திருஅருட்பா வெளியிட்ட சமய மதவாதிகள் !
திருஅருட்பா வெளியிட்ட சமய மதவாதிகள் !
திருஅருட்பா வெளியிட்ட சமய மதவாதிகள் செய்த சில சூழ்ச்சிகள்.
வள்ளலார் வழிபடு கடவுள் முருகன் என்றும்
வழிபடும் குரு.திருஞான சம்பந்தர் என்றும்.
வழிபடும் நூல் திருவாசகம் என்றும்..
கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன்.என்றும்
வாழையடி வாழைஎன வந்த திருகூட்ட மரபில் வள்ளலாரும் ஒருவரே என்றும்.
மக்களை நம்ப வைத்து குழப்பி விட்டு விட்டார்கள்.
*பொய்யான தகவல்களை திருஅருட்பா வில் சேர்த்து வெளியிட்டுள்ளார்கள்..*
இவை எதைக் காட்டுகிறது .சமய மதங்களை காப்பாற்ற செய்த சூழ்ச்சிகளாகும்..
அவர்கள் பின்பற்றிவந்த நாயன்மார்களை காப்பாற்ற இப்படி தவறான கருத்துக்களை திருஅருட்பாவிலே சேர்த்து உள்ளார்கள்..
வள்ளலார் வரலாறுகளை முழுவதும் படித்து உணர்ந்து இருந்தால் இப்படி தவறான கருத்துக்களை சேர்த்து வெளியிட்டு இருக்க மாட்டார்கள்..இவற்றை அறியாமை என்று சொல்வதா ? வேண்டும் என்றே செய்தார்கள் என்று சொல்வதா ?
வள்ளலார் சொல்லுவதை கவனமாக கவனிக்கவும்.!
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் வருவிக்க உற்றவன் நான் என்று வள்ளலார் பாடலில் தெளிவாக சொல்லுகின்றார்..
பாடல் !
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத் திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்திச் சன்மார்க்க சங்கத் தடைவித் திடஅவரும்
இகத்தே பரத்தைப் பெற்றுமகிழ்ந் திடுதற் கென்றே எனைஇந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன் அருளைப் பெற்றேனே.!
என்னும் பாடலை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும்
பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா துயிர்கள்பல
பேதமுற் றங்கும்இங்கும்
போருற் றிறந்துவீண் போயினார் இன்னும்வீண்
போகாத படிவிரைந்தே
புனிதமுறு சுத்தசன் மார்க்கநெறி காட்டிமெய்ப்
பொருளினை உணர்த்திஎல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதிநீ
என்பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிகஎன் றிட்டனம் மனத்தில்வே
றெண்ணற்க என்றகுருவே
நீருற்ற ஒள்ளிய நெருப்பே நெருப்பினுள்
நிறைந்திருள் அகற்றும்ஒளியே
நிர்க்குணா னந்தபர நாதாந்த வரைஓங்கு
நீதிநட ராஜபதியே.!
சாதி.சமய.மதம் போன்ற பொய்யான நெறிகளால் உலக மக்கள் சண்டையிட்டு அழிந்து கொண்டு உள்ளார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன் இனியும் அழியவிடாமல் மக்களை காப்பாற்ற வேண்டும் என்பதால்.
புனிதமுறு சுத்த சன்மார்க்க மெய் நெறியை தொடங்கி.மெய்பொருளை நன்கு உணரும்படி செய்ய வேண்டும்.
அதே நேரத்தில் பொய்நெறிகளான சாதி சமய மதம் போன்ற நெறிகளை இருக்கும் இடம் தெரியாமல் மறைக்க வேண்டும்.
ஆகவே நீ என்பிள்ளை என்பதால் இந்த வேலையை உன்னிடம் ஒப்படைக்கிறேன் என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளலார் என்னும் பக்குவம் உள்ள ஆன்மாவை தேர்வு செய்து இவ் வுலகத்திற்கு அனுப்பி வைக்கிறார்..
இவற்றை வள்ளார் உடன் இருந்தவர்களும்.
திருஅருட்பாவை வெளியிட்டவர்களும் ஏன் ? புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் என்கேள்வி !
மேலும் சத்திய பெரு விண்ணப்பத்தில் தெளிவாக எழுதி வைத்துள்ளார்
எனக்கு அவ்வாலிபப் பருவம் தோன்றுதற்கு முன்னரே எல்லா உயிர்கட்கும் இன்பந் தருவதற்கு அகத்தும் புறத்தும் விளங்குகின்ற அருட்பெருஞ்ஜோதி உண்மைக் கடவுள் ஒருவரே உள்ளார் என்று அறிகின்ற மெய்யறிவை விளக்குவித்தருளினீர்.
வாலிபப்பருவம் தோன்றிய போதே சைவம் வைணவம் சமணம் பவுத்தம் முதலாகப் பலபெயர் கொண்டு பலபட விரிந்த அளவிறந்த சமயங்களும் அச்சமயங்களில் குறித்த சாதனங்களும் தெய்வங்களும் கதிகளும் தத்துவ சித்தி விகற்பங்கள் என்றும்,
அவ்வச் சமயங்களில் பலபட விரிந்த வேதங்கள் ஆமங்கள் புராணங்கள் சாத்திரங்கள் முதலிய கலைகள் எல்லாம் தத்துவ சித்திக் கற்பனைக் கலைகள் என்றும், உள்ளபடியே எனக்கு அறிவித்து அச்சமயாசாரங்களைச் சிறிதும் அனுட்டியாமல் தடைசெவித் தருளினீர்.
அன்றியும் வேதாந்தம் சித்தாந்தம் போதாந்தம் நாதாந்தம் யோகாந்தம் கலாந்தம் முதலாகப் பலபெயர் கொண்ட பலபடவிரிந்த மதங்களும் மார்க்கங்களும் சுத்த சன்மார்க்க அனுபவ லேச சித்தி பேதங்கள் என்று அறிவித்து அவைகளையும் அனுட்டியாதபடி தடைசெய்வித் தருளினீர்!
என்று எல்லோருக்கும் புரியும்படி எழுதி வைத்துள்ளார்..இப்படி இருக்க..
வழிபடும் கடவுள் முருகன் என்றும்.
திருஞானசம்பந்தர் குரு என்றும்.
வழிபடுநூல் திருவாசகம் என்றும்
திருஅருட்பா வில் பதிவு செய்துள்ள இவர்களை சாடினால் சில சமய மத சன்மார்க்கிகளுக்கு ஏன் கோவம் பொத்திக் கொண்டு வருகிறது....
மேலும்
குமாரப் பருவத்தில் என்னைக் கல்வியிற் பயிற்றும் ஆசிரியர் இன்றியே என் தரத்தில் பயின்று அறிதற்கு அருமையாகிய கல்விப் பயிற்சியை எனது உள்ளகத்தே இருந்து பயிற்றுவித்து அருளினீர் என்று தெள்ளத் தெளிவாக எழுதி வைத்துள்ளார்....
மேலும் வள்ளலார்.நிறைய பாடல்களிலே பதிவு செய்துள்ளார் !
கற்றதும் நின்னிடத்தே .பின் கேட்டதும் நின்னிடத்தே என்றும்.
பள்ளியில் பயிற்றாது என்தனைக் கல்வி பயிற்றி முழுதும் உணர்வித்தாய் என்றும்.
ஓதாதுணர உணர்த்தி உள்ளே நின்று உளவு சொன்னது நீதான் என்றும்.
ஓது மறை முதற் கலைகள் ஓதாமல் உணர உணர்வில் இருந்து உணர்த்தினாய் என்றும்
ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக் கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்த்தினாய் என்றும்
ஓதாது அனைத்தும் உணர்கின்றேன் என்றும்
ஓதாது உணரந்திட ஒளி அளித்து எனக்கே ஆதாரமாகிய அருட்பெருஞ்ஜோதி!
என்பன போன்ற அகச் சான்றுகள் நிறைய பாடல்களில் உள்ளன..
இப்படி எல்லாவற்றையும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்திலே கற்றேன் பெற்றேன் என்கிறார் வள்ளலார்.
இப்படி இருக்க எப்படி ?
வழிபடுகடவுள் முருகன் என்றும்
திருஞானசம்பந்தர் குரு என்றும்
திருவாசகம் வழிபடும் நூல் என்றும்
திருஅருட்பா விற்குள் எப்படி நுழைந்த்து...
இவைகளை நுழைய வைத்தது யார் ? என்று ஈரோடு கதிர்வேல் கேட்டால் கதிர்வேல் தரம் கெட்டவனா ?
முட்டாள்கள் என்றும் அறிவில்லாதவர்கள் என்றும்.முண்டங்கள் என்றும் பித்துலகீரே என்றும் பைத்தியக்கார்ர்கள் என்றும் நான் யாரையும் சொல்லவில்லை வள்ளலாரே மறைமுகமாய் சொல்லுகிறார் அவற்றை நான் வெளிப்படுத்துகிறேன்..
வள்ளலாரைப்போல் சாதி சமய மதங்களையும் அவற்றை பின்பற்றுபவர்களையும்.வள்ளலாரைப் போல் திட்டியவர்கள் உலகத்தில் எவரும் இல்லை....ஆயிரக் கணக்கான பாடல்கள் ஆதாரமாக உள்ளன.
மேலும்
வள்ளலார் வாழையடி வாழை என வந்தவர் என்ற புரளி வேறு !
வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் அப்படி இருக்க ..வாழையடி வாழை என வந்த திருகூட்ட மரபை சார்ந்தவர் என்று எப்படி சொல்லுவது.ஏற்றுக் கொள்வது...சிந்திக்க வேண்டும்
வள்ளலார் பாடல் !
பிரியேன் என்றல் தலைப்பில்.....உள்ள பாடல்...
வாழையடி வாழைஎன வந்ததிருக் கூட்ட
மரபினில்யான் ஒருவன்அன்றோ வகைஅறியேன் இந்த
ஏழைபடும் பாடுனக்குந் திருவுளச்சம் மதமோ
இதுதகுமோ இதுமுறையோ இதுதருமந் தானோ
மாழைமணிப் பொதுநடஞ்செய் வள்ளால்யான் உனக்கு
மகன்அலனோ நீஎனக்கு வாய்த்ததந்தை அலையோ
கோழைஉல குயிர்த்துயரம் இனிப்பொறுக்க மாட்டேன்
கொடுத்தருள்நின் அருள்ஒளியைக் கொடுத்தருள்இப் பொழுதே.!
மேலே கண்ட பாடலை தவறாக புரிந்து கொண்டு மேடை மேடையா சமய மதவாதிகள.
பேசுகிறார்கள்.. விபரம் அறியாமல்
சன்மார்க்கிகளும் பேசி வருகிறார்கள்
வள்ளலார் தெளிவாக பதிவு செய்துள்ளார்.
இறைவன் அருள் வழங்க.. காலம். தாழ்த்துகிறார் அதற்கு
வள்ளலார் இறைவனிடம் உரிமையுடன் கேட்கிறார் .நான் வாழையடி வாழை என வந்த திருக்கூட்டத்தில் ஒருவன் அன்றோ ? என கேள்வி கேட்கிறார்
நான் அந்த வழியில் வந்தவனா ? அப்படி வந்தவன் அல்ல
நீ வருவிக்க வந்தவன் என்பது உமக்குத் தெரியாதா என்பது பொருள்...
சிவன் அடியார்களுக்கு பல சோதனைகளையும் கொடுப்பது உமது வழக்கம் .
என்னை அப்படி சோதனை செய்யலாமா ?
மாழைமணி பொது நடஞ் செய் வள்ளாய் நான் உனக்கு மகன் அலனோ ! ..நீ எனக்கு வாய்த்த தந்தை அல்லவா ! எனவே இந்த உலக உயிர்கள் படும் துன்பத்தை பார்த்து கொண்டு என்னால் இருக்க முடியாது பொறுக்கவும் முடியாது
எனவே இப்பொழுதே நின் அருள் ஒளியை கொடுத்து மகிழ்விப்பாய் என்று இறவனிடம் உரிமையுடன் கேட்டு பெறுகின்றார் வள்ளலார்.
அகவலிலே சொல்லுகின்றார்...
எச்சோதனை களும் இயற்றாது எனக்கே
அச்சோ என்ற அருள்
அருட்பெருஞ்ஜோதி !
எஞ்சேல் உலகினில் யாதொன்று பற்றியும் அஞ்சேல் என்ற அருள்
அருட்பெருஞ்ஜோதி !
என்ற வரிகளினால் உணர்ந்து கொள்ள வேண்டும்...வள்ளலார் சமய மத அருளாளர்கள் வரிசையில் வந்தவர் அல்ல..
மேலும்... நான் ஒரு புதியவன் என்று சொல்லுகிறார்....
மேலும் அடுத்து....
கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் என்று வள்ளலார் சொல்லியதாக ஒரு புரளியை சமய மத வாதிகள் கிளப்பி விட்டு விட்டார்கள்...
இதை எல்லோரும் மேடை மேடையா பேசிக் கொண்டே இருந்தார்கள் ..
ஈரோடு கதிர்வேல் தான் வள்ளலார் அப்படி எதுவும் சொல்லவில்லை என்று மேடைதோறும் மறுப்பு சொல்லி அடங்க வைத்தவன்.
திருஅருட்பாவில் எந்த இடத்திலும்.கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் என்பதற்கு ஆதாரம் இல்லை...
கடை வைத்துள்ளேன் என்பதற்கு திருஅருட்பாவில் ஆதாரம் உண்டு !
ஆனந்த களிப்பு என்ற தலைப்பில் ! ...
ஆரண வீதிக் கடையும்-
சுத்த ஆகம வீதிக் கடையும்-
சேர நடுக்கடை பாரீர்-
திருச்சிற்றம்பலத்தே திருநட ஜோதி !
ஜோதியுட் ஜோதியுட் ஜோதி-
சுத்த ஜோதி சிவஜோதி
ஜோதியுட் ஜோதியுட்ஜோதி
என்று பதிவு செய்கிறார்..
திருஅருட்பா வருவதற்கு முன்னாடி.ஆரணக்கடை
வேத ஆகமக் கடை எல்லாம் வைத்துள்ளார்கள்.அவற்றை எல்லாம் புறம் தள்ளிவிட்டு..மத்தியில் அதாவது நடுவில் நடுக் கடையாக வைத்துள்ளேன் என்கின்றார்....
நடுக்கடை வைத்துள்ளவர் கடையை கட்டிக் கொள்வாரா ? சிந்திக்க வேண்டும்..
இதுவும் சமய மத வாதிகளின் சதியே என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்....
எதையும் ஆதாரம் இல்லாமல் ஈரோடு கதிர்வேல் பேச மாட்டான் எழுதவும் மாட்டான்.என்பதை ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை உள்ளவர்கள் தெரிந்து புரிந்து அறிந்து கொள்ள வேண்டும்...
இது சுத்த சன்மார்க்க காலம் !
சுத்த சிவ சன்மார்க்கம் ஒன்றே இனி எல்லா உலகத்தும் விளங்கும்..
இதற்கு எவ்விதப்பட்ட தடைகளும் இல்லை .
தடையற்ற பெருநெறி வழங்கும் காலம்..
இக்காலம் தொட்டு அளவிறந்த நெடுங்காலம் வரையில் வழங்கும்.அதன் மேன்மேலும் வழங்கும் என்று அழுத்தமாகவும் ஆணித்தரமாகவும் பதிவு செய்துள்ளார் வள்ளலார்....
எனவே சமய மதவாதிகளின் சூழ்ச்சியை அருள் வல்லபத்தைக் கொண்டு விரட்டி அடித்து துரத்திக் கொண்டுள்ளார்..
வள்ளலார்....
நாம் சுயநலம் இல்லாமல் பொது நலம் எண்ணம் கொண்டு வாழ்ந்தாலே.அவரவர் தகுதிக்கு தகுந்தவாறு இறைவன் கொடுக்க வேண்டியதை கொடுக்க வேண்டிய காலத்தில் கண்டிப்பாக கொடுப்பார்....
என்ன கொடுப்பார் பொருளை அல்ல .அருளைக் கொடுப்பார் இது சத்தியம்...
வள்ளலார் பாடல் !
சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்
துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே
வெல்லுகின்ற வார்த்தைஅன்றி வெறும்வார்த்தை என்வாய்
விளம்பாதென் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்
செல்லுகின்ற படியேநீ காண்பாய்இத் தினத்தே
தேமொழிஅப் போதெனைநீ தெளிந்துகொள்வாய் கண்டாய்
ஒல்லுகின்ற வகைஎல்லாம் சொல்லுகின்றே னடிநான்
உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!
மேலே கண்ட பாடலில் உள்ளபடி என் வாழ்க்கையில் பின்பற்றி வருகிறேன்.
என்னைப் போற்றினாலும்.தூற்றினாலும் எதைப் பற்றியும் நான் வருத்தமோ வாட்டமோ அடைய மாட்டேன்...அஞ்சவும் மாட்டேன்..
காரணம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னை இயங்க வைத்து கொண்டு உள்ளார் என்பது எனக்கு தெளிவாகத் தெரியும்..
என்வழி என்வாழ்க்கை வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க வழி ஒன்றே ! என் வழி வள்ளலார் காட்டிய நேர் வழி !
தொடரும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !
அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

1 கருத்துகள்:
அறிவின் சுழிய நிலைக்கு சென்று கொண்டிருக்கும் ஈரோடு கதிர்வேலு ஐயா அவர்களே. தாங்கள் கூறுவது உண்மையெனில் அது எவ்வாறு ஒவ்வொருவரும் தனித்து வௌியிட்ட பதிப்பிலும் ஒரே மாதிரியாக வந்திருக்கும்.
மேலும் பெருமான் ஒவ்வொரு நிலையாக கடந்து வந்தவர் ஒரு ஆய்வாளர் போன்றவர். ஒரு ஆய்வாளர் தான் முடிவான கொள்கையில் மட்டுமே சரியானவற்றை வௌியிடுவார். அப்போது அதற்கு முன் வௌியிட்டகைகளில் உள்ள குறைகள் பற்றி சொல்லி பின்பு முடிவை வௌியிடுவார். அதுபோலவே தான் சமய மதங்களில் எவ்வளவு ஊன்றி இருந்தேன் என்பதற்கு சாட்சி வேறு எவையும் வேண்டாம் நான் எழுதிய தோத்திரங்களே போதும் என கூறியுள்ளார்.
மேலும் தங்களி்ன தலைக்கணம் நாளுக்குநாள் அதிகரித்து செல்வதே எவற்றையும் சரியாக புரிந்துகொள்ளாததற்கு காரணம் என்பதை அறியவும். தாங்கள் வௌியிட்ட ஒரு இடுகையில் (முண்டங்கள், முட்டாள்கள் என்று) கூறிய வள்ளல் பெருமானின் நண்பர்களாகவும், தொண்டர்களாகவும், உதவுபவர்களாகவும் இருந்தவர்களுக்கு எழுதிய திருமுகங்களின் ஆரம்ப வரிகளை சரியாக படித்து புரிந்திருந்தாலே உங்களின் தலையில் இருந்த கணம் ஓடியிருக்கும் எடுத்துக்காட்டாக ஒரு கடிதத்தின் ஆரம்ப வரியினை பாருங்கள்.
"அன்பு தயவு சிவநேய முதலிய நற்குணங்களிற் சிறந்து என்னிரு கண்மணி போன்றென்னிதயத்திருக்கும் சிரஞ்சீவி சிரஞ்சீவி ரத்தன முதலியாரவர்கட்கு" என எழுதியிருப்பார். மேலும் அவர்கள் முயற்ச்சி எடுக்கால் இருந்தால் பெருமானை அருகில் இல்லாமல் உலகில் இருந்த மற்ற எவருக்கும் இவ்வறு ஒரு மகான் அவதரித்துள்ளார் என்பது தெரிந்தே இருக்காது. இதன் அடிப்படையை அறிந்திருந்தால் தாங்கள் இவ்வாறு உளறிஇருப்பீர்களா?.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு