தனிப்பெருங்கருணை தினம்!
*தனிப்பெருங்கருணை தினம் !*
*இறைவனால் வருவிக்க உற்ற வள்ளலார் தினத்தை ( பிறந்தநாளை) தனிப்பெருங்கருணை தினமாக தமிழக அரசு அறிவித்துள்ளது பாராட்டிற்குறியது* *வரவேற்கதக்கது*
இயற்கை உண்மை கடவுளின் பெயர் *அருட்பெருஞ்ஜோதி*
*அருட்பெருஞ்ஜோதி*
*தனிப்பெருங்கருணை*
*அருட்பெருஞ்ஜோதி!*
என்னும் பெயரைச் சூட்டியவர் வள்ளலார்.
*அன்பு தயவு அருள் என்ற மூன்றும் சேர்ந்த முழுவடிவமே தனிப்பெருங்கருணை என்பதாகும்*
*மனிததேகம் எடுத்தவர்கள் ஒவ்வொருவரும் இயற்கை விளக்கமான கருணை வடிவமாக (அருள்வடிவம்) மாறினால்தான் இயற்கை உண்மையான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் இணைந்து பேரின்ப சித்திப் பெருவாழ்வு வாழ்வதற்கு வாய்ப்புக்கள் தானே வந்து அடையும் அதுவே இயற்கை நியதியாகும்*
*வள்ளலார் இறைவனிடம் கேட்டதே தான் கருணைமயமாக மாற வேண்டும் என்பதுதான்*.
*வள்ளலார் பாடல் !*
*கருணையே வடிவாய்ப்* பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்
தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும் வன்புலை கொலை இரண்டும்
ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலே
மருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சை காண்எந்தாய்.!
மேலும் திருஅருட்பா முழுவதும் *கருணைப்பற்றியே* பேசியும் பாடல்கள் இயற்றியும் உள்ளார்.
*கருணையும் சிவமே* பொருள்எனக் காணும் காட்சியும் பெறுக மற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறி வித்த வண்ணமே பெற்றிருக் கின்றேன்
இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம் எய்திய தென்செய்வேன் எந்தாய்
தெருள்நிலை இன்றிக் கலங்கினேன் எனினும் சிறுநெறி பிடித்ததொன் றிலையே.!
*கருணை என்றால் என்ன ?*
*ஆன்மாவில் இருந்து சுரக்கும் சுத்த அமிலம் போன்ற திரவத்திற்கு அழியாத நந்நிதி என்றும் பெயர் அவற்றிற்கு கருணை என்றும் பெயர்* *அந்த திரவத்திற்கு பெயர்தான் அருள் என்றும் அமுதம் என்றும் சொல்லப்படுவதாகும்*
*ஆண்டவர் மீது அன்பும் ஜீவன்கள் மீது தயவும் இரக்கமும் காருண்யமும் அதிகரிக்கும் போது சுத்த உஷ்ணம் உண்டாகும்*
*சுத்த உஷ்ணத்தினால் ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் ஏழுவகையான திரைகள் ஒவ்வொன்றும் உஷ்ணத்திற்கு தகுந்தவாறு ஒவ்வொன்றாக விலகும்*
அதைத்தான் வள்ளலார்
*திரைமறைப் பெல்லாந் தீர்த்தாங் காங்கே*
*அரசுறக் காட்டு மருட்பெருஞ் ஜோதி!*
*திரையெலாந் தவிர்த்துச் செவ்வியுற் றாங்கே*
*வரையெலாம் விளங்க வயங்குசெஞ் சுடரே!* (அகவல்)
*எங்கே கருணை யியற்கையி னுள்ளன*
*அங்கே விளங்கிய வருட்பெருஞ் சிவமே!* (அகவல்)
ஆன்ம சிற்சபையில் இயற்கையான கருணை என்னும் அருள் சுரக்கும் இடத்தில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் தனிப்பெருங்கருணையுடன் ஆட்கொண்டு காரியப்படுவார்.
மேலும் பதிவு செய்கிறார்
*கருணைக் கடலே அதில் எழுந்த கருணை அமுதே* கனியமுதில்
*தருணச் சுவையே சுவைஅனைத்தும் சார்ந்த பதமே தற்பதமே*
*பொருண்மெய்ப் பரமே சிதம்பரமாம் பொதுவில் நடிக்கும் பரம்பரமே*
*தெருண்மெய்க் கருத்தில் கலந்தெனையும் சித்தி நிலைகள் தெரித்தருளே*.!
*அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் விளங்கும் இடமே நம் சிரநடு ஆன்ம சிற்சபை இடமாகும் எனவேதான் மனதை சிற்சபையின்கண் இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும் என்கிறார்*
*சன்மார்க்கத்தை பின்பற்றும் சன்மார்க்கிகள் எத்தனைபேர் அவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்*
*பொய்யான புறவழிபாட்டை பின்பற்றுகின்ற வரையில் அன்பு உயிர்இரக்கம் தயவு அருள் கருணை தோன்றாது மரணம் நிச்சயம்*
*வள்ளலார் பாடல்!*
*ஆடாதீர் சற்றும் அசையாதீர்* *வேறொன்றை*
*நாடாதீர்*
*பொய்உலகை நம்பாதீர்* - வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்
கென்மார்க்க மும்ஒன்றாமே.!
*வள்ளலார் இவ்வளவு எடுத்து சொல்லியும் சாதி சமய மதம் சார்ந்த சாத்திரக் குப்பைகளில் இருந்து வெளியே வரமுடியாமல் அருளைப் பெற முடியாமல் தனிப்பெருங்கருணையைத் தொடர்பு கொள்ள முடியாமல் அழிந்து கொண்டே உள்ளோம்*
*வள்ளலார் பாடல்!*
குறித்துரைக்கின் றேன்இதனைக் கேண்மின் இங்கே வம்மின்
கோணும்மனக் குரங்காலே நாணுகின்ற உலகீர்
வெறித்தஉம்மால் ஒருபயனும் வேண்டுகிலேன் எனது
*மெய்யுரையைப் பொய்யுரையாய் வேறுநினை யாதீர்*
*பொறித்தமதம் சமயம்எலாம் பொய்பொய்யே* *அவற்றில்*
*புகுதாதீர்* *சிவம்ஒன்றே பொருள்எனக்கண் டறிமின்*
*செறித்திடுசிற் சபைநடத்தைத் தெரிந்துதுதித் திடுமின்*
*சித்திஎலாம் இத்தினமே சத்தியம்சேர்ந் திடுமே.!*
*மேலே கண்ட பாடலில் நான் சொல்வதை பொய் என நினையாதீர்கள்* *பொய்யான சாதி சமயம் மதங்களைப் பின்பற்றாதீர்கள் அதில் உண்மை இல்லை*
*ஒவ்வொரு ஆன்ம சிற்சபையிலும் கடவுள் கருணையுடன் விளங்குவதால் சிற்சபை நடத்தை தெரிந்து துதித்திடுங்கள் சித்தி எல்லாம் சத்தியம் சேர்ந்திடும் என்று சத்தியம் வைத்து வள்ளலார் சொல்லுகிறார்*
வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க உண்மை நெறியான கருணை நெறியை கடைபிடித்து உயிர்இரக்கம் காருண்யம் தயவு அன்பு அருள் பெற்று தனிப்பெருங்கருணையுடன் இணைந்து மரணத்தை வென்று பேரின்பசித்திப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
திருஅருட்பா ஆராய்ச்சி மையம்
9865939896
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு