ஞாயிறு, 27 நவம்பர், 2022

மாறுங்கள்! மாற்றுங்கள்!

 *மாறுங்கள்! மாற்றுங்கள்!*


*சுத்த சன்மார்க்கியாக மாறுங்கள்! மாற்றுங்கள்!*


*சன்மார்க்கிகளே வள்ளலார் சொல்லியதை கவனமாக பின் பற்றுங்கள்*


*ஜீவகாருண்யம் என்றால் பசியைப் போக்குவது மட்டும் அல்ல. பசிப்பிணி என்னும் பசிக்கொடுமை மிகவும் வேதனையானது, முக்கிமானது, முதன்மையானது.அதற்கு அடுத்தது கொலை, பிணி,தாகம்,இச்சை,எளிமை,பயமும் சேர்ந்து ஏழுவகையான துன்பம் மனித தேகத்திற்கு உண்டாகின்றது.* 


*நரகவேதனை,சனனவேதனை,மரணவேதனை இந்த மூன்று வேதனையும் சேர்ந்ததே பசிவேதனை என்பார் வள்ளலார்*! 


முன் பிறவியின் தண்டனை ! 


*ஏழ்மை நிலையில் வாடி வதங்கி பசி தாங்கமுடியாமல் உணவைத் தேடி, அலைந்து வந்து, காத்திருந்து சாப்பிடுபவர்கள்,முன் பிறப்பில் பசியினால் தவித்தவர்களை கண்டு கொள்ளாமலும்,பசியைப் போக்காமலும் இருந்ததால், அவர்கள் இப்பிறப்பில் உணவிற்கு வழியில்லாமல் உணவைத் தேடி அலைந்து தவிக்கிறார்கள்,அவர்கள் பசி அறிந்து உணவளிப்பது சன்மார்க்கிகளின் கடமையாகும்*,


*உணவுப்பொருள் கொடுப்பவர்களுக்கும்,உணவு தயாரித்து வழங்குபவர்களுக்கும்,தொண்டு செய்பவர்களுக்கும்,பாகப்பிரிவினைபோல் அவரவர்களின் உழைப்பிற்கும்,தகுதிக்கும் தகுந்தாற்போல் ஏகதேச ஆன்மலாபம்,இயற்கை உண்மையின் விளக்கச் சுழற்சியால் பிரித்து வழங்கப்படுகிறது. என்பதே வள்ளலார் சொல்லிய ஜீவகாருண்யத்தின் ஆன்ம லாபமாகும்.*


*சன்மார்க்கிகளின் செயல்பாடுகள்!*


*சாப்பிட வருபவர்களின் தரத்திற்கு தகுந்தாற்போல் ஆன்மநேய உரிமையோடு  10,பத்து நபரையாவது கொலை,புலை தவிர்த்தவர்களாக்கி,ஜீவகாருண்யத்தின் ஒழுக்க நிலையின் உண்மையை விளக்கி, சன்மார்க்கிகளாக மாற்ற வேண்டுவது சன்மார்க்கிகளின் கடமையாக ஏற்று செயல்பட வேண்டும்*


*ஒவ்வொரு சன்மார்க்கியும் பத்து நபர்களை மாற்ற வேண்டும், பத்து நூறாகும், நூறு ஆயிரமாகும்,ஆயிரம் லட்சமாகும், லட்சம் கோடியாகும்,கோடி பலகோடியாகும்  இவ்வாறு சன்மார்க்கிகளாக மாற்றினால்  உலகமே சன்மார்க்க உலகமாக மாற்றம் அடையும்*


இதைத்தான் வள்ளலார் தெளிவாகச் சொல்லி விளக்குகிறார்,


*எவ்வளவு தாழ்ந்த தரத்தில் உள்ளவர்களாக இருந்தாலும் அவர்களை நம்மவராக்கிக் கொள்ளுங்கள் என்கிறார்.*


*எவ்வாறு  மாற்றுவது?*


*வள்ளலாரே நமக்கு சொல்லித் தருகிறார்* 


என்னிடத்தில் ஒருவன் வசப்படாத முரட்டுத்தனமாய் எப்படியிருந்தாலும், அவனுக்கு.... 


*1,நல்ல வார்த்தை சொல்லுவேன்;*


*2_மிரட்டிச் சொல்லுவேன்;*


*3,தெண்டன் விழுந்து சொல்லுவேன்;*


*4,அல்லது பொருளைக் கொடுத்து வசப்படுத்துவேன்;*


*5,அல்லது ஆண்டவரை நினைத்துப் பிரார்த்தனை செய்வேன்.*


*இப்படி எந்த விதத்திலேயாவது நல்வழிக்கு வரச் செய்து விடுவேன். நீங்கள் எல்லவரும் இப்படியே செய்தல் வேண்டும். இராத்திரிகூட "நான் இல்லாமல் இந்த ஜனங்கள் க்ஷணநேரம் இருக்க மாட்டார்களே  என்று..." ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன். அது இங்கே இருக்கிற ஜனங்கள் மட்டில் மாத்திர மல்ல. உலகத்திலிருக்கிற எல்லா ஜனங்களையும் குறித்தே விண்ணப்பித்துக் கொண்டேன்.*


 *ஏன் ? அப்படி ஆண்டவரிடத்தில் விண்ணப்பித்துக் கொண்டேன் என்றால்:! எல்லவரும் சகோதரர்களாதலாலும், இயற்கை யுண்மை யேகதேசங்களாதலாலும், நான் அங்ஙனம் ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமை வைத்துக் கொண்டிருக்கிறேன்.* என்று தெளிவாக புரியும்படி வள்ளலார் சொல்லுகின்றார்.


*சன்மார்க்க சங்கம் வைத்து நடத்துபவர்கள்.அதில் தொண்டு புரிபவர்கள் பொருள் கொடுப்பவர்கள் யாவரும் வள்ளலார் சொல்லிய வண்ணம் கடைபிடிக்காமல் இருப்பதற்கு முக்கிய காரணம்  என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.* 


*நாம் யார் என்பதை தெரிந்து இருக்க வேண்டும்,நம்மைப் படைத்து அனுப்பிய எல்லாம் வல்ல  இயற்கை உண்மைத் தனித்தலைமை பெரும்பதி யார் ? என்பதை தெரிந்து இருக்க வேண்டும்.மேலும் ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை என்றால் என்ன ? என்பதை தெரிந்து இருக்க வேண்டும்* 


*இந்த இயற்கை உண்மை,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம் போன்ற தன்மைகள் செல்பாடுகள் எல்லாம் அறிந்து கொள்ளாமல், கலையுரைத்த கற்பனைகளாகிய,வேதம்,ஆகமம்,புராணம்,இதிகாசம்,சாத்திரம் போன்றவற்றை நிலை எனக் கொண்டாடும்  கண்மூடித் தனமான  பழக்கத்தை பொய் என்று தெரிந்து,,அவற்றின் மேல் உள்ள பற்றுகள் அனைத்தையும் பற்று அற விட்டு விட்டீர்களானால் ஆன்ம அறிவு விளக்கம் பெறும்* 


*அறிவு விளக்கம் பெற்றால் வள்ளலார் சொல்லிய உண்மைகள் யாவும் தெள்ளத் தெளிவாக விளங்கும்*


வள்ளலார் நமக்குச் சொல்லிக் கொடுத்த உண்மையை உணர்ந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்! 


வள்ளலார் சொல்லியது ! 


எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே ! 


*இதுதொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள்,மதங்கள்,மார்க்கங்கள்,என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும்,வருணம்,ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும், எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும்*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும்  எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல் வேண்டும்*


*எல்லாமாகிய தனித் தலைமை பெரும்பதியாகிய அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே! தேவரீர் திருவருட் பெருங் கருணைக்கு வந்தனம்! வந்தனம் !* என்று வேண்டி விண்ணப்பம் செய்கின்றார். 


*வள்ளலார் சொல்லியதை ஒன்றை கூட கடைபிடிக்காமல் எல்லா சங்கங்களிலும் சன்மார்க்க அன்பர்கள் உணவு அளிப்பதைத் தவிர,வேறு எதையும் கடைபிடிக்காமல் வீண் காலம் கழித்துக் கொண்டு இருப்பது மிகவும் வேதனைக்குறிதாகும்.*


*இதுவரையில் இருந்ததுபோல் இனியும் வீண்காலம் கழிக்காதீர்கள் என்று பல இடங்களில் வள்ளலார் பதிவு ( திருஅருட்பா வில்) செய்தும் நாம் கேட்பதற்கு தயாராக இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது.* 


*இப்படியே இருந்தால் ஒருவர் கூட கடைத்தேற முடியாது என்பது சத்தியம்*


வள்ளலார் பாடல்!


சொல்லுகின்றேன் பற்பலநான் சொல்லுகின்ற வெல்லாம்

*துரிசலவே சூதலவே தூய்மையுடை யனவே*


*வெல்லுகின்ற வார்த்தைஅன்றி* வெறும்வார்த்தை என்வாய்

விளம்பாது* *என் ஐயர்நின்று விளம்புகின்ற படியால்*


செல்லுகின்ற படியே நீ காண்பாய் இத் தினத்தே

தேமொழி அப் போதெனை நீ தெளிந்துகொள்வாய் கண்டாய்


ஒல்லுகின்ற வகை எல்லாம் சொல்லுகின்றே னடிநான்

உண்மைஇது உண்மைஇது உண்மைஇது தானே.!


*உண்மை சொல்ல வந்தனனே என்று உண்மை சொல்லப் புகுந்தாலும் தெரிந்து கொள்வாரில்லை என மிகவும் வேதனைப் படுகின்றார் வள்ளலார்.* 


சித்திவளாகத் திருமாளிகைப் புறத்தில் சன்மார்க்க கொடி கட்டிக் கொண்டு இறுதியாகச் சொல்லுகிறார்.


*கொடி கட்டிக் கொண்டபடியால் ,இனி எல்லோரும் உண்மையை அறிந்து கொள்வார்கள்,முன் உள்ளவர்கள் உண்மையைத் தெரிய வொட்டாது மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்.*


*இத்தருணம் ஆண்டவர் தெரிவித்தார், தெரிவிக்கின்றார், தெரிவிப்பார்,நீங்கள் எல்லவரும் உண்மையைத் தெரிந்து கொள்ளுங்கள்.இப்போது நான் சொல்லிவந்த பிரகாரம் ஜாக்கிரதையுடன் உண்மை அறிவால் ( ஆன்ம அறிவால்) விசாரம் செய்து கொண்டிருங்கள்.*


*அவசியம் இதற்குக் காரணமான தயவு இருக்க வேண்டியது அவசியம்,அந்த தயவு வருவதற்கு ஏதுவான உரிமையும் கூட இருக்க வேண்டும்*


*இப்படி இருந்து கொண்டிருந்தால்,ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்வீர்கள்.இது சத்தியம்,இது சத்தியம்,இது சத்தியம்,இது ஆண்டவர் கட்டளை என்று ஆண்டவர் மேல் சத்தியம் வைத்து சொல்கின்றீர்*


மேலும் *எல்லோருக்கும் தாய்,தந்தை,அண்ணன்,தம்பி,முதலான ஆப்தர்கள் செய்யப்பட்ட உதவி எவ்வளவோ,அதற்குக் கோடி கோடிபங்கு அதிகமாக உதவி கொடுக்கும்படியான  இடம் இந்தஇடம் இது ஆண்டவர் கட்டளை என நிறைவு செய்கிறார்.*


*நாம் இதுவரை இருந்த்து போல் இனியும் வீண்காலம் கழிக்காமல் சுத்த சன்மார்க்க கொள்கைகளை நாம் முழுமையாக கடைபிடித்து மற்றவர்களையும் கடைபிடிக்க வைத்தால்தான்  வள்ளலார் சொல்லியவாறு அருள் நயந்த நன்மார்க்கர்கள்  உலகம் முழுதும் ஆட்சி செய்ய முடியும்.* 


நாம் மாறுவோம் மாற்றுவோம். 


*வள்ளலார் பாடல்!*


மற்றறிவோம் எனச்சிறிது தாழ்த்திருப்பீர் ஆனால்

மரணமெனும் பெரும்பாவி வந்திடுமே அந்தோ


சற்றும்அதை நும்மாலே தடுக்கமுடி யாதே

சமரசசன் மார்க்கசங்கத் தவர்கள்அல்லால் அதனை


எற்றிநின்று தடுக்கவல்லார் எவ்வுலகில் எவரும்

இல்லைகண்டீர் சத்தியமீ தென்மொழிகொண் டுலகீர்


பற்றிய பற் றனைத்தினையும் பற்றறவிட்டு அருள் அம்

பலப்பற்றே பற்றுமினோ என்றும்இற வீரே.!


*மேலே கண்ட பாடலில் கண்டபடி பொருள்கலந்த உலகப் பற்றை மாற்றி அருள் நிறைந்த அம்பலப் பற்றை பற்றுவதே சன்மார்க்கிகளின் அறிவு நிலையாகும்.*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

**9865939896*

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு