ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

அன்பு எங்கே உள்ளது ?

அன்பு எங்கே உள்ளது ?

நாம் அன்பிற்காக தினமும் ஏங்கிக் கொண்டு உள்ளோம்.

உண்மையான அன்பை பெற முடியாமல் தவிக்கிறோம்.

அப்படியே அன்பு கிடைத்தாலும் அவை நிலைப்பதில்லை.

நிரந்தரமான அன்பு.உண்மையான அனபு எங்கு தேடினாலும் கிடைப்பதில்லை.

நம்முடைய தாய் தந்தையின் காம இச்சையினால் சுய உணர்ச்சியினால் சுய நல இன்பத்தினால் தோன்றிய அன்பினால் உடல் உறவு கொண்டு.ஆசையைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

அந்த இன்பத்தின் காம ஊற்றால் உண்டாகும் விந்து சக்தியால்  இரண்டு பேருடைய விந்து சக்தியும்  ஒன்று சேர்ந்து. உயிரும் உடம்பும்  பெற்று  இந்த உலகில் பிறந்து வாழ்கிறோம்.

பெற்று எடுத்த கடமைக்காக்  தாய் தந்தையர்கள்  வளர்த்து ஆளாக்கி படிக்க வைத்து பணத்திற்காக வேலை வாங்கிக் கொடுத்து.வயது வந்த உடனே அவர்களுக்கு துணை வேண்டும் என்பதற்காகவும் காமத்தை தீர்த்துக் கொள்வதற்கும். பெண்ணுக்கு ஆணும்..ஆணுக்கு பெண்ணும் பார்த்து   திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள்.அத்துடன் அவரகளின் அன்பும் கடமையும் தீர்ந்து விடுகின்றது.

இது தொடர் கதையாக ஆணும் பெண்ணும் செய்து கொண்டே வருகிறார்கள்.

எனவே தாய் தந்தையர்கள் அன்பும் நிலை இல்லாமல் போய்விடுகின்றது.

அதே போல் தான் உலகில் உள்ள உற்றவர்கள்.பெற்றவர்கள். நண்பர்கள்.உறவினர்கள் .மற்றவர்கள்.கல்வி போதிக்கும் குருமார்கள்.ஆன்மீக வழிகாட்டும் குருமார்கள் மற்றும் உலகில் உள்ள எல்லோருக்குமே உண்மையான நிரந்தரமான அன்பை  செலுத்தவோ.காட்டவோ முடியாது.இதுதான் உண்மை.

உண்மையான அன்பைக் காட்டும் ஒரே ஒருவர்..ஆன்மாவின் உண்மைத் தந்தை யாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ஒருவரே !

அவர் ஒருவர் மட்டுமே அனத்து ஆன்மாக்கள் இடத்தும் உயிர்கள் இடத்தும் உண்மையான .நிரந்தரமான அன்பைக் காட்டுபவர்.செலுத்துபவராகும்.

அதனால் தான் தனிப் பெரும் தந்தையாகிய அருட்பெரும்ஜோதி ஆண்டவரே என்றும்

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்றும்.வாயார வாழ்த்துகின்றோர் மனத்து அமர்ந்த தெய்வம் என்று வள்ளலார் போற்றி புகழ்கின்றார்.வாழ்த்துகின்றார்.மற்றவர்களும் அறிந்து.தெரிந்து கொள்வதறகு ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடன்  சொல்லுகின்றார்.

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இடத்தில் மட்டுமே நாம் தொடர்பு கொள்ள வேண்டும்.

நமக்கு உண்மையான அன்பை செலுத்தும் கடவுளைப்பற்றி பதிவு செய்துள்ள பாடல் .....


புகுந்தருணம் இதுகண்டீர் நம்மவரே நான்தான்
புகல்கின்றேன் என்மொழிஓர் பொய்மொழிஎன் னாதீர்
உகுந்தருணம் உற்றவரும் பெற்றவரும் பிறரும்
உடைமைகளும் உலகியலும் உற்றதுணை அன்றே
மிகுந்தசுவைக் கரும்பேசெங் கனியேகோற் றேனே
மெய்ப்பயனே கைப்பொருளே விலையறியா மணியே
தகுந்ததனிப் பெரும்பதியே தயாநிதியே கதியே
சத்தியமே என்றுரைமின் பத்தியொடு பணிந்தே. !

மேலே கண்ட பாடல் வள்ளலார் சித்தி பெருவதற்கு முன் மக்களுக்குத் தெளிவாக தெரியப் படுத்துகின்றார்.

எனவே உண்மையான அன்பை பெருவதற்கும்.அருளைப் பெருவதற்கும் .மரணத்தை வெல்லுவதற்கும் ஒரே கடவுளான அருட்பெரும்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொள்ளவேண்டும்..

வேறு எந்த தெய்வங்கள் இடத்தும் தொடர்பு கொள்ள வேண்டாம்.அவர்களுக்கு உண்மையான அன்பும் அறிவும் அருளும் வழங்கும் தகுதி கிடையாது...

மேலும் வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்...

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசேஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதேஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவேஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.!

என்ற பாடல் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார். எல்லா அணுக்களிலும் நீக்கமற நிறைந்து இயங்கிக் கொண்டு உள்ள அருட்பெரும்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அழிவில்லாத நிரந்தரமான அன்பையும் அறிவையும் அருளையும் பெற்று

பேரின்ப பெருவாழ்வில் வாழ்ந்து மரணத்தை வென்று மகிழ்ச்சியுன் வாழ்வாங்கு வாழ்வோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896..../

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு