புதன், 24 பிப்ரவரி, 2016

வள்ளல்பெருமான் யார் ?

வள்ளல்பெருமான் யார் ?


வள்ளலார் ஒரு ஆன்மீகவாதியா ? இல்லை

வள்ளலார் ஒரு சமுதாய சிந்தனை யாளரா? இல்லை

வள்ளலார் ஒரு புரட்சியாளரா ? இல்லை,

வள்ளலார் ஒரு பகுத்தறிவு வாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு சீர் திருத்த வாதியா? இல்லை.

வள்ளலார் ஒரு அறிவியல் மேதையா ? இல்லை.

வள்ளலார் ஒரு அரசியல் வாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு பக்தி யாளரா ? இல்லை.

வள்ளலார் ஒரு யோகியா ? இல்லை

வள்ளலார் ஒரு ஞானியா ? இல்லை.

வள்ளலார் ஒரு சிந்தாந்தியா ? இல்லை

வள்ளலார் ஒரு வேதாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு கலாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு யோகாந்தியா ? இல்லை..

வள்ளலார் ஒரு நாதாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு போகாந்தியா ? இல்லை.

வள்ளலார் ஒரு போதகரா ? இல்லை.

வள்ளலார் ஒரு மதவாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு சமயவாதியா ? இல்லை.

வள்ளலார் ஒரு ஜாதியை சார்ந்தவரா ? இல்லை

வள்ளலார் ஒரு இந்தியரா ? இல்லை

வள்ளலார் ஒரு மொழியை சார்ந்தவரா ? இல்லை.

வள்ளலார் ஒரு காந்திய வாதியா ? இல்லை.

வள்ளலார் ஏதாவது ஒரு நாட்டை சார்ந்தவரா? இல்லை.

வள்ளலார் ஒரு அண்டத்தை சார்ந்தவரா ? இல்லை.

மேலே கண்ட செயல் பாடுகளில் வள்ளலார் ஒருவர் அல்ல என்பதை.நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அப்போ வள்ளலார் யார் ?

வள்ளலார் கடவுள் நிலை அறிந்து அம்மயமானவர்.

சுத்த பிரணவ ஞான தேகம் பெற்றவர்.

மரணம் இல்லாப் பெருவாழுவு பெற்றவர்.

வள்ளலார் கடவுளின் தேகம் பெற்றவர்.

அவருக்கு பிறப்பு இல்லை இறப்பு இல்லை.

தோற்றம் மாற்றம் இல்லாதவர்.

வள்ளலார் என்ன செய்து கொண்டு உள்ளார் ?

இயற்கை உண்மையாக இருக்கின்றார்..இயற்கை அறிவினராக இருக்கின்றார்....இயற்கை இன்பமாக இருக்கின்றார்..நிற்குணராக இருக்கின்றார்...சிற்குணராக
இருக்கின்றார்...நித்தியராக இருக்கின்றார்..சத்தியராக இருக்கின்றார்..ஏகராகஇருக்கின்றார்...அநேகராக இருக்கின்றார்...ஆதியாக இருக்கின்றார்..அனாதியாக இருக்கின்றார்..அமலராக இருக்கின்றார்.
.
அருட்பெருஞ்ஜோதியாக இருக்கின்றார்..

மேலும் அற்புதர் என்றும்,,நிரதியர் என்றும்,
எல்லாம்ஆனவர் என்றும்,எல்லாம் உடையவர் என்றும்.எல்லாம் வல்லவர் என்றும்,அனைவராலும் குறிக்கப்படுதல். முதலிய அளவு கடந்து திருக்குறிப்புத் திருவார்த்தைகளால் குறிக்கப் படுபவராக உள்ளார்.

எல்லாம் அறிந்த சுத்த சன்மார்க்க ஞானிகள் துதித்தும், நினைத்தும்,உணர்ந்தும்,புணர்ந்தும்,அனுபவிக்க விளங்குகின்ற தனித் தலைமைப் பெரும்பதியாகிய பெருங்கருணைக் கடவுளாக உள்ளார்..

மேலும்;--

எல்லாச் சத்தி களுக்கும், எல்லாச் சத்தர் களுக்கும், எல்லாத் தலைவர் களுக்கும். அறிந்து கொள்ளுதற்கு மிகவும்அரியதாய்,

எல்லாத் தத்துவங் களுக்கும்,எல்லாத் தத்துவி களுக்கும், அப்பால் அப்பாலாய்,விளங்கும் ஓர் ''சுத்த ஞான வெளியில்'' தமக்கு ஒரு விதத்தாலும், ஒப்பு உயர்வு சிறிதும்,குறிக்கப்படாத ''தனிப் பெரும்தலைமை அருட்பெருஞ்ஜோதியராய்'' விளங்கிக் கொண்டு உள்ளார்.

இப்போது வள்ளல்பெருமான் ''அருட்பெருஞ் சோதியாக ''அருள் ஆட்சி செய்து கொண்டு உள்ளார்''என்பதை அனைத்து தரப்பு மக்களும் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும்....

மேலும் சுத்த சன்மார்க்கிகள் வள்ளலாரைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளல்பெருமானை யாருக்கும், எவருக்கும்,எதற்கும், ஈடு இணையாக வைத்து ,நினைப்பது, பேசுவது, வாதம் செய்வது, சுத்த அறிவு இல்லாத அறியாமையாகும்.

வள்ளல்பெருமானுக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளிய அருள் வாக்கியத்தை பதிவு செய்துள்ளார் படித்து தெரிந்து,அறிந்து புரிந்து கொள்ளுங்கள்.

துன்பம் எலாம் தீர்ந்தன சுகம் பலித்தது நினைச்
சூழ்ந்து அருள் ஒளி நிறைந்தே
சுத்த சன்மார்க்க நிலை அனுபவம் நினக்கே
சுதந்திரம் ஆனது உலகில்
வன்பெலாம் நீக்கி நல் வாழ்வு எலாம் ஆக்கி
மெய் வாழ்வு எலாம் பெற்று மிகவும்
மண் உயிர் எலாம் களித்திட நினைத்தனை உன்
மனம் நினைப்பின் படிக்கே
அன்பை நீ பெருக உலவாது நீடுழி விளையாடுக
அருட்ஜோதியாம்
ஆட்சி தந்தோம் உனைக் கைவிடோம் கைவிடோம்
ஆணை நம் ஆணை என்றே
இன்புறத் திரு வாக்கு அளித்து கலந்து
இசைவுடன் இருந்த குருவே
எல்லாஞ் செய் வல்ல சித்தாகி மணி மன்றில்
இலங்கு நடராஜ பதியே......

மேலே கண்ட அருட்பாடல்களின் வாயிலாக இறைவனுடன் கலந்து அருட்பெருஞ்ஜோதியின் ஆட்சியை வள்ளல்பெருமானுக்கு தந்துள்ளார்.

இப்போது பல கோடி அண்டங்களையும் ,அதில் உள்ள உயிர்களையும்,பொருள்களையும் ,அனைத்தையும்,

தோற்றுவித்தல்,இயக்குவித்தல்,அடக்குவித்தல்,
மயக்குவித்தல்,தெளிவித்தலும் ஆகிய ஐந்தொழில் வல்லபத்தை செய்து கொண்டு இருப்பவர் தான் வள்ளல்பெருமான்.

ஆன்மநேய உடன் பிறப்புகளே நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்.புரிந்து கொள்ளுங்கள்,அறிந்து கொள்ளுங்கள்.

சந்தேகம் இருப்பின் தொடர்பு கொள்ளுங்கள்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.....

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு