திங்கள், 22 பிப்ரவரி, 2016

நான் என்பதும் ! நாம் என்பதும் !

நான் என்பதும் !  நாம் என்பதும் !


நான் சொல்லுகிறேன் ,நான் செய்கிறேன்,என்னுடைய ஆட்சி,என்னுடைய ஆணை, நான் நினைத்தால் எதையும் செய்வேன், என்பது எல்லாம் ..எவ்வளவு  பெரிய மனிதர்களாக இருந்தாலும்.எவ்வளவு பெரிய ஞானிகளாக இருந்தாலும்.அரசியல் தலைவர்களாக இருந்தாலும் .ஆன்மீக சிந்தனையாளர்களாய் ,இருந்தாலும் .அவர்களின் செயலும் சிந்தனையும் சீக்கிரம் அழிந்து விடும்.அவர்களும் அழிந்துவிடுவார்கள்.

அது அகங்காரத்தின் ஆணி வேறு என்பதாகும்.அகங்காரம அறிவை அழித்துவிடும்.

நாம்,நமது  என்பது,அவர்களின்,அறிவு கூர்மையைக் மேம்படுத்தும். அகங்காரம் அழிந்து நற்செயலுக்குக் கொண்டுசெல்லும்.

மேலும் அனைவராலும் மதிக்கப் படுவார்கள்.

எனவே நான், எனது,என்னுடையது என்னும் செருக்கு அற்று வாழ்வதே மனித நேயமாகும். அதுவே மனிதத் தன்மையாகும்.

அதைவிடப் பெரியது ஆன்மநேயத்தை வலுப்படுத்தும் பெரிய கருவியாகும்.

ஆன்மநேயத்தை விரும்புவரை மட்டுமே இயற்கை என்னும் இறைவனால் ஏற்றுக் கொள்ளப் படும்.

இதைத்தான் வள்ளலார் ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை வேண்டும் என்கின்றார்.

எல்லா உயிர்களும் நம்முடைய சகோதர உரிமை உடையது என்பதை அறிந்து செயல்படுபவரே உயர்ந்த மனிதராகும்.அவரே இறைவனை தொடர்பு கொள்ளும் உரியைப் பெற்றவராகும்...

ஆண்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு