செவ்வாய், 19 ஜூலை, 2011

மானிட உடம்பைப் பெற்ற பயன் !


மானிட உடம்பைப் பெற்ற பயன்

உடம்பைப் பெற்ற பயன்
-ஆசான் ஒளவையார்-

உடம்பைப் பெற்றதன் பயன் என்ன என்பதை ஒளவைக் குறளின் இரண்டாம் அதிகாரத்தில் காணலாம்.

"உடம்பினைப் பெற்ற பயனாயது எல்லாம் உடம்பினில் உத்தமனைக் காண்"

உடம்பைப் பெற்ற பயன், உடம்பில் உள்ள உத்தமனை அறிவதுதான். எனவே உடம்பைப் பெற்ற மக்களே உங்கள் உடம்புக்குள்ளே உறையும் இறைவனைக் கண்டறியுங்கள்.

இக்கருத்து வலியுறுத்தப்படுகிறது.

மற்றொரு குறளில் உடம்புக்குள் இறைவனைக் காண்பதற்கு வழி சொல்லப்படுகிறது. அழுக்குக் குப்பை நிறைந்த இடத்தில் எந்தத் தூய்மையையும் காண முடியாது.

நல்லபொருளும் அந்த இடத்தில் கெட்டுப் போகும். இது போன்று இருளில் எப்பொருளையும் பார்க்க முடியாது. வெளிச்சம் இருந்தால்தான் ஒரு பொருளைத் தேடிக் காண முடியும்.

நமது உடம்புக்குள் இறைவனைக் காண வேண்டுமானால் உள்ளம் மாசற்றதாக இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் உள்ளிருக்கும் ஈசனைக் காண முடியும்.

"மாசற்ற கொள்கை மனதில் அடைந்தக்கால்

ஈசனைக் காட்டும் உடம்பு"

என்கிறது ஒளவைக் குறள். இனிக் கடவுள் எங்கும் நிறைந்தார் எமது உடம்போடும் உள்ளத்தோடும் ஒன்றி நிற்கிறார். எம்மை விட்டுத் தனியாக இல்லை, என்பதை ஒளவைக் குறள் ஒன்று உதாரணத்துடன் விளக்குகிறது.

"எள் அகத்து எண்ணெய் இருந்த அதனை ஒக்குமே

உள் அகத்து ஈசன் ஒளி"

மனதுக்குள்ளே ஈசன் இருக்கின்றான். எள்ளிலே எண்ணெய் இருக்கிறது. அந்த எண்ணெய் எள்ளில் இன்ன பகுதியில் இருக்கிறது, இன்ன பகுதியில் இல்லை என்று சொல்ல முடியாது.
அது எங்கும் பரவி நிற்கின்றது. அது போலத்தான் இறைவனும் உள்ளம் எங்கும் பரவி நிற்கின்றான். இதேபோன்று மற்றுமொரு குறள் வருமாறு,

""பாலின் கண் நெய்போல், பரந்து நிற்குமே

நூலின் கண் ஈசன் நுழைந்து"

பாலிலே இன்ன பகுதியில் நெய் இருக்கிறது என்று சொல்ல முடியாது. பால் முழுவதிலும் அது பரவியிருக்கிறது. இதுபோல இறைவனும் ஆன்மாவில் பரவியிருக்கின்றான்.

மற்றுமொரு உதாரணம்

"பழத்தின் இரசம் போல் பரந்து எங்கும் நிற்கும் வழுத்தினால்

ஈசன் நிலை துதி செய்து கூறினால்"

ஈசன் நிற்கும் நிலை நிலையானது, பழத்திலே அதன் ரசம் பரவி நிற்பது போல ஈசனும்
எல்லா இடங்களிலும் பரந்து நிற்கின்றான்.

ஈசனைக் காண்பதற்கு மற்றுமொரு வழியைக் காண்பிக்கும் ஒளவைக் குறளையும் நோக்குவோம்.

"நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலராய் நிற்கும்அனைத்துயிர்க்கும் தாளும் அவன்"

ஈசனை நினைக்க வேண்டும். நினைத்தால்தான் காண முடியும் என்று இதில் வலியுறுத்தப்படுகிறது. ஒளவைக் குறள்கள் இவ்வாறு ஈசனைக் காணும் பல வழிகளை உணர்த்தி நிற்கின்றன.

இரண்டாம் குறள் 

யோக சித்தியால் உடலை வலுவாக வைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தர்கள் கருத்துக்களை ஒளவைக் குறளில் காணலாம். ஒளவைக் குறள் 31 அதிகாரங்களைக் கொண்டது.

இதுவும் மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வீட்டு நெறிப்பால், திருவருட்பால், தன்பால் என்று மூன்று பிரிவுகள் உள்ளன. இதில் 11 அதிகாரங்கள் அடங்கியுள்ளன. மொத்தம் 310 குறள், வெண்பாக்கள் ஆதியாய் நின்ற அறிவு முதல் எழுத்து ஓதிய நூலின் பயன் என்பதுதான் முதற் குறளாகும். இந்த உடம்பிற்கு முதன்மையாக இருந்த அறிவானது, பிரணவத்தை உச்சரிக்கும் வேதத்தின் பயனாகும் என்பது கருத்து. வேதத்தைக் கற்றதலினால் அறிவு உண்டாயிற்று. அறிவு பெறாத உடம்பு உடம்பல்ல, உடம்பைப் பெற்ற மனிதர் அறிவைப் பெற வேண்டும். இது குறளின் விளக்கம்.


"பரமாய சக்தியுள் பஞ்சமாபூதம் தாம்

மாறில் தோன்றும் பிறப்பு''

பரம் பொருளிடம் உள்ள பராசக்தியுள் அடங்கிய ஐம்பெரும் பூதங்களும் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு சேர்ந்தால் பிறப்புத் தோன்றும் என்பது இக்குறளின் பொருளாகும். பஞ்சமா பூதங்களான மண், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்து பூதங்களும் ஒன்று மாறி கலந்து சரீரம் உண்டாகிறது. இதுவே சித்தர்கள் கண்ட உண்மையாகும்.

இதற்கு மேல் சித்தர்கள் செல்லவில்லை,- வள்ளலார் அனைத்தும் கண்டு அதன் மயமானார் என்பது அவர் எழுதிய திரு அருட்பாவில் தெளிவாக்கி உள்ளார்.
சித்தர்களில் முன்று வகை ,-கர்மசித்தர் ,யோகசித்தர்,ஞானசித்தர் என்பதாகும்.அதேபோல் வாழ்க்கை என்பது முன்று வகைப்படும்,இம்மை இன்ப வாழ்வு! மறுமை இன்ப வாழ்வு!பேரின்பவாழ்வு !என்பதாகும். இந்த முன்று வகை வாழ்க்கையும் வாழ்ந்தவர் வள்ளலார்.
அதுதான் பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும் .அதற்க்கு மரணம் இல்லா பெருவாழ்வு என்பதாகும்.மரணத்தை வென்றவர்கள் இறைவனோடு இரனடுஅற கலப்பதாகும்.அதுவே           
முத்தகச சித்தி என்பதாகும், அதாவது கடவுள் நிலை அறிந்து அதன் மயமாவது என்பதாகும் அந்த மாபெரும் வல்லபத்தை பெற்றவர் வள்ளலார்,
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடலில் ஒன்று ;--

நோவாது நோன்பு எனைப்போல் நோற்றவரும் எஞ்ஞான்றும்
சாவாவரம் எனைப்போற் சார்ந்தவரும் --தேவா நின்
பேரருளை என்போலப் பெற்றவரும் இவ்வுலகில் 
யாருளர் சற்றே யறை.!

என்று கேள்வி கேட்கிறார் இறைவனிடம்.அதற்கு இறைவன் நீ நினைத்த நனமைஎல்லாம் யாம் அறிந்தோம் நினையே நேர்காண வந்தனம் என்றும் நீ ஒருவன்தான் என்னுடைய நல்லபிள்ளை,செல்லப்பிள்ளை ஞானசபை தலைவனுக்கு நல்லபிள்ளையாக தேர்வு செய்துள்ளேன் என்று வள்ளலாருக்கு புகழாரம்,இறைவனால் சூட்டப்படுகிறது.
ஆதலால் மெய் அன்பர்களே வள்ளலார் காட்டிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்ந்து நித்தியர்களாகி மரணமில்லா பெருவாழ்வில் வாழ்ந்திடுவோம் வாருங்கள் என்று உங்களை அன்போடு அழைக்கின்றேன்.

ஆதியும் அந்தமும் இல்லாதோர் அமலத்தாடும் 
ஜோதி தன்னையே நினைமின்கள் சகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலேறும் 
வீதி மற்றைய வீதிகள் கீழ்ச செல்லும் வீதி !

என்கிறார் வள்ளலார் இந்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க வீதிதான் உங்கள் அனைவரையும் மேலேற்றும் மற்றைய வீதிகள் மரணத்திற்கு கொண்டுபோய் விடும் என்கிறார் .
உண்மை மார்க்கம் சுத்த சன்மார்க்கம் வள்ளலார் காட்டிய மார்க்கம் .
கொல்லா நெறியே குவலயம் ஓங்குக 
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

அன்புடன் ஆண்மநேயன் --கதிர்வேலு .
       
     



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு