சனி, 13 டிசம்பர், 2014

உண்மையான தெய்வம் எது ?உண்மையான தெய்வம் எது ?

தெய்வங்கள் பலபல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்பு கின்றாரும்
பொய் வந்த கலை பல புகன்றிடுவாரும்
பொய்ச் சமயாதியை மெச்சு கின்றாரும்
மெய் வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல் விளைவு அறிகிலார் வீண் கழிக்கின்றார்
எய் வந்த துன்பு ஒழித்து அவர்க்கு அறிவு அருள்வீர்
எனைப் பள்ளி எழுப்பி மெய் இன்பம் தந்தீரே !

தெய்வங்கள் பலபல உண்டு என்று வழிபாடு செய்பவரும் நினைப்பவர்களும் அறிவு இல்லாதவர்கள் பொய்யான கற்பனைக் கலைகளான தத்துவங்களான உருவங்களை வைத்துள்ள சமயங்கள் மதங்கள் எல்லாம் உண்மைக்கு புறம்பான தெய்வங்களை படைத்து வைத்துள்ளார்கள் .

மக்கள் அறியாதவர்கள் அப்பாவிகள், அவர்களை அறிவு தெளிவு இல்லாதவர்களாக மாற்றி விட்டார்கள் ஆதலால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் மக்களுக்காக வேண்டுகின்றார் .

எனக்கு உண்மையை உணர்த்தி எழுப்பி அறிவை கொடுத்து மெய்யான திருவருள் விளக்கம் தந்து இன்பம் கொடுத்துக் கொண்டு இருக்கின்றாய் அதேபோல்

எல்லா ஜீவர்களுக்கும்.அறிவையும் திருவருள் விளக்கத்தையும் கொடுத்து... எல்லா அண்டங்களையும் ,எல்லா உலகத்தையும்,எல்லா உயிர்களையும்,எல்லா கிரகங்களையும் மற்றை எல்லா வற்றையும் படைத்து இயக்கும் ஆற்றல் மிகுந்த ஒரே கடவுள்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை தெளிவிப்பாயாக என்று ஆண்டவரிடம் வேண்டுகின்றார் .

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு