புதன், 14 நவம்பர், 2018

வள்ளலார் உடன் சுற்றி திரிந்தவர்கள் !

வள்ளலார் உடன் சுற்றி திரிந்தவர்கள் !

வள்ளலார் உடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் அனைவருமே மெத்தப் படித்தவர்கள் பண்டிதர்கள்.புலவர்கள்

இவர்கள் அனைவரும் வள்ளலார் சொல்லுவதையும் பாடல் இயற்றுவதையும் வழிபாடு செய்வதையும் கூடவே இருந்து  நேரில் கண்டவர்கள்..

வள்ளலார் இறுதியில் என்ன சொன்னார் என்பதும் இவர்களுக்குத் தெரியும்..

சாதி சமயம் மதம் பொய் என்றார்...
கடவுள் ஒருவரே என்றார்..
ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு என்றார்.

புதியதாக சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம்.

சத்திய தருமச்சாலை..

சத்திய ஞான சபை

போன்ற புதிய அமைப்புகளை உருவாக்கினார்.

இறுதியில் அருட்பெருஞ்ஜோதி தான் உண்மையானக் கடவுள் என்பதையும் மக்களுக்கு தெரியப்படுத்துகின்றார்.
வள்ளலாரின் அணுக்கத் தொண்டர்கள்..!

தொழுவூர் வேலாயுத முதலியார்.

இறுக்கம் இரத்தின முதலியார்.

பொன்னேரி சுத்தரம் பிள்ளை..

காயாறுஞான சுந்தர ஐயர்.

கிரியாயோகசாதகர் பண்டார ஆறுமுக ஐயர்

புதுவை வேலு முதலியார்.

சோமு செட்டியார்..

மகாராஜராஜஸ்ரீ ராமசாமிநயினார்.

பொன்னுசாமிப் பிள்ளை.

ஆடூர் சத்குணாகர தயாம்பர சுவாமிகள்.

சபாபதி சிவாசாரிய சுவாமிகள்

நங்கோச்சோழன் வீரமணிசூடியார்

ஸ்ரீ செல்வராய முதலியார்.

போன்றவர்களும்  மேலும் இன்னும் நிறைய ஆண்கள் பெண்கள்  வள்ளலார் உடன் நெருங்கி பழகி கூடவே  இருந்துள்ளார்கள்...

ஒருவர் கூட வள்ளலார் சொல்லிய வார்த்தைகளையும் .
சுத்த சன்மார்க்க கொள்கைகளையும்.
புரிந்து கொண்டு பின்பற்றவே இல்லை.

ஒருவர் கூட சாதாரண சாதியைக் கூட விட முடியாமல் பெயருக்கு பின்னாடி சாதிப்பெயரையே பின்பற்றி எழுதி வந்துள்ளார்கள்...

மேலும் கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி யர் என்று அழுத்தமாக சொல்லியும் எவரும் சாதி சமய மதக் கடவுள்களை விட்டு விட்டு வள்ளலார் சொன்ன அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டும் பின்பற்றவே யில்லை...

வள்ளலார் எழுதிய திருஅருட்பாவை வெளியிட்டவர்களும் சாதியை விடமுடியாமல் தன் பெயர் பின்னாடி சாதிப் பெயரை போட்டுக் கொண்டார்கள்...

இவர்கள் அனைவரும்  உண்மை உணராத அறியாத முட்டாள்கள் ! என்பதை உணர்ந்து கொண்ட வள்ளலார்...

இதுவரையில் என்னுடன் இருந்தும் என்னுடன் பழகியும் சுத்த சன்மார்க்கம் என்றால் என்ன ? என்பதை இவர்களால் புரிந்து கொள்ளாமல் என்னுடன் சுற்றுகிறார்கள்.
அய்யோ பாவம் என்று உள்ளும் புறமும் வேதனை அடைகிறேன் என்று வள்ளலார் மன வருத்தம் கொள்கிறார்.

இராமலிங்கசாமி !

இந்த சாதி வெறிபிடித்த முண்டங்கள் எல்லாம் வள்ளலாருக்கு இராமலிங்க சாமி என்று பெயர் வைத்துள்ளார்கள்..

அந்த பெயரை வள்ளலார் ஏற்றுக் கொள்ளாமல்...

இராமலிங்கசாமி என் வழங்குவிப்பது எனக்கு சம்மதம் அன்று..என்னை ஆராவாரத்திற்கு அடுத்த பெயராகத் தோன்றுதலில் இனி அங்கனம் வழங்காமை வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்..
வள்ளலார்...

திருவருட்பிரகாச வள்ளலார் என்று பெயர் சூட்டினார்கள் ..அந்தப் பெயரையே வள்ளலார் ஏற்றுக் கொள்ளவில்லை.. வள்ளல் என்றால் யார் ? என்று கோபத்துடன் ஒரு கேள்விக் கேட்டு அதிர வைத்துள்ளார்

கடைசிவரை சிதம்பரம் இராமலிங்கம் என்றே கையொப்பம் இட்டு வந்தார்....

தன் தகப்பனார் பெயரையே உபயோகப் படுத்தவில்லை...இறைவன் பெயரையே தன் பெயருக்கு முன்னாடி போட்டுக் கொண்டவர் வள்ளலார்...

இவ்வளவு உண்மைகள் சொல்லியும் தான் செயல் படுத்தி அனுபவித்து காட்டியும்..

வள்ளலார் உடன் இருந்த அணுக்கத் தொண்டர்கள் ஒருவர் கூட வள்ளலார் சொல்லிய ஒழுக்கத்தில் தேறவில்லை என்பதே வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது...

இறுதியாக தன் அணுக்க தொண்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் எச்சரிக்கை செய்கிறார் !

22-10-1873 ஆம் ஆங்கில ஆண்டு
தமிழ் ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் புதவாரம் பகல் 8 மணிக்கு மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடி கட்டின உடனே நடந்த நிகழ்ச்சியின் முதல்  எச்சரிக்கை வாக்கியம்..

*இங்குள்ள நீங்கள் எல்லவரும் இதுவரையில் இருந்தது    போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள் என்று அழுத்தமாக சொல்கின்றார்...*

அதன்
பின்பாவது உணர்ந்தார்களா ? திருந்தினார்களா ? என்றால் இல்லவே இல்லை..

மேலும்...

நாம் நாமும் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம்.ஆகமம்.புராணம்.இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம் என்று அழுத்தமாக ஆணித்தரமாக சொல்லுகின்றார்..
அதைக் கேட்டாவது தங்களை மாற்றிக் கொண்டார்களா என்றால் இல்லவே இல்லை....

மேலும்..

சைவம்.வைணவம் முதலிய சமயங்களிலும்.வேதாந்தம்.சித்தாந்தம்.முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம் அவற்றிலும் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கின்றதே அன்றிப் புறங்கவியைச் சொல்ல வில்லை

ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க வேண்டாம்.

ஏன்எனில் அவைகளிலும்.அவ் வச்சமய மதங்களிலும் அற்ப பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக் கூடுமே அல்லது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கை உண்மை என்னும் ஆன்மா அனுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது என்று தெளிவாக சொல்லியும் எவரும் கேட்கவில்லை என்பது தெளிவாகின்றது...

வள்ளலார் உடன் இருந்தவர்கள் எதாவது பொருள் கிடைக்குமா...
சித்துக்கள் கிடைக்குமா என்றே சுற்றிக் கொண்டு இருந்தார்களேத் தவிர அருள் அனுபவத்தை பெற்றுக்கொள்ள விரும்பவில்லை...

ஏன்என்றால் ? அந்த அளவிற்கு சாதி.சமய.மதம் பற்றுக்கள் அவர்கள் ஆன்மாவில் பற்றிக் கொண்டு விடமுடியாததே  காரணமாகும்....

ஏன் என்றால்...

அவைகளில் ஒன்றிலாவது குழூஉக்குறி அன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் .தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச் சொல்லாமல் மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்..என்கிறார்

இப்போது வளர்ந்து வரும் சன்மார்க்க அன்பர்கள் திருஅருடபாவை நன்கு படித்து தெளிவடைந்து வருகிறார்கள்.மிகவும் பாராட்டிற்கு உரியவர்கள்..

இதெல்லாம் தானாக வருவதில்லை.
வளர்வதில்லை
என்போன்ற சுத்த சன்மார்க்க அன்பர்களின் கடுமையான பிரச்சாரம் .துணிவான பேச்சு.சுயநலம் இல்லாத இடைவிடாத உழைப்பு .மேலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அருளால் சுத்த சன்மார்க்கம் தீவிர வளர்ச்சி பெற்று வருகின்றன..

இப்போதும் சில கத்துகுட்டிகள் தங்கள் சுயநலத்திற்காக வள்ளலார் பெயரைச் சொல்லி வியாபாரம் செய்து வருகிறார்கள்...

காலப்போக்கில் உண்மை விளங்கி தெளிவு அடைய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் செய்வோம்....

இனிமேலாவது சுத்த சன்மார்க்கம் சொல்லும் உண்மையை உணர்ந்து..சாதி.சமயம்.மதம் போன்ற குப்பைகளில் இருந்து வெளியேறி...வள்ளலார் சொல்லிய ஜீவகாருண்ய ஒழுக்க நெறியை.. வாழ்க்கையில் கடைபிடித்து ..
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருள்பெற்று.
மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

மேலும் தொடரும் ....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896..

2 கருத்துகள்:

23 நவம்பர், 2018 அன்று 11:35 AM க்கு, Anonymous மனோ கூறியது…

ஐயா! இவ்வளவு பேசுகிறீர்களே! இதையெல்லாம் நீங்கள் வி்ட்டுவிட்டு ஏதேனும் லாபத்தை அடைந்தீர்களா?. பேச்சிலே அடக்கமின்மை, நான் செய்தேன், நான் செய்தேன் என தம்பட்டங்கள். தான் கண்டது(கற்பனையாக நினைப்பது) பெரிது என எண்ணிக்கொண்டு வாய்க்கு வந்தபடி உளறுகிறீர்கள். மற்றவர்கள் சரியில்லை அது சரியில்லை இது சரியில்லை என்று கூறும் உங்களால் இறவாமல் இருக்க முடியுமா?. சாவமல் இருப்பதை விடுங்கள் நரைத்த தங்களில் தலைமுடியை இயற்கையாகவே என்றும் கருமையாக மாற்ற இயலுமா?. அதை செய்துவிட்டு அடுத்தவர்களை குறைகூறுங்கள்.

 
23 நவம்பர், 2018 அன்று 2:35 PM க்கு, Anonymous மனோ கூறியது…

ஐயா!., தாங்கள்(முண்டங்கள், முட்டாள்கள் என்று) கூறிய வள்ளல் பெருமானின் நண்பர்களாகவும், தொண்டர்களாகவும், உதவுபவர்களாகவும் இருந்தவர்களுக்கு எழுதிய திருமுகங்களின் ஆரம்ப வரிகளை சரியாக படித்து புரிந்திருந்தாலே உங்களுக்கு அறிவில் சற்று தௌிவு ஏற்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு கடிதத்தின் ஆரம்ப வரியினை பாருங்கள்.
"அன்பு தயவு சிவநேய முதலிய நற்குணங்களிற் சிறந்து என்னிரு கண்மணி போன்றென்னிதயத்திருக்கும் சிரஞ்சீவி சிரஞ்சீவி ரத்தன முதலியாரவர்கட்கு" என எழுதியிருப்பார். மேலும் அவர்கள் முயற்சி எடுக்காமல் இருந்தால் பெருமானுக்கு அருகில் இருந்தவர்களை தவிர உலகில் இருந்த மற்ற எவருக்கும் இவ்வறு ஒரு மகான் அவதரித்துள்ளார் என்பது தெரிந்தே இருக்காது. இதன் அடிப்படையை அறிந்திருந்தால் தாங்கள் இவ்வாறு உளறியிருக்கமாட்டீர்கள்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு