மக்கள் அதை உண்மை என்று நம்பி ஏமாந்து விட்டார்கள் .அதை வள்ளலார் பலபாடல்களில் தெளிவு படுத்தி யுள்ளார் அதில் ஒரு பாடல் ;--சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே சாத்திரச சந்தடிகளிலே கோத்திரச சண்டையிலே,ஆதியிலே அபிமாநித்து அலைகின்ற உலகீர் அலைந்து அலைந்து வீணே நீர் அழித்தல் அழகலவே,நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிருத்தமிடும் தனித்தலைவர் {கடவுள் ஒருவரே }ஒருத்தர் அவர் வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே என்று சாடியுள்ளார் .சாதியையும் சமயமும் மதமும் பொய் ,அவற்றை குழி தோண்டி புதைத்து விடுங்கள் என்கிறார் .இன்று நடக்கும் அத்தனை துன்பங்களுக்கும் .சாதி சமய மத வாதிகள்தான் காரணம் அதில் எந்த சந்தேகமும் இல்லை .இதை ஒழிக்க வந்தவர்தான் வள்ளலார் .அவர் சாதி சமயம் மதங்களுக்கு அப்பாற பட்டவராகும் .அவரை சமய வாதிகள் மதவாதிகள் மறைத்து வைத்துக் கொண்டுள்ளார்கள் .இதுவும் அவர்கள் செய்யும் சூ ழ்ச்சியே அவர் எழுதிய திரு அருட்பா முழுவதும் உண்மையை உரைத்தவைகலாகும் .இந்த உலகத்தில் மக்களை பிரித்த் கடவுள் கொள்கைகளை துக்கி எரிய சொன்னவர் வள்ளலார் .ஒரே கடவுள் அவர் எங்கு உள்ளார் !அவர்யார் என்பதை கண்டு களித்து உலகத்திற்கு அறிமுகப்படுத்தியுல்லார்கள் .

அவர் மனிதரல்ல ,உருவம் அல்ல ,பொய்யான கல் மண் செம்பு தங்கம் போன்ற உலோகங்களில் கடவுள் இல்லை .அவர் ஒளியாக உள்ளார் அணு ஆற்றலாக உள்ளார் .அருள் ஒளியாக உள்ளார் .அந்த ஒளியின் சிதரல்கள்தான் எல்லா இயங்கும் உயிர்களாக உள்ளது .அதனால் எந்த உயிரியையும் அழிக்க நமக்கு உரிமை இல்லை என்கிறார் , ஒரு உயிரை நம்மால் உருவாக்க முடியாததை அழிக்கவும் உரிமை இல்லை என்கிறார் .இந்த உண்மையை முன்னாடி வந்த அருளாளர்கள் சொல்லவில்லை.ஏன் சொல்லவில்லை என்றால் ,அப்படி அவர்கள் சொன்னால் அவர்களை மக்கள் கொன்று விடுவார்கள் என்ற பயம் இருந்தது,அதனால் அவர்கள் சொல்லவில்லை .

மரணத்தை வென்றவர்கள்தான் உண்மையை சொல்ல முடியும் ,அவர்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது .அதனால் வள்ளலார் மரணத்தை வெல்லும் அருள் சத்தியை பெற்ற பிறகுதான் உண்மைகளை உலகுக்கு தெரியப்படுத்துகிறார் என்பது உண்மையாகும் .அவர் எழுதிய பாடல்களே அவற்றிற்கு சான்றுகளாகும் .அவர் எழுதிய பாடல்களில்ஒன்று .

காற்றாலே புவியாலே ககனம் அதனாலே 
கனலாலே புனலாலே கதிராதியாலே 
கூற்றாலே பினியாலே கொலைக கருவியாலே 
கோளாலே பிறர் இயற்றும் கொடுஞ் செயல்களாலே 
வேற்றாலே எஞ்ஞான்றும் அழியாதே விளங்கும் 
மெய் அளிக்க வேண்டும் என்றேன் விரைந்து அளித்தான் எனக்கே 
ஏற்றாலே இழிவென நீர் நினையாதீர் உலகீர் 
என் தந்தை அருட்பெரும்ஜோதி இறைவனைச சார்வீரே !

என்கிறார் வள்ளலார்,-- முழுமையான இறை அருளைப் பெற்றவர் களுக்கு மரணம் வராது.அவர்களால்தான் உண்மையை சொல்ல முடியும் என்கிறார் அவரை எந்த தீய சத்திகளும் இயற்கையும் ஒன்றும் செய்து விட முடியாது.என்பதை அறிந்து வாழ்ந்து அனுபவித்து உலக ம்ககளுக்கு அனைத்து உண்மைகளையும் திரு அருட்பா வாயிலாக தெளிவு படுத்தியுள்ளார்.

இவற்றை அனைவரும்உணர்ந்து, உயிர்கள் மேல் அன்பு வைத்து --கொல்லா நெறியே குவலயம் ஓங்குக ,எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !என்ற கொள்கையை கடைபிடித்து மனிதன் மனிதனாக வாழ்வோம் .

அன்புடன் உங்கள் அனைவரின் அன்பு சகோதரன் ஆன்மநேயன் -கதிர்வேலு .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு