ஞாயிறு, 19 பிப்ரவரி, 2012

பிஞ்சு மனதில் நஞ்சு விதைப்பது நல்லதல்ல !

  திருஅருட் பிரகாச வள்ளலார்  

            

பிஞ்சு மனதில் நஞ்சு விதைப்பது நல்லதல்ல !

துள்ளி விளையாடும் பள்ளிக் குழைந்தைகளின் பிஞ்சு மனதில் நஞ்சு விளை விப்பிபது நல்லதல்ல !

எதிர்கால ஆற்றலின் வடிவங்களான அவர்களுக்கு சாதி சமயம் மதங்களைத் தாண்டி,மனித நேயத்தையும் .ஆனமநேயத்தையும்,கற்றுத் தருவதே கல்விக் கூடங்களின்,கடமையாகவும் பணியாகவும் இருக்க வேண்டும்.

பொருள் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் கலவி கற்கப்படுகிறது. பொருளையும் தாண்டி பொது அறிவைக் கற்றுக் கொள்ளவேண்டும் .அன்பு கருணை பொது நோக்கம் மிகவும் முக்கியமாகும்

குழைந்தைகளின் மனதில் கருணை என்னும் விதையை விதைத்து,அன்பு என்னும் தண்ணீரைப் பாய்ச்சி,பாது காப்பு என்னும் வேலியை அமைத்து பசுஞ் சோலைகளாக வளரச செய்து ,,அதில் இருந்து கிடைக்கும் மகரந்த சேர்க்கையை ஒருங்கிணைந்து எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களுக்கும் வழங்குவதை செய்விப்பதே நமது கடமையாகும்.

குழந்தை பிறந்ததும் அம்மைக் குத்துவதற்கு முன்பே சாதி,சமயம்,மதம் என்னும் முத்திரையை குத்துவது மனிதநேயம் ஆகாது.கடவுளைக் காப்பாற்றுவது நமது கடமை அல்ல .நம்மைக் காப்பாற்றுவதே கடவுளின் கடமையாகும் பொறுப்பாகும் .நாம் இப்படி பல பேதப்பட்டு வாழ்ந்தால் கடவுள் எப்படி நம்மைக் காப்பாற்றுவார் என்பதை சிந்திக்க வேண்டும்.

குழைந்தைகள் பள்ளிக்கு வரும்போது தூயமையான வெண்மை காகிதமாய துளிர்ந்து வருகிறார்கள் .எதுவும் எழுதப்படாத அவர்கள் உள்ளத்தில் கருணையையும் ,அன்பையும் ,தயவுயையும் கனிவையும் ,கவிதையாய் எழுதிக் காட்டுவதே நம்முடைய பங்களிப்பாக இருக்க வேண்டும்.

அதில் சாதி,சமயம்,மதம் என்னும் வேறுபாடுகளை எழுதி விதைத்து காகித்தை கசக்கவோ அந்த கவிதைகளை நசுக்கவோ நமக்கு உரிமை இல்லை.ஆதலால் விதைக்கும் முன்னே நல்ல விதைகளை விதைக்க வேண்டுயது பெற்றோர்கள் கடமையும் ஆசிரியர்கள் கடமையும்.ஆரசாங்கத்தின் கடமையும் முக்கிய பங்காக இருக்க வேண்டும்.

மாணவர்களோ எல்லோரையும் நேசிப்பதற்கு ஆசைப் படுகிறார்கள்.சில நிறுவனங்கள்,பாட புத்தகங்களை வேதப் புத்தகங்களாக்கி,பூந்தளிர்களை புத்தகப் புழுக்களாக்கி புழுங்க செய்கின்றன.ஒரு சில அமைப்புகள் தங்கள் நம்பிக்கையை அவர்கள் மூலையில் ஆணியை போல் அறைகின்றன.

தேனீக்கள் மலர்களில் மகரந்தத்தை சேமிப்பது போல மென்மையாக அவர்கள் உள்ளத்தில் அன்பு, தயவு,கருணை போன்ற மாற்றத்தை,வாழ்க்கை குறித்த நுடபத்தை ஆன்மநேயத்தை ,மனித நேயத்தை,பதிய வைப்பதே கல்வி அமைப்புகளின் நோக்கமாக இருக்க வேண்டும் .இதனைக் கடைபிடிக்கும் அமைப்புகள் எத்தனை உள்ளது எனபதை நாம் சிந்திக்க தவறி விட்டோம் விரல் விட்டு என்னும் அளவிற்கு அருகிய அமைப்புகளே.

நம்பிக்கை ,விசுவாசம் ,என்பவை எல்லாம் அந்தரங்கத்தை சார்ந்தவையாகும்,மார்க்கங்கள் எல்லாம் ஒரே உண்மையை நோக்கி செல்லும் என்பதை புரிந்து கொண்டவர்கள் ,வேற்றுமையில் ஒற்றுமை காண்கிறார்கள்.அவர்கள் ஓம் ,ஆமீன் ,ஆமென்,ஆதி சக்தி,ஆகியவை ஒன்று என்று உரக்க சொல்கிறார்கள்.

அவர்கள் தெய்வங்களின் பெயர்களை தாண்டி ஆதியில் உள்ள மூலத்தை தனக்குள் தேடுபவர்ளாகும்.அவர்களுக்கு அபிஷேகம், ஆராதனை,பிரார்த்தனை,வேண்டுதல் வேண்டாமை எதுவும் இருக்காது.இந்த நிலையில் உள்ளவர்கள் யாரோ அவர்கள் முற்றும் துறந்த ஞானிகளாகும்.அவர்கள் சொல்லுவதில் ஞாயம் இருக்கிறது.

வழிபாடு என்பது வாழ்வின் ஒவ்வொரு செயளிலுமே ஐக்கியமாகி அழகுபடுத்தும்,உன்னத நெறி ,அதை எந்த மத மைய்யங்களுக்கு உள்ளும் போகவோ குறுக்கவோ அடிக்கவோ பதுக்கவோ வேண்டுயதில்லை அது அவரவர்கள் விருப்பமாகும்.

ஆனால் கல்விக் கூடங்களில் குழைந்தைகளின் பிஞ்சு மனதில் விதைக்க கூடாது. பள்ளி அமைப்புகள் எந்த மதத்தை சார்ந்து இருக்கிறதோ அந்த அமைப்புகள் மறைமுகமாக தங்கள் மதக கொள்கைகளை படிப்பில் புகுத்துகிறார்கள்.இவை குழைந்தைகளின் எதிர் காலத்தை பாதிக்கும் செயலாகும்.

பேரண்டமே பெருங் கோயிலாகும்.காலையில் இருந்து இரவு உறங்கும் வரை செய்கிற ஒவ்வொரு செயலும் பணியும் ,பிரார்த்தனையாகும்.இறை வழிபாடாகும். பக்குவத்தை ஒழுக்கத்தை,நேர்மையை அன்பை ,தயவை,கருணையை,குழந்தைகளுக்கு சொல்லித் தரவேண்டும்.குழந்தைகள் உள்ளம்,மனம் .அறிவு ,கடல் பஞ்சு போன்றது. எதையும் உடனே உறிஞ்சிக் கொள்ளும் தன்மை யுடையது. அதற்கு பிறகு ஆசிரியர் இல்லா விட்டாலும் வகுப்பில் அமைதி இருக்கும்.பெற்றோர் இல்லா விட்டாலும் வீட்டில் கற்றுக் கொல்வது கட்டாயம் நிகழும்.

அடுத்தவர் திணிக்கும் எந்த தீய செயல்களையும் எடுத்துக் கொள்ளாது.எந்த தேவையற்ற கட்டுப்பாட்டுக்கும் தலை வணங்காது. தனக்குள் இருக்கும் தூய்மையை வளர்த்துக் கொண்டே இருக்கும்,அக் குழைந்தைகள் ..பக்கத்து வீட்டுக் காரர்கள் எதிரியாக இருந்தாலும் நேசிக்க தொடங்கும்.ஆதலால் குழைந்தைகள் நல்லவன் ஆவதும் கெடடவன் ஆவதும் .பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் அரசாங்கம் ,இவை மூன்றும் முக்கிய பங்காகும்.

சாதி.சமயம்,மதங்களை போதித்து அதனால் வரும் சண்டை ,கொலை .விரிசல்களை உண்டாக்குவது அல்ல கல்வி.

அவை ஒவ்வொரு மனித மனங்களையும் இணைக்கும் மாபெரும் பாலமாகும்.கற்க கற்க நம் குறிகிய மனம் அகலமாக விரியும் வானத்தில் பறக்கும் அழகிய பறவையின் ஒரு சிறகு உதிர்ந்தாலும் அத்தக கண்டு வருத்தப்படும் எந்த உயிர்களையும் தன் உயிர்போல் பாவிக்கும் மனப்பக்குவம் வந்துவிடும்.மனிதநேயத்தைக் கடந்து ஆன்மநேயத்தை கடைபிடிக்கும் கருணை உள்ளம் இயற்கையாக தோன்றிவிடும்.

அப்படிப்பட்ட அன்பு வட்டம் தோன்றி விட்டால் ,கொலை கொள்ளை ,கற்பழிப்பு,கலவரங்கள் இல்லை உலகம் எங்கும் அமுத பூங்காறறு வீசும் எதிர்காலம் வசந்த காலமாக மலரும் .
.          
குழைந்தைகள் வருங்கால அறிவுள்ள சிற்பிகள் அந்த அறிவை செம்மைப் படுத்துவது பெற்றோர்கள் ,கல்விக் கூடங்கள்,ஆசிரியர்கள் .அரசாங்கம்.ஆகியோர்களின் கடமையாகும்.எதிர்காலம் மகிழ்ச்சியுடன்  பொலிவுபெற வாழ்த்துகிறேன்.  
 .    
அன்புடன்.ஆனமநேயன் ,கதிர்வேலு.



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு