செவ்வாய், 15 ஆகஸ்ட், 2017

ஒன்றே கடவுள் !

ஒன்றே கடவுள் !

அருட்பெருஞ்ஜோதி;
       "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க"
ஆன்மநேய உறவுகள் அனைவருக்கும் வந்தனம்;
              இந்த உலகைப் படைத்து இவ்வுலகத்தில் வாழ்வதற்காக அறிவற்றுக்கிடந்த நமக்கு ஓரறிவு முதல் ஆறறிவு வரை தேகம் கொடுத்து புல்,பூண்டு ,செடிகொடி,மரம்,சிப்பி,நத்தை, எறும்பு,வண்டு,ஈ,பறவை,விலங்கு,மனிதர் என பல்வேறு தேகம் கொடுத்து ,
          நாம் வாழ்வதற்கு தேவையான வாழ்வியலுக்குற்ற பொருட்களையும் படைத்து நம்மை வாழவைத்துக் கொண்டிருக்கும் நமது "ஒரே கடவுளை"
 
          நாம் செய்த தொழில், சார்ந்திருந்த இனம்,பேசியமொழி,வாழந்த தேசம் என்ற வேற்றுமையால் நமக்கென்று பலசாதிகள்,மதங்கள்,சமயங்கள் பல்வேறு மார்க்கங்களை ஏற்படுத்தி ,
அம்மார்க்கத்திற்கு என்று பல நெறிமுறைகளை வகுத்து ,துதித்து , வணங்கி, வழிபட்டு நாம் அனைவரும்"உயிர்க்குலம்" என்ற ஒற்றுமை உணர்வை மறந்து நம்மைப் "படைத்த ஒரே கடவுளை" கூறுபோட்டுக்கொண்டு,
               
                உருவமற்று அருட்பெருஞ்ஜோதி வடிவாகி பாரொடுவிண்ணாய் பரந்ததோர் ஜோதியாய் எங்கும் நீக்கமற கலந்து நிறைந்து விளங்கும் கடவுளை  நமது கருத்து வேற்றுமைக்கு தக்கவாறு,
       
          அக்கடவுளுக்கு மனிதர்களைப் போன்றே கை கால்கள் அமைத்து பலவடிவத்தையும், வண்ணத்தையும் கொடுத்து , அவர்கள் கையில் பல கூறிய ஆயுதங்களையும்  கொடுத்து, அவர்களுக்கென்று வாகனமாக புலி,சிங்கம்,யானை,காளை,மயில்,எலி என்று ஒவ்வொரு வாகனத்தையும் காட்டி
   நமது அறியாமையால் இதுநாள் வரை நமது முன்னோர்கள் காட்டிய நெறிமுறையிலே கடவுளை தனித்தனியாக பித்துவைத்து நாமும் ஒற்றுமை இல்லாமல் பிரிந்துகிடந்து  உண்மைவிளங்காது
  பயனற்று வழிபட்டுவந்தோம்;

      தற்போது அதற்கு விடியல் உதயமாகிவிட்டது ஆம்,
    நமது கருணைவடிவாம் அருட்பிரகாச வள்ளல் பெருமான் இவ்வுலக உயிர்களின்மீது கொண்டஉயிர் இரக்கத்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் "பரிபூரண அருளையும் ,
    அழியா நித்திய தேகத்தையும் பெற்றுக்கொண்டு,
  இவ்வுலகிலேயே நம்முடனும் நமது அகத்திலும் கலந்து நிறைந்து இவ்வுலகையும் இவ்வுலக சரஅசர பொருட்களையும் ஐந்து தொழிலால் அருளாள் ஆளுகின்ற வல்லபத்தையும் பெற்றுக்கொண்டு இன்று இவ்வுலகை அருளாட்சி செய்துவருகின்றார்கள்;

      இனி ஆன்ம உறவுடன் ஒன்றுபட்டு ஒருமையுடன் வாழவேண்டியநாம் பிரிந்து தனித்தனியாக வாழ்ந்த அவலநிலையில் இருந்து மாறி ஒன்று சேர்ந்து கைக்கோர்த்து வாழும் காலம் உதயமாகிவிட்டது ,

      அவற்றை வள்ளல் பெருமானே அருட்பாவில் தெளிவுபடுத்துகின்றார்கள் அவற்றைப் பார்ப்போம்;

          ஆதியும் நடுவும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருட்பேரொளி வடிவாய் என்உள்ளகத்தில் பொதுவில் கலந்து நிறைந்துவிட்டார்கள்;
      இதனால் நான் அழியா நித்திய தேகத்தைப் பெற்றுக்கொண்டு ,
 சுத்த,பிரணவ,ஞான தேகமாகிய முத்தேக சித்தியையும், எல்லாம் செய்ய வல்ல அருட்பெருஞ்சித்தியையும்,
பெற்றுக்கொண்டேன் உலகவரே ;
     
        ஆகலில் இனி நீர் கவலைக்கொள்ளவேண்டாம்,
  உங்கள் அனைவரையும் ஒன்று சேரவிடாமல் பிரித்துவைத்து , கடவுள் உண்மையை அறியவிடாமலும் ,
    பிறப்பு இறப்பு என்னும் பவக்கடலை கடப்பதற்குரிய வழியைக்காட்டாமலும் மூழ்கடித்த அந்த இரக்கமற்ற கொடியசாதி,சமய,மதத்தை எல்லாம் நீக்கி , கொலை புலை தவிர்த்த குருநெறியாம் சுத்தசன்மார்க்க புணித நெறியிலே உங்கள் அனைவரையும் புகுத்துவித்து,
"சுத்தசன்மார்க்கம்" என்னும் ஒரேநெறியிலே இவ்வுலகவலகவர் அனைவரையும் நிறுத்தி ,
   அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரையே வணங்கி துதித்து வழிபட்டிடவும்,
விரைந்து அவர்கள் வினைகளை நீக்கிக்கொண்டு பக்குவத்திலே அழியக்கூடிய இத்தேகத்தை அழியா நித்தியதேகமாக்கிக்கொண்டு வாழ்வை நிலைபெறச்செய்து இவ்வுலகிலேயே மரணத்தை தவிர்த்துக்கொண்டு "அனக" அருள்வாழ்க்கையில் வாழவைப்பேன் இது உண்மை ,
       ஆகலில் நீங்கள் அனைவரும் இனியும் காலம் தாழ்த்தாது விரைந்து வாருங்கள் சன்மார்க்கத்திற்கு என்று வள்ளல் பெருமான் உலகவரை அழைக்கின்றார்கள்;
     
       இது சாதாரண மனிதரின் அழைப்பு கிடையாது ;
      இவ்வுலகையே அருளாள் ஆண்டுவரும் அருளாளரின் அழைப்பு ,
   அவர்கள் நம்அனைவரையும் சன்மார்க்கத்தில் புகுத்துவிப்பது சத்தியமே என்பதை உணர்ந்து,

       நாமும் இதுநாள் வரையில் தனித்தனியாக பிரிந்துகிடந்தது போதும்
   நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழக்கூடிய புணித சுத்தசன்மார்க்க காலம் உதயமாகிவிட்டது ,
      நாம் நமது கருத்து வேற்றுமையை தூக்கி எறிந்துவிட்டு ஆன்மநேய சகோதரத்தன்மையுடன் ஒன்றுபடுவோம் !
  அழியா வாழ்வு பெறுவோம் !
    அனைவரும் வாரீர் சுத்தசன்மார்க்கத்திற்கே !
..........நன்றி;
வள்ளல் மலரடிப் போற்றி போற்றி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்🌼🌸🌺

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு