வெள்ளி, 11 நவம்பர், 2022

பணக்காரனிடம் தொடர்பு கொள்ள வேண்டாம் !

 *அருட்பெருஞ்ஜோதி!*


*வள்ளலார் பாடல்!*


பொருளிலே உலகம் இருப்பதா தலினால் புரிந்து நாம் ஒருவர்பால் பலகால்


மருவினால் *பொருளின் இச்சையால்* பலகால் மருவுகின்றான் எனக் கருதி


வெருவுவர் என நான் அஞ்சி எவ் விடத்தும் மேவிலேன் எந்தைநீ அறிவாய்


ஒருவும் அப் பொருளை நினைத்த போ தெல்லாம் *உவட்டினேன்* இதுவும் நீ அறிவாய்.! 


*பொருள் உள்ளவன் தொடர்போ சவகாசமோ வைக்க வேண்டாம் என்கிறார் வள்ளலார்,* 


*பொருள் உள்ளவனிடம் சென்றால் பொருளின் இச்சையால் நம்மிடம் வருகின்றான் என,பொருள் உள்ளவன் நினைப்பானாம் ஆதலால் அவனிடம் செல்வதற்கு நான் பயந்தேன் என்கிறார் வள்ளல்பெருமான்.*


*நான் அப்பொருளை நினைக்கின்ற போதெல்லாம் உவட்டினேன் அதாவது வாந்தி வருவதுபோல் இருந்தது என்கிறார்* 


(பொருளுக்கு  உயிர்க்கொல்லிஎன்று ஒரு பெயர் உண்டு)


*எனவே உண்மையான ஒழுக்கம் நிறைந்த சுத்த சன்மார்க்கிகள் பொருள் உள்ள பணக்காரனிடம் தொடர்பு வைத்துக் கொள்ள மாட்டார்கள்.*


*மேலும் பொருள் உள்ளவனிடம் சென்றால் பொருளைக் காட்டி, ஆசைக்காட்டி, வசதியைக் காட்டி,ஆடம்பரத்தைக் காட்டி அவனுக்கு சாதகமாக நம்மை அடிமைகளாய் மாற்றி விடுவான் அதனால் சன்மார்க்கிகள் பொருளுக்கு அடிமை யாகாமல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கு அடிமைகளாகி அருளைப் பெற முயற்சி செய்ய வேண்டும்!*


வள்ளலார் பாடல் !


அத்தாநான் வேண்டுதல்கேட் டருள் புரிதல் வேண்டும்

அருட்பெருஞ்சோதியைப் பெற்றே அகங்களித்தல் வேண்டும்


செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்

*திருச்சபைக்கே அடிமைகளாச் செய்வித்தல் வேண்டும்*


ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமைஉளர் ஆகிஉல கியல்நடத்தல் வேண்டும்


எத்தாலும் அழியாத வடிவதிலே நானும்

எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டுவனே! 


*என்னும் பாடல் மூலம் திருச்சபைக்கே அடிமைகளாய் செய்வித்தல் வேண்டும் என்கிறார்*


மேலும்...


ஒருமையுடன் நினது திரு மலரடி நினைக்கின்ற

*உத்தமர்தம் உறவுவேண்டும்*


*உள்ஒன்று வைத்துப் புறம்பொன்று பேசுவார்*

*உறவு கலவாமை வேண்டும்*


*பெருமைபெறு நினதுபுகழ் பேசவேண்டும்* பொய்மை

பேசாதிருக்க்வேண்டும்


பெருநெறி பிடித்தொழுக வேண்டும் *மத மானபேய்*

பிடியா திருக்கவேண்டும்*


*மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும் *உனைமறவா திருக்கவேண்டும்*

*மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும்* 

*நோயற்றவாழ்வில் நான் வாழவேண்டும்!*


*நாம் யாருடன் பழக வேண்டும் யாருடன் தொடர்பு கொள்ள வேண்டும் என்பதை மேலே கண்ட பாடல்களில் தெளிவாக சொல்லுகின்றார் வள்ளலார், தெரிந்து புரிந்து அறிந்து வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்*


*நான் அப்படித்தான் தனித்து இருந்து அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு வாழ்ந்து வருகிறேன்*


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் முனைவர் *ஈரோடு கதிர்வேல்* திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

*9865939896*

1 கருத்துகள்:

3 ஏப்ரல், 2023 அன்று 2:50 PM க்கு, Blogger Ad Systems கூறியது…

அருமை

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு