திங்கள், 8 ஏப்ரல், 2019

சந்நியாசமும் காவி உடையும் !

சந்நியாசமும் காவி உடையும் !

மேலே கண்ட தலைப்பில் வள்ளலார் .காவி உடை யுத்தகுறி என்று அதற்கு விளக்கம் தெளிவாக பதிவு செய்து இருந்தார்..

அவற்றை வெளியிட்டு இருந்தேன்.

அதற்கு ஆதாரம் இருக்கிறதா ? வள்ளலார் அப்படி சொல்லி இருக்க மாட்டார் ..நீங்கள் ஆதாரம் இல்லாமல் வெளியிட மாட்டீர்கள் ஆதாரம் இருந்தால் தெரியப் படுத்துங்கள் என்று சில ஆன்பர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க

வள்ளலார் பதிவு செய்துள்ளதை அப்படியே அனுப்புகிறேன் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

உரைநடைப்பகுதி
எண் 111..

111. சந்நியாசமும் காவி உடையும் !

மூன்றாசைகளில் விசேஷம் பற்றுள்ளவர்களாகித் தயவில்லாத கடின சித்தர்கள் சந்நியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேற்படி குற்றமற்றவர்களுக்குச் சந்நியாசம் வேண்டுவதில்லை.

சந்நியாசி காவி வேஷ்டி போடுவதற்கு நியாயம்;

*தயவில்லாத கடின சித்தர்களாகையால் தத்துவாபாசமுள்ளது;*
 *தத்துவத்தைச் செயித்து தயவை நடத்துவதற்கு யுத்தக்குறி அல்லது அடையாளமாகத் தரிப்பது காவி*

*. வெற்றியான பிறகு அடைவது தயவு*

. ஆதலால் வெற்றிக்கொடி வெள்ளை.

தயவு வெள்ளையென்பதற்கு நியாயம்;

"தயவென்பது சத்துவம்,* சத்துவமென்பது சுத்தம், சுத்தமென்பது நிர்மலம்*,

நிர்மலமென்பது வெள்ளைவருணம், வெள்ளை என்பது ஞானம்,

ஞானமென்பது அருள், அருளென்பது தயவு, தயவென்பது காருண்யம்.*

*சன்னியாசம்
மூவாசைகளில் விசேஷ பற்றுள்ளவர்களாகித் தயையில்லாத கடின சித்தர்கள் சன்னியாசம் பெற்றுக்கொள்ள வேண்டும்*.

அக் குற்றத்தை நீக்கினவர்கள் சன்னியாசம் செய்து கொள்ள வேண்டுவதில்லை.

குடும்ப சன்னியாசிகளா யிருக்கலாம். தனேஷணம் தாரேஷணம் புத்திரேஷணம்...

தயவு
தயவு - சுத்தம், வெள்ளை வருணம், ஞானம், தயவு - அருள் காருண்ணியம்.

*காவிவேஷ்டி
காவிவேஷ்டி தரிப்பது தயவுக்கு விரோதமானவைகளை ஜெயிப்பதற்கடையாளம்*

 மேலே கண்ட விபரங்களை நன்கு பொறுமையாக படித்து தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்..

பாடல் !

தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தேம்
தத்துவா தீதமேல் நிலையில்
சித்தியல் முழுதும் தெரிந்தனம் அவைமேல்
சிவநிலை தெரிந்திடச் சென்றேம்
ஒத்தஅந் நிலைக்கண் யாமும்எம் உணர்வும்
ஒருங்குறக் கரைந்துபோ யினம்என்
றத்தகை உணர்ந்தோர் வழுத்தநின் றோங்கும்
அருட்பெருஞ் சோதிஎன் அரசே.

தத்துவங்களை கடந்தால் தான் இறை அருளைப் பெற முடியும்...

தத்துவங்களை கடக்க முடியாதவர்கள் அணிந்து கொள்வது காவி உடை...

காவி உடை அணிந்துள்ளவர்கள் கடின சித்தர்கள் என்கிறார் வள்ளலார்...

வெள்ளை உடையே வெற்றியின் சின்னம்.

காவி உடையால் கடவுளைக் காண முடியாது...

நமது வள்ளலார் வெள்ளாடை வேந்தர் !
மரணத்தை வென்ற மகான் .

இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்ட .எல்லாம் வல்லவர்.

எனவே வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க பாதையானது ..அருளைப் பெறுவதற்கு நேர் நோக்குப்  பாதையாகும்.

மனிதகுல மேம்பாட்டிற்காக இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டவர் தான் வள்ளலார்...என்பதை மறந்தும் தவறாக நினைத்து விடாதீர்கள்.

வள்ளலார் உருவம் மனித உருவம் அல்ல ! அருள் உருவம் என்பதை நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

ஈரோடு கதிர்வேல் ஆதாரம் இல்லாமல் ஒருபோதும் பொய்யான செய்தியை வெளிப்படுத்த மாட்டான்
என்பதை அருள் கூர்ந்து தெரியப்படுத்திக் கொள்கிறேன்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு