வியாழன், 31 ஆகஸ்ட், 2017

குழைந்தை உண்டாகும் விதம் !

குழைந்தை உண்டாகும் விதம் !

இன்று உலகத்தில் குழந்தை பேறு இல்லாமல் நிறையபேர் சிரம்ப்படுகிறார்கள்.துன்ப்ப்படுகிறார்கள்.அதிலும் குறிப்பாக பெண்களை குறை சொல்லி தூற்றுகிறார்கள்.அதனால் சில பெணகள் ஆண்கள் மனம் உடைந்து பொய்யான மந்திரவாதிகள்.ஜோதிடர்கள் .மருத்தவர்களிடம் சிக்கி கற்பையும் இழக்கிறார்கள்.பணத்தையும் இழக்கிறார்கள்.

குழைந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு வள்ளலார் தெளிவான விளக்கம் தந்து உள்ளார்.

பல நாள் சந்ததி யில்லாமல் பலபல விரதங்களைச் செய்து வருந்துகின்ற சமுசாரிகள் தங்கள் தரத்திற்குத் தக்கபடி பசித்த ஏழைகளது பசியை ஆற்றுவிப்பதே விரதமாக அனுசரிப்பார்களானால், அந்தச் சீவகாருண்ய அனுசரிப்பு நல்ல அறிவுள்ள சந்ததியை உண்டுபண்ணு மென்பது உண்மை.என்பதை தெளிவாக விளக்கி உள்ளார்.

மேலும் ஆண் பெண் உடல் உறவு  கொள்வது எப்படி  என்பதையும் விளக்கி உள்ளார்.

கரு உற்பத்தி

கருத்தோன்றும் சுக்கில நியாயம் யாதெனில்:- சுக்கிலம் இரண்டரை வராகனெடை யளவா யிருக்கும். அதில் விஷபாகமாகிய சத்தி 1; சாதாரண மென்னும் பூதமாகிய அறிவு 1; அசாதாரண அமுத மாகிய விந்து அரை - ஆக - இரண்டரை. இதுபோல் பெண்பாலிடத்தும் சுரோணிதமுளது. மேற்கண்ட சுக்கில சுரோணித மிரண்டினும் கடவுள் ஆவியுள்ளது.

கடவுள் ஆவி என்பது ஆன்மா

விந்து என்னும் சுக்கிலம் கோசத்தின் முன் விஷம், அதை அடுத்து பூதம், அதற்கு மேல் அமுதம் உண்டு. இவ்வாறு பெண்பாலிடத்து முண்டு. முன்னுள்ள விஷபாகம் புணர்ச்சிக் காலையில் வெளிப்பட்டால் தேகநஷ்டம்; பூதம் வெளிப்பட்டால் வியாதி; அமுதம் வெளிப்பட்டால் சந்ததி விருத்தி. கடவுளருளால் காலச்சக்கரம் போல் ஏகதேசத்தில் கோச உபஸ்தங்களின் அமுதபாக நாடியை முன்னே தள்ளி, விஷாதிகளைப் பின்னே சேர்த்துக் கருத்தரிக்கச் செய்விப்பார். இந்த நியாயத்தால் இடைவிடாது புணருகிறவர்களுக்குக் கர்ப்பமில்லை.

மேலும், விந்து வளம், இடவளம், வன்னி, கிருமி, மோக விசேடம் - இவற்றாலுங் கர்ப்ப மில்லை.

சுக்கிலம் உண்டாவதற்குக் காரணம்: தினம் ஆகாரங்கொண்டால் அவ்வாகாரம் மார்பிடத்தில் ஓர் தட்டில் தங்கும். அந்தத் தட்டின் மேல் கடவுள் கடவுளி என்றிரண்டாகி யிருக்கிறது. உண்ட அன்னத்தை இரண்டரை நாழிகையில் - அந்த அன்னத்திலுள்ள அமுதைப் பிரித்து, ஊட்டவேண்டிய தத்துவத்திற்கு ஊட்டுகின்றது. மறுபடியும் ஐந்து நாழிகைக்குள் மேற்படி அன்னத்தினது மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் குறித்துச் சுக்கிலமாக்கி, இரண்டரை வராகனெடையில் கோசநுனியில் ஒன்றும் நாபியில் ஒன்றும் பிரமரந்திரத்தில்அரையுஞ் சேர்த்து, மற்றவைகளைக் கொண்டு அங்கங்கு விளக்கத்தை யுண்டு பண்ணி ஈளை குரும்பை நகத்தூசு தொப்புளழுக்கு கண்பீளை முதலான அழுக்கை வெளிப்படுத்துகின்றது. மேற்படி அன்னத்தை ஏழரை நாழிகைக்குள் - அதிலுள்ள திரவாம்சத்தைப் பிரித்து, உதிரமாக்கி யூட்டுகின்றது. ஏழரைக்குமேல் மேற்படி சக்கையை மலபாகத்தில் தள்ளி விடுகின்றது. இதுபோல் எந்த வஸ்துக்களையும் பிரிக்கின்றது.

 ஆதலால், ஆகாரங்கொண்ட ஏழரை நாழிகைக்கு மேல் ஆகாரங் கொள்ளவேண்டும்.

சுக்கில வகை

சுக்கிலம் 3 வகை. அது 2 1/2 வராகனெடை யிருக்கும். விஷம் 1, சாதாரண பாகம் 1, அமுதபாகம் 1/2, ஆக பாகம் 2 1/2. இதுபோலவே ஸ்திரீகளுக்குச் சுரோணித மிருக்கும். சுக்கில சுரோணிதத்தின் மேல் கடவுள் ஆவியுருவா யிருப்பர். தேகசம்பந்த காலத்தில் விஷபாகம் வெளிப்பட்டால் தேக நஷ்டம், சாதாரண பாகம் வெளிப்பட்டால் வியாதி. அமுதபாகம் வெளிப்பட்டால் சந்தான விருத்தி. இந்த நியாயத்தால் சதா தேகசம்பந்தம் செய்தாலும், சந்தான விருத்தி ஏகதேசம்.

சுக்கில சுரோணிதம்

சுரோணிதப் பையிடத்தில் மூன்று மணி சேர்ந்த கொத்து 1 வலது புறத்திலும், நான்கு மணி சேர்ந்த கொத்து 1 இடது புறத்திலும் இருக்கின்றன. சுரோணித சுக்கிலம் கலந்து கர்ப்பந் தரிக்கிற காலத்தில் மூன்று சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் ஆண் குழந்தையும் நான்கு சேர்ந்த கொத்தில் சம்பந்தப்பட்டால் பெண் குழந்தையும் பிறக்கும். புணர்ச்சிக் காலத்தில் வலது புறம் சாய்வாகப் புணர்ந்தால் ஆணும், இடதுபுறம் சாய்வாகப் புணர்ந்தால் பெண் குழந்தையும் பிறக்கும்.

15. சப்த தாதுக்கள்

ஆணில் 3, பெண்ணில் 4. ஆணில் மூன்றாவன:- ஆகாசம், பிரகிருதி, ஆன்மவுணர்ச்சி - இவைகள் ஒருமித்துச் சுக்கிலமாகத் தடித்துக் கோசத்தடியில் செம்பரத்தம் பூவிதழ் மூன்று மொன்றாயடுக்கியது போலிருக்கும். பெண்ணிடத்தில் நான்காவன:- பிருதிவி, அப்பு, தேயு, இயமானன் என்னும் வாயு - ஆக நான்கும் ஒருமித்துப் பல்லிமுட்டைபோல் 4 பாகமாகப் பிரிந்து ஒரே வண்ணமாய் யோனிக்குள் இருக்கும். ஆக 7-ம் கூடி ஒருமித்துச் சுக்கில சுரோணித சம்பந்தப்பட்டுப் பிண்டமாம். இது சப்த தாது. மேற்படி தாதுக்களின் பெயர் தோல், அஸ்தி, திசை, மூளை, சுக்கிலம், இரத்தம், இரசம் - ஆக ஏழு. மேற்படி சத்துக்கள் ஆணிடத்துள்ள இடங்கள் மூளை, தொப்புள், லிங்கத்தடி; பெண்ணுக்குள்ள இடங்கள் மூளை, தொப்புள், உபஸ்தத்தடி, ஸ்தனத்தின் கீழ். புணர்ச்சிக் காலத்தில் இந்தச் சத்துச் சேர்ந்து வெளிப்பட்டால் கர்ப்பமுண்டாம்.

என்பதை தெளிவுப் படுத்தி உள்ளார்.பொருமையாகப் படித்து தெரிந்து உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடித்து பயன் அடையுங்கள்.

ஜீவ காருண்ய சிந்தனையும்.அருட்பெரும்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொட்பு கொண்டு வழிபடவும் இருந்தால்.நிச்சயம் வேண்டிய குழைந்தை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே குழைந்தை பாக்கியம் வேண்டும் என்ற உணர்வு உள்ளவர்கள்.வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழ்க்கையில் கடைபிடித்தால் சிரம்ம் இல்லாமல் குழைந்தை பாக்கியம் உண்டாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு