திங்கள், 15 பிப்ரவரி, 2016

எவரும் காணா அருட்பெருஞ்ஜோதி !

எவரும் காணா அருட்பெருஞ்ஜோதி !


உருத்திரர்கள் நாரணர் பிரமர் விண்ணோர் வேந்தர்
உறு கருடர் காந்தருவர் இயக்கர் பூதர்
மருத்துவர் யோகியர் சித்தர் முனிவர் மற்றை
வானவர்கள் முதலோர் தம் மனத்தால் தேடிக்
கருத்து அழிந்து தனித்தனியே சென்று வேதங்கள்
வினவ மற்றவையும் காணோம் என்று
வருத்தம் உற்று ஆங்கு அவரோடு புலம்ப நின்ற
வஞ்ச வெளியே இன்ப மயமாம் தேவே !

மேலும்;--

பாயிரமாம் மறை அனந்தம் அனந்தம் இன்னும்
பார்த்து அளந்து காண்டும் எனப் பலகால் மேவி
ஆயிரம் ஆயிரம் முகங்களாலும் பன்னாள்
அளந்து அளந்து ஓர் அணுத் துணையும் அளவு காணாதே
இறங்கி அழுது சிவ சிவ என்றே ஏங்கித்
திரும்ப அருட் பர வெளியில் வாழ் சிவமே ஈன்ற
தாய் இரங்கி வளர்ப்பது போல் எம்போல் வாரைத்
தண்ணருளால் வளர்த்து என்றும் தாங்கும் தேவே!

உலகில் தோன்றி உள்ள அருளாளர்கள் என்று அனைவராலும் வணங்கி வழிப் பட்டுக் கொண்டு இருக்கும்,ஐந்தொழில் கர்த்தர்கள் ஆன பிரம்மா,விஷ்ணு,சங்கரன்,மகேஸ்வரன், சதாசிவம் போன்றவர்களும்,
மற்றும்.விண்ணோர் வேந்தர் காந்தர்வர்,இயக்கத்தார்,பூதர்,மருத்துவர்,யோகியர்,
சித்தர், முனிவர் ,,,மற்றைய வானவர்கள் முதலானவர்கள் அனைவரும்,தம்முடைய மனத்தால் தேடியும்,ஒவ் வொருவராக தனித்தனியே சென்றும்

'''வேதங்கள்'' மற்றும் ''ஆகமம், புராணம்,இதிகாசம்,சாத்திரங்கள்'',போன்ற கொள்கைகளைப் படித்து,அறிந்து சிவ,சிவா என்று அழுது புலம்பியும்,உண்மையான இறைவனைத் தேடியும்,அவர்களால் பார்க்க முடியவில்லை,அறிய முடியவில்லை என்கின்றார்,நமது வள்ளல்பெருமான்.

மேலும்,இந்துமதம்,கிருத்தவமதம்,முகம்மதியமதம்,புத்தமதம்,ஜைனமதம்,போன்ற மதத் தலைவர்களாலும், உண்மையான இறைவனைக் காண முடியவில்லை.

மேலும் பல ஆயிரம் திருமறைகள்,வழியாக அற்ப அருளைப் பெற்று, அளந்து அளந்து பார்த்தார்கள்,மற்றும் ஆயிரம், ஆயிரம்,முகங்களைக் கொண்டு பல்லாண்டு காலமாக அளந்தும் அளந்தும் பார்த்தார்கள். உண்மையானக் கடவுள் அவர்களின் அளவுகளின் கருவிகளால் அணுத் துணையும்அளக்க முடியவில்லை,அவர்களுடைய கருவிகள் அனைத்தும் தெய்ந்திடக் கண்டார்களே அன்றி அளவு கண்டார் யாரும் இல்லை என்கின்றார் வள்ளலார் .....

உண்மையான இறைவனைக் கண்டவர்கள் இவ்வுலகில் வள்ளல்பெருமானைத் தவிர வேறு எவராலும் காணமுடியவில்லை.கண்டு பிடிக்கவும் முடியவில்லை.

உண்மையான இறைவனைக் கண்டு பிடித்து உலக மக்களுக்கு அறிமுகப் படுத்தியவர்தான் வள்ளலார்.

படைத்தவனை வணங்காமல்,படைக்கப் பட்ட பொருள்களை வணங்குவது அறியாமையாகும்.

உலகத்தையும்,அண்டங்களையும், உயிர்களையும்,அனைத்துப் பொருள்களையும், கிரகங்களையும்,அருளாளர்களையும்,யோகிகளையும்,
சித்தர்களையும்,படைத்தவர் தான்,

''எல்லாம் வல்லத் தனித்தலைமை பெரும்பதி என்னும் ,அருட்பெருஞ்ஜோதி'' ஆண்டவர் என்னும் ஒரே அருள்பேரொளி என்னும் கடவுளாகும்.

அதைத்தான் வள்ளலார் மிகவும் அழுத்தமாக...''கடவுள் ஒருவரே அவரே அருட்பெருஞ்ஜோதியர்''என்று தெரியப் படுத்துகின்றார்.

உண்மையை இன்னும் மக்கள் அறிந்து கொள்ளாமல்,கற்பனைக் கடவுள் களான ஜடப் பொருள்களை,இருளான உருவங்களை,
( அதாவதுபொம்மைகளை) வணங்குவதும்,வழிபாடு செய்வதும்,எந்தவிதத்தில் உண்மையாகும்.

தயவு செய்து உண்மையை அறிந்துகொண்டு உண்மையான கடவுளை வணங்குகள், வழிபடுங்கள், உங்களுக்கு எல்லா நன்மையையும், ஆன்ம லாபமும், என்றும் அழியாத அருளும், அளவில்லாமல் கிடைக்கும்.

இதை நான் எழுதுகிறேன் என்றால் நீங்கள் அனைவரும் என்னுடைய ஆன்ம நேய உடன் பிறப்புக்கள், என்பதாலும், என்னுடைய சகோதர உரிமையில் எழுதுகிறேன்.தயவு செய்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

வள்ளல்பெருமான் சொல்லுவார்...

செய்தாலும் தீமை எலாம் பொறுத்து அருள்வான் பொதுவில்
திரு நடஞ் செய் பெருங் கருணைத் திறத்தான் அங்கு அவனை

மெய் தாவ நினைத்திடுக சமரச சன்மார்க்கம்

மேவுக என்று உரைக்கின்றேன் மேதினியீர் எனைத்தான்

வைத்தாலும் வைதிடுமின் வாழ்த்து எனக் கொண்டிடுவேன்

மனங் கோனேன் மானம் எலாம் போன வழி விடுத்தேன்

பொய் தான் ஓர் சிறிதெனினும் புகலேன் சத்தியமே

புகல்கின்றேன் நீவீர் எலாம் புனிதம் உறும் பொருட்டே...

என்கின்றார் வள்ளலார்.

நீங்கள் எவ்வளவுத் தவறு செய்து இருந்தாலும் மன்னித்து ஏற்றுக் கொள்வார் ...நம்முடைய தந்தையாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்..எனவே என்னைத் திட்டினாலும் பரவாயில்லை .அவற்றை நான் வாழ்த்துக்களாக ஏற்றுக் கொள்கிறேன்.

உங்களுக்காக அச்சம் ,நாணம்,மடம், பயிர்ப்புக்களை விட்டும் மானம் போனாலும் மனம் தளர மாட்டேன்.

பொய் என்பது என்னுடைய உள்ளத்தில் இருந்து சிறிது அளவும் வராது.என்னை நம்புங்கள் என்று வாயே பறையாய் அறைகின்றார்..

ஏன் என்றால் நீங்கள் அனைவரும் புனிதம் என்னும் அருளைப் பெற வேண்டும். மரணம் இல்லாப் பெருவாழுவு வாழ வேண்டும் என்ற பெருங் கருணையால்,சொல்லுகின்றேன் என்கின்றார்.

அதேபோல் உங்களுக்காக வள்ளலார் சொல்லிய உண்மைகளை நான் தெரியப் படுத்துகின்றேன்.

என்னைத் திட்டினாலும், தூற்றினாலும்,எனக்கு கவலை இல்லை உங்கள் நன்மைக்காக எழுதுகிறேன் ஏற்றுக் கொண்டு நம்முடைய தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வத்தை தொடர்புகொள்ளுங்கள்.

ஆதியும் நடுவும் அந்தமும் இல்லா
அருட்பெருஞ்ஜோதி என் உளத்தே
நீதியில் கலந்து நிறைந்தது நானும்
நித்தியன் ஆயினேன் உலகீர்
சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தே
சத்தியச் சுத்த சன்மார்க்க
வீதியில் உமைத்தான் நிறுவுதல் உண்மை
விளம்பினேன் நம்மினோ விரைந்தே...

நீங்கள் நான் சொல்லிய வண்ணம் கேட்டு வந்தாலும் வராவிட்டாலும், உங்களை எப்படியும் வரவைத்து விடுவேன்,உண்மையை இந்த உலகத்தில் நிறைவித்து விடுவேன் ,,,அனைவராலும் ஏற்றுக் கொள்ள செய்வித்து விடுவேன் இதுதான் உண்மை....இதுதான் ஆண்டவரின் கட்டளையாகும்.....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..
9865939896.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு