சனி, 6 மே, 2023

உண்மைக் கடவுள் ஒருவரே !

 *உண்மைக் கடவுள் ஒருவரே !*


*எல்லா உலகத்திற்கும் உண்மைக் கடவுள் ஒருவரே என்ற உண்மை அறிந்தவர் வள்ளலார் ஒருவரே !* 


*அறிந்தது மட்டும் அல்ல,அவரை நேரில் கண்டவர் வள்ளலார் ஒருவரே!* *அவருடைய உண்மையான பெயர்* அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!

தனிப்பெருங்கருணை!

அருட்பெருஞ்ஜோதி!*


*என்னும் மகா மந்திர வாக்கியமாகும்.*


*இந்த மகாவாக்கியத்தை வெளிப்படையாக வெளியிடச் சொன்னவர் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! என்ற உண்மையை*,


*22-10-1873. ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் புதவாரம்  பகல் 8 மணிக்கு,மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகையில் முதன் முதலில் கொடி கட்டிக்கொண்டு பேருபதேசம் செய்கின்றார் அத்தருணம் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வெளிப்படையாக,ஆண்டவரின் பெயரை வெளியிட்டு இம் மகாவாக்கிய மகாமந்திரமானது எல்லா உலகத்திற்கும் பொதுவான இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைக் குறிக்கும் மகாவாக்கிய மகாமந்திரமாகும் என்னும் உண்மையை வெளிப்படுத்துகின்றார் வள்ளலார்*


*ஞானசபை தோற்றுவித்தது !*


*உலகத்தினிடத்தே பெறுதற்கு மிகவும் அருமையாகிய மனித தேகத்தைப் பெற்ற நண்பர்கள் அனைவரும் நாமும் அறிய வேண்டுவதும் ஒழுக வேண்டுவதும் யாதெனில்?*


திருவருட் சத்தியால் 1,தோற்றுவித்தல், 

2,வாழ்வித்தல்,

3,குற்றம் நீக்குவித்தல்,

4,பக்குவம் வருவித்தல்,

5,விளக்கம் செய்வித்தல்,

என்னும் 


*ஐந்தொழில்கள் முதலிய பெருங்கருணைத் தொழில்களை இயற்றுவிக்கின்றவர் என்றும்,எல்லாம் ஆனவரென்றும்,ஒன்றும் அல்லாதவரென்றும்,சர்வ காருண்யரென்றும்,சர்வ வல்லபரென்றும்,எல்லாம் உடையராய்த் தமக்கு ஒருவாற்றானும் ஒப்பு உயர்வு இல்லாத*


*தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதியர் என்றும் சத்திய அறிவால் அறியப்படுகின்ற உண்மைக் கடவுள் ஒருவரே அகம் புறம் முதலிய எவ்விடத்தும் நீக்கமின்றி நிறைந்த சுத்த மெய்யறிவு என்னும் பூரணப் பொதுவெளியில்,அறிவார் அறியும் வண்ணங்கள்எல்லாமாகி விளங்குகின்றார்.* 


*அவ்வாறு விளங்குகின்ற ஒருவரே ஆகிய கடவுளை இவ்வுலகினிடத்தே ஜீவர்களாகிய நாம் அறிந்து அன்பு செய்து, அருளையடைந்து அழிவில்லாத சத்திய சுகபூரணப் பெருவாழ்வைப் பெற்று வாழாமல்,*


*பல்வேறு கற்பனைகளாற் பலவேறு சமயங்களிலும்,பலவேறு மதங்களிலும், பல்வேறு மார்க்கங்களிலும்,பலவேறு லட்சியங்களைக் கொண்டு,நெடுங்காலம் பிறந்து பிறந்து,அவத்தை வசத்தர்களாகிச் சிற்றறிவும் இன்றி விரைந்து விரைந்து பல்வேறு ஆபத்துக்களினால் துன்பத்தில் அழுந்தி இறந்து இறந்து வீண் போயினோம்,வீண்போகின்றோம.*


*ஆதலால் இனிமேலும் ஜீவர்களாகிய நாம் விரைந்து விரைந்து இறந்து இறந்து வீண்போகாமல் உண்மை அறிவு,உண்மை அன்பு,உண்மை இரக்கம் முதலிய சுப குணங்களைப் பெற்று,நற்செய்கை உடையவர்களாய்,எல்லாச் சமயங்களுக்கும்,எல்லா மதங்களுக்கும்,எல்லா மார்க்கங்களுக்கும்,*


*உண்மைப் பொது நெறியாகி விளங்கும் சுத்த சன்மார்க்கத்தைப் பெற்றுப் பேரின்பசித்திப் பெருவாழ்வில் பெருஞ்சுகத்தையும் பெருங் களிப்பையும் அடைந்து வாழும் பொருட்டு மேற்குறித்த உண்மைக்கடவுள் தாமே திருவுள்ளங் கொண்டு சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய உண்மை விளக்கஞ் செய்கின்ற*


*ஓர் ஞானசபையைச் சித்திவளாகம் என்னும் இச் சந்நிதானத்திற்கு அடுத்த உத்தரஞான சிதம்பரம் அல்லது ஞானசித்திபுரம் என்று குறிக்கப் படுகின்ற வடலூர் பார்வதிபுரத்தில் தமது திருவருட் சம்மத்த்தால் இயற்றுவித்து,இக்காலம் தொடங்கி அளவு குறிக்கப்படாதநெடுங்காலம் அற்புத சித்திகள் எல்லாம் விளங்க யாமே அமர்ந்து அருளித் திருவிளையாடல் செய்து அருள்கின்றொம்*


*என்னும் திருக்குறிப்பை இவ்விடத்தே தாயினும் சிறந்த பெருந்தயவுடைய நமது கருணைக் கடலாராகிய அருமைத். தந்தையார் அருட்பிரகாச வள்ளலார் முன்னிலையாகப் பலவாற்றானும்பிரசித்தப்பட வெளிப்படுத்தி அருட்பெருஞ்ஜோதி சொரூபராய் அப்பெருங்கருணை வள்ளலாரது உடல் பொருள் ஆவிகளைக் கொண்டு பொற்சபை சிற்சபைப் பிரவேசஞ் செய்வித்தருளி,அவரது திருமேனியில் தாம் கனிவுறக் கலந்தருளிய எல்லாம் வல்ல  சித்தத் திருக்கோலங் கொண்டு அருளரசாட்சித் திருமுடி பொறுத்து அருள் விளையாடல் செய்தருளுகின்றோம் என்னும் திருக்குறிப்பை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வெளியிடுகின்றார்* 


*ஆதலால் எல்லா உலகத்திற்கும்  அருள் வழங்கும் இடமாகவும், இயற்கை உண்மைக் கடவுள் அமர்ந்து அருள் ஆட்சி செய்யும் இடமாகவும் வடலூரில் சத்தியஞானசபையை வள்ளல்பெருமான் தோற்றுவித்துள்ளார்.*


*இங்கே அருள் வழங்கும் கடவுள் சாதி சமயம் மதம் சார்ந்த கடவுள்களில் ஒருவர் அல்ல என்பதை எல்லா மக்களும் அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்*


*எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ,அதற்குக் கோடி கோடிப் பங்கு அதிகமாக தன்மையும், உதவியும் அருளும் கொடுக்கும்படியான இடம் வடலூர் சத்தியஞானசபையாகும்.இது ஆண்டவர் கட்டளையாகும்.*


*வள்ளலார் பாடல்!*


உலகமெ லாந்தொழ உற்றது எனக்குண்மை ஒண்மைதந்தே


இலக எலாம்படைத்து ஆருயிர் காத்தருள் என்றது என்றும்


கலகமிலாச் சுத்த சன்மார்க்க சங்கம் கலந்தது பார்த்


திலகமெனா நின்றது *உத்தர ஞான சிதம்பரமே.!*(வடலூர்)


*காணாத காட்சிகள் காட்டுவிக் கின்றது* காலமெல்லாம்


வீணாள் கழிப்பவர்க் கெய்தரிதானது வெஞ்சினத்தால்


கோணாத நெஞ்சில் குலாவிநிற் கின்றது கூடிநின்று


சேணாடர் வாழ்த்துவது *உத்தர ஞான சிதம்பரமே.!*( வடலூர்)


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு