செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

குரு என்பவர் யார் ?

குரு என்பவர் யார் ?


நான் யாருக்கும் குரு அல்ல ..எனக்கு யாரும் குரு அல்ல

மாதா, பிதா,குரு,தெய்வம் என்பார்கள்.

அதற்கு என்ன பொருள்;--, அம்மாவுக்கும், அப்பாவுக்கும்,குரு என்னும் ஆசிரியருக்கும், குருவாக இருப்பவர்தான் ''அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்'' என்னும் தனித் தலைமைப் பெரும் பதியாகும்..

நாம் ஒவ்வொருவரும் சுதந்திர மானவர்கள்,நமக்கு நாமே குரு..நமது சிரசின் நடுவே,மத்தியில் உள்ளே உள்ள ஆன்மாவே நமக்கு குருவாகும்.

தன்னை அறிகின்றவர் எவரோ, அவரே, அவருக்கு குருவாகின்றார்.

நமக்கு நாமே குருவாகின்ற போது தான் , நம்மைப் படைத்தவர் யார் ? என்பது தெரியும்.

வள்ளல் பெருமான் சொல்லுவார்.

தன்னை அறிந்து இன்பம் முற வெண்ணிலாவே ஒரு
தந்திரம் நீ சொல்ல வேண்டும்வெண்ணிலாவே !
என்பார்.

தன்னை அறிந்தால் தலைவனை அறியலாம்.என்பதை வள்ளலார் தெளிவாக விளக்கி உள்ளார்.

''மருட் பகை தவிர்த்து எனை வாழ்வித்து எனக்கே
அருட் குருவாகிய அருட்பெருஞ்ஜோதி''

என்றும்,, தனக்கு குரு அருட்பெருஞ்ஜோதி தான் என்பதை அகவல் வரிகளில் அழகாக ,தெளிவாக விளக்கி உள்ளார்..

உலகில் உள்ள அனைவருக்கும்,தாயாகவும், தந்தையாகவும்,குருவாகவும் விளங்கிக் கொண்டு உள்ளவர்தான் ''எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்ட்வராகும்''...

தாயாகி தந்தையுமாய் தாங்குகின்ற தெய்வம் என்றும்,தனக்கு நிகர் இல்லாத, தனித் தலைமை தெய்வம் என்றும் தெரியப் படுத்தி உள்ளார்.

எனவே நம்மிடம் உள்ள அறிவையும் ஆற்றலையும், அருளையும்  தெரிந்து கொள்ளாமல்,சாகும் மனிதர்களின்  காலில் விழுவதும், வணங்குவதும், குருவாக நினைப்பதும், தெய்வமாக நினைப்பதும் அறியாமையாகும்.

வள்ளலார் பதிவுசெய்துள்ள பாடல்;--

ஆதி அந்தமும் இல்லாதோர் அமபலத்து  ஆடும்
சோதி தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர்
நீதி கொண்டு உரைத்தேன் இது நீவீர் மேலே ஏறும்
வீதி மற்றைய  வீதிகள் கீழ்ச் செல்லும் வீதி....

நமக்கு வேண்டிய அனைத்து சக்திகளும் நம்மிடம் உள்ளது ,நீங்களே உங்களுக்கு தலைவன்,உங்கள் அறிவையும்,ஆற்றலையும், சக்தியையும் தட்டி எழுப்புங்கள் ,தெளிவாக சிந்தித்து தெளிவாக இருங்கள்,

குரு குரு என்று தங்களை ஏமாற்றும் ஏமாற்றுப் பேர் வழிகளிடம்,தங்களை அடமானம் வைத்து ஏமாறாதீர்கள்,,

இவ்வளவு காலம் நாம் ஏமாந்தது போதும் இனிமேல் விழிப்புடன் இருங்கள்..எல்லாம் நலமாகவே நடக்கும்.

அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்...

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு