ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

நான் அறிந்த வள்ளலார் ! பாகம்,3,

நான் அறிந்த வள்ளலார் !



காட்சி -4,

வடலூர் சத்திய ஞான சபையையும், தருமச்சாலையும் பார்த்து என்னுடைய மனமும் அறிவும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தது. இவரைப்போல் ஒரு அருளாளர் எந்த உலகத்திலும் கேள்விப்பட்டதும் இல்லை படித்ததும் இல்லை,அறிந்ததும் இல்லை,பார்த்ததும் இல்லை,-ஆண்டவரை அடையும் வழி கருணை ஒன்று தான் என்பதை ஆணித்தரமாக சொல்லியவர் --.சொல்லியதோடு நில்லாமல் ,உலக அளவில் அனைவராலும் ஏற்றுக் கொள்ளும் வகையில் கடவுளுக்கு ஆலயம் அதாவது கோயில் என்று கல்லாலும் மண்ணாலும் கட்டிடங்களை கட்டி ,அதில் ஓர் தத்துவ ஜடப் பொருள்களை பொம்மைகளாக வடித்து,அந்த சிலைகளை வைத்து இதுதான் கடவுள் என்று வைக்காமல்,சொல்லாமல்.

கடவுளை வணங்க வேண்டுமானால் பசித்த ஏழைகளுக்கு உணவளிப்பது தான் கடவுள் வழிபாடு என்பதை ,செய்முறையில் செய்து காட்டியவர்தான் என்னைக் கவர்ந்த ,என்உள்ளத்தைக் கவர்ந்த ,என்னுடைய அறிவுக்கு விளக்கு என்னும் ஒளி ஏற்றியவர் என்னைவிட்டு நீங்காத என் உள்ளத்தின் உள்ளே என்றும் நிறைந்து நீங்காது இருப்பவர்தான்--என்னை ஆண்டு கொண்டு நிலையாக இருக்கும், எனது உண்மையான தந்தை தனிப் பெருங் கருணை என்னும் அருட்பெரும்ஜோதி அருட்பிரகாச வள்ளலாகும் .அவருடைய வாழ்க்கை வரலாற்றை உண்மையுடன் மக்களுக்கு தெரியப் படுத்துவதில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன்.

வள்ளலார் யார் ?--அவர் ஏன் இந்த உலகிற்கு வரவேண்டும்?.--அவரை யார் அனுப்பிவைத்தவர்?-- ,அவர் ஏன் தமிழ் நாட்டில் அவதரித்தார்?,--அவருடைய தந்தை தாயின் குண நலன்கள் யாது ?--அவர் உலகத்திற்கு என்ன சொல்லவந்தார் ?--கடவுள் உண்டா?இல்லையா?--கடவுள் யார்?--அவர் எங்கே உள்ளார்?--அவரை எப்படி அறிந்து கொள்வது ?--என்ன சொல்ல வந்தார் -- சொல்ல வேண்டியதை சொல்லி விட்டாரா?--அவர் ஏன் மறைந்தார் ?--அவர் ஒளிதேகம் பெற்றது எப்படி? --ஏன் ?-வள்ளலாரின் கருத்துக்கள் மக்களுக்கு தேவையா? --அவர் காட்டிய சுத்தசன்மார்க்கம் என்றால் என்ன ?--வள்ளலாருக்கு முன் உலகம் எப்படி இருந்தது?--பின் எப்படி இருந்து கொண்டு உள்ளது ?--மரணம் இல்லா பெருவாழ்வு என்றால் என்ன?--அசுத்ததேகம்,-சுத்ததேகம்,-பிரணவதேகம்,-ஞானதேகம் -என்றால் என்ன ?--முன்வந்த ஞானிகள் நிலை என்ன ?--இவருடைய ஞான நிலை என்ன ?

போன்ற அனைத்து சிந்தனைகளுக்கும் அவர் எழுதிய திரு அருட்பாவில் இருந்தே விளக்கம் தருவதில் மட்டற்ற மகிழ்ச்சி யடைகிறேன் உண்மைக்கு புறம்பான செய்திகள் எதுவும் இதில் இடம் பெறாது .

முப்பத்தைந்து ஆண்டுகளாக வள்ளலார் காட்டிய சுத்தசன்மார்க்க கொள்கையில் நான் மட்டும் அல்ல, என்னுடைய மனைவி அமுதா,-,மற்றும் என்னுடைய குழைந்தைகள் ;-மகன் கார்த்திகேயன் -,மகள் சுமதி,-மகன் நந்தகுமார் -,மற்றும் மருமகன் கந்தசாமி--மருமகள்கள்,ஹேமா,-ஜெயலஷ்சுமி ,- அவர்கள் குடும்பம் குழைந்தைகள் அனைவரும் வள்ளலார் வழியில் நெறி தவறாமல் ஜீவகாருண்ய ஒழுக்கமும் ,கடவுள் ஒருவரே! அவரே அருட்பெரும்ஜோதி ஆண்டவர் !என்ற உண்மை உணர்வோடு வாழ்ந்து வருகிறார்கள்.என்பதை சொல்லிக் கொள்வதில் அளவில்லா ஆனந்தமும் ,மகிழ்ச்சியும் அடைகிறேன் .அதற்கு காரணம் வள்ளலார் மீது உண்மையான பற்றும் ,அருட்பெரும்ஜோதி ஆண்டவர்தான் உண்மையான கடவுள் என்பதை அறிவு பூர்வமாக அறிந்து கொண்டு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை கடைபிடித்து வாழ்ந்து வருவதால்,கிடைத்த லாபம் ஆகும் .

எல்லாம் வல்ல தனித்தலைமை பெரும்பதியான அருட்பெரும்ஜோதி ஆண்டவர் ,எங்களை வழிநடத்தி வாழவைத்துக் கொண்டு உள்ளார் இதுவே உண்மை ,சத்தியமாகும்.. . 

தருமச்சாலை உட்புறத் தோற்றம் ;--வள்ளல் பெருமான் தருமச்சாலையை நிறுவிய பிறகு ஞானசபையைக் கட்டிய பிறகு, அவர் தம் திருக் கரங்களால் 1872,ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25,ஆம் நாள் ஏற்றிவைத்த திருவிளக்கு,அவரே ஏற்றிவைத்த ஜோதி தான் தருமச்சாலையில் உள்ளது .அப்போது வள்ளலார் உருவச்சிலை அங்கு இல்லை,வள்ளலார் மறைவுக்குப் பின் சன்மார்க்க அன்பர்கள் அன்பின் காரணமாக வள்ளலார் சிலையை வைத்து வழிபட ஆரம்பித்துள்ளார்கள் .

வள்ளலார் ஜோதியைத்தான் வழிபட சொன்னார் -தன் உருவத்தை வழிபட வேண்டாம் என்று திட்டவட்டமாகச் சொலலியும் .அன்பர்கள் விபரம் அறியாமல் சிலையை வைத்து இன்றுவரை வழிபாடு செய்து வருகிறார்கள்.

சிலையை வைத்ததோடு அல்லாமல் வள்ளலாருக்கு சமயச் சின்னமான விபூதி பட்டையையும் இட்டு சமயவாதியாக கற்பித்து உள்ளார்கள் .இவை யாவும் சமயவாதிகள் செய்த சூழ்ச்சியாகும் {அறியாமையாகும் }.இவை வள்ளலாருக்கு நாம் செய்யும் துரோகமாகும். 

சமரசம் கண்ட வள்ளலாருக்கு சமயச்சின்னம் வைப்பது மன்னிக்க முடியாத குற்றமாகும். 

தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் விபூதி இல்லாத வள்ளலார் படமே இல்லை .நான் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஈரோட்டில் சன்மார்க்கத் தலைவராக இருந்தேன் அப்போது முப்பெரும் விழா மூன்று நாட்கள் நடைப் பெற்றது .ஒரு திருமண மண்டபத்தில் அன்னதானம் ,ஒரு திருமண மண்டபத்தில் சன்மார்க்க சொற்பொழிவு நடந்து கொண்டு இருந்தது.

அதில் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய சன்மார்க்க பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள் .

அருட்செல்வர் மகாலிங்கம் - துறவி கந்தசாமி,-ஊரனடிகள் ,--பழ சண்முகனார் ,-வீர சண்முகனார் ,-சேலம் டாக்டர் துரைசாமி,-டாக்டர் ராஜமாணிக்கம் ,--புதுகோட்டை சந்தானகொபாலகிருஷ்ணன் ,-மூ,பாலு,--விழுப்புரம் கோவிந்தசாமி,--ராஜவேலு,--முத்துக்குமாரசாமி --மணி ,-பகிரதன் ,-கிரிதாரிபிரசாத் ,--சென்னை நீதிபதிகள் பழனிச்சாமி,-பஞ்சாட்சரம் ,-மற்றும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தியானேஸ்வரன் ,-மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ,--மற்றும் தமிழ் நாட்டில் உள்ள சன்மார்க்க அன்பர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர் .

தமிழ் நாட்டில் முதன் முதலாக வள்ளலார் படத்திற்கு விபூதி இல்லாத கட்அவுட்டுகள்,தயார் செய்து ஈரோடு பிரப்ரோட்டில் பெரிய அளவில் பிரமாண்டமான ஆர்ச்சு வைத்தேன் .விழா மேடையில் வள்ளலார் படம் விபூதி இல்லாமல் ,-ஞானசபையை வைத்து ,-அருட்பெரும்ஜோதி தகரக் கண்ணாடி விளக்கு வைத்து விழா மேடையை ,அனைவரும் பாராட்டும் அளவிற்கு பிரமாண்டம் செய்து விழா எடுத்தேன் .

இவற்றை கண்ணுற்ற சமயவாதிகள் வள்ளலார் படத்திற்கு விபூதி இல்லாமல் பார்க்க சகிக்காமல் சண்டைக்கு வந்து விட்டார்கள் .அவர்களுடைய எதிர்ப்பை காவல்துறை பாதுகாப்புடன் எதிர்கொண்ட வரலாற்றை சொல்ல வார்த்தைகள் இல்லை ,என்னுடைய நாக்கை அறுத்து எறிவோம் என்று ஒரு கூட்டம் என்னைச்சுற்றி வட்டமிட்டது .தனி ஒருவனாக இருந்து வள்ளல் பெருமான் கருணையால், துணையால் ஆருட்பெரும்ஜோதி ஆண்டவரின் அருளால் விழா சிறப்பாக நடைபெற்று நிறைவேறியது ,இவை தமிழக சன்மார்க்க உலகம் அறியும் .

அந்த விழாவிற்கு பின் மகாலிங்கம் அவர்கள் ராமலிங்க பணிமன்றம் சார்பில் விபூதி இல்லாத வள்ளலார் படம் தயாரித்தார்கள் ,பின் நிறைய அன்பர்கள் அதை ஏற்றுக் கொண்டு சமயச் சின்னங்கள் வள்ளலார் படத்திற்கு அணிவிக்க கூடாது என்பதை உணர்ந்து கொண்டார்கள் .இன்னும் சில அன்பர்கள் விபூதி அணிந்த வள்ளலார் படம் தயாரித்துக் கொண்டு உள்ளார்கள் .அவர்களுக்கு வள்ளலார்தான் அறிவு புகட்ட வேண்டும் .

வள்ளலார் ஏற்படுத்திய வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களில் வள்ளலார் படத்தை வழிபடுவதும் விபூதி பிரசாதம் வழங்குவதுமாய் உள்ளது அதை எதிர்த்து போராடி வருகிறோம் .என்னுடைய போராட்டம் ஓய்ந்தபாடு இல்லை இன்னும் நிறைய உள்ளது பின்பு தெரிவிக்கிறேன் .

சன்மார்க்க அன்பர்கள் சுத்த சன்மார்க்கம் என்னவென்று தெரியாமல் இப்படி எல்லாம் செய்வார்கள் என்பதை உணர்ந்து -என்னை வணங்காதீர்கள் அருட்பெரும்ஜோதியையே வணங்குங்கள் என்பதை தெளிவாக திருஅருட்பாவில் தெளிவுபடுத்தி உள்ளார் வள்ளல்பெருமான் அவர்கள்.

பாடல்வருமாறு ;--

சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன் உமது
தாள் வணங்கிச சாற்றுகிறேன் தயவினோடுங் கேட்பீர்
என்மார்க்கத்தில் எனை உமக்குள் ஒருவன் எனக் கொள்வீர்
எல்லாஞ் செய் வல்ல நமது இறைவனையே தொழுவீர்
புன்மார்க்கத் தவர் போலே வேறு சில புகன்றே
புந்தி மயக்கம் அடையாதீர் பூரணச மெய்ச சுகமாய்த்
தன் மார்க்கமாய் விளங்கும் சுத்த சிவம் ஒன்றே
தன்னானை என்னானை சார்ந்து அறிமின் நீண்டே !

என்று தெளிவு படுத்தியுள்ளார் வள்ளல் பெருமான் ,என்னை வணங்கினால் இறைவன் அருள் கிடைக்காது,எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதியை வணங்குங்கள் எல்லா நலமும் கிடைக்கும் என்கிறார் .

இதில் ஓர் உண்மை உள்ளது வள்ளலார் ஒளிதேகம் அடைந்து விட்டார்கள் .அவர் உருவமாக இல்லை உருவத்தில் இருந்தால் வணங்குவது தவறு இல்லை ,அருட்பெரும்ஜோதியை வணங்கினால் அதில் வள்ளலார் உள்ளார் .வள்ளலார் உருவத்தை வணங்கினால் அதில் அருட்பெரும்ஜோதி இல்லை என்பதை அறிவு பூர்வமாக உணர்ந்தால் தெளிவு கிடைத்துவிடும் .

வள்ளலார் உருவம் ஓர் அடையாளம் அவ்வளவுதான் அதற்காக அதை மதிக்கிறோம் ஆனால் வழிபாட்டுக்கு உகந்தது அல்ல என்பதை உணரவேண்டும் .அதேபோல் சுத்த சன்மார்க்கி யாருடைய காலிலும் விழக்கூடாது.அப்படி விழுந்தால் அவர்கள் சுத்த சன்மார்க்கி அல்ல .அருட்பெரும்ஜோதி ஆண்டவர் நம்முடைய சிரநடுவில் உள்ளார் என்பதை அறிந்தால் அவரை காலில் விழ வைக்கலாமா ? மரியாதை என்பது வேறு ?வந்தனம் சொல்வது வேறு ,காலில் விழுவது என்பது வேறு.இதை நாம் உணரவேண்டும்.

தொடரும் ;--           












1 கருத்துகள்:

12 மார்ச், 2012 அன்று 7:58 PM க்கு, Anonymous Mithun கூறியது…

நன்று!

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு