புதன், 10 ஏப்ரல், 2019

பாவம் ! புண்ணியம் !

பாவம் !  புண்ணியம் !

நாம் பாவம் செய்வதையும் .புண்ணியம் செய்வதையும் எவ்வாறு தெரிந்து கொள்வது !

ஒருமனிதன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் தவறான வழியில் பொருள் சம்பாதித்து. சுகமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவிட்டு இறுதி காலத்தில் துன்ப்ப் படுவதும்..
மரணவேதனைப் படுவதும் நிகழ்ந்தால்..அவர் நிறைய *பாவச்செயல்* செய்தவர் என்பதை தெரிந்து கொள்ளலாம்...

புண்ணியம் என்பது !

ஒருமனிதன் வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில்  நேர்மையாக உழைத்து  ரொம்ப சிரமப்பட்டு.கஷடப்பட்டு பொருள் ஈட்டி மற்றவர்களுக்காகவும் வாழ்ந்து. உழைத்தவர்கள்.

  இறுதி காலத்தில் எந்த சிரமமும்.கஷ்டமும் இல்லாமல் மகிழ்ச்சி யுடன் வாழ்வதும் நோய்வாய் படாமல் .. மரணத் துன்பம் இல்லாமல் வாழ்வதே *புண்ணியம்* என்பதாகும்

*புண்ணியத்துடன் மரணம் அடைந்தால். அடுத்த பிறவி மனிதப் பிறவி நிச்சியம்.*.

*பாவத்துடன் மரணம் அடைந்தால் அடுத்தப் பிறவி துஷ்ட ஜந்துக்களாக பிறக்க நேரிடும்...*

பாவம் புண்ணியம் என்பது இந்தப்பிறவியிலே தெரிந்து கொள்ளலாம்.

எனவே ரொம்ப ஜாக்கிரதையுடன் இந்த பிறவியின்  வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்....

இயற்கை உண்மை என்னும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்  நம்மை கவனித்துக் கொண்டே உள்ளார் என்பதை நாம் மறந்து விடக்கூடாது....

வள்ளலார் பாடல் !

பண்ணாத தீமைகள் பண்ணுகின் றீரே

பகராத வன்மொழி பகருகின் றீரே

நண்ணாத தீயினம் நண்ணுகின் றீரே

நடவாத நடத்தைகள் நடக்கவந் தீரே

கண்ணாகக் காக்கின்ற கருத்தனை நினைந்தே

கண்ணார நீர்விட்டுக் கருதறி யீரே

எண்ணாத தெண்ணவும் நேரும்ஓர் காலம்

எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!

மேலே கண்ட பாடலை கவனிக்கவும்..

அற்ப ஆசைகளுக்காக செய்யக்கூடாத செயல்களை எல்லாம் செய்து அற்ப மகிழ்ச்சிக்காக பண்ணாத தீமைகள் எல்லாம் பண்ணி.அதனால் வரும் அற்ப மகிழ்ச்சியினால் எந்த  ஒரு பயனும் இல்லை...

இறுதியில் வரும் துன்பத்தை தடுத்து நிறுத்த முடியாமல் சொல்ல முடியாத துன்பத்தில் ஆழ்ந்து.கண்ணீர்விட்டு அழுதும் பயன் இல்லாமல் போய்விடும்..

எனவே சுயநலம் இல்லாமல் பொது நலத்துடன்.காலம் உள்ளபோதே நேர்மையாக உழைத்து.நம்மால் முடிந்த அளவு  ஜீவகாருண்யம் செய்து பிற உயிர்களுக்கு துன்பம் தராமல் உயிர் இரக்கத்துடன் வாழ்ந்து  புண்ணியத்தை சம்பாதித்துக் கொள்ளுங்கள்...

இதுவே மனிதப் பிறப்பின் தலையாய கடமையாகும்.புண்ணியம் பெறும் வழியாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு