பேருபதேசம் செய்த நாள் !
*பேருபதேசம் செய்த நாள்!*
*மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் 22-10-1873 ஸ்ரீமுக ஆண்டு ஐப்பசித் திங்கள் 7 ஆம்நாள் செவ்வாய்க்கிழமை காலை 8 எட்டு மணிக்கு முதன் முதலாக சுத்த சன்மார்க்க கொடி கட்டிக்காட்டி நீண்ட உபதேசம் ஒன்றை வள்ளல்பெருமான் செய்து அருளினார்கள்*
*வள்ளல்பெருமானின் முடிந்த முடிபான சுத்த சன்மார்க்க கொள்கைகளைக் கொண்ட அவ் வுபதேசம் மகாஉபதேசம் பேருபதேசம் என வழங்கப்படுகின்றது.* *அந்த உபதேசத்தில் உள்ள கருத்துக்கள் ரொம்ப ரொம்ப முக்கியமான உண்மையான புதிய ஆழமான வெளிப்படையான அனுபவம் நிறைந்த கருத்துக்களாகும்*
*அதில் உள்ள உண்மைக் கருத்துக்களை ஒவ்வொரு சன்மார்க்கிகளும் படித்து தெரிந்துகொண்டாலே போதும் திருஅருளைப் பெற்று துரிதமாக மேல்நிலைக்கு செல்ல வாய்ப்பாக அமையும் என்பதில் எவ்விதமான சந்தேகத்திற்கும் இடமில்லை எனலாம்*
*அதில் உள்ள முக்கியமான கருத்துக்கள் !*
1. *இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரைக்கும் இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக்கொண்டு இருக்காதீர்கள்.*
2. *இதுமுதல் சாலைக்கு ( வடலூருக்கு) இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மக்களுக்கு அருளை வழங்க வரப்போகின்றார்.*
3. *நீங்கள் எல்லவரும் நான் சொல்லியவாறு உண்மையான நல்ல விசாரணையில் இருந்து கொண்டு இருங்கள்*
4. *நம்மை இயக்குகின்ற தெய்வத்தின் இயற்கை உண்மை நிலை என்னவென்று நாம் தெரிந்து கொள்ள வேண்டும்*.
5. *ஆன்ம அறிவை விளக்கம் இன்றி மூடிக்கொண்டு இருக்கின்ற அசுத்த மாயா திரைகளை ஒழுக்கத்தைக் கடைபிடித்து நீக்கி கொள்ள வேண்டும் *சுத்த மாயா திரைகளை ஆண்டவர் வந்தவுடன் நீக்கிவிடுவார்.*
6. *அதுவரையில் நமது குறையை ஊன்றியும் தெய்வத்தை நினைத்தும் ஸ்தோத்திரம் செய்தும் இடைவிடாது விசாரம் செய்து கொண்டும் இருக்கவேண்டும்.*
7. *விசாரம் என்பது பரம் அபரம் என இரண்டு வகையாக உள்ளது. பரலோக விசாரமே உண்மை விசாரமாகும் ஒருஜாம நேரம் கண்டிப்பாக விசாரிக்க வேண்டும்.* *அவ்வாறு விசாரித்துக் கொண்டு இருந்தால் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார்*
8. *தியானம் தவம் யோகம் முதலிய சாதனங்கள் எதுவும் செய்ய வேண்டாம். உயிர் இரக்கம் அன்பு தயவு கருணை வரவைத்துக் கொள்ளவேண்டும்*
9. *நாம் நாமும் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டு இருந்த வேதம் ஆகமம் புராணம் இதிகாசம் முதலிய கலைகள் எதனிலும் லட்சியம் வைக்க வேண்டாம்.*
10. *கைலாயபதி. வைகுண்டபதி. சத்தியலோகாதிபதி. சொர்க்கம். நரகம் என்பவைகளில் எல்லாம் நம்பிக்கை வைக்க வேண்டாம்.* *எல்லாம் கற்பனையே*
11. *இடம் வாகனம் ஆயுதம் வடிவம் ரூபங்கள் மனிதனுக்கு உள்ளதுபோல் கை கால் உடம்பு போன்ற உருப்புக்கள் வைத்த சிற்ப உருவங்களை (அதாவது ஜட தத்துவ உருவ கடவுள்களை) வணங்கவோ வழிபடவோ வேண்டாம்*.
12. *சைவம் வைணவம் முதலிய சமயங்களிலும்.வேதாந்தம்.சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சயம் வைக்க வேண்டாம்.*
13. *அகத்தில் உள்ள மெய்ப்பொருள் உண்மையை பொய்யாக புறத்தில் கலையுரைத்த கற்பனை கலைகளை காட்டியவன் ஒருவல்லவன்* *அவன் பூட்டிய அந்த பூட்டை உடைத்து உண்மையை வெளிப்படையாக காட்டி உள்ளேன்*.
*உண்மை உணர்ந்து பயம் இல்லாமல் பின் பற்றுங்கள்.*
14. *இப்போது வருகின்ற நமது கடவுள் இதற்கு முன் சமய மத சாத்திர புராணங்களில் வந்ததாகச் சொல்லப்படுகின்ற பலவகைப்பட்ட ஏற்பாட்டுக் கர்த்தர்களான மூர்த்திகள். கடவுளர்.தேவர்.அடியார்.யோகி்.ஞானி முதலானவர்களில் ஒருவர் அல்ல. தனித்தலைமை பெரும்பதியாகிய இயற்கை உண்மைக் கடவுளான தனிப்பெருங் கருணை வடிவமாக உள்ள அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் ஒளியாகும்*.
15. *அக்கடவுளின் உண்மையான பெயர்* *அருட்பெருஞ்ஜோதி*
*அருட்பெருஞ்ஜோதி*
*தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி!*
*என்னும் மகாமந்திரமே கடவுளின் பெயராகும்* .
16. *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அன்பு அருள் கருணை சேர்ந்த பூரண ஒளிவடிவமாக உள்ளவராகும் ஆதலால் ஒளியே கடவுளாக பாவித்து வழிபாடு செய்ய வேண்டும்.*
17 *எல்லா உயிர்களையும் இயக்கும் உள் ஒளியே ஆன்மா என்பதாகும்.எனவே எல்லா உயிர்களையும் தம் உயிர்போல் பாவித்து ஒத்து உரிமை உடையவர்களாக உவக்க வேண்டும்.*
18 . *எல்லா உயிர்களையும் இயக்கிக்கொண்டு இருப்பது ஆண்டவரின் குழந்தையாகிய ஆன்மா என்னும் உள் ஒளியாகும் ஆகவே ஆன்மநேயத்தை அவசியம் யாவரும் கடைபிடிக்க வேண்டும்*
19 . *நமக்கு ஆன்மநேய ஒருமைப்பாடு என்னும் பொது உரிமையை வரவைத்துக் கொண்டால் மட்டுமே ஆண்டவரின் தொடர்பு லகுவாக கிடைக்கும்.*
20. *ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையைப் பற்றி குறிப்பித்தேன் குறிப்பிக்கின்றேன் குறிப்பிப்பேன் என அழுத்தமாகச் சொல்லுகிறார்.*
21. *கருணையும் சிவமும் ( அருட்பெருஞ்ஜோதி) பொருள் என கொள்ள வேண்டும்.*
22. *ஆண்டவர் அருளைப் பெறுவதற்கு உயிர்களுக்கு செய்யும் பரோபகாரம் என்னும் ஜீவகாருண்யமும்.அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது வைக்கும் இடைவிடாத அன்பும் என்னும் சத்விசாரமும் மட்டுமே போதுமானதாகும்*.
23. *இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேல் ஏற்றியிருக்கின்றார் எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம்தான் இது.*
24. *நீங்களும் விட்டு விட்டீர்களானால் என்னைப்போன்ற பெரிய லாபத்தைப் பெறுவீர்கள்.இதுவரை விடாமல் இருந்தவர்கள் எதாவது லாபத்தைப் பெற்றுக் கொண்டார்களா ? பெற்றுக்கொள்ளவில்லை.*
25 . *நான் சமய மதங்களில் வைத்திருந்த லட்சயம் அளவிடமுடியாது ஆனால் அந்த லட்சியம் என்னை தூக்கிவிடவில்லை*
26. *என்னை இந்த இடத்திற்கு தூக்கிவிட்டது யாதெனில் உண்மைப் பெருநெறி ஒழுக்கம் மட்டுமே! அதாவது கருணையும் சிவமே பொருள் எனக் காணும் காட்சியும் பெறுக என்றது தான் என்னை ஏறாநிலைமிசை ஏற்றிவிட்டது*
27. *என்னை யேறா நிலைமிசை யேற்றிவிட்டது யாதெனில் தயவு தயவு என்னும் கருணைதான் என்னைத் தூக்கிவிட்டது. என்பதை தெளிவாக விளக்குகிறார்*
28 . *இப்போது என்னுடைய அறிவு அண்டாண்டங்களுக்கு அப்பாலும் கடந்திருக்கிறது அது அந்த ஒருமையினால் தான் வந்த்து.*
29. *நீங்களும் என்னைப்போல் ஒருமையுடன் இருங்கள் எல்லா நன்மையும் உண்டாகும்.*
30. *நீங்கள் இதுவரைக்கும் ஒழுக்கத்திற்கு வராமல் எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாய் இருந்தாலும் நீங்கள் நல் ஒழுக்கத்திற்கு வருவதோடு மற்றவர்களையும் நமது ஒழுக்கத்திற்கு வரும்படி எவ்வித தந்திரமாவது செய்து நம்மவர்களாக்கிக் கொள்ள வேண்டியது அவசியம்*.
31. *சமயம் தவிர மதங்களில் உள்ள வேதாந்தி சித்தாந்தி என்று பெயரிட்டுக்கொண்ட பெரியவர்களும் உண்மை அறியாது சமயவாதிகளைப் போலவே தெய்வத்தைப்பற்றி ஒன்றுகிடக்க ஒன்றை உளரியுள்ளார்கள் ஆதலால் நீங்கள் அது ஒன்றையும் நம்ப வேண்டாம்.*
32. *நீங்கள் என்னை தெய்வம் என்று நினைத்து வணங்கவோ வழிபடவோ கூடாது எல்லாம்வல்ல நமது இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கி வழிபடவேண்டும்.*
33. *எல்லாவற்றுக்கும் சாட்சியாக இப்போதுதான் சன்மார்க்கக் கொடி கட்டிக்கொண்டது.அக்கொடியின் உண்மையைத் தெரிந்து கொள்ள வேண்டும்.*
34. *அக்கொடியின் உண்மை யாதெனில் நமது நாபிமுதல் புருவமத்தி ஈறாக ஒருநாடி இருக்கின்றது.*
*அந்த நாடி நுனியில் புருவ மத்தியின் உட்புறத்தில் ஓர் ஜவ்வு தொங்குகின்றது*
35. *அதன் அடிப்புறம் வெள்ளை வர்ணம் மேற்புறம் மஞ்சள் வர்ணம் அச்சவ்வின் கீழ் ஓர் நரம்பு ஏறவும் இறங்கவும் இருக்கின்றது.இக்கொடி நம் அனுபவத்தின் கண் விளங்கும்.*
36 . *இவ் அடையாளக் குறிப்பாகவே இன்றைய தினம் வெளி முகத்தில் அடையாள வர்ணமான சுத்த சன்மார்க்க கொடிகட்டியது*
37 . *இனி எல்லவர்க்கும் சுத்த சன்மார்க்க நல்ல அனுபவம் அறிவின்கண் தோன்றும்*
38 *கொடி கட்டிக்கொண்ட படியால் இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள் நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.*
39 *இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மைஅறிவாய் விசாரம் செய்து கொண்டு இருங்கள்* *அவசியம் இதற்கு காரணமான தயவு இருக்க வேண்டியது* *அந்த தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்*
40 . *மேலே சொல்லியவாறு பின்பற்றி இருந்து கொண்டு இருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையும் பெற்றுக் கொள்வீர்கள் இதுசத்தியம் சத்தியம் சத்தியம் இது ஆண்டவர் கட்டளை என நிறைவு செய்கிறார்.*
41. *மேலும் சொல்லுகிறார் எல்லோருக்கும் தாய் தந்தை அண்ணன் தம்பி முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ அதற்குக் கோடி கோடி பங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான இடம் இந்த இடம் இதுவும் ஆண்டவர் கட்டளை என பேருபதேசத்தை நிறைவுசெய்கிறார்*
*மேலே கண்ட விபரங்கள் வள்ளலார் செய்த பேருபதேசத்தின் சுருக்கமான செய்திகளாகும்.விரிவான செய்தியை அனைவரும் பேருபதேசத்தின் முழுமையான உண்மை விளக்கத்தை திருஅருட்பாவில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.*
*வள்ளலார் பாடல்!*
கருணையும் சிவமே பொருள்எனக் காணும் காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!
மேலே கண்ட பாடலை ஊன்றி படிக்கவும்.
*நமக்குள் சாதி சமயம் மதம் என்ற வேறுபாடுகள் எக்காலத்திலும் பின்பற்ற கூடாது.*
*சன்மார்க்க அன்பர்கள் தனித்தனியாவது உங்கள் அறிவிற்கும் ஒழுக்கத்திற்கும் ஒத்தவர்களுடன் கூடியாவது மஞ்சள் வெண்மை கலந்த சன்மார்க்க கொடியை ஏற்றி கொடிப் பாடலையும் பேருபதேசத்தையும் .ஞானசரியை 28 பாடல்களையும் படித்து தோத்திரம் செய்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளைப்பெற வேண்டுகிறோம்.*
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு