புதன், 9 ஆகஸ்ட், 2017

உணவு தான் மரணத்திற்கு காரணம்!


உணவு தான் மரணத்திற்கு காரணம்!

நாம் பிறந்த நாள் தொடங்கி திரவ உணவு முதல் திட உணவு வரை.தினமும் ஏதோ ஒருவகை உணவை உட் கொள்கிறோம். மரணம் அடையும் வரை உணவை உட் கொண்டே வருகிறோம்

இதில் சாத்வீக உணவு.தாமஸ உணவு என்று இரண்டு வகையான உணவு உட் கொண்டு வருகிறோம்

தாவர உணவு வகைகள் ஒன்று.புலால் என்னும் மாமிச உணவு ஒரு வகை.இந்த இரண்டில் உடல் நலத்திற்கு சிறந்த்து தாவர உணவு வகைகள்.

உடல் நலத்திற்கு கெடுதல் செய்வதும்.அறிவு வளர்ச்சி குறைவதற்கும் காரண காரியமாக இருப்பது மாமிச உணவாகும்.

ஆனாலும் எந்த உணவு உட்கொண்டாலும் மரணம் என்பது நிச்சயம்.

உணவு உட் கொள்ளுகின்ற வரை இறைவன் அருளைப் பெற முடியாது.மரணத்தை வெல்லவும் முடியாது.

உணவு கொண்டால் விந்து என்னும் சுக்கிலம் உற்பத்தி யாகிக் கொண்டே இருக்கும்.சுக்கிலம் என்னும் பூதவிந்து உற்பத்தியானால் எக்காலத்திலும் மரணத்தை வெல்லவே முடியாது.

விந்துவை அடக்கினாலும் தவத்தால்.தியானத்தால்.யோகத்தால்.குண்டலினி சக்தியை மேலே ஏற்றினாலும் எந்த பயனும் கிடைக்காது.

வள்ளலார் சொல்லுவார் ....

சோற்றாசை யோடு காம சேற்றாசைப் படுவோரை துணிந்து கொள்ள கூற்று ஆசைப்படும் என்கிறார்.எமன் என்னும் கூற்றுவன் ஆசையோடு அழைத்து செல்வானாம்...அதாவது மரணம் தானேவந்து விடும்.

சுத்த சன்மார்க்கிகள் உணவை மாற்ற வேண்டும்!

நாம் உண்ணும் உணவு புழுக்கின்ற உணவு என்று பெயர். துற் நாற்றம் உள்ள மலம் வரும் உணவு.அதை நிறுத்தி புழுக்காத. உணவை உட் கொள்ளப் பழகிக்கொள்ள  வேண்டும் .

அதாவது.சர்க்கரை.கற்கண்டு.தேன்.அயன்நெந்தூரம்.தாமரை பஸ்பம்.போன்ற பொருள்களை உட் கொண்டு உடம்பை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்கிறார் வள்ளலார்.

அப்படி உணவை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும். அதன் பிறகு ஆன்மா.ஜீவன் உடம்பு புழுக்கின்ற உணவை விரும்பாது. சுத்த உடம்பாக மாறும்.உண்மை அறிவு.உண்மை இரக்கம்.உண்மை அன்பு.தானாகவே உண்டாகும்.

மண்ணாசை.பெண்ணாசை.பொன்ஆசைகள் தானே நின்று விடும்.பூத புழுக்கின்ற உணவினால்  தான் எல்லா ஆசைகளும்.துன்பங்களும் துயரங்களும் அச்சமும்.பயமும்.இறுதியில் மரணமும் வந்து விடுகின்றது.

சோற்றிலே விருப்பம் சூழ்ந்திடில் ஒருவன் துன்னு நற் தவம் எல்லாம்சுருங்கி ஆற்றிலே கரைத்த புளி எனப் போகும் என்கின்றார் வள்ளலார்.

மேலும் அகவலில்

உண்பவை எல்லாம் உண்ணுவித்து என்னுள் பண்பினில் விளங்கும் பரம சற்குருவே !

எதை உட் கொள்ள வேண்டுமோ அதை உட் கொள்ள வைத்து என்னை நல்ல பண்போடு வளர்த்து  நல்ல உண்மையான வழிகாட்டி உயர்ந்த இடத்தில் வைத்துள்ள ஒப்பற்ற பரம சற்குருவே என்கிறார் வள்ளலார்.

வள்ளலாருக்கு உயர்ந்த குருவாக இருந்து வழி காட்டியவர்தான் அருட்பெரும்ஜோதி ஆண்டவராகும்.

நாமும் உண்மைக் கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொண்டால் மட்டுமே உண்மை ரகசியங்கள் யாவும் விளங்கிக் கொண்டே இருக்கும்.

ஆண்டவரிடம் தொடர்பு கொள்ளவும்.அருளைப் பெறவும் தடையாக இருப்பது புழுக்கின்ற பூத உணவு பழக்கமாகும்.அவற்றை மாற்றி புழுக்காத உணவை உட் கொண்டு.சுத்த தேகமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.

அந்த தகுதி பெற்றவர்களுக்கு மட்டுமே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்.

எனவே உணவே மரணத்திற்கு காரண காரியமாக இருக்கிறது என்பதை அறிந்து தெரிந்து புரிந்து  வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

 • ஈரமும் அன்பும்கொண் டின்னருள் பெற்றேன்
 • என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி
 • காரமும் மிகுபுளிச் சாரமும் துவர்ப்பும்
 • கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
 • ஊரமு துண்டுநீ ஒழியாதே அந்தோ
 • ஊழிதோ றூழியும் உலவாமை நல்கும்
 • ஆரமு துண்டென்னோ டாடேடி பந்து
 • அருட்பெருஞ் சோதிகண் டாடேடி பந்து. ஆடேடி பந்து !

 • மேலும் விரிக்கில் பெருகும்.....

 • அன்புடன். ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
 • 9865939896..... • தொடரும்
  0 கருத்துகள்:

  கருத்துரையிடுக

  இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

  இந்த இடுகையின் இணைப்புகள்:

  இணைப்பை உருவாக்குக

  << முகப்பு